அம்மம்மா.. கேளடி தோழி...! -122

122 காணாமல் போன என்காதல் உணர்வுகளை மீட்டுக் கொடுக்க உனக்கு மனமில்லையா.. ? தேனூத்தில் சுழித்தோடிய வாய்க்கால் நீரைப் போலத்தான்.. அங...


122
காணாமல் போன என்காதல் உணர்வுகளை
மீட்டுக் கொடுக்க உனக்கு மனமில்லையா..?

தேனூத்தில் சுழித்தோடிய வாய்க்கால் நீரைப் போலத்தான்.. அங்கும் நீர் சுழித்தோடியது... என்ன ஒன்று.. தேனூத்தில் கிணறு இருக்கும்.. அகலமான ஆழ்கிணறு.. அதிலிருந்து அருவியாக பம்ப்செட் தண்ணீர்பாயும்... மணல் வரப்புகளின் கிணற்றுக்கு அருகேயுள்ள வயல்களுக்கும்... தோப்புக்களுக்கும் நீர் பாயும்...
சென்னையில் அப்படியில்லை... இங்கே ஆழ்துளை கிணறு இருந்தது.. ஆற்றுப் பாசன வயல்களையும்.. தோப்புகளையும் போல பரந்து விரிந்த சாம்ராஜ்யமாக இது இல்லை... பாரதியாரின் காணிநிலத்தைப் போல சிறிதளவில் பரந்திருந்தது... மணல் வரப்புக்கள் இல்லாமல்... சிமிண்டினால் கட்டி விடப் பட்டிருக்கும் வாய்க்காலில் நீர் பாய்ந்து கொண்டிருந்தது...
சென்னையின் பண்ணைவீட்டு வாய்க்காலின் சிமிண்ட் கைப்பிடிச் சுவரில்... மாலை நேரங்களிலும்.. காலை நேரங்களிலும் அமர்ந்து கதை பேசலாம்.. அப்படிப் பேச ராதிகாவுக்கு பிடிக்கும்...
ஓடும் வாய்க்கால் நீரில் கைகளால் அளைந்தபடி பேசுவதில் உள்ள ஆனந்தத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது...
இன்று நேரமிருந்தது... வாய்க்காலில் நீர் ஓடியது... அவளும் முரளியும்... கைப்பிடி சுவரில்தான் அமர்ந்திருந்தார்கள்.. இருந்தும் நீரோடையில் கை நனைக்க அவளால் முடியவில்லை...
இந்தத் துக்கத்தையும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது...
மனம் கனக்கும் சுமையை அறிந்தவர்களால் கூட.. அடுத்தவர்களின் மனச்சுமையின் பாரம் எந்த அளவில் இருக்கும் என்று அறிந்து விட முடியாது.. ராதிகாவின் மனச்சுமையும் அது போலத்தான்..
மலையளவு கனத்தை அது கொடுத்துக் கொண்டிருந்தது..
அவள் போராடிப் பார்த்து விட்டாள்... எவ்வளவோ விளக்கங்களைச் சொல்லி விட்டாள்.. அது எதையுமே பாலமுரளி நம்பத் தயாராக இல்லை...
அவனது கேள்வியெல்லாம் ஒரே திசையிலேயே பயணித்தன...
"அந்த ஹேமாகூடப் பேசக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே.. ஏண்டி பேசின....?"
"நான் தேடிப் போய் பேசலைங்க... நான் சென்னைக்கு வந்திருக்கிற விவரத்தைக் கூட அவளுக்குச் சொல்லலை..."
"அப்புறம் எப்படிடீ.. அவ உன்கூட ஜோடி போட்டுக்கிட்டு வந்தா...?"
"எக்ஸாம் எழுதும் போது.. ஒருத்தரை யொருத்தார் பார்த்துக்காம இருக்க முடியுமா..? இரண்டு பேரும் ஒரே ஹாலில்தான் எக்ஸாம் எழுதினோம்..."
"நீ முதலிலேயே முடிச்சிட்டு ஓடி வந்திருக்க வேண்டியது தானே...?"
அப்படி அவள் வந்திருந்தால்... அடுத்தடுத்த என்னென்ன நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற நினைவில் பாலமுரளி பொங்கினான்...
அதையறியாத ராதிகா.. அதற்கு அவசியம் தான் என்ன என்று வாதம் செய்தாள்...
"அவ என்ன கடன் கொடுத்தவளா...? நானென்ன அவளிடம் கடன் வாங்கியவளா..? எதுக்காக அவளைப் பார்த்து பயந்து எக்ஸாமைக் கூடச் சரியா எழுதாமல் நான் ஓடி வரனும்...?"
பாலமுரளி அவளை உறுத்துப் பார்த்தான்.. இந்த ராதிகா.. தேனூத்தில் அவன் பார்த்த ராதிகாவாக இல்லை என்று அவன் மனம் சொல்லியது... சென்னையில் கால் வைத்தவுடன் இவள் மாறிவிட்டாள்... இல்லாவிட்டால்.. தேனூத்தில் வீட்டுக்கு வந்த சங்கரை 'வா'வென்று வரவேற்காதவள்... சென்னையில்... பட்டப்பகலில்.. கல்லூரி வளாகத்திற்குள் நின்று அவனுடன் பேசத் துணிவாளா..?
"ஓ.. எதுத்துக் கேள்வி கேட்கிற...?"
"கேள்விதான் கேட்கிறேன்.. உங்களை எதிர்த்து கேள்வி கேட்கலை..."
"நான் ஒன்னு சொன்னா.. அதைச் செய்யாம.. ஏன் அதைச் செய்யனும்ன்னு கேள்வி கேட்டா.. அது எதுத்துக் கேள்வி கேட்கிறதில்லையா..?"
ராதிகா ஆயாசமாக உணர்ந்தாள்.. அவன் இவளைப் புரிந்துகொள்ளவே மாட்டானா என்ற ஏக்கம் அவளுக்குள் எழுந்தது...
உயிருக்குயிராய் பழகின தோழி... ஒரே அறையில் அமர்ந்து பரிட்சை எழுதுகிறாள்... ராதிகா பரிட்சையை எழுதி முடித்து வெளியே வரும் அதே நேரத்தில் அவளும் வெளியே வருகிறாள்... மாதக் கணக்கில் பார்க்காமல் இருந்த தோழியிடம் ஆவலாக அவள் பேசவந்தால் முகம் திருப்பிக் கொள்ள முடியுமா..?
"திருப்பியிருக்கனும்..." என்றான் பாலமுரளி...
"அவயாரு... நீ யாருடி..? நீ எதுக்காக அவகிட்ட நின்னு பேசனும்...?"
"உங்க பிரண்ட்ஸிடம் நீங்க பேச மாட்டிங்களா..?"
"என்னோட நண்பர்கள் யாரும் இப்படி குடியைக் கெடுக்கிற வேலையைப் பண்றதில்ல..."
ஹேமாவின் மீது எப்பேர்பட்ட பழி விழுந்திருக்கிறது என்று மனக்கஷ்டப் பட்டாள் ராதிகா...
அவள்.. பாவம்.. சூது.. வாதறியாதவள்.. அவள் சொல்லியா எல்லாம் நடந்தது...?
"அவதாண்டி... அவளால்தான் எல்லாமும்... இல்லேன்னா... நீ காலேஜீக்கு வந்திருக்கிற விவரம்.. அந்த சங்கருக்கு எப்படித் தெரிந்தது..?"
"அதை ஹேமா சொல்லலை..."
"நீ சொன்னயா..?"
வேட்டைக்காரனின் விழிகளின் பளபளப்பை பாலமுரளியின் விழிகள் பிரதிபலித்தன... அந்த நேரத்தில் அவன் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.. அந்த பயங்கரமான முகத்தையும் ஆசையுடன் கண்களில் காதலைத் தேக்கி அவள் பார்த்தாள்.. அந்தப் பார்வையைக் கண்டவனின் முகம்.. இன்னும் பயங்கரமாக மாறியது...
"இப்படிப் பார்க்காதே..." அவன் உறுமினான்...
"இப்படிப் பார்த்துப் பார்த்துத்தானேடி என்னை ஒருவழி பண்ற...? என்பெயரைச் சொன்னா தேனூத்தே நடுங்கும்.. உனக்கு என்மேல் பயமில்லாம போயிருச்சு... என்னை எதிர்த்து நிற்க யாரும் துணிஞ்சதில்ல... நீ துணிஞ்சு நிற்கிற..."
"இப்படிப் பேசாதீங்க ப்ளீஸ்..." ராதிகாவின் விழிகளில் கண்ணீர் ததும்பியது...
"மத்தவங்களும்.. நானும் ஒன்றில்லை... உங்களிடம் எதுக்காக நான் பயப்படனும்... நீங்க என்ன சிங்கம்... புலி.. கரடியா..? இல்லை பேய்.. பிசாசா...? என் புருசன்..! உங்களிடம் எனக்கு பயம் எப்படி வரும்..? ஆசைதான் வரும்..."
வெட்கச் சிகப்பு முகத்தில் படற... நாணம் கலந்த துக்கத்துடன் இதைச் சொன்னாள் ராதிகா...
"ஆசை..! உனக்கு என்மேல ஆசை...! இதை நம்பச் சொல்றியா..? போடி... போய் காதில பூச்சுத்தியிருக்கிற இளிச்சவாயன் எவனாவது இருப்பான்... அவனிடம் போய் இந்தக் கதையைச் சொல்லு... நான் பாலமுரளி... ஞாபகம் வைச்சுக்க..."
'என்றைக்குத்தான் நீ என் மனதை புரிந்து கொண்டிருக்கிறாய்..? இன்று புரிந்து கொள்ள...'
ராதிகா வெறுமையுடன் வானம் பார்த்தாள்...
அவளுக்காக அவன் தேனூத்தை விட்டுக் கிளம்பி வந்ததில் அவளுக்குள் நந்தவனமே மலர்ந்து நின்றது... இதை யாரறிவார்..? மற்றவர்கள் அறிந்தாலும்.. அறியாவிட்டாலும்... அதைப்பற்றி அவளுக்கு யாதொரு கவலையும் இல்லை... பாலமுரளி அறிவானா..? இதுதான் அவளைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது...
ஒவ்வொரு முறையும் அவனாக அவளைத் தேடி வரும் போதெல்லாம் ஊடே வந்து அவனைத் தடுத்து நிறுத்தும் சக்தி எது...?
ராதிகாவுடன் முழுமனதாக அவனைக் கலக்க விடாமல் தள்ளி நிறுத்தும் அந்த கொடும் சக்தியின் இரும்புக் கரத்தை பொடிப் பொடியாக்கி விட ராதிகா மனம் துடித்தாள்...
"ஹேமாவைப் பார்த்து பேசினதுக்குத்தான் நீ ஆயிரம் கதை சொல்லிட்ட.. சங்கரை பார்த்ததுக்கு என்ன சொல்லப் போற...?"
பாலமுரளி கேட்டே விட்டான்.. எந்தக் கேள்வியை எதிர் நோக்கப் பயந்தவளாக ராதிகா அஞ்சி நின்றாளோ.. அந்தக் கேள்வியை அவன் கேட்டு விட்டான்... நடுக்கத்துடன் அவன் முகம்  பார்த்தாள் ராதிகா...
அதில் கருணை சிறிதளவும் இல்லை... கடுமை விரவிக் கிடந்தது... சொந்தமில்லாத பார்வை பார்த்தவனின் மனதில் இனியும் அவளுக்கான இடம் காத்திருக்குமா என்று அவள் துக்கித்தாள்...
"அவனை நான் பார்க்கல... அவன்தான் வந்து தொலைத்தான்..."
"நினைச்சேண்டி... நீ இந்த பதிலைத்தான் சொல்லுவேன்னு நினைச்சேன்.. ஹேமாகூட ஏன் பேசினேன்னு கேட்டா அவகூட நான் பேசலை.. அவளாத்தான் வந்து பேசினான்னு கதை சொன்னவதானே நீ... இதுக்கும் அதைத்தான் சொல்லுவேன்னு நினைச்சேன்.. மாமனை நீ கொஞ்சம் கூட ஏமாத்தலைடி..."
'மாமனா.. யார் அவன்..?' என்று கேட்க நினைத்த ராதிகா... பாலமுரளியின் பேச்சு வழக்கை நினைவு கூர்ந்தவளாக.. சட்டென்று நாவடக்கித் தப்பித்தாள்...
பாலமுரளியின் அகராதிப்படி.. மாமனும் அவன்தான்.. மச்சானும் அவன்தான்... ஆகையினால் மாமன் என்று அவன் குறிப்பிட்டது... சாட்சாத் அவனையேதான் என்று மனம் தெளிந்தாள் ராதிகா...
அவனின் இந்தச் சேட்டையில் மனம் லயித்தவளுக்கு அவன் மீதான ஆசை அதிகரித்தது... அதைச் சொல்ல முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டவளாக அவள் விதியை நொந்து கொண்டாள்...
"எது உண்மையோ.. அதைத்தான் நான் சொன்னேன்.."
"ஹ... நீ பெரிய உண்மை விளம்பி.. எனக்குன்னு வந்து வாய்ச்சியே... உன்னைச் சொல்லிக் குத்தமில்லைடி.. உன்ன மாதிரி பெண்ணரசியைக், தேடிப்பிடிச்சுக் காதலிச்சு வைச்சேனே... என்னைச் சொல்லனும்..."
'யார் சொல்வது...?'
ராதிகா அவன் முகத்தைப் பாராததைப் போல் பார்த்தாள்... கோபத்தின் கடுமையுடன் இருந்தவனின் முகவடிவைக் காணக்காண அவளுக்குத் தெவிட்டவில்லை..
'இவனைப் போய் குறை சொல்ல முடியுமா..?'
"நிஜத்தைத்தான் நான் சொன்னேன்னா.. நீங்க இப்படிப் பேசி வைப்பீங்க... அப்புறம் நான் என்னதான் பண்றது...?"
எதுவுமே அறியாதவளைப் போல அவள் வாதிட்டதில் கோபம் அதிகமானவனாக.. அவளை எரித்து விடுவதைப் போல பார்த்து வைத்தான் பாலமுரளி.. உறுத்துப் பார்த்த அவன் பார்வையை தைரியமாக எதிர் கொண்ட அவள் பார்வையில் அவன் புருவங்கள் சுருங்கின...
நெற்றியில் சிந்தனை ரேகை படிய... இமை மூடி யோசித்தவன்.. ஒரு பெருமூச்சுடன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்...
"சரி... நீ உண்மை சொல்கிறதாகவே இருக்கட்டும்.. நீ அவனைத் தேடிப் போகலை... அவன்தான் உன்னைத் தேடி வந்தான்.. வந்தவனிடம் பேசாமல் நீ விலகிப் போயிருக்கலாமே... ஏன் நின்று பேசின...?"
"ம்ப்ச்... அவன் சொன்னது அப்படிப்பட்ட விசயம்..."
"ஓ.. அப்படிங்களா மகாராணி..? நீங்க கவலைப் பட்டு.. கால்கடுக்க நின்று.. ஒரு மணி நேரமா.. அவன் முகத்தையே உத்து உத்துப் பாத்துப் பேசற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விசயத்தை அவன் சொல்லிப்புட்டான்..."
"ஒரு மணி நேரமா பேசினேனா..? இது அபாண்டம்..."
"ஏய்ய்.. விசயத்துக்கு வாடி.. ஒரு செகண்டிலயா அவனைப் போகச் சொன்ன..? குத்துக்கல்மாதிரி நின்னு அவனிடம் பழமை பேசிட்டு.. என்னிடம் வியாக்கினம் பேசறயா..?"
"அத்தான்... ப்ளீஸ்..."
"இந்த அத்தான்.. பொத்தான் போடற வேலையெல்லாம் என்னிடம் வேணாம்.. கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லு..."
"ஹேமாவை ஒரு மாப்பிள்ளை பெண் கேட்டு வந்தாராம்..."
"இதுவேறயா.. யார் அந்த தியாகி...?"
ராதிகா பதில் சொல்லாமல் முரளியை இமைக்காமல் பார்க்க...
"போதும்டி..." என்றான் அவன்...
"இதுதானே வேணாம்கிறது... மத்தவங்க வீட்டுப் பெண்ணை கமெண்ட் பண்ணலாமா..?"
"என்வீட்டுப் பெண்ணின் மனசைக் கலைச்சா.. தாராளமா கமெண்ட் பண்ணலாம்..."
முகம் இறுகப் பதில் சொன்னான் முரளி... அது இல்லையென்று வாதிட முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள் ராதிகா...
சங்கருக்காக ஹேமா பரிந்து பேசியது உண்மைதானே.. ஆனாலும் அது திருமணத்திற்கு முன்பல்லவா...?
இதை பாலமுரளியிடம் சொன்னால்... தாலி ஒன்று தானே கட்டவில்லலையென்று குதர்க்கமாக கேட்டு வைப்பான்... அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும்.. அது ஹேமாவுக்கு எப்படித் தெரியும்...?
வீண்வாதம் செய்யாமல் விட்டு விடுவதே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் ராதிகா...
"சங்கரோட பிரண்டாம்...", என்று வறண்டகுரலில் சொன்னாள்...
"ஓ.. அவன் இப்ப.. புரோக்கர் வேலைகூட செய்கிறானாமா..?" பாலமுரளியின் குரலில் கேலி இருந்தது...
மறந்தும் அவன் கல்யாண புரோக்கர் என்று சொல்லவில்லை என்பதை மனதில் குறித்துக் கொண்டாள் ராதிகா....
ஒருவரைப் பிடிக்கவில்லை யென்றால்... இப்படியெல்லாம் கூடப் பேசலாமா என்றிருந்தது அவளுக்கு...
இதை அவனிடம் யார் சொல்வது...?
சொல்வதாக இருந்தால் ராதிகாதான் சொல்ல வேண்டும்... அதற்குத்தான் அவளுக்கு வழி இல்லாமல் போய்விட்டதே...
"காலம் ஒரு நாள் மாறும்-நம்..
             கவலைகள் யாவும் தீரும்...
    வருவதையெண்ணிச்  சிரிக்கின்றோம்..
             வந்ததையெண்ணி அழுகின்றோம்..."
தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியின் எப்.எம் ரேடியோவிலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...
இப்போதெல்லாம் உழைப்பாளிகளுக்கு... அந்த உழைப்பின் அலுப்புத் தெரியாமலிருக்கும் மருந்தாக இந்த எப்.எம் ரேடியோக்கள் கை கொடுக்கின்றன என்று நினைத்துக் கொண்டாள் ராதிகா...
மூட்டை தூக்கும் தொழிலாளியின் இடுப்பில் ஒரு ரேடியோ.. கட்டிட வேலை செய்யும் சிற்றாளின் கூடையில் ஒரு ரேடியோ... தெரு முனையில் துணிகளுக்கு இஸ்திரி போகும் கை வண்டிக்காரனிடம் ஒரு ரேடியோ... கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவனிடமும் ஒரு ரேடியோ...
இப்படி... அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கும் எப்.எம் ரேடியோக்களின் சேவை மகத்தானது... என்ற பாராட்டுதல் அவளுக்குள் எழுந்தது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -122
அம்மம்மா.. கேளடி தோழி...! -122
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-122.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-122.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy