அம்மம்மா.. கேளடி தோழி...! -120

120 தொலை தூரத்தில் நீயிருந்தாலும்... என்னருகே உன் நினைவுதான்... அன்றைய நாளின் நினைவில் இன்றும் சிரித்தாள் ராதிகா... "என்னட...


120
தொலை தூரத்தில் நீயிருந்தாலும்...
என்னருகே உன் நினைவுதான்...

அன்றைய நாளின் நினைவில் இன்றும் சிரித்தாள் ராதிகா...
"என்னடி.. உனக்கு நீயாய் சிரிச்சுக்கறே..." என்ற கீதாவின் கேள்விக்கு கண்களைச் சிமிட்டினாள்...
"ஏய்ய்.. ராது.. நீகூடத் தேறிட்ட... என்ன..? அத்தான் டியுசன் எடுத்தாரா..?" கீதாவும் கண் சிமிட்டினாள்...
"அவர் சொல்லிக் கொடுத்திட்டாலும்..." கீதாவைப் போலவே நொடித்தாள் ராதிகா...
"யாரைச் சொல்கிற..? நம்ம்ம்ம்ம... அத்தானையா சொல்கிற...?"
கீதா வேண்டுமென்றே 'நம்ம' என்பதில் அழுத்தம் கொடுக்க... ராதிகா அவளை முறைத்தாள்...
"அவர் என்னோட அத்தான்..."
"எனக்கு மட்டும் அண்ணனா...?"
"அடிவாங்கப் போறேடி... போ.. போய் படுத்துத்தூங்கு..."
கீதாவை விரட்டிவிட்டுவிட்டு படுத்த ராதிகாவிற்கு தூக்கம் பிடிக்கவில்லை...
'இந்நேரம் அவர் என்ன பண்ணிக்கிட்டு இருப்பார்..? நான் இருக்கும் போதே பால்கனியில் நைட் வாக்கிங் போவார்.. இப்ப நானும் இல்லை.. விடியவிடிய வாக்கிங்தானா...?'
அவள் தாபத்துடன் புரண்டு படுத்து முரளியின் நினைவில் கீதாவின் மீது கையைப் போட்டு வைக்க... அவள் எழுந்து விளக்கைப் போட்டாள்...
"என்ன கீதா...?"
"முதல்ல தள்ளிப் படுடி... அதென்ன..? உங்களுக்குன்னு ஒரு ஆள் கிடைச்சிட்டா... பக்கத்தில படுத்திருக்கிறவங்களை தூங்க விடாம டார்ச்சர் பண்ணு வீங்களோ...?"
ராதிகாவுக்கு வெட்கமாகி விட்டது.. அவள் அவசரமாக எழுந்து கீதாவின் வாயைப் பொத்தினாள்...
"சத்தம் போடாதேடி..."
"உனக்கும்.. எனக்கும் நடுவில தலையணையைப் போட்டாத்தான் சரிப்படும்... ம்ஹீம்.. இத்தனை நாளாய் இது என் ரூமா இருந்துச்சு... வந்ததுதான் வந்த.. அத்தானையும் கூட இருக்க வைச்சிருக்கலாமில்ல..?"
"ஒருநாள்.. இரண்டு நாள்ன்னா அவர் கூட இருப்பார்... இத்தனை நாளாய் இருப்பாரா...?"
"அதுக்காக... என் ரூமில்.. என் சுதந்திரத்தைப் பறிக்கனுமா..?"
கோபமேயில்லாமல் சொன்ன கீதா.. ராதிகாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்...
"நீ சைவக் கொக்கு.. நீயே இந்தப் பாடுபடறியே.. அங்கே அத்தானின் நிலைமை எப்படியிருக்கும்...?"
பாலமுரளியின் நிலைமை படு மோசமாக இருந்தது.. கட்டிலில் உருண்டு புரண்டவன்.. தரையில் விழுந்து வைத்தான்.. கண் விழித்துத் தரையில் கிடப்பதை உணர்ந்தவன்.. தலையணையைத் தூக்கி அடித்தான்...
'என்னவோ தினமும் அவகூட குடும்பம் நடத்தினதைப் போலத்தான் நினைப்பு.. அவபாட்டுக்கு அந்த மூலையிலே படுத்திருப்பா.. நீ பாட்டுக்கு இந்த மூலையிலே படுத்திருப்ப... அது நின்னு போச்சுன்னா இந்த ஆட்டம் காண்பிக்கிறே...'
கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தபடி மனதிற்குள் திட்டித் தீர்த்தான்...
மாடிப்படிகளில் இறங்கும் போதே... டைனிங் ஹாலில் ராதிகாவைத் தேடி.. ஏமாந்தன அவன் விழிகள்...
'அவதான் பரிச்சை முக்கியம்ன்னு சென்னைக்கு ஓடிட்டாள்ல.. இன்னும் எதுக்கு அவ நினைப்பு...?'
நினைக்காமலிருக்கத்தான் அவன் முயற்சி செய்தான்.. என்னதான் அவளை நினைக்கக் கூடாது என்று அவன் போராடினாலும்.. அவன் மனம் அவளைத் தான் நினைத்து வைத்தது..
காரில் ஏறினால் பக்கத்தில் அவள் அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றும்...
'மோகினிப் பேய்ன்னு என்மேல அட்டைபோல ஒட்டினாளே...' அவன் உடல் சூடேறும்...
மில்லுக்குள் நுழைந்தால்... அவன்கூட இணை சேர்ந்து அவள் நடந்து வந்த தினம் நினைவுக்கு வரும்..
'ஊருபட்ட வாயடிப்பா.. ஆனா.. கும்பலா நாலு பேர் சேர்ந்து நின்னுட்டா பயந்து போயிருவா.. என் கையைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டே தானே வந்தா...'
தோப்புக்குள் அவன் நின்ற இடமெல்லாம் ராதிகாவின் நினைவு கால் பதித்து வரும்...
'என்னவோ.. இந்தத் தோப்பையே அவதான் உண்டாக்கினதைப் போல சுத்திசுத்தி வந்தாளே...'
அவள் பிரியமாக கடித்துத் தின்ற அவனின் எச்சில்பட்ட கொய்யாக்காயின் நினைவில் அவன் கொய்யாத் தோப்பைச் சுற்றி வந்தான்...
'அதுக்குப் பெயர் என்னங்க..? வாலாட்டிக் குருவியா..?'
குழந்தை போல குதூகலித்தவளின் நினைவில் அந்தப் பறவையை அவனின் செல்போனில் படம் பிடித்தான்.. கடைசியாக அருவிக்கரைக்குப் போனதும் அப்படியே நின்று விடுவான்..
அருவிக்கரையின் ஓரமாக நின்ற அரசமரத்தடி பிள்ளையாரின் காலடியில் அமர்கின்ற பொழுதில் அவன் மனம் தளும்பும்...
'அவள் கனவில் உன்னைக் கண்டாளா..?'
தினமும் அருவிக்கரைக்கு போக அவன் தவறவில்லை...
அவன் மனமும்.. உடலும்.. 'ராதிகா.. ராதிகா..' என்று துடிக்க.. அவனாகப் போட்டிருந்த இரும்பு வேலி பொடிப் பொடியாய் தகர்ந்து நொறுங்கியது...
'ஏன் இப்படித் தவிக்கனும்..? பேசாம சென்னைக்குப் போய்... பண்ணை வீட்டிலே இருந்துக்கிட்டு.. அவளை பரிட்சை எழுத விட்டா என்ன..? பரிட்சை முடிஞ்சதும் கூப்பிட்டுக்கிட்டு வந்திட்டாப் போச்சு...'
மனமிருந்தால் மார்க்கமும் இருக்கத்தானே செய்யும்..?
பாலமுரளி முடிவு செய்து விட்டான்.. அவனால் ராதிகா இல்லாமல் இருக்க முடியாது எனும் போது.. ஏன் அவளைத் தள்ளி வைக்க வேண்டும்...?
'பண்ணை வீட்டுக்கும்.. எனக்கும்தான் ராசி போல.. கல்யாணத்துக்கு முன்னால அவளைத் தொட்ட அதே வீட்டில்தான்.. கல்யாணத்துக்குப் பின்னாலேயும் அவளைத் தொடனும்னு இருக்கும் போல இருக்கு..'
அவனது உடலின் உஷ்ண நிலை அதிகரித்தது...
'எனக்கு அவ வேணும்...'
இந்த நினைவு வந்தவுடன் பாலமுரளியால் தேனூத்தில் இருக்க முடியவில்லை.. சென்னைக்கு கிளம்பி விட்டான்...
"அம்மா... சென்னையில வேலை இருக்கு..."
மேகலாவைத் தனியாக விட்டுவிட்டுப் போகிறோமே என்ற தயக்கத்துடன் அவன் சொன்னபோது.. பரிவுடன் அவனைப் புரிந்து கொண்டவிதமாக சிரித்தாள் மேகலா..
"அதுக்கென்னப்பா.. போயிட்டு வா..."
"திரும்ப கொஞ்ச நாளாகும்..."
"ஆனா ஆகிட்டுப் போகுது.. எனக்கென்ன குறை..? வீட்டில வேலையாளுக இருக்காங்க.. வெளியே போய்வர கார் இருக்கு... டிரைவர் இருக்கான்.. அவசர ஆத்திரம்ன்னா உதவிக்கு ஓடிவர நாச்சியப்பனும்.. சதிஷீம் இருக்கானுக.. நீ மகராசனாய் போயிட்டுவா..."
"நம்ம பண்ணை வீட்டிலதான் தங்கப் போறேன்ம்மா.."
"ஏண்டா.. உன் மாமனார் வீட்டில தங்க வேண்டியது தானே...?"
"எனக்கு அது சரிப்படாது..."
"அப்புறம் உன் இஷ்டம்.. எதுக்கும் அவங்க வீட்டிலே ஒருநாள் தங்கிட்டு.. அப்புறமாய் ராதிகாவைக் கூப்பிட்டுக்கிட்டுப் போ... அங்கே இருக்கிற வரைக்கும்.. ஊடும்... பாடும்.. ராதிகாவோட வீட்டுக்கு போய்ட்டு வந்துக்கிட்டு இரு.. பாவம்.. பெண்ணைப் பெத்தவங்க.. அவங்களுக்கும் ராதிகாவை கூட வைச்சுக்கனும்கிற ஆசை இருக்காதா..?"
"ஆகட்டும்மா..."
பாலமுரளி கிளம்பி விட்டான்.. சென்னையில் நுழைந்ததும் மணியைப் பார்த்தான்.. காலை பதினொன்று என்றது...
'ம்ம்.. இன்னைக்குத்தானே பரிட்சை ஆரம்பிக்குது..? முதல்நாள் பரிட்சை... அவ எழுத ஆரம்பிச்சிருப்பா.. பண்ணை வீட்டுக்குப் போய் குளிச்சு முடிச்சு.. வயித்திலே எதையாவது போட்டுட்டு.. அப்புறமாய் அவளைக் கூப்பிட்டுக்கிட்டு வர.. காலேஜீக்கே போயிரலாம்... அவ பரிட்சை எழுதிட்டு வரும்போது என்னைப் பார்த்தான்னா சந்தோசப்பட்டுப் போயிருவா..'
நினைக்கும் போதே அவனுக்கு 'ஜிவ்' வென்று ஆகிப் போனது...
'இந்தக் காதல்தான் மனுசக் கழுதையை என்ன பாடு படுத்துது..' தனக்குள் சிரித்துக் கொண்டான்...
பண்ணை வீட்டின் முன்னால் நின்ற காரின் ஹாரன் ஒலியில் எட்டிப் பார்த்த பொன்னுச்சாமி அவசரமாகக் கதவைத் திறந்து விட்டான்... நீண்ட சிமிண்ட் பாதையில் ஒடிய கார் போர்டிகோவில் நின்றது... காம்பவுண்டின் இரும்புக் கதவைச் சாத்திய பொன்னுச்சாமி விரைந்து வந்தான்...
"வள்ளி.. வள்ளி..."
அவன் போட்ட சத்தத்தில்... தோட்டத்து அவுட் ஹவுஸில் இருந்து வெளியே வந்தாள் வள்ளியம்மாள்...
"இன்னாய்யா.. இன்னாத்துக்கு கூச்சல் போடற..?" என்று சொன்ன பாஷையில் விசாரித்தபடி வந்தவள்.. பாலமுரளியைக் கண்டதும் சப்தத்தைக் குறைத்துக் கொண்டாள்...
"ஐயா.. வாங்கய்யா.."
"என்ன.. வள்ளி சௌக்கியமா..?"
"உங்க தயவில.. சௌக்கியத்துக்கு இன்னாய்யா குறைச்சலு... அம்மா வல்லீங்களா..?"
"அவ ஏற்கனெவே இங்கே வந்திட்டா.."
"எங்க...?"
வள்ளியம்மாளின் கண்கள்.. சுற்று முற்றிலும் துழாவி வைக்க.. பாலமுரளி சிரித்தான்...
"இங்கேன்னா.. இங்கேயில்லை.. சென்னைக்கு வந்திட்டா.. அவ என்ஜினியரிங் படிச்சுக்கிட்டு இருந்தாள்ல.. அதான்.. பரிட்சை எழுதலாம்ன்னு வந்திருக்கா.. போனவாரம்தான் அவளைக் கூப்பிட்டுக் கிட்டு வந்து அவ அப்பா வீட்டிலே.. விட்டுட்டுப் போனேன்.."
"இங்கே வரலையேய்யா.." வள்ளியம்மாள் குறைபட்டாள்...
"வந்தவுடனேயே போக வேண்டியதாப் போயிருச்சு.. ஒரு நேரமாவது மாமனார் வீட்டிலயும் கை நனைச்சாகனுமில்ல.. அதான்.. வந்த சுருக்கில் அவளை விட்டவுடன் போயிட்டேன்..."
"இப்பவாவது அம்மா வருவாங்களா..?"
"அதுக்குத்தானே வந்திருக்கேன்.. அவ இங்கேயிருந்துதான் பரிட்சை எழுத போய்வரப் போறா.. செமத்தியா சமைச்சு வை.. மதியச் சாப்பாட்டுக் கெல்லாம் அவளை இங்கே கொண்டுவந்து சேர்த்துடறேன்..."
'மதிய உணவுக்குப் பின்..' பாலமுரளியின் நாடி நரம்பெங்கும் ஒர்விதமான உற்சாக அலை எழுந்து விழுந்தது...
"அதுக்கென்னய்யா.. தோ.. ஒரு நொடியில வேலையை ஆரம்பிச்சுட மாட்டேனா.. தா.. இன்னாத்துக்கு வாயைப் பார்த்துக்கிட்டு நிக்கிற... கடைக்கு ஓடிப்போயி.. நா சொல்லுறதை வாங்கிட்டு வா..."
வள்ளியம்மாள் சேலையை இழுத்துச் செறுகிக் கொள்ள.. பாலமுரளி பர்ஸை திறந்து பணத்தை எடுத்தான்..
"இந்தா பொன்னுச்சாமி... வள்ளி கேட்கிறதை வாங்கிட்டு வந்து கொடு... பத்தலைன்னா என்னிடம் கேட்டு வாங்கிக்க..."
"இன்னாத்துக்கு பத்தாம போகுது.. இதுவே அதிகம்.. கேட்டுக்க மச்சான்... தக்காளி அரைகிலோ..."
வள்ளியம்மாள் கணவனிடம் சமையலுக்கு தேவையான பொருள்களை பட்டியல் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க.. பாலமுரளி மாடியேறினான்..
"ஐயா.. காலம்பர நாஷ்டாவை ரெடி பண்ணிடறேன்.. நீங்க குளிச்சுட்டு சாப்பிட வாங்க..."
வள்ளியம்மாள் குரல் கொடுக்க.. சிரித்தபடி தலையசைத்தான்...
குளியலறைக்குள் புகுந்து குளிர்ந்த நீரில் தலையைக் கொடுத்தபோது... ராதிகாவின் நினைவு வந்தது...
'தினமும் என்கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணனும்...' அவள் குரல் காதில் ஒலித்தது...
'கொஞ்ச நேரம் போதுமா..?' தனக்குள் கேட்டுக் கொண்டவன் சிரித்துக் கொண்டான்..
ஈரத்தலையைத் துவட்டும் போது.. அவளுடன் எங்கேயாவது வெளியூருக்குப் போய்விட்டு வரவேண்டும் என்று தோன்றியது...
'அம்மாதான் தனியா இருந்துக்குவேன்னு சொல்லிட்டாங்கள்ல.. அவகூட ஹனிமூனுக்கு போயிட்டு வந்தா என்ன..?'
உடையணிந்தபடியே.. எந்த ஊருக்குப் போவது என்று யோசித்தான்..
'ஊட்டி..? கொடைக்கானல்...? ஊஹீம் வேண்டாம்.. இதெல்லாம் அவ பார்த்திருப்பா.. வடக்கே கோவா.. சிம்லான்னு கூப்பிட்டுக்கிட்டுப் போகலாமா...'
ராதிகாவை அழைத்து வர கல்லூரிக்குப் போய் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கார் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டவனுக்கு... இவை அனைத்தையும் விட்டுவிட்டு.. வெளிநாட்டுக்கு போய் வந்தாலென்ன என்று தோன்றியது...
'அதான் சரி.. அந்த சங்கர் வெளிநாட்டில தான் படிச்சான்.. இந்த பாலமுரளி.. பெண்டாட்டியை ஹனிமூனுக்காக வெளிநாட்டுக்கே கூப்பிட்டுக்கிட்டு போனான்னு இருக்கனும்..' உற்சாகத்தில் அவன் விசிலடித்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -120
அம்மம்மா.. கேளடி தோழி...! -120
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-120.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-120.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy