அம்மம்மா.. கேளடி தோழி...! -119

119 உன் வளையோசையின் கலகலவொலி.. கவிதைகளைக் கொட்டுவதை அறிவாயா.. ? வீட்டில் ஒர் வெறுமையை உணர்ந்தான் பாலமுரளி.. எப்போது அவன் வந்தாலும...


119
உன் வளையோசையின் கலகலவொலி..
கவிதைகளைக் கொட்டுவதை அறிவாயா..?

வீட்டில் ஒர் வெறுமையை உணர்ந்தான் பாலமுரளி.. எப்போது அவன் வந்தாலும்.. வாசலிலேயே காத்து நின்று அவன் கையிலிருக்கும் பெட்டியை வாங்கிக் கொண்டு போகும் ராதிகா இல்லாத வீட்டில் கால் வைக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை... அதை வார்த்தைகளால் சொல்லி விடவும் முடியாது.. மேகலா வருத்தப்பட்டு விடுவாள்...
இதிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் அவன் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்...
"ஏண்டா மதியம் சாப்பிட வராம என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?" மேகலா போனில் அழைத்த போது...
"வேலையிருக்கும்மா... எனக்காக காத்திருக்க வேணாம்..." என்று சொல்லி விட்டான்...
"பழையபடி ஆரம்பிச்சிட்டியா... இதுக்குத்தான் ராதிகா இருக்கனும்கிறது... அவகிட்ட உன் பாச்சாவெல்லாம் செல்லுபடியாகாது... அவ வந்தால்தான் நீ சரிப்படுவ..."
'அதைச் செய்யுங்க முதல்ல...' என்று அவனுக்குச் சொல்லத் தோன்றியது...
ஆயாசத்துடன் போனை வைத்து விட்டான்... அன்று இரவில் வழக்கமான நேரத்தில் அவனுக்குப் போன் செய்த ராதிகா...
"மதியம் லன்ச்சுக்கு வராம டிமிக்கி கொடுத்திட்டிங்க போல..." என்று விசாரித்தாள்...
அவளது குரலைக் கேட்டதும் அவனுக்குள் கிளம்பும் தாபமும்... வேகமும் அப்போதும் கிளம்பின...
"யாருடி சொன்னது...?"
"வேற யார் சொல்வாங்க..? அத்தைதான் சொன்னாங்க..."
"அவங்களிடம் பேசினியா...?"
"ஊம்.."
"எப்ப...?"
"மதியம்..."
"அவங்களிடம் பேசத்தெரியுது... அதே போனை எனக்குப் போட்டுப் பேசத் தெரியலையா...?"
அவனுக்குள் கோபம் பொங்கியது... மறுமுனை மௌனம் சாதித்தது...
"என்னடி... பேச்சைக் காணோம்.."
"நீங்க வேலையாய் இருப்பீங்கன்னு நினைச்சேன்..."
"அப்ப.. வெட்டியாய் இருந்தாத்தான் நீ பேசுவ... அப்படித்தானே...?"
"எதுக்காக இப்படிக் கோவிச்சுக்கறிங்க...?"
"ஊம்..? அப்படியொரு வேண்டுதல்... வைடி போனை.."
அதட்டினானேயொழிய அவன் போனை வைக்க வில்லை... அவள் மெதுவான குரலில் விசாரித்தாள்...
"மதியம் எங்கே சாப்பிட்டிங்க...?"
"தென்காசியில்..."
"தென்காசியில்ன்னா... எங்கே...?"
"ம்ம்ம்.. அங்கே எனக்கொரு அத்தை மக இருக்கா.. அவ வீட்டிலதான் சாப்பிட்டேன்... போதுமா...?"
"பெண்டாட்டியை ஊருக்கு அனுப்பி வைச்சிட்டு.. அத்தை மகவீட்டில விருந்து சாப்பிடறது நீங்க... இதில போதுமான்னு என்னைக் கேள்வி கேட்கறிங்களா...? உங்களுக்கு போதுமா..? அவ ஒருத்திதானா... இல்லை.. இன்னும் அடுத்தடுத்து லைனில் நிற்கிறாங்களா..?"
"அதையேண்டி கேட்கிற... வீதிக்கொருத்தி நிற்கிறாளுக... இப்ப என்னங்கிற..?"
"திமிரா...?"
"இல்லேன்னு சொல்ல மாட்டேன்... இவ்வளவு பேசறவ... எதுக்காக கிளம்பிப் போன...?"
"ம்ம்ம்... என் அம்மா வீட்டில விருந்து சாப்பிட வந்திருக்கேன்... கேள்வியைப் பாரேன்... எக்ஸாம் எழுத கிளம்பி வந்தவனைப் போயி எத்தனைக் கேள்விகளைக் கேட்கிறாரு..."
"போனயில்ல... அப்புறம் எதுக்காக... என்மேல அக்கறைப்படறதைப் போல சீன் காட்டற... நான்
மதியம் சாப்பிட்டா உனக்கென்ன... சாப்பிடலைன்னா உனக்கென்ன...?"
பாலமுரளி சுள்ளென்று பேசியதும்... ஆழ்ந்த குரலில் ராதிகா கேட்டாள்...
"எனக்கொன்னுமில்லையா...?"
அந்த ஒரு கேள்வி... அவனின் உயிருள் நுழைந்து ஆட்டி வைத்தது... அவளைத் தொட்டுத் தழுவி கலக்க முடியாவிட்டாலும்.. கிட்டத்தில் வைத்தாவது பார்த்துக் கொண்டிருந்தவன்... அதுவும் முடியாத சூழ்நிலையில் குமுறினான்...
"பேசாதேடி..."
"அத்தான்..."
"பேசாதேன்னு சொன்னேன்..."
"எக்ஸாம் எழுதத்தானே வந்தேன்...?"
"அதை எழுதனும்னு என்ன கட்டாயம்..?"
"படிச்ச படிப்பை முடிக்க வேணாமா..?"
"அதை வைத்துத்தான் பிழைக்கப் போகிறயா..?"
"அதுக்காக.. எக்ஸாம் எழுதாம இருக்கலாமா..?"
"ம்ப்ச்..."
பாலமுரளி போனை வைத்து விட்டான்... அவளில்லாத கட்டிலில் படுக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை...
மேஜை விளக்கின் ஒளியில் கூர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் ராதிகா... அவள் பின்னால் சப்தமில்லாமல் வந்து நின்ற கீதா..
"எதுக்குடி இப்படி வருத்திக்கற...?" என்று கேட்டாள்...
"இன்னுமாடி நீ தூங்கல.." ராதிகா புத்தகத்தை மூடினாள்...
"எங்கே தூங்கறது... எனக்கு இத்தனூண்டு வெளிச்சம் இருந்தாக்கூட தூக்கம் வராது... நீயென்னடான்னா.. இவ்வளவு பெரிய லைட்டை எரிய விட்டுக்கிட்டு இருக்க.. எப்படித் தூக்கம் வரும்..?"
"நான் பாட்டுக்கு மூலையில உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருக்கேன்... இது உனக்கு டிஸ்டர்ப்பா இருக்கா...?"
"ஆமாம்ன்னுதானே சொல்லிக்கிட்டு இருக்கேன்.."
கீதா.. மேஜை விளக்கை அணைத்து எரிய விட்டாள்... ராதிகா உஷ்ண பார்வை பார்த்தாள்...
"எதுக்குடி முறைக்கிற...?"
அறியாச் சிறுமியைப் போல இமை கொட்டினாள் கீதா...
"அடிச்சுப் பல்லைக் கழட்டி விடுவேன்..."
"அத்தான் பாஷை உனக்கும் ஒட்டிக்கிச்சா...? அச்சு அசல் தேனூத்துக்காரியாவே மாறிட்டபோ..."
"அவர் பேசினதை நீ எப்பக் கேட்ட..."
"இதைத்தானே அவர் அடிக்கடி சொல்லி வைப்பார்..? எனக்குத் தெரியாதா என்ன...?"
"பேச்சை மாத்தாதே... இப்ப எதுக்காக டேபிள் லேம்ப்பை ஆஃப் பண்ணிப் போட்ட...?"
"நான் சும்மா நோண்டினேன்... நீயென்ன இதுக்கெல்லாம் கேள்வி கேட்கிற...?"
"ஏய்ய்.. எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே... நீ பார்த்த அதே சினிமாவை நானும் பார்த்திருக்கேன்... யாருக்கு சிக்னல் கொடுத்த...?"
"கொடுத்திட்டாலும்..."
"எதுக்குடி நீட்டி முழக்குற...?"
"போ ராது... எல்லாமே மக்கு பிளாஸ்திரியும்.. டியுப் லைட்டுமா இருக்குது.. இதில இந்த சிக்னலை எந்த ஜென்மம் புரிஞ்சுக்கும்ன்னு நீ நினைக்கிற...?"
"அப்புறம்... எதுக்காகடி சிக்னலைக் கொடுத்த..?"
"உன்னை வம்பிழுக்கத்தான்... உன்னிடம் திட்டு வாங்கி எத்தனை நாளாச்சு... ஐ மிஸ்டு யு ராது... நீ என்னை நினைச்சியா...?"
கீதா ராதிகாவின் அருகே அமர்ந்து அளின் கையைப் பிடித்துக் கொள்ள... ராதிகா மனம் நெகிழ்ந்தாள்.. அவளுக்குள் குற்ற உணர்வு எழுந்தது...
அவள் சென்னைக்கு வந்த நாளிலிருந்து வீட்டிலிருந்த அனைவரும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்...
"சுந்து.. உன் பேனா பத்திரம்டா.. ராதிகா வந்திட்டா..." என்ற கீதாவின் எச்சரிக்கைக்கு...
"நோ பிராப்ளம்.. எத்தனை பேனாவை வேண்டும்னாலும் கை வைச்சுக்கக்கா.. நீ எங்ககூட இருந்தால் போதும்," என்று சொன்னான் சுந்தர்...
அடாது மழை பெய்தாலும்... விடாது அலுவலகம் செல்லும் கர்மவீரரான கிருஷ்ணமூர்த்தி... மகளைக் கண்டதும்.. மருத்துவ விடுப்பைக் கொடுத்து விட்டார்...
நல்லா வந்திரும் வாயிலே... நல்லா வந்திரும் வாயிலே என்று வீட்டில் உள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருந்த லேடி ஹிட்லர் ராஜேஸ்வரிக்கு வாயெல்லாம் பல்லாக மாறி விட்டிருந்தது..
"அச்சு அசல் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாதான்.. லேடி ஹிட்லரை இப்படிப் பார்த்தாத்தான் நல்லாயிருக்கு.. ஆனா.. இதையாரு அவங்ககிட்டச் சொல்றது..?" கீதா ஆதங்கப் படவும்...
"ஏன் நீதான் சொல்லேன்..." என்று யோசனை சொன்னான் சுந்தர்...
"பூனைக்கு மணிகட்ட நான் தயாரா இல்லை... அந்த வேலைக்கு ராதிகாதான் லாயக்கு... ராது... இதுக்காகவே நீ கொஞ்சநாள் எங்க கூடவே இரேண்டி..." கீதா ராதிகாவின் கழுத்தைக் கட்டிக் கெண்டாள்...
அவளைச் சுழ்ந்திருந்த அவளின் பெற்றவர்களும்... உடன் பிறந்தவர்களும் அவளது வருகையில் வெகுவாகச் சந்தோசப் பட்டுப் போயிருந்தனர்.... அனைவரும் தினமும் பலமுறையாவது ராதிகாவை நினைத்துப் பார்த்ததாகச் சொன்னார்கள்... அவள் மனதில் அந்த அளவுக்கு அவர்களைப் பற்றிய நினைவில்லை என்ற எண்ணத்தில் ராதிகா சங்கடப்பட்டுப் போனாள்...
'நான் இத்தனை சுயநலவாதியா...?'
அதே சமயத்தில்... பிறந்த வீட்டு சொந்தங்களின் மத்தியில் இருந்தாலும்... அவள் மனம் பூராவும் தேனூத்திலேயே நிலை கொண்டிருந்தது...
'இந்நேரத்துக்கு அத்தை எழுந்திருச்சிருப்பாங்க... அவர் என்ன பண்ணிக்கிட்டு இருப்பார்..? சாப்பிட்டிருப்பாரா.. எங்கே சாப்பிட்டிருக்கப் போகிறார்..? செல்போனை காதில் வைச்சுக்கிட்டு சாப்பிட மறந்து காரில ஏறியிருப்பார்...'
அவளது சிந்தனை பூராவும் இப்படியே இருந்தது... இதை அறியாத அவளின் தாய்வீடு அவளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது...
காலை நேரத்தில் பாலமுரளி கிளம்பிக் கொண்டிருப்பான் என்ற நினைவில் அவள் போன் செய்வதில்லை... மதியத்தில் அவன் எங்கே இருக்கிறானோ.. சுற்றிலும் யார் இருப்பார்களோ என்ற தயக்கத்தில் போன் செய்ய யோசித்தாள்.. இரவின் அமைதியில் பேசினால்தான் அவன் நிதானமாக
இரண்டு வார்த்தைகளாவது பேசுவான் என்று அவள் இரவில் அவனுக்கு போன் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்...
பாலமுரளி அதிலும் குற்றம் கண்டு பிடித்தான்.. சுள்ளென்று பேசினான்.. ராதிகாவிற்குள் ஆதங்கம் பொங்கியது... அவள் அவனை நினைக்கும் அளவிற்கு... அவன் அவளை நினைக்கவில்லை என்று அவள் நினைத்தாள்...
'எப்படா இவ தலை மறையும்ன்னு காத்திருந்தார் போல... நான் இருந்த வரைக்கும்.. கடமைக்காகவாவது வீட்டுக்கு வருவார்.. இப்ப அதுவும் இருக்காது...'
இரவின் அமைதியில் அவளது நினைவு பூராவும் அவன் மீதே மையம் கொண்டிருந்தது...
ராதிகா பரிட்சை எழுதப் போக வேண்டும் என்று நினைத்தாலும் அதை பாலமுரளியிடம் சொல்லப் பயந்து கொண்டிருந்தாள்... அப்போது தான் கிருஷ்ணமூர்த்தி மருமகனுக்கு போன் பண்ணி... ராதிகாவின் பரிட்சையை அவனுக்கு நினைவூட்டினார்... மாமனாரே சொல்லி விட்ட பின்பு பாலமுரளியால் அதை மறுத்துப் பேச இயலாமல் போய்விட்டது...
அப்படியிருந்தும் அவன் ராதிகாவிடம் சொல்லிப் பார்த்தான்...
"எனக்கென்னவோ.. இதெல்லாம் தேவையில்லைன்னு தோணுது... ராதிகா..."
"எது...?"
"இந்தப் பரிட்சை..."
"நான் ஹால் டிக்கெட் வாங்கினப்பவே உங்களுக்குத் தெரியும் தானே... கிளாஸைத்தான் அட்டெண்ட் பண்ண முடியல... நல்ல வேளையாய் நான் லீவே எடுத்ததில்ல... அதனால தேவையான அட்டெண்டன்ஸ் கையில் இருக்கு... எக்ஸாமையாவது அட்டெண்ட் பண்ணியாகனுமில்ல.."
"நீ படித்து வேலைக்குப் போய் யாரைக் காப்பாற்றப் போகிற...?"
அவனின் குதர்க்கமான கேள்விக்கு ராதிகா பதில் சொல்லவில்லை... அவனுக்கு சம்மதமில்லை என்று தெரிந்த பின்னால் அதைப் பற்றிப் பேசாமல் மௌனம் சாதித்தாள்.. அவனே ஒருவழியாக இறங்கி வந்து...
"கிளம்பு..." என்று சொல்லிவிட்டான்...
"இவ சென்னைக்குப் போகனுமாம்மா... பரிட்சை எழுதனுமாம்..."
மேகலாவிடம் குற்றச்சாட்டைக் கூறுவதைப் போலக் கூறிவைத்தான்... 'எதற்கு அதெல்லாம்..? வேண்டாம்..' என்று அவள் மறுத்து விடுவாள் என்று எதிர் பார்த்தான்.. அப்படி அவள் சொல்லி விட்டால்.. அதுதான் சாக்கென்று ராதிகாவை பரிட்சை எழுதவிடாமல் நிறுத்தி விடலாம் என்ற நினைவு அவனுக்கு...
மேகலாவோ.. அவன் நினைவில் கல்லைத்தூக்கி போட்டாள்...
"அப்படியா ராதிகா...? தாராளமாய் போயிட்டு வாம்மா... நல்லாப் படிச்சு பரிட்சை எழுது.. என் மருமக மார்க்கைச் சொல்லி நான் பெருமைப் பட்டுக்கனும்.. அப்படி நீ பரிட்சை எழுதனும்.." என்று சொல்லி விட்டாள்..
ராதிகாவை அழைத்துக் கொண்டு போய் சென்னையில விட்டுவிட்டு வருவதைத் தவிர.... பாலமுரளிக்கு வேறு வழி இருக்கவில்லை...
உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் அவன் சென்னைக்கு கிளம்பினான்.. வழி நெடுக ராதிகா என்ன பேசினாலும்... பதில் பேசாமல் இருந்தான்... அவள் வீட்டில் போய் இறங்கிய போதும் அதே பாரா முகம்தான் தொடர்ந்தது...
"என்ன அத்தான்... கல்யாணமாகி இரண்டு மாதம்கூட ஆகலை... அதுக்குள்ள சிரிப்பை தொலைச்சிட்டிங்க...?"
கீதாவின் கேள்விக்கு வலுக்கட்டாயமாக அவன் சிரித்து வைக்க...
"இதுக்கு நீங்க சிரிக்காமலே இருந்திருக்கலாம் அத்தான்..." என்று அவள் சொல்லி விட்டாள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -119
அம்மம்மா.. கேளடி தோழி...! -119
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-119.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-119.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy