அம்மம்மா.. கேளடி தோழி...! -117

117 உன்மீது கொண்ட ஆசை... உள்ளம் மட்டும் அறியும் ஓசை... ஷோபாவை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டான் பாலமுரளி.. அவள் வரும் தகவலை பர...


117
உன்மீது கொண்ட ஆசை...
உள்ளம் மட்டும் அறியும் ஓசை...

ஷோபாவை சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டான் பாலமுரளி.. அவள் வரும் தகவலை பரந்தாமனுக்கும் போன் மூலம் தெரிவித்து விட்டான்.. அவர் நன்றி சொல்லாமல்... தேனூத்திலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து இல்லையா என்று விசாரித்தார்.. அப்படியாகப்பட்ட கிராமத்திற்கு ஷோபா வந்திருக்க வேண்டாம் என்ற அவரது கருத்தையும் தெரிவித்தார்.. அதனால்தான் அவளை உடனடியாக அனுப்பி வைத்து விட்டோம் என்று சொல்லலாமா என்று பாலமுரளி ஆசை கொண்டான்... பாலசரஸ்வதியின் முகத்திற்காக விட்டு விட்டான்...
புயலடித்து ஓய்ந்ததைப் போல வீடு இருப்பதாக மீனாட்சி அபிப்ராயம் தெரிவித்தாள்.. மற்றவர்கள் மனதிலும் அதே நினைவுதான் என்றாலும் அதை வாய் விட்டுச் சொன்னால்.. அவள் உடனே வார்த்தைகளை வளர்த்துக் கொண்டிருப்பாள் என்பதினால் மௌனம் சாதித்து தப்பித்தார்கள்.. 
மாலை நேரங்களில் பாலமுரளியுடன் சென்று விடுவதை ராதிகா வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.. அவனும் அதை மனதிற்குள் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டான்.. அவளைத் தொட்டு ஆள முடியாத தாபத்தை அவளைக் கிட்டேவைத்து ரசிப்பதன் மூலம் ஈடுகட்டி விட அவன் மனம் துடித்தது...
தினந்தோறும் மில்லுக்குச் சென்றாலும்.. மாலை வேலைகளில் மற்ற தொழில்களில் ஏதாவது ஒன்றைத்தான் அவன் பார்வையிடப் போவான்... அப்படிப் போகும் தருணங்களில்தான் ராதிகா அவனுடன் ஒட்டிக் கொண்டாள்...
நாள் முழுவதும் வேலை செய்த களைப்பு மறைந்து.. ஒர்விதமான புத்துணர்வு அவளது அருகாமையில் கிடைப்பதை உணர்ந்தான் பாலமுரளி... பூவாசத்துடன்.. சேலைமுந்தானை காற்றில் பறந்து வந்து அவன் முகத்தின் மீது படியும் போது அவன் உணரும் நறுமணத்தில் அவனது மாலைப் பொழுதுகள் மனம் மயக்கும் தருணங்களாக மாறிப்போயின...
"இதுதான் நம்ம தோப்பா...?"
முதன்முதலாக.. அவனது தோப்புக்களுக்கு அவளை அழைத்துச் சென்றபோது... விழிவிரிய அவள் கேட்ட விதத்தில் பாலமுரளி சொக்கிப் போனான்... அதுவும்.. 'நம்ம தோப்பு...' என்று உரிமையுடன் அவள் பேசிய விதத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்டான்..
"ம்ம்ம்.. நம்மதோப்புத்தான்... இந்தப் பக்கம் பூராவும் தென்னந்தோப்பு.. அந்தப்பக்கம் கொய்யா தோப்பு இருக்கு.."
"அப்புறம்..?"
"மாந்தோப்பு... மாதுளந்தோப்புன்னு நீண்டுக்கிட்டே போகும்..."
"இவ்வளவும் உங்களுக்குச் சொந்தமா..?"
குழந்தைபோல வினவியவளை உறுத்துப் பார்த்தான் பாலமுரளி.. என்னதவறு செய்தோம்.. என்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள் ராதிகா...
"இம்புட்டு நேரமும் ஒழுங்காத்தானே பேசிக்கிட்டு இருந்தவ... இப்ப என்னத்துக்கு பேச்சு மாறுது...?"
"அப்படி என்னத்தைங்க சொல்லிட்டேன்...?"
"உங்களுக்குச் சொந்தமான்னு கேட்டா என்ன அர்த்தம்..? உனக்கு இது சொந்தமில்லையா...?"
இவ்வளவுதானா என்ற நிம்மதியுடன் அவன் மார்பில் லேசாகக் குத்திச் சிரித்தாள் ராதிகா...
"ஹப்பா... பயந்தே போயிட்டேன்..."
அவளின் அந்தச் செய்கை பாலமுரளிக்குப் பிடித்திருந்தது... அவன் அவளைத் தொட்டு ஆளாமல் விலக்கி வைத்திருந்ததை பொருட்படுத்தாமல் ராதிகா காட்டும் இயல்பான நெருக்கத்தில் அவன் வசீகரிக்கப்பட்டான்... அவனும் அதே இயல்புடன் அவளிடம் பேசிச்சிரிக்க நேர்வதில் சுகமானதொரு அனுபவத்தை அவன் உணர்ந்தான்...
"நீ ரொம்ப பயந்தவதான்..."
"பின்னே.. இல்லையா..."
"இதை உன் மாமியாரிடம் சொல்லு.. நம்பிடுவாங்க.. நான் நம்ப மாட்டேன்..."
"மாமியார் நம்புவாங்க.. மாமியார் பெத்த மகன் மட்டும் நம்ப மாட்டாருன்னா என்னங்க அர்த்தம்..? எந்த ஊர் நியாயம் இது...?"
"தேனூத்து நியாயம் இதாண்டி.."
"சென்னையில பிறந்து வளர்ந்த அப்பாவிப் பொண்ணை மிரட்டிப் பயமுறுத்தறிங்க..."
"திரும்பவும் பயந்து போனதா பிலிம் காட்டாதே.. பயமே உன்கிட்ட பயப்படும்ன்னு உன் மாமியாருக்குத்தான் தெரியாது... எனக்குத் தெரியும்..."
"அப்படித் தெரிஞ்சதாலதான் மோகினிப் பேய்ன்னு சொல்லி என்னை பயமுறுத்தப் பார்த்தீங்களா...?"
ராதிகா சிணுங்க.. அந்த நள்ளிரவு கார் பயணத்தின் நினைவில் பாலமுரளி... பலமாகச் சிரித்தான்...
"சரியான பயந்தாக்குளிடி நீ... மனுசருக்குப் பயப்படாதவ பேய்க்குப் போய் அம்புட்டு பயம் பயந்தியே.."
இப்படிக் கேலி பேசியவனை விசித்திரமாகப் பார்த்தாள் ராதிகா...
"பேய்க்கு பயப்படாம இருக்க முடியுமா..?"
"என்னவோ போ.. தென்னையில காய் இறக்கிற சமயங்கள்ல.. நான் நடுராத்திரின்னு கூடப் பார்க்காம இந்த தோப்புப் பக்கம்தான் சுத்திக்கிட்டு இருப்பேன்.. பதினைஞ்சு வயசிலேயிருந்து அதே பழக்கம்தான்.. உன்னை மாதிரி பயந்தா வேலைக்கு ஆகுமா..?"
"நீங்களும் நானும் ஒன்னா..?"
ராதிகா பேச்சுக்காக கேட்டுவிட...
"இல்லைங்கறியா..?" என்று ஆழமான குரலில் கேட்டான் முரளி..
அவனின் அந்தக்குரலில் ஆகர்ஷிக்கப் பட்டவளாக தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ராதிகா.. அவளை ஊடுறுவிப் பார்த்தது அவனது பார்வை... இருவரின் பார்வைகளும் பின்னிப் பிணைய.. ஆசையாமல் அவர்கள் இருவரும் நின்றார்கள்...
எங்கோ ஒரு குயில் கூவிப் பறந்த ஒலியில்.. தண்ணுணர்விற்கு மீண்ட ராதிகா சிறு விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.. பாலமுரளியின் கரங்கள் ஒர்நொடி தயங்கி.. மறு நொடியில் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.. திக்குத் தெரியாத காட்டில் வழிதப்பிப் போனவள் தன்வீடு திரும்பி விட்டால் பெறும் அமைதியை அன்று உணர்ந்தாள் ராதிகா.. அவன் மார்பில் சாய்ந்து நிற்கும் போது கிடைத்த மனஅமைதிக்கு நிகரில்லை என்பதை அன்று கண்டு உணர்ந்து தெளிந்தாள்...
பரந்து விரிந்திருந்த தோப்பைச் சுற்றிப் பார்க்க ஒரு வாரத்திற்கு மேலாகவும் ஆகக் கூடும் என்று பாலமுரளி சொன்னான்... ஆனாலும் அதைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்றே விருப்பத்தை ராதிகா தெரிவித்தாள்... அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவனுக்கும் விருப்பமிருந்தது... இரவு நேரத் தவிப்புகளுக்கான ஆறுதல் அந்த மாலை நேரங்களின் நெருக்கத்தில் அவனுக்கு கிடைத்து விடுவதை அவன் உணர்ந்தான்...
முதல்நாள் முழுவதும் தென்னந் தோப்பை சுற்றிப் பார்த்தார்கள்.. சலசலத்து ஓடிய வாய்க்கால் நீரில் கால் பதித்து சிலிர்த்து ராதிகா சிரித்தபோது.. தேவலோகத்து மாதர்களின் அழகை பரிபூரணமாக அவளிடம் கண்டான் முரளி...
அவள் சென்னைவாசி.. மழைக்குக்கூட கிராமத்துப் பக்கம் ஒதுங்கியிராதவள்.. அவளுக்கு இயற்கை அழகு நிறைந்த தோப்புக்களைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை...
கொய்யாத் தோப்புக்கு போன போது.. குழந்தையைப் போல குதூகலித்தாள் ராதிகா... மரத்தில் தொங்கிய வெண்மை கலந்த பசுமை நிறத்துடன் இருந்த கொய்யாக்காய்களை பறித்துக் கொடுக்குமாறு முரளியிடம் கொஞ்சிக் கேட்டாள்.. அவனும் பறித்துக் கொடுத்தான்...
"டேஸ்டா இருக்குமா..?"
அவள் சந்தேகம் கேட்க.. சிரித்தபடி ஒரு காயைக் கடித்துச் சாப்பிட்டான் முரளி...
"ரொம்ப டேஸ்டாயிருக்கு.. இந்தா சாப்பிடு..."
அவன் நீட்டிய காயை வாங்காமல்... அவன் கடித்து வைத்திருந்த காயை வாங்கிக்கடித்து சுவைத்தாள் ராதிகா...
"ரொம்ப டேஸ்டாயிருக்கு..."
கண்களில் காதலுடன் சொன்னவளை அள்ளிக் கட்டிக்கொள்ள வேண்டும் போல அவன் கைகள் பரபரத்தன...
சொல்லி விட்ட சொல்லில் அவன் கைகளை கட்டுப் படுத்திக் கொள்ள.. எந்தவித மனத்தடைகளும் இல்லாதவளாய் அவள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்... கண்கள் மின்ன அவனும் பதிலுக்கு அவளைத் தழுவிக் கொண்டான்...
மாதுளந் தோப்புக்குள் சென்றபோது.. இயல்பாக அவர்களின் கரங்கள் பிணைந்து கொண்டன.. எந்த விரல் கோர்ப்பிற்காக பாலமுரளி ஏங்கினானோ... அந்த விரல் பிணைப்பை வெகு இயல்பாக அவனுக்கு அளித்தாள் ராதிகா...
அவனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன...
"அது என்ன செடி...?"
"வாலை ஆட்டிக் கொண்டு பறந்து போகுதே.. அது என்ன பறவை..? குருவியா..? மைனாவா..? குயிலா..?"
"இந்த மரத்துக்குப் பெயர் என்ன...?"
"இந்தப் பூ எப்படி இவ்வளவு வாசமாயிருக்கு..? இந்த மலர் செடிகளை இங்கே நட்டு வைத்தது யார்..?"
குழந்தை போல அவள் கேட்கக் கேட்க.. அதை ரசித்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பாலமுரளி... அலுப்பைத் தரும் மாலைப் பொழுதுகள் இவ்வளவு அழகானதாக எப்படி மாறின என்ற கேள்வியை மட்டும் மனதுக்குள் அவனாக கேட்டுக் கொண்டான்.. அதற்கு விடையாக நின்றாள் ராதிகா...
தோப்புக்கு வரும்போத மறக்காமல் செல் போனில் பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள்.. அவளுக்குப் பிடித்த காட்சிகளை அதே செல்போனில் பதிவு பண்ணவும் செய்தாள்...
   "இது மாலை நேரத்து மயக்கம்...
             பூ மாலை போல் உடல் மயக்கும்...
    இதழோடு.. இதழ் சேர...
             அந்த இன்பம் தேடுது எனக்கும்..."
பாடல் ஒலிக்கும் போது அவளும் கூடப் பாடியபடி அவனையே பார்த்தாள்... அந்தப் பார்வை..! அதில்தான் எத்தனையெத்தனை செய்திகள்...!
அவனை விழுங்கி விடுவதைப் போலப் பார்த்த அவளின் விழிகளில் அழைப்பு இல்லை... ஆசை இருந்தது.. காமம் இல்லை.. காதல் இருந்தது.. தாகம் இல்லை... தாபம் இருந்தது...
இதுபோன்ற உணர்வுகளுக்கு என்ன விதமான பதிலைத் தருவது என்ற திடுக்கிடலுடன் பாலமுரளி திகைத்து நின்றான்...
மன்மதனின் மலர் பாணங்களாய் அவளது பார்வை அவனைக் குறிவைத்துக் கொண்டிருந்த போது... கைகள் கட்டப் பட்டிருந்தவனாக அவளுடன் கலக்க முடியாமல் அவன் கலங்கி நின்றான்...
அவன் தேடிய காதல் அவள் விழிகளில் கொட்டிக் கிடந்தது... அதை அள்ளிக் கொள்ள முடியாத வறியவனாக அவன் உறைந்து நின்றான்... அவள் மீது கொண்ட ஆசை அவனை அலைக்கழித்தது... தாள முடியாமல் மனம் தத்தளித்தான்...
   "உன் மேல கொண்ட ஆசை...
             உத்தமியே மெத்தை உண்டு...
    சத்தியமாச் சொல்லுறேண்டி...
             தங்க ரத்தினமே...!
    தாள முடியாது கண்ணே..
             பொன்னு ரத்தினமே...!"
அவனது தாபத்தை உணர்ந்தாளோ.. என்னவோ.. மாமரத்தின் கிளையில் சாய்ந்து நின்ற ராதிகா.. அவனை நோக்கி இரு கரத்தையும் நீட்டி அழைத்தாள்...
அந்தச் செய்கையில் ஆகர்ஷிக்கப் பட்டவனாக முரளி அவள் கைகளுக்குள் புகுந்தான்.. அவனைத் தழுவிக் கொண்ட ராதிகாவின் முத்தங்கள் அவன் முகமெங்கும் படிந்தன... தாள முடியாத தாபத்துடன் அவள் கழுத்து வளைவில் அவன் முகம் புதைத்துக் கொள்ள.. கருணையுடன் அவன் தலை கோதினாள் ராதிகா.. அது கூடலில்லாத கூடலாக அந்த இருவருக்கும் இருந்தது..
அன்று வீடு திரும்பும் போது... அவன் மனதில் எல்லையில்லாத அமைதி வியாபித்திருந்தது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -117
அம்மம்மா.. கேளடி தோழி...! -117
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-117.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-117.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy