அம்மம்மா.. கேளடி தோழி...! -114

114 அலைமீது செல்லும் துரும்பு... உன்மீது காதல் கொண்ட அரும்பு... ஒரு சிறு அணைப்பு போதும்... பாலமுரளி உருவாக்கிக் கொண்டிருந்த மனத்த...


114
அலைமீது செல்லும் துரும்பு...
உன்மீது காதல் கொண்ட அரும்பு...

ஒரு சிறு அணைப்பு போதும்... பாலமுரளி உருவாக்கிக் கொண்டிருந்த மனத்தடைகளை அவனே உடைத்து சுக்கு நூறாக்கி எறிந்து விட...
அந்த அணைப்பைத் தரத்தான்.. அவன் கைகள் நீண்டன... அவன்மேல் சரிந்திருந்தவளை நிமிர்த்தி அவளைத் தழுவிக் கொள்ள அவன் யத்தனித்துக் கொண்டிருந்த போது அவனது செல்போன் அலறியது...
"த்ச்சு..."
அவன் செல் போனை எடுக்க... ஏமாற்றத்துடன் ராதிகா விலகி அமர்ந்தாள்... எப்போது அவன் மோக வெள்ளத்தில் மூழ்கி அவளைத் தொடுகிறானோ... அப்போதெல்லாம் செல் போனின் மணி ஒலிப்பதற்கான தாத்பர்யம் என்னவாக இருக்கக்கூடும் என்று அவள் மண்டையைக் குடைந்து யோசித்துக் கொண்டிருந்தாள்...
"ம்ம்... ம்ம்.. எப்ப...? எதுக்காம்..? ம்ம்.. வர்றோம்..."
அவன் இறுகிய முகத்துடன் போனை வைத்து விட்டு.. அவளிடம் எதுவும் பேசாமல் காரைக் கிளப்பி... புயல் வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தான்...
'போச்சுடா... இப்ப... எந்த வினை போனில் வந்திருக்காம்..?.'
"அவன்தான் வந்திருக்கானாம்..."
'எவன்... அவன்...?'
"வேற எவன் வருவான்..? அந்த சங்கர் பயல்தான்.."
'கடவுளே...! இங்கேயென்ன வேலையாம்...?'
"கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க வந்திருக்கிறானாம்..."
அவள் மனம் நினைத்தவைகளுக்கெல்லாம் அவன் பதிலை சொல்லி வைக்க.. அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்...
'ம்ஹீம்... இந்த ஷோபா வந்தாலும்.. வந்து தொலைச்சா... தலை வலியே வராதவங்களுக்கெல்லாம் தலையை வலிச்சுத் தொலைக்குது...'
"அது எப்படிடீ.. கழுகுக்கு மூக்கு வியர்க்கிறதைப் போல நான் உன்னைத் தொட நினைக்கிறப்பல்லாம் கரெக்டா... அவன் செல்போனில வந்து நிக்கிறான்...?"
ராதிகாவுக்கும் அது புரியவில்லை.. அதைச் சொன்னால் பாலமுரளி காது கொடுத்துக் கேட்கப் போவதில்லையென்பதால் மௌனமாக இருந்தாள்...
"கல்யாணம் பண்றதா இருந்தா... பண்ணித் தொலைச்சுட்டுப் போக வேண்டியதுதானே... அதை விட்டுட்டு கல்யாணப் பத்திரிக்கை வைக்க என் வீட்டுக்கு ஏன் வர்றான்...?"
இதற்காகத்தான் அவன் பாலமுரளியின் உறவினரின் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தானோ என்று ராதிகாவுக்குத் தோன்றியது...
"இவனெல்லாம் பத்திரிக்கை வைக்க வரலைன்னு யார் அழுதா...?"
ராதிகா பொறுமையிழந்தவளாக நகம் கடித்தாள்... பாலமுரளியின் கோபத்திலிருந்த நியாயம் அவளுக்குப் புரியாமல் இல்லை... இருந்தும் அவளால் எந்த வகையில் அவனுக்குச் சமாதானம் சொல்ல முடியும்...?
பாலமுரளியின் வீட்டுக் காம்பவுண்டிற்குள் கார் நுழைந்தது... பிரம்மாண்டமான போர்டிகோவில்... சங்கரின் வெளிநாட்டுக் கார் நின்று கொண்டிருந்தது... பாலமுரளி கடுப்புடன் காரை விட்டு இறங்கினான்.. ராதிகா பின் தொடர வீட்டுக்குள் போனான்...
"என்ன செய்யறது தங்கச்சி... உங்க எல்லாத்தையும்... கலந்துக்கிட்டு.. முன்னால நிற்க வைச்சுத்தான் இந்தக் கல்யாணத்தை முடிவு பண்ணியிருக்கனும்... ஆனா பாரு.. திடிர்ன்னு உன் மருமகளுக்கு கல்யாணம் கூடிவந்திருச்சு.. நீ எப்படி உன் மகனோட கல்யாணத்தை அவசர அவசரமாக முடிவு பண்ணினயோ... அதப்போலவே நானும் செய்ய வேண்டியதாப் போச்சு..."
கோமதிநாயகம் நீட்டி முழங்கிக் கொண்டிருக்க... அவரருகில் சோபாவில் அமர்ந்திருந்த சங்கர் சும்மா உட்காராமல் கால்மேல் கால் போட்டு தோரணையாக உட்கார்ந்திருந்தான்... அந்தத் தோரணையைக் கண்ட பாலமுரளிக்குள் கோபம் துளிர்த்தது...
"அதுக்கென்னங்க அண்ணே... கல்யாண வயசில பொண்ணை வீட்டுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு இருக்க முடியுமா..? தோதான இடம் வந்தா சட்டுப் புட்டுன்னு கல்யாணத்தை பேசி முடிச்சு... கட்டிக் கொடுத்து அனுப்பிர வேண்டியதுதானே.. இதுக்குப் போயி என்கிட்ட விளக்கம் சொல்லனுமா...?"
அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்ன மேகலா.. தான் பாலமுரளிக்கு அன்னை என்பதை கோமதி நாயகத்திற்கு உணர்த்தினாள்...
உன் வீட்டுத் திருமணத்தை நீ நடத்துகிறாய்... இதில் எனக்கென்ன ஆட்சேபனை இருக்கப் போகிறது என்ற விதத்தில் மேகலா... பட்டுக் கொள்ளாமல் விலகிக் கொண்டதில் கோமதிநாயகம் மன உளைச்சலுக்கு ஆளானார்...
அவரின் மனைவியான தங்கம்... பாலமுரளியின் தந்தையான மாணிக்கவாசகத்திற்கு சொந்த சித்தப்பாவின் மகள்... பெற்றவர்களுக்கு ஒற்றை மகளாகப் பிறந்த தங்கத்தின் பிள்ளைகளுக்கு.. தாய்மாமன் சீரை மாணிக்கவாசகம்தான் செய்ய வேண்டும்... அவளுடைய இடத்திலிருந்து அந்தச் சீர்களை.. பாலமுரளிதான் செய்து வந்தான்...
அப்படிப்பட்ட நெருங்கின உறவு முறையில் இருந்து கொண்டு பட்டும்படாமல் மேகலா பேசியவிதத்தில் கோமதி நாயகத்தின் மனம் கொந்தளித்தது...
இருந்தாலும்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்மையாகவே அவர் பேசினார் என்றால்... அதற்கு ஒரு பலமான காரணம் இருந்தது...
அந்த வட்டாரத்திலேயே பெரும் புள்ளியான பாலமுரளியின் உறவுக்காரர் என்ற பெருமையை பெற்றிருப்பவர் அவர்... ஏதாவது ஏடாகூடமாக அவர் பேசிவைத்து.. அதுதான் சாக்கென்று... பாலமுரளியும்... மேகலாவும் அவர் வீட்டுத் திருமணத்தை புறக்கணித்து விட்டால்... அந்த வட்டாரத்தில் அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாது...
பாலமுரளி வந்ததுமே... கோமதிநாயகம் தானாக எழுந்து நின்று கரம் குவித்து...
"வாங்க... மாப்பிள்ளை..." என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்று வைத்தார்...
'வாட் இஸ் திஸ்...?'
வந்திருக்கும் விருந்தாளிகளை வீட்டுக்கு உரிமையாளனாக பாலமுரளிதான் வரவேற்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு... கோமதி நாயகம் எழுந்து நின்று பாலமுரளியை வரவேற்றதில் சங்கருக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை...
அவனுக்கு பெண் கொடுக்கப் போகும் வருங்கால மாமனார்... அவனது எதிரியான பாலமுரளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதா...?
அவனது கடுப்பை அதிகப் படுத்துவதைப் போல பாலமுரளி லேசாகத் தலையசைத்து கோமதி நாயத்தின் வணக்கத்தையும் வரவேற்பையும் அங்கீகரித்தானேயொழிய... மருந்துக்குக்கூட... 'வாங்க...' என்ற பதில் வரவேற்பைத் தரவில்லை... சங்கரை கண்டு கொள்ளவுமில்லை...
சங்கருக்கு எதிரில் கிடந்த பிரம்மாண்டமான சோபாவில் கால்மேல் கால் போட்டு  சோபாவில் சாய்ந்து அமர்ந்து... இது என்வீடு என்று சொல்லாமல் சொல்லியவன்.. கைக்கடிகாரத்தையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்...
"ஹி... ஹி... மாப்பிள்ளைக்கு வேலை அதிகமிருக்கும்.." கோமதிநாயகம் வழிந்தார்...
'அப்ப... இவன் வீட்டுக்கு வந்திருக்கிற நான் வேலையில்லாதவனா...
மாமனாரை போகும் வழியில் ஒருபிடி பிடிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை மனதிற்குள் நிறைவேற்றினான் சங்கர்...
"என்ன விசயம் மாமா... இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க...?" மிடுக்காகக் கேட்டான் பாலமுரளி...
"அதைத்தான் இம்புட்டு நேரமா... தங்கச்சி கிட்ட ஒப்பிச்சிக்கிட்டு இருந்தேன் மாப்பிள்ள...", கோமதி நாயகம் பவ்யமாகக் கூறினார்...
"அப்பச்சரி... நீங்க வந்த வேலையை அம்மாகிட்டயே சொல்லிருங்க... எனக்கு முக்கியமான வேலைகள் இருக்கு..."
பாலமுரளி லேசாகத்தான் கையை அசைத்தான்... அதற்கே பதறிப்போய் விட்டார் கோமதி நாயகம்...
"என்ன மாப்பிள்ள... இப்படிக் கோவிச்சுக்கறிங்க... நம்ம நித்யாவுக்கு கல்யாணம் மாப்பிள்ள..."
"நம்ம நித்யாவா...?" புருவம் சுருக்கினான் பாலமுரளி...
"என்னோட கடைசிப் பொண்ணு பேரு நித்யா மாப்பிள்ள.. மறந்துட்டிங்களா..?" கோமதி நாயகத்தின் முகம் கருத்துவிட்டது...
"பேரெல்லாம் யாருக்குத் தெரியும்...? ஆமா மாமா.. பெண்ணுக்கு கல்யாணம்னா.. பெண் பார்க்க வர்றாங்களா..?" வேண்டுமென்றே விசாரித்தான் பாலமுரளி...
"அதெல்லாம் முடிஞ்சிருச்சு மாப்பிள்ள... தாய்மாமன் வீட்டுக்கு கல்யாணப் பத்திரிக்கை வைக்கனுமில்ல... அதுக்காகத்தான் மாப்பிள்ளையோட நானே நேரில் வந்தேன்..." கோமதி நாயகம் குற்றவாளியைப் போல மென்று விழுங்கினான்...
பாலமுரளியின் விழிகளில் தீயின் ஜீவாலை தெரிந்தது...
"பெண் பார்க்க வாரதை தாய்மாமன் வீட்டுக்குச் சொல்லனும்கிற முறை உங்ககிட்ட கிடையாது... கல்யாணம் பேசி முடிக்கிறப்போ... தாய்மாமன் வந்து சபையில உட்காரனும்ங்கிற முறையும் உங்ககிட்ட கிடையாது... இப்ப மட்டும் எந்த முறையைச் சொல்லிக் கிட்டு பத்திரிக்கை வைக்க வந்திருக்கீங்க...?"
"மாப்பிள்ளை..."
விட்டால் கோமதிநாயகம் அழுது விடுவார் போலத் தோன்றிவைக்க.. மேகலாவுக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்து வைத்தது...
"விடுடா முரளி... இதையெல்லாம் பெரிசு பண்ணினா எப்படி..? அவரும் விளக்கம் சொல்லிட்டாரு.."
"அந்த விளக்கத்தை நீங்களே கேட்டுக்கங்கம்மா.. உன் மாமன் வீட்டுக் கல்யாணம் முடிவாகிருச்சாமே... உனக்குத் தகவல் தெரியாதான்னு நாலு பேர் என்னைக் கேட்டா.. எனக்கும் அதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைன்னு நான் சொல்லிட்டுப் போறேன்..."
பாலமுரளி கோபத்துடன் எழுந்து மாடிப்படிகளில் கால் வைத்தான்... எதையோ நினைத்துக் கொண்டதைப் போலத் திரும்பியவன்...
"ராதிகா..." என்று அழைத்தான்...
"என்னங்க..." அவள் அவசரமாக அருகில் வந்தாள்..
"என்னோட டைரி எங்கே..? வந்து தேடிக்கொடு..."
அவன்கூடவே வந்து விடும்படியான மறைமுகக் கட்டளை அதில் தொக்கி நிற்க.. ராதிகா நிம்மதியாக உணர்ந்தாள்...
ஹாலில் வாகாக சாய்ந்து அமர்ந்து.. பாலமுரளியின் முகத்தையும்... ராதிகாவின் முகத்தையும் கேலிப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஷோபாவின் முன்னிலையிலிருந்து விலகுவதில் அவளுக்குள் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது...
அத்தோடு.. இன்னமும் ராதிகா சங்கரை கண்டு கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை... அவனை 'வா'வென்று வரவேற்கவுமில்லை...
பாலமுரளியின் முன்னால் இதையெல்லாம் அவளால் செய்துவிட முடியாது.. பாலமுரளி அகன்று விட்டால்... அவள் சும்மா நின்றாலும் சங்கர் சும்மா இருப்பானா...? எப்படியிருக்கிறாய் என்று நலம் விசாரித்து வைக்க மாட்டானா...?
அந்த வம்பு எதற்கு என்ற எண்ணம் ராதிகாவுக்கு.. அது தவிர்க்கப்பட்டு விட்டதில் ஏற்பட்ட நிம்மதியுணர்வுடன்..
"இதோ.. வரேங்க..." என்று கணவனைப் பின் தொடர்ந்து மாடியேறி விட்டாள்..
பாலமுரளியின் வெளிப்படையான உதாசீனத்தில் வெகுண்டு போனார் கோமதிநாயகம்... வருங்கால மாப்பிள்ளை அவருடைய மதிப்பைப் பற்றி எப்படி எடை போடுவாரோ என்ற கவலை அவரைப் பீடித்துக் கொண்டது...
அதைவிட.. ராதிகா அவர்களை 'வா'வென்று அழைக்காததில் அவருக்கு கோபம் ஏற்பட்டு விட்டிருந்தது...
"எங்களுக்குல்ல ஆயிரம் இருக்கும்.. இந்த வீட்டில் வாழவந்த பொண்ணுக்கு வளமை... சளமை தெரிஞ்சிருக்க வேணாமா தங்கச்சி...?"
பாலமுரளியின் மீது ஏற்பட்டிருந்த கோபத்தை ராதிகாவைக் குறை சொல்வதன் மூலம் வெளிப் படுத்தினார் கோமதி நாயகம்...
"அது பாவம்.. சின்னப்பொண்ணு.. சென்னையிலே பிறந்து வளர்ந்தது... அதுக்கு ஒன்னும் தெரியாது அண்ணா.. நீங்க எதையும் மனசில வைச்சுக்காதீங்க..."
"இதென்ன தங்கச்சி.. அதிசயமா இருக்கு..? வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூப்பிற வளமை கூடவா... உன் மருமகளுக்குத் தெரியாம போச்சு..?"
"அவ வான்னு சொல்றதுக்குள்ளதான் உங்க மருமகன் அவளுக்கு வேலை சொல்லிட்டானே.. உங்க மருமகனின் குணம்தான் உங்களுக்குத் தெரியுமே அண்ணா... அவன் ஒரு வேலையைச் சொல்லிட்டா.. உடனடியா அதைத்தான் பார்க்கனும்.. வேற பேச்சு பேசினா அவனுக்கு பழியா கோபம் வந்துரும்..."
மேகலா சொன்னது உண்மையென்பதால் கோமதி நாயகத்தின் வேகமும் கொஞ்சம் தணிந்தது.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷோபாவுக்குத்தான் வயிற்றின் எரிச்சல் அதிகரித்தது...
'இப்படித் தாங்குதே இந்தக் கிழவி... ராதிகாவை அவளுடைய அம்மாகூட விட்டுக் கொடுத்திருவாங்க போல... இந்தக் கிழவி மருமகளை விட்டுக் கொடுக்க மாட்டேங்குதே...!'
அழையாத விருந்தாளியாக அங்கே அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தான் சங்கர்...
அவன் வந்தது ராதிகாவைப் பார்ப்பதற்காக... அவளது புகுந்தவீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக...
அவன் நினைத்ததைவிட பாலமுரளியின் தகுதி வெகு பிரம்மாண்டமாக இருந்ததில் அவனுக்குள் பொறாமை எழுந்திருந்தது... அதுவும் அரண்மனை போன்ற பாலமுரளியின் வீட்டைப் பார்த்தபோது...
'நோ... சான்ஸ்... இது வீடில்லை... மாளிகை..' என்றே அவனுக்கு நினைக்கத் தோன்றியது...
அவனுக்கு பெண் கொடுக்கும் வசதி வாய்ப்பில் இருந்த கோமதிநாயகம் பாலமுரளியின் முன்னால் எழுந்து நின்றார்... அவன் சந்தித்த அந்த வட்டாரத்துக்காரர்கள் அனைவரும் பாலமுரளியின் பெயரை மரியாதையுடன் உச்சரித்தார்கள்...
இவை அனைத்தும் பாலமுரளியின் உயரத்தை அவனுக்கு உணர்த்தின...
இவற்றை சங்கர் ரசிக்கவில்லை... அவனைவிட பலவானாக... பணக்காரனாக.. அந்த வட்டாரத்தில் பிரசித்தி பெற்றவனாக பாலமுரளி இருப்பதில் அவனுக்கு விருப்பமில்லை...
சங்கர் ராதிகாவைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்... அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல்... மிரண்டு விழித்தபடி... பாலமுரளியின் உத்தரவுக்கு கீழ்படிந்து அவன் பின்னாலேயே போய் விட்ட ராதிகா அந்த வீட்டில் சிறை பட்டிருப்பதாகத்தான் அவன் நினைத்தான்...
'மிரட்டி வைச்சிருக்கான்...' அவன் விழிகள் சிவந்தன...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -114
அம்மம்மா.. கேளடி தோழி...! -114
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-114.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-114.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy