அம்மம்மா.. கேளடி தோழி...! -113

113 நேற்றுவரை என்மன வானில் வராமல் நிலவே! நீயெங்கே போயிருந்தாய்... ? அடர்ந்த மரக்கிளைகளின் அடியில் ஊடுறுவ முடியாமல் சூரிய வெளிச்சம...


113
நேற்றுவரை என்மன வானில் வராமல்
நிலவே! நீயெங்கே போயிருந்தாய்...?

அடர்ந்த மரக்கிளைகளின் அடியில் ஊடுறுவ முடியாமல் சூரிய வெளிச்சம் திகைத்து நிற்க... அந்தச் சுற்றுப்புறத்தின் பசுமையான இயற்கைச் சூழலை ரசித்துப் பார்த்தாள் ராதிகா...
"சொல்லுடி.. இந்த நேரம் பத்தாதுன்னா.. வேற எந்த நேரம் உனக்கு வேணும்...?"
"ஈவினிங் டைம்..."
"எனக்கு வேலையிருக்குமே ராதிகா..."
"ஈவினிங் டயத்தோட மில்லின் வேலை நேரம் முடிஞ்சுவிடாதா...?"
"வேலை செய்கிறவங்கதான் நேரக் கணக்கு பார்ப்பாங்க... முதலாளி பார்க்க முடியுமா..அதோட.. எனக்கு மில் மட்டும்தான் இருக்குதா..இன்னும் ஜவுளிக்கடை... செங்கல்சூளை... தோப்பு.. வயல்ன்னு இருக்குது.. அதையெல்லாம் யார் பார்க்கிறது..?"
"நீங்க ஒற்றை ஆளாய் இத்தனையையும் பார்க்கனுமா..?"
அவள் மலைத்தாள்... அவள் விழிகளில் தெரிந்த வியப்பில் அவன் மனம் இதம் கண்டது...
"ஏன்.. இத்தனை நாளாய் இது உனக்குத் தெரியாதா...?"
"தெரியாதுங்க... நீங்க பெரிய ஆள்ன்னு தெரியும்.. இத்தனையையும் நீங்களே மேனேஜ் பண்ணனும்னு தெரியாது..."
"இப்பத் தெரிஞ்சுக்கிட்டயில்ல... நீயே சொல்லு... எனக்கும் உன்கூட சேர்ந்து இருக்கனும்ங்கிற நினைப்புத்தான்... ஆனா நேரம் வேணுமே..."
அவன் மென்மையாகக் கேட்டதில் அவள் காதல் கொண்டாள்... அவனையே இமைக்காமல் பார்த்தவளின் விழிகளுக்கு.. அவனின் உழைப்பு தெரிந்தது.. அவளது கண்கள் கசிந்தன...
"இப்ப எதுக்காக திரும்பவும் டேமைத் திறந்து விடற..?" அவன் செல்லமாக அதட்டினான்...
"இவ்வளவு வேலைகளையும் நீங்களாப் பார்க்கனுமா..?" அவள் குரல் நெகிழ்ந்தது...
"இதெல்லாம் எனக்குப் பழக்கம் தாண்டி... பதினைஞ்சு வயசிலேயே இதையெல்லாம் பார்த்துக் பழகியவன்தான்... இதுக்குப் போயா கண்கலங்கிற...?" அவன் வார்த்தைகள் அவளை வருடின...
ராதிகா.. அவன் கையை எடுத்து.. தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்... பாலமுரளியின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வேற்பட்டது... அவளின் மென்மையான கரங்கள்... வலிமையான அவனின் இரும்புக் கரத்தை இறுக்கிப் பிடித்தன... அவன் விரல்களை நீவிவிட்டவள்.. மென்மையாக முத்தமொன்றைப் பதித்தாள்...
பாலமுரளியால் கைகளை உறுவிக் கொள்ள முடியவில்லை.. இதைப் போன்ற காதலுடன் ராதிகா அவனை அணுகும் சுகத்தில் மூழ்கித் திகைத்துக் கொண்டிருந்தவனுக்கு... அதைவிட்டு வெளியே வர மனமில்லை...
ராதிகா.. அவனது இருகரங்களையும் தன் கன்னங்களில் பதித்து... கண்மூடிக் கொண்டாள்.. மூடியிருந்த அவளது குடைபோன்ற இமைகளின் மீது முத்தமிடும் ஆசை அவனுக்குள் வலுத்தது.. அதற்குள் அவள் இமைதிறந்தாள்... அவனது கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டாள்...
"ராதிகா...?" அவன் திகைப்புடன் வினவினான்...
"உங்க உழைப்புக்கு முன்னாலே நான் வெறும் தூசிதான் அத்தான்..." குரல் நெகிழ அவள் சொன்னாள்...
'முரளிஎன்று அழைத்துக் கொண்டிருந்தவள்... இயல்பாக 'அத்தான்..என்று அழைக்க ஆரம்பித்து விட்டதில்.. ஒர்விதமான சந்தோச உணர்வு அவனுக்குள் கிளர்ந்தது...
ஆனாலும்... அவள் பெயர் சொல்லி அழைத்த அந்த நாள்களின் மகிழ்வை நினைவில் கொண்டுவராமல் இருக்க அவனால் முடியவில்லை...
"போதும்டி... ரொம்பத்தான் உருகாதே... இப்பப் புரியுதா... உன் புருசன் உன்கூட செலவளிக்கிற நேரமே அதிகம்தான்னு..."
அவள் பதில் சொல்லவில்லை... மௌனமாக.. அவன் கைவிரல்களை நீவி விட்டுக் கொண்டேயிருந்தாள்...
"ராதிகா..."
அவன் அழைப்பில் நிமிர்ந்தவளின் முகத்தில் சிணுங்கல் இருந்தது...
"எனக்கும் புரியுது... ஆனா.. நீங்க என் பக்கத்தையும் கொஞ்சம் கேட்கனும்..."
"கேட்கத்தானே காரை நிறுத்தியிருக்கேன்.. சொல்லு..."
"காலையிலே எழுந்ததும் சாப்பிடக்கூட மறந்து போனவரா கிளம்பிப் போயிடறிங்க..."
"நீ விட்டுவிடுகிறியா..பின்னாலேயே துரத்திவந்து டிபனை சாப்பிட வைச்சுத்தானே அனுப்பி வைக்கிற...?"
"இது ஒரு பெருமையாக்கும்...?"
"பின்னே..இல்லையாக்கும்..?"
"போங்க... சும்மா கேலி பண்ணிக்கிட்டே இருப்பீங்க.. மதியம் நேரத்தோட சாப்பிட வர்றதில்ல..."
"வருகிறேனா... இல்லையா..அதைச் சொல்லு.. உன்னைக்கட்டிக்கிட்டு வாரதுக்கு முன்னாலே இதையெல்லாம் செய்ததில்லை..."
"பெருமைதான் போங்க..."
"எங்கே போகச் சொல்கிறவ...?"
"ஓடுகிறதிலேயே குறியாய் இருங்க..."
"என்னை இறுக்கிப் பிடிச்சு இழுத்துக்கற கயிறு உன் கையிலதானேடி இருக்கு...?"
பாலமுரளி புருவங்களை உயர்த்த... ராதிகாவின் முகத்தில் பெருமிதம் கலந்த வெட்கம் பரவியது.. அவள் பற்றியிருந்த பாலமுரளியின் விரல்களைச் சுண்டியிழுத்தாள்...
"நான் இழுத்தவுடனே ஓடி வந்திடற ஆள்தான்..."
"உன் ஆள்டி..."
அவன் இமைகளைச் சிமிட்ட... ராதிகாவின் கண்களில் மின்னல் வந்தது... அதுபோல அவன் செய்வது வெகு அபூர்வமான நிகழ்வு... அந்தத் தருணங்களை பத்திரப்படுத்தி... பொக்கிசம்போல மனதில் பூட்டி வைத்துக் கொள்வாள் ராதிகா...
இது அது போன்ற தருணம் என்பதில்... அவள் மனம் சிலிர்த்தது...
"காலையிலயாவது உட்கார்ந்து சாப்பிடுவீங்க.. மதியம் அதையும் செய்கிறதில்லை... ஒரே ஓட்டம்தான்..."
"வேலை ஞாபகம்டி ராது..."
பேச்சுவாக்கில் அவன் 'ராதுஎன்று அழைத்துவிட அவள் கண்களின் ஒளிர்வு அதிகரித்தது... எங்கே அதைக் கண்டு கொண்டால் பழையபடி கடுமையான முகமூடியின் பின்னால் அவன் ஒளிந்துகொள்வானோ என்ற பயத்துடன் அதை மறைத்துக் கொண்டாள் ராதிகா...
"ஈவினிங் காபி டிபனுக்கு வீட்டுப் பக்கம் வர்றதேயில்ல... அதை ஒரு குறையாவும் சொல்லிட முடியாது.."
"ஆஹா.. என் பெண்டாட்டி என்னைப் புரிஞ்சுக்கிட்டா..."
"ரொம்பத்தான் மகிழ்ந்து போகாதீங்க.. நீங்க மதியச் சாப்பாட்டை சாப்பிடறதே ஈவினிங் டயத்திலதானே...?"
ராதிகா சொல்லிய விதத்தை ரசித்துச் சிரித்தான் பாலமுரளி...
"நான் சாயங்காலமும் வீட்டுக்கு வர்றதா நீயே சொல்லிட்ட... இதுக்கு மேலே என்னையெதுக்கு குத்தம் சொல்கிற..."
"போதுமே.. மதியச் சாப்பாட்டை ஈவினிங்கில் அள்ளிப் போட்டுக்கிட்டு ஓடினால்... திரும்பிவர நைட்டாகிடுது..."
"தூங்க வீட்டுக்குத்தானேடி வர்றேன்..."
"ஆஹா.. என்ன தாராள மனது..."
ராதிகா பாராட்டியதில்... லயித்துப் போனவனாக அவளையே பார்த்தான் முரளி... அவளது பேச்சும்.. வேண்டுகோளும்.. அவன் மனதை அசைத்தன..
"இங்கே பாருடி.. என் வேலை நேரத்தை உன்கிட்டச் சொல்லிட்டேன்... இதில ஒரு வழியை கண்டுபிடிச்சு... உள்ளே உன்னையும் நுழைச்சுக்க... நான் மாட்டேன்னா சொல்லப் போறேன்..?"
"அப்படிச் சொல்கிறீங்களா...?"
அவள் யோசிக்கும் பாவனையில் நெற்றியை சுருக்கிவிட்டு... கண்கள் ஒளிர அவனைப் பார்த்தாள்...
"ஐடியா..." என்றாள்...
"ம்ம்... சொல்லு..." புன்னகையுடன் அவன் கேட்டான்...
"மதியச் சாப்பாட்டை சாப்பிடுகிறேன் பேர்வழின்னு ஈவினிங் வீட்டுப் பக்கம் தலையைக் காட்டிட்டு போவிங்கள்ல...?"
"ஆமாம்... அதுக்கென்ன...?"
"அப்ப.. உங்க கூடவே நானும் வர்றேன்..."
"ஏய்ய்.. நான் வேலையைப் பார்க்கனும்டி..."
"நான் உங்களைப் பார்க்கனுமே..."
ராதிகா பிடிவாதமாகக் கூற... அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான் பாலமுரளி.. அதில் தெரிந்த காதலின் ஏக்கம்.. அவனைக் குழப்பியது...
"எனக்கு ஒன்னே ஒன்னுதான் புரியலைடி..."
"எதுவாம்..?"
"என் கூடவே இருக்கனும்னு ஆசைப்படற... என்னைப் பார்க்கனும்னு சொல்ற... இதெல்லாம் என்ன..?"
அவன் தவிப்புடன் கேட்டதில் அவள் மனம் நொந்து போனாள்...
இதெல்லாம் ஏன் என்று அவனுக்கேன் தெரியவில்லை..அப்படி அவனுக்கு தெரியவிடாமல் தடுத்தது எது..அவனுக்காக அவள் ஏங்கிய ஏக்கத்தை ஏன் அவன் அறியாமல் போனான்..?
தேடியது கிடைத்தும்... அந்தத் தேடலுக்கான பலன் கிடைக்காத அவள் என்ன வரம் பெற்றுப் பிறந்தாள்..?
ராதிகா உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.. பாலமுரளியின் பார்வை அவளது இதழ்களின் மீது படிந்தது... அவனது பார்வையின் தீவிரத்தை உணர்ந்தவளின் முகம் சிவந்தது... கண்களில் நீர் கோர்க்க அவள் தலையைக் குனிந்து கொண்டாள்...
இது என்ன மாதிரியான உணர்வு...!
கொல்லும் அந்த உணர்வுகளின் வேகம் தாங்காமல் துடித்தது அவளது இதயம்... சிலந்திவலையாய் அவளைச் சூழ்ந்திருந்த சாபத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் அவள் பரிதவித்தாள்... அவளது ஏக்கங்களின் ஓசைகள் அவன் இதயக்கதவைத் தட்டித்திறக்கும் நாள் வருமா என்று அவன் முகம் பார்த்தாள்...
அவனும் அப்போது அவள் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதில் தெரிந்த வேதனையின் சாயலில் அவள் துடித்துப் போனாள்...
"ஏண்டி அப்படி செஞ்சே..?" அவன் குமுறினான்...
"அவன் பெண் கேட்டு வந்ததைப் பெருமையாய் பேசினயே... எந்த விதத்தில் அவன் என்னை விட உயர்த்தியாய் போனான்...?"
அவனது கேள்விகள் அவளைச் சுட்டன...
'இப்படியெல்லாம் நடக்கும்ன்ன தெரிஞ்சிருந்தா.. நான் அன்றைக்கு அப்படிப் பேசி தொலைத்திருக்க மாட்டேனே... அந்த ஷோபாவின் காதில என் பேச்சு விழுந்தா... அவ சங்கருடனான என் கல்யாணத்தை நிறுத்துவான்னுதானே நான் நினைச்சேன்..இப்படி உங்களுக்கு என் பேச்சை ரிகார்டு பண்ணி அனுப்பி வைச்சுத் தொலைப்பான்னு கனவா கண்டேன்..?'
நினைத்ததை வாய்விட்டுச் சொன்னால்.. அவன் நம்பவா போகிறான் என்ற நிராசையுடன்.. அவன் கரத்தை விட்டாள் ராதிகா... பாலமுரளியின் மனம் அதிர்ந்தது...
'அவன் பேச்சை எடுத்தால்... என் கையைக்கூட தொட மாட்டாளா...?'
தன் காதல் கடைசிவரைக்கும் அவனால் உணரப் படாமலே போய்விடுமோ என்ற பயம் ராதிகாவைப் பீடித்துக் கொண்டது....
செல்லரிக்கும் சூழ்நிலைகள்... தன் காதலைத் தின்று அழித்து விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்தாள் அவள்...
'இப்படிக் கவலைப்பட்டு... கவலைப்பட்டு.. கடைசியில் காணாமல்தான் போகப்போறேன்...'
அவள் ஓய்ந்து போனவளாக ஜன்னல் கண்ணாடியின் மேல் தலை சாய்த்தாள்...
ஒரு இனிமையான சூழலை தன் பேச்சினால் கெடுத்து விட்டோமோ என்று பாலமுரளிக்குத் தோன்றியது... அவளை அந்த நிலையில் பார்க்க அவனுக்கு மனம் தாளவில்லை... எதைச் சொன்னால் அவள் அந்த சோக மூட்டத்திலிருந்து வெளியே வருவாள் என்பது அவனுக்குத் தெரிந்த ஒன்றுதான்...
"ஆனா ஒன்னுடி.. உசுப்பேத்தி விடறதில உன்னை மிஞ்ச ஆளில்ல..."
அவன் எதற்காக.. திடிரென்று இப்படிப் பேசி வைக்கிறான் என்று புரியாதவளாக அவள் அவன் முகம் பார்த்தாள்...
"நீ மட்டும் அன்னைக்கு அப்படிப் பேசலன்னு வைய்யி... நான் உன்னை சிறையெடுத்திருக்க மாட்டேன்.. என் பெண்டாட்டியாய் ஆக்கியிருக்கவும் மாட்டேன்..."
அவன் கண்சிமிட்ட.. அந்த நாளின் நினைவில் ராதிகாவின் முகம் சிவந்து விட்டது... அவன் எதிர்பார்த்ததும் அதைத்தானே... லேசாக நகர்ந்து அமர்வதைப் போல... அவன் நெருக்கமாக அமர்ந்து கொள்ள.. ராதிகாவின் மனம் சோகத்திலிருந்து வெளியே வந்தது...
"பிஞ்சாக... நானிருந்தேனே...
             பெண்ணாக மாற்றிவிட்டானே..."
காரின் சிடியில் பாடல் ஒலிக்க.. அவள் மீண்டும் உதட்டைக் கடித்தாள்... இப்போது அவள் உதட்டைக் கடித்தது... வேறு வகையான உணர்வின் அலைகளில் அவள் சிக்கி விட்டதற்காக...
"அம்மம்மா... கேளடி தோழி..!
             நிலாவில் நின்றொரு நாழி...
    சொல்லாலே உரைத்தது பாதி...
             தன்னாலே அறிந்தது மீதி...
    அம்மம்மா...!"
அதற்குமேல் தாங்க முடியாதவளாக ராதிகா அவன் மேல் சரிந்தாள்... பாலமுரளியின் உடலில் மின்சார அலைகள் பரவின.. அவளைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்லி... அவனது உணர்வுகள் அவனைத் தூண்டின...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -113
அம்மம்மா.. கேளடி தோழி...! -113
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-113.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-113.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy