அம்மம்மா.. கேளடி தோழி...! -112

112 இமையாக எனைக் காப்பவனே... முள்ளாக நீ மாறாதே... "தென்காசியில்தான் கல்யாணமாம்..." "இதையெல்லாம் யார் சொன்னது.. ?...


112
இமையாக எனைக் காப்பவனே...
முள்ளாக நீ மாறாதே...

"தென்காசியில்தான் கல்யாணமாம்..."
"இதையெல்லாம் யார் சொன்னது..?"
"கோமதிநாயகம் மாமாதான் சொல்லியிருக்கனும்... அவர் சொல்லலை... அடுத்த மாதம் கல்யாணம்ங்கிற நிலைமையில... தென்காசி வட்டாரத்தில இன்னும் இந்தப் பேச்சு பரவல... இதுக்கு என்ன அர்த்தம்...?"
"என்ன அர்த்தம்...?"
"காதும்.. காதும் வைச்சதைப் போல பேச்சு நடந்து முடிஞ்சிருக்குன்னு அர்த்தம்... அந்த கோமதி நாயகம் லேசுப்பட்டவரில்ல... வெட்டி வினயம் பிடிச்சவர்... போதாக்குறைக்கு அந்த சங்கரும் கூட்டுச் சேர்ந்துட்டானில்ல..? வெளியே விசயத்தை கசிய விடாம இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்துட்டானுக..."
பாலமுரளியின் கோபத்தில்... ஆரம்பத்திலேயே இது தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்ற கொதிப்பு தெரிந்தது...
அதனாலேயே அந்த கோமதிநாயகம் என்பவர் ரகசியமாக திருமண ஏற்பாடுகளை செய்து முடித்திருக்க வேண்டும் என்று ராதிகா நினைத்துக் கொண்டாள்...
ஆனாலும்.. சங்கருக்கு பெண் கட்ட... தென்காசி வட்டாரம்தான் கிடைத்ததா...? வேறு திசையே கிடைக்க வில்லையா..?
'இவன் எதற்காக என்னையே சுற்றி வந்து தொலைக்கிறான்...' என்று எரிச்சல் பட்டாள் ராதிகா...
அவளுக்கு இருக்கும் துன்பங்கள் போதாதா...? இவன் வேறு வந்து அதிகப் படுத்தி வைக்க வேண்டுமா..? இதை அவனுக்கு யார்தான் சொல்லுவது..?
ஒருவிதத்தில் பாலமுரளியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்றே ராதிகா நினைத்தாள்...
அதைப் புரிந்து கொள்ளாத பாலமுரளி... வெறுப்புடன் வார்த்தைகளை சிதற விட்டுக் கொண்டிருந்தான்...
"அதென்னடி... நீ எங்கே போனாலும் விடாம உன்னையே அவன் தொடுத்துக்கிட்டு வர்றான்..? உன்னை விட்டா இந்த உலகத்தில வேற பெண்ணே அவன் கண்ணுக்குத் தெரியாதா...?"
ராதிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்... இந்த சங்கர் செய்து வைத்திருக்கும் வேலைக்கு... இன்னும் எத்தனைப் பாட்டு வாங்க வேண்டியிருக்குமோ என்ற பயம் அவளை பிடித்துக் கொண்டது...
"உனக்குக் கல்யாணமாகிருச்சுடி... இந்த நினைப்பு அவன் மனசில இருக்கா... இல்லையா...?"
'இதை அவனிடம்தான் கேட்கனும்.. என்னிடம் கேட்டால் எப்படி..?'
"சென்னையில அழகு சுந்தரிக ஆயிரக் கணக்கில் இருக்காங்க.. அவங்களையெல்லாம் விட்டுவிட்டு... தேனூத்துப் பக்கம் ஏண்டி அவன் வர்றான்...?"
'நானா வரச் சொன்னேன்...?'
"இங்கேயே பேக்டரி ஒன்னை ஆரம்பிக்கப் போகிறானாம்..."
'போச்சுடா... அடேய் சங்கர்... நான் உனக்கு என்னடா கெடுதல் செய்தேன்.. எதுக்காக இந்தப் பாடுபடுத்தற...?'
"அவன் குடியிருக்கிறதுக்காக தென்காசியில பங்களா ஒன்றையும் வாங்கிப் போட்டிருக்கணாம்..."
'இது ரொம்பவும் ஓவர்தான்... என் புருசனுக்கு பி.பி.எகிறாம என்ன செய்யும்..? வேணும்னே அவன் டார்ச்சர் செய்யறானே...'
"இத்தனை விசயமும் ஷோபா சொல்லித்தான் எனக்கே தெரியும்..."
அவ்வளவு நேரமு மறுமொழி கூறாமல் மனதுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவளுக்கு... கோபம் வந்து விட்டது...
'இத்தனையும் இவள் மூட்டி விட்ட தீதானா..?'
"அதானே பார்த்தேன்.. அவ காரணமில்லாமல் வந்து இறங்க மாட்டாளே..."
பாலமுரளியின் கண்கள் இடுங்கின... அவன் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு... மனைவியை முறைத்தான்...
"செய்கிறதெல்லாம் அவன்.. நீ அவனை ஒரு சொல் சொல்ல மாட்டேங்கிற... அதைச் சொன்னவ பேரில குத்தம் கண்டுபிடிக்கற... இது கொஞ்சம் கூட நல்லாயில்ல ராதிகா..."
"அவ சொன்னதில தப்பில்ல... அதை எந்தக் குறிக்கோளோட சொன்னா..? அது தான் தப்பு... உங்களுக்கும் அது தெரிஞ்சிருக்கும்... தெரிஞ்சும்... அவ பக்கம் சப்போர்ட் பண்றிங்க... இது மட்டும் நல்லாயிருக்கா..?"
"பேச்சை மாத்தாதே..."
"ஓகே... மாத்தலை... அவ சொன்னது எதுக்கோ.. அதை விட்டுடலாம்... சங்கர் எங்கே பெண்ணைக் கட்டினா நமக்கென்ன...?"
ராதிகா இப்படிக் கேட்கவும்... பாலமுரளியின் கொதிப்பு கொஞ்சம் குறைந்தது...
'இவள் சொல்கிறதும் நியாயம்தானே..' என்று நினைத்தான்...
"இதைப் பற்றிப் பேசினா நமக்குத்தான் தலை வேதனை.. பேசாம விட்டு விடுகிறதுதான் பெட்டர்... தென்காசியில குடியிருக்கிற அத்தனை பேரும் நமக்கு ஒட்டா... உறவா...? அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க... நம்ம வேலையை நாம பார்க்கிறோம்..."
"ஆனாலும்... அவன் எதுக்குடி தென்காசிக்கு வரனும்...?"
ராதிகாவுக்குள்ளும் அதே கேள்விதான் சுழன்றது... சங்கரின் மீது அதுவரை அவள் மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மதிப்பும்... மரியாதையும் ஆட்டம் கண்டது...
"வந்தால் வந்துட்டுப் போறான்..? அவனைக் கண்டு நாம ஏன் டென்சன் ஆகனும்..? அவனுக்கெல்லாம் நீங்க இவ்வளவு தூரத்துக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கனுமா..?"
ராதிகா சுள்ளென்று பேசியதில் பாலமுரளி ஆச்சரியப்பட்டுப் போனான்... அதுவரை ராதிகா சங்கரைப் பற்றி கோபமாகப் பேசியதே இல்லை...
"நீ சொல்றதும் நியாயம்தான்னு தோணுது..." அவன் யோசனையுடன் சொன்னான்...
"இது உங்க ஏரியா... இங்கே வர அவன் தான் யோசிக்கனும்... அவன் வருவதைப் பற்றி நீங்க யோசிக்கனுமா..? அவனுக்கே இவ்வளவு தில்லிருந்தா.. உங்களுக்கு எவ்வளவு இருக்கும்...?"
ராதிகா உசுப்பேற்றிவிட.. பாலமுரளியின் கண்களில் சிரிப்பு வந்தது... அதே சமயத்தில் அவன் முகத்திலிருந்த கொதிப்பும் மறையவில்லை...
இணக்கமாக பேசிய மனைவியைப் பார்த்தவனின் மனதில் இருப்பது... என்ன என்று கண்டு பிடிக்க முடியாமல் திணறினாள் ராதிகா...
 "உன் கண்களில் ஏனிந்த சிரிப்பு..?
        உன் கன்னத்தில் ஏனிந்த கொதிப்பு..?
    ஆசையா..? கோபமா...?"
காரின் சிடியில் பாடல் கேள்வி கேட்க... நிஜமாகவே இது மாந்தரிக வேலைதான் என்ற நினைவில் சிரித்து விட்டாள் ராதிகா...
"நிஜமாகவே அவன் இந்த வட்டாரத்தில பொண்ணு கட்டறதைப் பத்தி உனக்கு கோபமா ராதிகா...?"
அவள் முகம் பார்க்காமல் அவன் கேட்டதில் அவள் விழிகளில் நீர்ததும்பி விட்டது... அவளிடமிருந்து பதிலை எதிர்பார்த்து திரும்பிப் பார்த்தவன் திகைத்தான்...
"ஏய்ய்.. என்னடி இது..? இத்தனை நேரமும் சும்மாயிருந்தவ வீட்டுப் பக்கத்தில வந்ததும் கண்கலங்கி வைக்கிற...? என் அம்மாகிட்ட என்னை மாட்டி விடற பிளானில் இருக்கியா..?"
அந்த நிலையிலும் ராதிகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது...
"ஆமா... இவரை மாட்டி விடனும்னுதான் நான் பிளான் பண்றேன்... சும்மா டாவடிக்காதீங்க..."
"யாரை டாவடிக்கச் சொல்ற...?"
அவன் சிரிக்காமல் கேட்க.. அவள் முறைத்தாள்...
"நீதானேடி கேட்ட..?" அவன் நியாயம் கேட்டான்...
"வேண்டாங்க சொல்லிட்டேன்... அந்த ஷோபா வந்து இறங்கியதில இருந்து நீங்க ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க..."
"அதுக்காக... அவளை டாவடிக்கச் சொல்றியா..? என்மேல உனக்குக் கோபமிருக்கும்ன்னு தெரியும்டி... ஆனா... இந்த அளவுக்கு கோபமிருக்கும்ன்னு தெரியாது.. இப்படிப் பழிவாங்கறியே..."
இப்போது ராதிகா கலகலவென்று சிரித்துவிட.. முரளியின் முகத்தின் கடினம் மறைந்து ஒர் விதமான மென்மை பரவியது...
மனம் விட்டுச் சிரிக்கும் மனைவியின் முகத்தையே பார்த்தான் அவன்...
'எப்படிச் சிரிக்கிறா...' அவன் மனம் நெகிழ்ந்தது...
என்னதான் கொட்டுகிற தேளாக அவன் கொட்டிக் கொண்டிருந்தாலும்... கொட்டுப்பட்ட அந்த நொடியில் கண்கலங்கி... அடுத்த நொடியிலேயே முகம் மலர சிரிக்கும் அவளின் அந்த இயல்பு அவனை வசீகரித்தது...
"அப்பாடி... சிரிச்சு... என்னைத் தப்பிக்க வைச்சிட்டடி..."
"எதிலயிருந்தாம்...?"
"அம்மாவோட கோபத்திலயிருந்துதான்.. இல்லைன்னா... உன்னைத் தனியாக் கூப்பிட்டுக்கிட்டுப் போயி அடிச்சு நொறுக்கிட்டேன்னு என்மேல அபாண்டமா பழி போட்டுருவாங்க..."
அவன் பயந்ததைப் போன்ற பாவனையுடன் கூற... அவள் மேலும் சிரித்தாள்...
"சிரி.. மாமியாரைக் கைக்குள்ள போட்டுக் கிட்டயில்ல... சிரிக்கத்தான் செய்வ... ம்ஹீம்.. உன் காட்டிலதாண்டி மழை கொட்டோ.. கொட்டுன்னு கொட்டுது..."
"அதில உங்களுக்கு இத்தனை பொறாமையா..?"
"இருக்காதா பின்னே...?"
"ம்ஹீம... புருசனைத்தான் கைக்குள்ள போட்டுக்க முடியல.. மாமியாரையாவது கைக்குள்ள வைத்துக்க முடிஞ்சதே.. அந்த மட்டிலும் சந்தோசம் தான்..."
விளையாட்டாகச் சொல்வதைப் போலச் சொன்னாலும்.. ராதிகாவின் வார்த்தைகளில் துயரம் தோய்ந்திருந்தது... அவள் முகத்திலிருந்து சிரிப்பு இப்போது தொலைந்து போயிருந்தது... சோக மேகம் முகத்தில் கவிழ்ந்து கொள்ள... அவள் தொலைதூர தொடுவானை வெறித்தாள்...
"ராதிகா..." மனம் தாங்காமல் அவன் அழைத்தான்...
"ம்ம்ம்..." அவள் திரும்பாமல் முணுமுணுத்தாள்...
"என்னைப் பார்..." அழுத்தமான குரலில் அவன் கட்டளையிட்டான்...
ராதிகா அவனைப் பார்த்தாள்.. லேசாகக் கலங்கியிருந்த அவளது விழிகளின் ஓரமாக நீர் முத்துக்கள் உருண்டு... திரண்டிருந்தன...
நிற்கவா... இல்லை உகுக்கவா... என்று அவை கேட்க... பாலமுரளிக்கு அவளை கைநீட்டி அணைத்து தோள்சாய்த்து... விழிநீரைத் துடைத்துவிட வேண்டும் போல இருந்தது...
அப்படிச் செய்ய முடியாமல் அவனைத் தடுப்பது எது..?
கண்ணுக்குத் தெரியாத அந்த இரும்புத்திரையை உடைக்க முடியாமல் உன்மத்தம் பிடித்தவனைப் போலானான் அவன்...
"நான் உன் கைக்குள்ள தாண்டி இருக்கேன்... உனக்கே அது தெரியும்..."
அந்தப் பேச்சில் ராதிகாவின் முகம் பூவாக மலர்ந்தது.. ஷோபாவைப் போன்ற ஒருத்தி வலிய வந்து ஒட்டிக்கொண்டும்.. அதை உதறிவிட்டு.. ராதிகாவின் அண்மையை நாடும் அவன் குணத்தில் அவள் மனம் நிறைந்தது...
"இப்படிச் சொல்லிட்டா ஆச்சா...?"
"வேறென்ன செய்யனும்...?"
என்னுடன் குடும்பம் நடத்தனும் என்று அவள் சொல்லி விடமாட்டாளா என்று அவன் எதிர்பார்த்தான்...
அப்படி அவள் சொல்லிவிட்டாள் உடனே அவளுடன் குடும்பம் நடத்திவிட ஆரம்பித்து விடுவாயா...? என்று அவன் மனம் அவனைக் கேள்வி கேட்டது...
முடியாது என்பது அவனுக்குத் தெரியும்.. அது அவளுக்கும் தெரிந்திருந்ததால் அதைக் கேட்காமல்... வேறு ஒன்றைக் கேட்டாள்...
"தினமும் கொஞ்சநேரம்.. எனக்காக ஸ்பெண்ட் பண்ணனும்..."
"இது பேச்சு..." அவன் சிரித்தான்...
"சும்மா சிரிச்சு மழுப்பாதீங்க... நான் கேட்டதைச் செய்ய முடியுமா.. முடியாதா...?"
அவள் மிரட்டலான தொனியில் கேட்க.. அவன் பலமாகச் சிரித்தான்..
"அடேங்கப்பா.. நீ ரௌடி ரங்கம்மாதாண்டி.. இந்த பாலமுரளியையே மிரட்டிப் பார்க்கறியே..."
"என் புருசன்.. நான் மிரட்டிப் பார்க்கிறேன்... அதில உங்களுக்கென்ன வருத்தம்..? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.."
இதைவிட இனிப்பையா... கட்டிலின் சுகம் வாரி வழங்கிவிடப் போகிறது என்று நினைத்தான் முரளி...
வார்த்தைக்கு வார்த்தை 'என் புருசன்.. என் புருசன்..' என்று அவள் உரிமை கொண்டாடியதில் அவனது ஆண்மை கர்வம் கொண்டது...
இந்த நிறைவு கொடுக்கும் இன்பதைவிட பெரிதாக வேறென்ன இருக்கப் போகிறது...?
"உன்னுடன்தாண்டி நான் அதிக நேரத்தைச் செலவளிக்கிறேன்.. என் அம்மாவிடமும்... அக்காவிடமும் கேட்டுப்பார்... அவங்களிடம் நின்று பேச எனக்கு நேரம் இருந்ததில்லை... அக்கா குடும்பத்துகிட்ட வாங்கன்னு தலையசைத்தாலே அதிகப்படிதான்..."
"எனக்கு இந்த நேரமெல்லாம் பத்தாது..." அவள் கறாராகப் பேசியதில் அவன் ஈர்க்கப்பட்டான்...
இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலையில்.. வெளிச்சமின்றி லேசான இருளுடன் கூடிய நிழல் பரவியிருக்க... அவன் சாலையோரமாக மரத்தடியில் காரை நிறுத்தினான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -112
அம்மம்மா.. கேளடி தோழி...! -112
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-112.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-112.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy