அம்மம்மா.. கேளடி தோழி...! -111

111 எங்கே நீ போனாலும்... அங்கே நான் தொடர்ந்து வருவேன்... ராமன் சீதையை விலக்கி வைக்க முடிவு செய்தான்... ஆனால் அரியணையில் அவளுக்குப...


111
எங்கே நீ போனாலும்...
அங்கே நான் தொடர்ந்து வருவேன்...

ராமன் சீதையை விலக்கி வைக்க முடிவு செய்தான்... ஆனால் அரியணையில் அவளுக்குப் பதிலாக வேறு ஒரு பட்டத்து ராணியை பக்கத்தில் அமர விட்டானா...?
பார் புகழும் அசுவமேத யாகம் செய்தபோதும்... அருகில் மனைவிக்குப் பதில்... அவளது உருவச் சிலையை தங்கத்தால் செய்து அமர்த்தி வைத்தானே தவிர... வேறு ஒருத்தியை மனைவியாக மனதில் வரித்தானா..?
இத்தனைக்கும்... பல தார மணம் செய்த தசரத சக்கரவர்த்தியின் மகன் அவன்...
இருந்தும்... 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற உயரிய தத்துவத்தை ஆண்குலத்திற்கு அளித்தவன் அவன்.. அவன்மேல் ஆசை கொண்டு மூக்கையே இழந்தாள் ஒரு அசுரகுல இளவரசி...
அவனுக்காக தவமிருந்து அடுத்த பிறவியில் மணக்கும் வரம் பெற்றாள் வேறு ஒரு இளவரசி...
அத்தனை மாதர்களிடமும் மனம் விடாமல் விலகி நின்று... 'நான் சீதைக்கு மட்டுமே உரியவன்' என்ற வாக்கில் நின்றானே... அவனல்லவோ முழுமையான ஆண்மகன்..! அவனது வீரத்திற்கு இணையேது...?
அப்பேற்பட்ட ராமனின் மனம் கவர்ந்த சீதை பாக்கியசாலி... அப்படிப்பட்ட காதலைப் பெற்றவள் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும்... அவையெல்லாம் அவளுக்கு துன்பமாகத் தோன்றுமா..?
ராதிகாவுக்கும் அப்படித்தான்... அவள் பட்ட துன்பமெல்லாம் கானல் நீரென்று தோன்றியது...
கார் சாலையில் சீரான வேகத்துடன் போய் கொண்டிருக்க ராதிகா சாலையை பார்ப்பதை விட்டுவிட்டு கணவனையே பார்த்தாள்... அவனது பக்கவாட்டுத் தோற்றத்தின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டிருந்தவள் அவன் லேசாகத் திரும்பவும் அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்...
பாலமுரளி அவள் பார்வையை கண்டு கொண்டான்.. அவன் மனதிலும் உல்லாசம் பிறக்க...
"என்னடி..?" என்று கேட்டான்...
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருந்த போது...
"என்னடி விளையாட்டு...
             என்று சொன்னவன் மொழிகேட்டு...
    ஆசையில் விழுந்தேன் அங்கே..
             ஆ... காலையில் கனவுகள் எங்கே.."
என்று காரிலிருந்த சிடியின் பாடல் ஒலித்தது...
ராதிகாவின் உதடுகளில் மெலிதான புன்சிரிப்பு தோன்றியது...
"உன்னை கேட்டா... பாட்டு பதில் சொல்லுது... ஏதும் மந்திரம் போட்டு வச்சிருக்கயா..?" அவனும் சிரித்தான்..
'இவன் சுட்டெரிக்கும் சூரியனாகவும் இருக்கிறான்.. இதமான நிலவாகவும் இருக்கிறான்.. என்ன ஒன்று.. எந்த நேரம் எப்படியிருப்பான்னுதான் கண்டு பிடிக்க முடியலை...' அவள் உதட்டைக் கடித்தாள்...
    "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
      உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்..
      உறவினில் விளையாடி...
      வரும் கனவுகள் பல கோடி..."
பாடல் தொடர்ந்து ஒலிக்க... அந்தச் சூழல் மிக ரம்யமானதாக அந்த இருவருக்குமே மாறிப் போனது...
மில்லின் வாசலிலேயே கூட்டம் குழுமியிருந்தது... ராதிகாவின் வியந்த பார்வைக்கு...
"நீயும் வருகிறேன்னு சதிஷீக்கு போன் பண்ணினேன்..." என்றான் பாலமுரளி...
"நானென்ன வி.ஐ.பியா..?" அவளுக்கு கூச்சமாக இருந்தது...
"அவங்களுக்கு விஐபிதான்..." 
அவன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கினான்...
ராதிகாவின் பக்கம் கார் கதவை யாரோ வெகு மரியாதையுடன் திறந்து விட்டார்கள்... தயக்கத்துடன் இறங்கியவளின் விழிகள் பாலமுரளியைத் தேடின.. அதைக் கவனித்தவன் அவளருகில் வந்து நின்றான்...
பாலமுரளிக்கு மாலை அணிவித்தார்கள்...
அவன் கையில் ஒரு ரோஜா மாலையைக் கொடுத்து ராதிகாவின் கழுத்தில் போடச் சொன்னார்கள்...
அவர்களின் ஆர்வமான பார்வை ராதிகாவை கூச்சப்படுத்தியது... மாலை மரியாதை அவளை சங்கடப் படுத்தியது.. அவள் கல்லூரி மாணவி... இதுபோன்ற ஆரவாரமான வரவேற்புகளுக்கு பழக்கப்பட்டவளல்ல...
அவளது கைவிரல்கள் லேசாக நடுங்கத் தொடங்கின.. ஆதரவு தேடி அவள் விரல்கள்.. பாலமுரளியின் விரல்களோடு பிணைந்து கொண்டதில் அவன் சிலிர்த்துப் போனான்..
"வாங்க சார்... வாங்க மேடம்..."
சதிஷீம்... மற்றவர்களும் அவர்களை உள்ளே அழைத்துப் போனபோது பாலமுரளியுடன் விரல் கோர்த்து நடந்து சென்றாள் ராதிகா...
அது பாலமுரளியின் வெகு நாளைய கனவு.. அவள் கூட இணைசேர்ந்து நடக்கவேண்டும்... அப்படி நடக்கும் போது விரலோடு.. விரல் கோர்த்துக் கொள்ள வேண்டும்...
அந்தக்கனவு இப்படி நிறைவேறியதில் அவனுக்குள் உற்சாகம் பிறந்தது... ராதிகாவுக்கு மில்லைச் சுற்றிக் காட்டினான்... அவள் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் சொன்னான்... மில்லில் வேலை செய்யும் தொழிலாளிகளை அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்... அவனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று... விருந்தினர் சோபாவில் அவளை உட்கார வைத்து விட்டு.. அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்து வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்...
அவன் வேலை செய்யும் விரைவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா... ஊடே தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்...
"போரடிக்குதா..." என்று கேட்டான்...
அவன் அப்படிக் கேட்டதில் ராதிகா மகிழ்ந்து போய்விட்டாள்... இல்லை என்று சொல்லும் விதமாக தலையை இடம் வலமாக அசைத்தாள்...
"கொஞ்ச நேரம்தான்... அர்ஜன்ட் வொர்க்கை முடிச்சிட்டா கிளம்பிடலாம்..." சிநேகிதமான குரலில் பாலமுரளி சொன்னபோது...
"நோ... நோ... டேக் யுவர் ஓன் டைம்..." என்று சொன்னாள் ராதிகா...
"என்னாச்சு... ஷோபாவின் காத்து உன்மேலயும் அடிச்சிருச்சா...?" பாலமுரளி... கம்யூட்டரின் திரைப் பக்கம் திரும்பிக் கொண்டான்...
"பேச்சுவாக்கில் வந்திருச்சு..." ராதிகா குற்ற உணர்வுடன் கூறினாள்...
"தப்பில்லை... ஆனா.. அம்மாவுக்கு இங்கிலீஷ்ன்னா அலர்ஜி..."
"அது எனக்குத் தெரியாதா..? நான் பார்த்து பேசிக்குவேன்..."
"அதானே... நீ யாரு...?"
"அதுசரி... நான் யாருன்னு இந்த ஊருக்கே தெரிஞ்சிருக்கு.. உங்களுக்குத் தெரியலையா..?"
"ஊம்..? நீயாருடி..?"
"பாலமுரளியின் பெண்டாட்டி..."
ராதிகா அதை ரசித்துச் சொல்லிய விதத்தில் ஈர்க்கப்பட்டவனாக அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்...
"அதில் உனக்கு சந்தோசமா..?"
திடிரென்று வந்த கேள்வியில் ராதிகா திகைத்துப் போய் விட்டாள்...
"ஏன் இப்படிக்கேட்கறிங்க...?"
அவள் படபடக்க.. அவன் நிதானமாக தோளைக் குழுக்கினான்...
"ஏதோ.. மனசில தோணுச்சு... கேட்டேன்..." அசுவராஸ்யமாகச் சொன்னவன்.. அவளைக் கூர்ந்து பார்த்தான்...
அவள் மனதைப் படிக்க முயல்கிறதைப் போல இருந்தது அவனின் அந்தப் பார்வை.. ராதிகா தடுமாறிப் போனாள்...
"என்னடி.. பதிலைக் காணோம்..."
கம்யூட்டரின் திரையை ஊன்றிப் பார்க்க ஆரம்பித்தவன் மீண்டும் கேள்விக் கணையை வீச... அவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்...
"இதே கேள்வியை நானும் கேட்கலாமில்ல..?"
அவன் சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பினான்.. அவளைப் பார்த்தான்...
"தாராளமாக கேட்கலாம்... எனக்கு சந்தோசமா... இல்லையான்னு சொல்லத்தெரியல... உன்மேல ஆசைப் பட்டுத்தான் காதலிச்சேன்... ம்ப்ச்.. எல்லாமே தலைகீழாய் போச்சு..."
அவன் சூள் கொட்டிய விதத்தில் அவள் மனம் காயப்பட்டது... இந்த வருத்தம் எதற்காக...? அவள் கழுத்தில் தாலி கட்டியதற்காகவா...?
"இதுக்கு பதில் சொல்லலாம்... சொன்னா நீங்க நம்பப் போறதில்ல... அப்புறமும் எதுக்காக இதைப் பத்தி பேசனும்..." ராதிகா மனம் நொந்து பேசினாள்...
"ஓ... அப்போ.. இதைப் பத்தி பேசினா... நேரம் தான் வீணாய் போகுமுன்னு சொல்றியா..?" அவன் குதர்க்கமாக கேள்வி கேட்டான்...
ராதிகாவிற்கு ஆயாசமாக இருந்தது... அவனை எப்படிச் சமாளிப்பது என்று அவளுக்கு புரியவே இல்லை.. அவளை மலையுச்சியிலும் அமர வைக்கிறான்... அதே நேரத்தில் அவள் மனம் நோக எதையாவது பேசியும் வைக்கிறான்... இப்படிச் செய்தால் எப்படி அவளால் சந்தோஷிக்க முடியும்...?
சுமையில்லாத மனமிருந்தால் தான் எதுவும் சுவைக்கும்... இதை அவனுக்கு யார் சொல்வது..? எப்போது பார்த்தாலும் கொட்டும் தேளாக இருப்பவனிடம் மனதை விட்டுவிட்டு.. அதை மீட்கும் வழிதெரியாமல் அவள் துக்கத்தில் புதைந்தாள்...
'நதியோரம்  நடந்தபோது...
             நிலாச் சோற்றை நெஞ்சம் தேடும்..
    சுமையில்லாத மனமிருந்தால்..
             சுவையான உணவு கூடும்...'
அவள் படித்த கவிதை வரிகள் அவள் நெஞ்சில் ஆடின...
"போகலாமா..."
அவன் எழுந்து கொண்டபோது... எதுவும் பேசாமல் ராதிகா அவனைப் பின் தொடர்ந்தாள்... இடைவெளி விட்டு அவள் வருவதைக் கண்டவனின் புருவங்கள் சுருங்கின... வரும்போது அவனுடன் விரல் கோர்த்து இணையாக நடந்து வந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று கோபம் அவனுக்குள் மூண்டது... தானாக அவளை அழைத்துக் கொள்ளவும் அவனால் முடியவில்லை... கூடவந்த சதிஷிடம் பேசியவாறு சற்றுப் பின்தங்கினான்... ராதிகா அவனுக்கு இணையாக வந்து சேர்ந்துவிட்ட பின்பு நடக்கத் தொடங்கினான்... வழியில் எதிர்பட்டவர்கள் வணக்கம் சொல்ல ஆரம்பிக்க... ராதிகா மீண்டும் அவனுடன் விரல் கோர்த்தாள்... பாலமுரளியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது...
'இதைச் செய்ய இவளுக்கு இத்தனை நேரமா...'
அவர்கள் காரில் ஏறிக் கொண்டார்கள்... மில்லில் வேலை செய்கிறவர்கள் கையசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.. பதிலுக்கு கையசைத்த ராதிகா...
"வித்தியாசமான அனுபவம்.." என்று பாலமுரளியிடம் சொன்னாள்...
"அதுக்கேண்டி... அப்படி நடுங்கின...?" பாலமுரளி கேலி செய்தான்...
அவன் இயல்பாக பேசியதில் அவளுக்கு அப்பாடி என்றிருந்தது...
'ம்ஹீம்... இவன் எந்நேரம் எதைப் பேசி வைப்பான்னு தெரியாம... பயந்து பயந்து குடும்பம் நடத்த வேண்டியதா இருக்கே...'
"உங்களுக்கென்ன... நீங்க முதலாளி.. நான் அப்படியா..?"
"போடி பைத்தியம்... நான் முதலாளின்னா நீ யாரு..?"
"இப்படி யார் நீன்னு கேட்டுக்கிட்டே இருங்க... விளங்கிரும்... நான் யாருன்னு தெரியாமல்தான் கூடக் குடும்பம் நடத்தறிங்களா...?"
ராதிகா என்னவோ விளையாட்டாகத்தான் கேட்டாள்... பாலமுரளியின் முகத்திலிருந்த மென்மை மறைந்து கடினம் பரவியது...
"நாம நடத்தறதுக்கு பெயர் குடும்பமா..?" அவன் ஆழ்ந்த குரலில் கேட்டான்...
ராதிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... பதில் சொல்ல முடியாத அவனின் கேள்விகளை தொடர்ந்து எதிர் நோக்கியதில் அவள் களைத்துப் போயிருந்தாள்...
'இவன் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிச் சொல்லியே கிழவியாகி விடப் போகிறேன்... அதுக்குப் பின்னாலேயாவது இவன் மனம் இரங்கி என்னை விட்டு வைப்பானா..?' அவளுக்குள் ஏக்கம் எழுந்தது...
"நீங்க உலக விவரம் தெரிஞ்சவங்க... உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிடப் போறேன்...?"
"தப்பிக்கப் பார்க்கிறடி..."
"யாரிடமிருந்து...?"
"வேற யார்கிட்டயிருந்து தப்பிக்கப் பார்ப்ப..? அந்த சங்கர்கிட்ட இருந்தா தப்பிக்கப் பார்க்கப் போகிற...?"
இந்தக் கேள்விக்கு முடிவே கிடையாதா..? என்று மனம் சலித்துப் போனாள் ராதிகா... இதற்காகத்தான் அவளைத் தனிமையில் அழைத்து வந்தானா...?
"மத்தவங்க பேச்சை எதுக்காக இப்பப் பேசனும்..?"
"மத்தவனா..? அவனா..? நீ இருக்கிற ஊருப் பக்கம்தான் பொண்ணு கட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சு... அங்கே சுத்தி.. இங்கே சுத்தி... கடைசியில் என் மாமன் மகளையே அவன் கட்டிக்கப் போறான்... அவனைப் போய் மத்தவன்னு சொல்றியே..."
பாலமுரளி சொல்லிவிட்டான்... ராதிகாவிற்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை... அவள் மலைத்துப் போனாள்...
'என்னது... சங்கர்... பாலமுரளியின் மாமா மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறானா...? இது என்ன புதுவம்பு...?'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -111
அம்மம்மா.. கேளடி தோழி...! -111
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-111.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-111.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy