அம்மம்மா.. கேளடி தோழி...! -109

109 போகத்தான் நினைத்தாலும்... போகமனம் வரவில்லை... ஷோபாவினால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை... முதல்நாள்தான்... சங்கர் ராதிகா...


109
போகத்தான் நினைத்தாலும்...
போகமனம் வரவில்லை...

ஷோபாவினால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை...
முதல்நாள்தான்... சங்கர் ராதிகாவை விடாமல் பின் தொடர்வதைப் பற்றி கதைகதையாய் பாலமுரளியிடம் எடுத்துச் சொல்லியிருந்தாள்... அதைக் கேட்டவனும் முகம் இறுகி... ஷோபாவுக்காக அவனது தாயையே எதிர்த்து வாதாடி அவளை அவன் வீட்டில் தங்க வைத்தான்...
அத்தோடு நிறுத்தினானா...? அவளை ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துப் போவதாக ராதிகாவின் முன்னாலேயே சொல்லவும் செய்தான்...
இத்தனையும் முதல் நாள் இரவில் செய்து விட்டுத் தூங்கப் போனவன்... மறுநாள் காலையில் ராதிகாவை விழுங்குவதைப் போல பார்த்து வைக்கிறான் என்றால் என்ன அர்த்தம்...?
இரவில் இந்த ராதிகா சரியாக மந்திரித்து விட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்...?
பாலமுரளியின் பார்வையை கண்டு கொள்ளாமல் ராதிகா தட்டுக்களை வைத்தாள்... ஷோபாவின் முன்னால் அவள் வைத்த தட்டு மட்டும் 'ணங்'கென்று சப்தம் போட்டது...
ஷோபா பாலமுரளியைப் பார்த்தாள்... அவன் மனைவியைத் தீவிரமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான்... ஷோபாவின் முன்னால் அவள் தட்டு வைத்த வேகத்தை கண்டிக்கும் நிலையில் அவனில்லை என்பது புரிந்து போக.. ஷேபாவுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது...
'இவளைத்தான் மேரேஜ் பண்ணித் தொலைச்சிட்டானில்ல... இன்னும் எதுக்காக காதலியைப் பார்ப்பதைப் போல பார்த்து வைக்கிறான்...'
ராதிகாவைப் பார்க்கப் பார்க்க... அவளுக்கு பொறாமை பொங்கி எழுந்தது...
"அத்தான்..."
அவள் அழைத்ததை பாலமுரளி கவனிக்கவில்லை.. அவளுடைய கோபம் அதிகரித்தது...
"அத்தான்..." சப்தமாக அழைத்தாள்...
ராதிகாவின் வெட்டும் பார்வையை ரசித்துக் கொண்டிருந்த பாலமுரளி.. இனிய கனவில் தடங்கல் ஏற்பட்டு விட்ட எரிச்சலுடன் ஷோபாவின் பக்கமாக திரும்பினான்...
"என்ன ஷோபா..."
"உங்க வொய்புக்கு விருந்தோம்பல்ன்னா என்னன்னு தெரியுமா அத்தான்...? பாவம்... அவளுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது...? விலைவாசி விற்கிற விலையில.. அவ வீட்டிலிருக்கிறவங்க மூன்று நேரமும் சாப்பிட்டு.. நல்ல துணிமணி உடுத்தறதே பெரிய விசயம்... இதில வேற இவளை என்ஜினியரிங்ல சேர்த்து விட்டிருந்தாங்க... இந்த லட்சணத்தில் இவ வீட்டுக்கு எந்த கெஸ்ட் வந்திருக்கப் போகிறாங்க...?"
பாலமுரளிக்கே ஷோபாவின் பேச்சு பிடிக்க வில்லையெனும் போது மேகலாவுக்கு மட்டும் பிடித்து விடுமா...?
அவள் முகம் சுளித்தாள்...
"இப்ப எதுக்காகம்மா என் மருமக வீட்டு ராமாயணத்தை இழுக்கற...? உனக்கு என்ன வேனுமோ... அதை மட்டுமே சொல்லு..."
"அதைத்தான் சொல்ல வந்தேன் ஆண்ட்டி.. வேண்டாதவங்களா இருந்தாலும்.. சிரிச்ச முகத்தோட ட்ரீட் கொடுக்கறதுதான் மேனர்ஸ்... இவளுக்கு டைனிங் டேபிள் கல்ச்சர் தெரியலை.. இப்படித்தான் பிளேட்டை 'ணங்கு'ன்னு வைப்பாங்களா...?"
மேகலாவும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்... மருமகளின் செயலை மனதுக்குள் பாராட்டிக் கொண்டிருந்தாள்...
'ம்ஹீம்.. நானா இருந்திருந்தா தட்டைத் தூக்கி இவ தலைமேல போட்டிருப்பேன்.. என் மருமகளா இருக்கப் போயி... போனாப் போகுதுன்னு இந்த மட்டிலும் விட்டு வைச்சிருக்கா...'
"பாரும்மா... என் மருமகளுக்கு நாகரிகம் இருக்கா.. இல்லையாங்கிறதைப் பத்தி அப்புறம் பேசலாம்... முதல்ல உனக்கு அது இருக்கா..?"
"நான் என்ன செய்தேன் ஆண்ட்டி..?"
"சொன்னாத் தாங்க மாட்ட.. பேசாம சாப்பிடு..."
மேகலா கண்டிப்புடன் கூற... ஷோபாவின் முகம் விழுந்து விட்டது... 
'கிழவி.. மருமகளை விட்டுக் கொடுக்கவே மாட்டாளே...'
மேகலாவிடம் இருந்து ஆதரவு கிடைக்காது என்பது ஷோபாவுக்கு தெரிந்ததுதானே... அவள்...
"அத்தான்..." என்ற சிணுங்கலுடன் பாலமுரளியின் பக்கம் திரும்பினாள்...
அதே நேரத்தில்... ராதிகா கையிலிருந்த கரண்டியை உயர்த்தி... இதனாலேயே ஒரு போடு போட்டு விடுவேன் என்று பாலமுரளியைப் பார்த்து ரகசிய சமிக்ஞை ஒன்றை செய்து வைக்கவும்... பாலமுரளி தேன் குடித்த நரியைப் போலாகி விட்டான்...
அவனறிந்த வரையில் அவனைப் பார்த்து யாரும் ஒற்றை விரலைக் கூட உயர்த்தியது இல்லை... ராதிகா என்னடாவென்றால்... கரண்டியையே உயர்த்திக் காட்டுகிறாள்...
'பாருடா... இவ என்னை மிரட்டறா...
பாலமுரளியின் கண்களில் சுவராஸ்யம் தோன்றிவிட்டது...
அவன் விழிகளில் சிரிப்புடன் ராதிகாவைப் பார்த்தபடி....
"சொல்லு ஷோபா..." என்றான்...
'என்னத்தைச் சொல்ல..?.' ஷோபா கடுப்பானாள்...
இவ்வளவு நேரமும் நடந்ததை அவன் கேட்டுக் கொண்டுதானே இருந்தான்... அதற்குப் பின்னாலும் 'சொல்லு ஷோபா...' என்றால் எதைச் சொல்வது..? அதுவும் சும்மாவும் கேட்கிறானா...? ராதிகாவைப் பார்த்துக் கொண்டே.. ஷோபாவிடம் 'சொல்லு' என்கிறான்...
இப்படி பெண்டாட்டியின் முந்தானையில் தூளிகட்டி ஆடுகிறவனிடம் அவன் பெண்டாட்டியைப் பற்றி குற்றம் சொல்ல முடியுமா..?
இருந்தும் ஷோபாவினால் சும்மாயிருக்க முடியவில்லை... ராதிகாவின் இறுகின முகத்தையும்.. அலட்சியப் போக்கையும் காணக்காண.. அவளது வயிற்றில் அமிலம் சுரந்தது...
"ராதிகா ட்ரீட் பண்ற விதம் சரியில்லை அத்தான்.. இதை நீங்க ஏன்னு கேட்க மாட்டிங்களா...?"
"கேட்டுட்டா போச்சு... ஏன் ராதிகா..?"
பாலமுரளி கேட்க... அவனை உறுத்துப் பார்த்தாள் ராதிகா... அவன் வாய் விட்டுச் சிரித்தான்...
"நீங்களே சிரித்தால் எப்படியத்தான்..?"
"விடு ஷோபா.. நீயேன் உன்னை விருந்தாளின்னு நினைச்சுக்கறே..."
பாலமுரளி ராதிகாவைப் பார்த்தபடி சொல்லி வைக்க... அவள் இப்போது அவனை நேரடியாகவே முறைத்தாள்...
"இல்லைன்னு சொல்கிறிங்களா அத்தான்..." ஷோபா குதூகலிக்க ராதிகா குறுக்கிட்டாள்...
"ஏய்ய்... அடங்குடி.. விருந்தும்... மருந்தும் மூணு நாள்தான்.. நீ வந்து மூணு நாளாச்சு... கிளம்பறியா...?"
ராதிகாவின் கேள்வியில் ஷோபா திணறி விட்டாள்...
"நான் ஏன் கிளம்பனும்..? அதுதான் அத்தான் என்னை இங்கேயே தங்கிக்க சொல்லியிருக்காரே..."
"தெரியுதில்ல... அப்புறமும் எதுக்காக.. விருந்தோம்பல் டைனிங்டேபிள் மேனர்ஸ்ன்னு உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கே..? இந்த லட்சணத்தில என் வீட்டை வேற இழுக்கறே... என் வீட்டுக்கு கெஸ்ட் வரலைன்னு நீ கண்டியா..? மாதத்திலே இருபது நாள் தாத்தா... பாட்டி.. அத்தை.. மாமா... சித்தி.. சித்தப்பா.. பெரியப்பா.. பெரியம்மான்னு ஒரே கெஸ்ட் மயமாத்தான் இருக்கும்... ஆனா உன்னை மாதிரியான கெஸ்ட் என் வீட்டுக்கு வந்ததில்லை.. என்னதான் நெருங்கின உறவா இருந்தாலும் வேலையிருந்தால் மட்டுமே வருவாங்க... வந்த வேலை முடிஞ்சவுடேன அவங்கவங்க வீட்டைப் பார்த்துப் போயிடுவாங்க... இங்கே தான் என்ன வேலைன்னே தெரியலையே..."
"ராதிகா..."
"பொறுடி... இன்னும் இருக்கு... உன் வீட்டுக்கு கெஸ்ட் வருகிற லட்சணத்தைத்தான் நான் பார்த்தேனே.. இதே அத்தான்.. சென்னைக்கு வந்தால் உன் வீட்டிலா தங்குவார்...?"
"அது.. அது வந்து..."
"என்னடி.. மென்று முழுங்கறே... பதிலைச் சொல்லு.. ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்குவார்.. வந்த வேலை முடிஞ்சதும்... கிளம்பும் போது உன் வீட்டுக்கு வந்து ஹலோ சொல்லிட்டு வந்துருவார்... அந்த ஹலோ சொல்றதுக்கும் போன் பண்ணிச் சொல்லிட்டுத்தானே உன் வீட்டுக்கு வருவார்...?"
"ஹைகிளாஸ் சொசைட்டியிலே அப்படித்தான் பழக்கம்..."
"அதை நீ சொல்லாதே... எனக்கு பற்றிக்கிட்டு வருது..."
அதுவரை மனைவி பேசுவதை ரசித்துக் கொண்டிருந்த பாலமுரளிக்கு போதுமென்று தோன்றி விட்டது...
"ராதிகா..." கண்டிப்புடன் மனைவியை அதட்டினான்...
"என்னங்க...?" ஏதும் அறியாதவளைப் போல அவள் கேட்டாள்..
"ஷோபாவே சொல்கிறதைப் போல... அவ நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி... அவகிட்ட இப்படித்தான் பேசறதா..?"
"உங்களுக்கும் அத்தைக்கும்தான் அவ விருந்தாளி... எனக்கு அப்படியில்லை..."
பல்லைக் கடித்தபடி ஷோபாவைப் பார்த்த ராதிகாவின் பார்வையில் துளிக்கூட நட்பில்லை....
'இவ என் ஜென்ம விரோதி...'
"வேற என்ன..?" பாலமுரளி புருவம் உயர்த்தினான்..
"என்னங்க நீங்க.. இவ என் கிளாஸ் மேட்டுங்கிறதை மறந்துட்டிங்களா..? இவளும் நானும் இப்படித்தான் பேசிக்குவோம்.. எங்களுக்கு இது புதுசில்லை... உங்களுக்குத்தான் புதுசு.. இல்லையா ஷோபா..."
ராதிகா கிண்டலாகக் கேட்க... இல்லையென்று சொல்லத்தான் ஆசைப்பட்டாள் ஷோபா... ஆனால் காவேரியும்... மீனாட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும் போது அப்படி ஒப்புக் கொள்வது ஷோபாவுக்கு குறைவு என்பதால் பேசாமல் இருந்து விட்டாள்...
"அப்பச்சரி..." பாலமுரளியும் பேச்சை வளர்க்க வில்லை...
சாப்பிட்டு முடித்தவன்... மீண்டும் செல்போனை காதுக்கு கொடுத்தபடி வாசலுக்கு நகர... ஷோபாவின் முகம் மாறிவிட்டது...
"அத்தான்..." அவன் பின்னாலேயே ஓடினாள்...
அவன் செல்போனை அணைத்து விட்டு புருவம் உயர்த்தினான்...
"மறந்துட்டிங்களா அத்தான்... இன்றைக்கு என்னை ஊர் சுற்றிக் காட்ட கூப்பிட்டுக்கிட்டுப் போகிறதாய் சொன்னீங்களே..."அவள் அழமாட்டாத குறையாய் விளக்கம் சொல்ல.. 
அவன் "அப்படியா சொன்னேன்..?" என்று அவளிடமே கேட்டான்...
நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கும்... மேகலாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது...
"நம்ம ஐயாவுக்கு வேலை ஞாபகத்தில சாப்பிடனும்கிறதே மறந்து போகும்... இந்தப் புள்ள அது தெரியாம கொஞ்சுது..."
மீனாட்சி... ரகசியக்குரலில் சொல்லியது... அவர்களின் சிரிப்பை  அதிகப் படுத்தியது...
"அப்படித்தான் சொன்னீங்க அத்தான்..." ஷோபா விடவில்லை...
ராதிகாவின் கண்முன்னாலேயே பாலமுரளியுடன் இணை கோர்த்து வெளியே சுற்றப் போக வேண்டுமென்ற வெறி அவளுக்குள் கனன்று கொண்டிருந்தது....
"அப்படியா.. எனக்கு அர்ஜன்டா மில்லில் வேலையிருக்கே ஷோபா..." முரளி தாடையைத் தடவியபடி யோசித்தான்...
"அப்போ... நானும் உங்க மில்லுக்கு வருகிறேன்... எனக்கு அதைப் பார்க்கனும் போல இருக்கு... உங்க வொர்க் முடிஞ்சதும் நாம் ஊர்சுற்றப் போகலாம்..."
"ம்ம்ம்..."
பாலமுரளி ஒப்புதலாக தலையசைக்க... ஷோபா... விழிகளில் வெற்றிக் குறியுடன் ராதிகாவைப் பார்த்தாள்..
ராதிகா நிதானமாக கையிலிருந்த பாத்திரத்தை டைனிங் டேபிளின் மீது வைத்தாள்... பாலமுரளியைப் பார்த்தாள்...
"ஒரு நிமிசம்..." என்றாள்...
"என்னடி..." என்று அவன் கேட்டது ஷோபாவுக்கு பிடித்தமானதாக இல்லை...
"நானும் வருகிறேன்..." என்று ராதிகா சொன்னதும்  ஆச்சரியப்பட்டுப் போனாள் மேகலா...
'இது ஏன்... எனக்குத் தோணலை...?'
"நீயுமா...?" பாலமுரளி யோசித்தான்...
"நானும்தான்.. வெறும் உறவுக்காரப் பெண்ணான இவளுக்கே உங்க மில்லைப் பார்க்கனும்னு ஆசையிருக்கிறப்ப... உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண்டாட்டி... எனக்கு அந்த ஆசையிருக்காதா..?"
ஷோபாவின் திட்டத்தை ஒரு நொடியில் வெகு எளிதாக தவிடுபொடியாக்கி விட்டாள் ராதிகா....
எங்கே அவளும் வந்து விடுவாளோ என்று பதறிப் போனாள் ஷோபா...
அவளுக்கு பாலமுரளியிடம் பேச வேண்டியிருந்தது... அவனுக்கு மூளைச்சலவை பண்ண வேண்டியிருந்தது... ராதிகாவைப் பற்றிப் போட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது... சங்கரைப் பற்றித் தூண்டி விட வேண்டியிருந்தது... இத்தனைக்கும் மேலாக.. 'பார்.. உன் புருசன்... என் கண்ட்ரோலில் இருக்கிறான்..' என்று ராதிகாவிடம் வெற்றி முரசு கொட்ட வேண்டியிருந்தது...
இத்தனையையும் தகர்ப்பதைப் போல ராதிகா கிளம்பவும்... அவள் பாலமுரளியைப் பார்த்தாள்...
அவனோ.. அவன் வழக்கப்படி ஷோபாவை விட்டு விட்டு ராதிகாவையே பார்த்துக் கொண்டிருந்தான்...
இது வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் ராதிகாவிடமே பேச்சு வார்த்தையில் இறங்கினாள் ஷோபா...
"அத்தானுக்கு ஆயிரம் வேலையிருக்கும் ராதிகா..."
"அது உனக்குத் தெரிஞ்சா சரி..."
"அவர் வேலையைப் பார்ப்பாரா... உன்னையும்.. என்னையும் கவனிப்பாரா...?"
"நீ கூட மத்தவங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கறயே... வெரிகுட்..."
"அதனால... நீ வீட்டில் இரு..."
"நீ...?"
"நான் அத்தான் கூடப் போறேன்.. நீ வர வேண்டாம்.."
"அதை நீ சொல்லாதே... அவர் சொல்லட்டும்..."
ராதிகாவின் வார்த்தைகளில் தீயின் தீவிரம் இருந்தது... அவள்மீதான பாலமுரளியின் காதல் மீதான உறுதி இருந்தது... அது ஷோபாவைச் சுட்டது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -109
அம்மம்மா.. கேளடி தோழி...! -109
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-109.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-109.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy