அம்மம்மா.. கேளடி தோழி...! -106

106 என்ன செய்தேன் என்று... என்னைத் தள்ளி வைத்தாய்... ? "சொல்லு ஷோபா... எதுக்காக என்னை வரச் சொன்ன.. ?" பாலமுரளி கேட்டான்...


106
என்ன செய்தேன் என்று...
என்னைத் தள்ளி வைத்தாய்...?

"சொல்லு ஷோபா... எதுக்காக என்னை வரச் சொன்ன..?" பாலமுரளி கேட்டான்...
"பொறுங்கத்தான்... எவ்வளவு முக்கியமான விவரத்தை உங்களிடம் சொல்லனும்னு துடிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க அவசரப் படறிங்க..."
ஒயிலாக அவனது காரின் மீது சாய்ந்து நின்று கொண்டாள் ஷோபா... பாலமுரளிக்கு எரிச்சல் மூண்டது.. அதி முக்கியமான வேலையில் இருந்தவனுக்கு போன் பண்ணி.. அதி முக்கியமான விவரம் ஒன்றை நேரில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவனை வரவழைத்து விட்டு.. இப்படி மெத்தனமாக ஷோபா நடந்து கொள்வது அவனுக்கு பிடிக்கவில்லை...
"எனக்கு வேலையிருக்கு ஷோபா.. என்னன்னு சொல்லு..." பாலமுரளி கண்டிப்புடன் பேசினான்...
ஷோபாவின் முகத்திலிருந்த விளையாட்டுத்தனம் மறைந்து ஒர்விதமான தீவிரம் வந்தது... பாலமுரளியின் புருவங்கள் முடிச்சிட்டன... ஷோபா ஏதோ ஒரு அணு குண்டை எடுத்து வீசப் போகிறாள் என்று அவனது உள்ளுணர்வு சொன்னது...
அவளும் அணுகுண்டைத்தான வீசினாள்...
"சங்கருக்கு மேரேஜ் ஆகப் போகுது.. தெரியுமா..?"
அவள் நிதானமாகக் கேட்க... அப்பாடா என்றிருந்தது பாலமுரளிக்கு...
"இதுக்கா என்னை வரச்சொன்ன...?" அவன் கார் கதவைத் திறந்து ஏறிக் கொள்ளப் போனான்..
"இன்னும் நான் சொல்லி முடிக்கல அத்தான்.. சங்கருக்கு பார்த்திருக்கும் பெண் யார் தெரியுமா..?" ஷோபா மர்மக்குரலில் கேட்டாள்....
"நீ தானே..." வேண்டுமென்றே சொன்னான் பாலமுரளி...
'கேலி செய்கிறான்...' ஷோபா முகம் மாறினாள்...
'உன் பெண்டாட்டியையே ஒருத்தன் சுற்றிச் சுற்றி வருகிறான்.. அது தெரியாம நீ.. என்னைக் கேலி செய்யக் கிளம்பிட்டியா..?'
"தென்காசியில உங்களுக்கு கோமதி நாயகம்ன்னு ஒரு சொந்தக்காரர் இருக்காராமில்ல...?"
ஷோபா கேட்கவும்.. பாலமுரளியின் புருவங்கள் உயர்ந்தன...
'இவ எதுக்கு இப்ப கோமதிநாயகம் மாமாவை பேச்சில இழுக்கிறா...' அவன் யோசனையானான்...
"ஆமாம்... எனக்கு மாமா முறையாகனும்..."
"அவரோட பெண்ணைத்தான் சங்கர் மேரேஜ் பண்ணிக்கப் போகிறார்..."
"என்னது...?"
பாலமுரளி இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவனது குரலே உணர்த்தியது.. ஷோபா திருப்தியாக உணர்ந்தாள்.. அணுகுண்டை வீச சரியான தளம் அமைத்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு...
"ஆமாம் அத்தான்.. உங்க மாமா பெண்ணைத்தான் அவர் மேரேஜ் பண்ணிக்கப் போகிறார்..."
ஷோபா பாலமுரளியை ஆராய்ச்சியுடன்பார்ப்பதை கண்டுகொண்ட பாலமுரளி சுதாரித்துக் கொண்டான்...
"அப்படியா..? மாமா என்னிடம் சொல்ல-வேயில்லையே.. அப்புறம் என்ன ஷோபா.. நீ வீட்டுக்கு கிளம்பு.. எனக்கு வேலையிருக்கு... நான் போயாகனும்..."
இயல்பான குரலில் அவன் பேசிக் கொண்டே போக... 'நடிக்காதேடா' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ஷோபா...
அவளுக்கா அவன் குணம் தெரியாது..? அவ்வளவு சீக்கிரத்தில் அவன் உணர்வுகளை வெளிபிட்டு விட மாட்டான்... அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனது முகபாவனையை வைத்து கண்டு கொள்வது வெகு சிரமமான ஒன்று....
"ஏன் அத்தான்... நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.. சென்னையில் ஆயிரம் பெண்ணிருக்க.. சங்கர் எதுக்காக தென்காசியில் வந்து பெண்ணெடுக்-கனும்..?" ஷோபா ஆரம்பித்து வைத்தாள்..
பாலமுரளிக்கும் அதே எரிச்சல்தான்.. அவனால் அதை ஷோபாவிடம் காட்டிக் கொள்ள முடியுமா..?
"அதையே என்னிடம் வந்து கேட்கிற ஷோபா..? அவனிடம் போய் கேளு.."
"கேட்டேனே... அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா..?"
"என்ன சொன்னான்...?"
"இங்கேதானே ராதிகா இருக்கிறான்னு சொன்னார்.."
"ஏய்ய்..."
ஷோபாவின் கழுத்தைப் பிடித்து விடும் ஆவேசத்துடன் கர்ஜித்த பாலமுரளி.. சுற்றுப் புறத்தை நினைவில் கொண்டவனாக.. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவனாக...
"காரில் ஏறு..." என்றான்...
"அத்தான்..." ஷோபா பயந்து போய் அவன் முகம் பார்த்தாள்...
"ஏறுன்னு சொன்னேன்.." அவன் உறுமினான்...
ஷோபா சட்டென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்... கார் கிளம்பி பறந்து விட்டது..
நடப்பதை சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியப்பனும்... மீனாட்சியும் பதறிப் போனார்கள்.. பாலமுரளியும்.. ஷோபாவும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அவர்கள் காதுகளில் விழவில்லை..
ஷோபாவைத் தேடி பாலமுரளி வந்தான்.. இருவரும் எதையோ ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்..
அதன் பின்னர் ஷோபா.. பாலமுரளியுடன் காரில் ஏறிப் போய்விட்டாள்...
இதுதான் அவர்களுக்குத் தெரிந்திருந்தது...
செய்தியைக் கேட்ட மேகலா நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள்.. ராதிகா பதறிப் போய் அவளுக்கு தேறுதல் சொன்னாள்..
"உங்க மகனைப் பற்றி உங்களுக்கு தெரியாதா அத்தை... அந்த ஷோபாவும் தப்புத்தண்டா செய்கிறவளில்லை..."
"அப்புறம் எதுக்காகம்மா அவங்க குற்றாலத்தில சந்திச்சுக்கிட்டாங்க..."
"என்னன்னு உங்க மகன் வரவும் கேட்போம்.. அதுக்கான பதில் நிச்சயமாய் அவரிடம் இருக்கும்.. நீங்க தேவையில்லாம எதையாவது நினைத்துக் கவலைப் படாதீங்க.."
ராதிகாவுக்குள் அச்சம் சூழ்ந்திருந்தது... அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்து வைக்க அவள் அரும்பாடு பட்டாள்...
ஷோபாவின் வரவும்.. அதன் பின்னால் நடக்கும் நிகழ்வுகளும் நல்லதிற்கான அறிகுறிகளல்ல என்று பயந்தாள் ராதிகா...
அவள் பயந்ததைப் போலவேதான்.. பாலமுரளியுடன் காரில் போய் கொண்டிருந்த ஷோபா போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்...
"உங்க கோமதி நாயகம் மாமா பணக்காரர்தான் அத்தான்.. எங்க அப்பாவை விட அவர் பணக்காரரா..?"
இல்லை என்பதை பாலமுரளி நன்கு அறிவான்.. பரந்தாமனின் சொத்துக்களின் மதிப்பில் பத்தில் ஒருபங்கு வட கோமதி நாயகத்திடம் இருக்காது...
"எங்க அப்பாம்மாவுக்கு நான் ஒரே பெண்.. உங்க கோமதி நாயகம் மாமாவுக்கு ஒற்றைப் பெண்தானா..?"
அதுவும் இல்லை.. கோமதி நாயகத்திற்கு இரண்டு மகன்கள்... இரண்டு பெண்கள்... நித்யாதான் கடைசிப் பெண்...
"அந்த நித்யா என்னைவிட அழகாக இருப்பாளா..?"
இருக்க மாட்டாள்... ஷோபாவின் அழகில் முக்கால் வாசிதான் நித்யாவிடம் இருந்தது... அவள் அழகானவள்.. ஆனால் ஷோபாவை விட அழகென்று சொல்லிவிட முடியாது...
"என்னை விட அதிகம் படித்தவளா..?"
நித்யா பட்டப்படிப்பு படித்திருந்தாள்.. ஷோபாவோ.. பொறியியல் படிப்பை படித்துக் கொண்டிருப்பவள்...
"சொல்லுங்க அத்தான்.. இத்தனையிருந்தும்... என்னை விட்டுவிட்டு அந்த நித்யாவை மேரேஜ் பண்ணிக்கிற முடிவை ஏன் சங்கர் எடுத்தார்.. அத்தான்..?"
'என் நிம்மதியை குலைக்கத்தான்...'
"நித்யாவை பெண் பார்க்கக்கூட அவர் போக வில்லையாம் அத்தான்.. போட்டோவைப் பார்த்தே 'ஓகே..' பண்ணிட்டாராம்.. தென்காசிப் பக்கம்தான் பெண் வேனும்னு அவரோட பேரண்ட்ஸிடம் கண்டிசனே போட்டாராம்... எதுக்காக அத்தான்...?"
'என்னை கொலைகாரனா ஆக்கத்தான்...'
"மேரேஜை சென்னையிலதானே நடத்தனும்..? இவர் தென்காசியில்தான் நடத்தனும்னு சொல்லிட்டாராம்.. அது ஏன் அத்தான்..?"
'என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கத்தான்...'
"இத்தனைக்கும் மேலா.. தென்காசியில ஒரு பேக்டரியை ஆரம்பிக்கப் போகிறாராம்.. அதுக்காக.. அவர் தங்க தென்காசியில ஒரு பங்களாவை விலைக்கு வாங்கியிருக்கார்.. அது உங்களுக்கு தெரியுமா அத்தான்..?"
'தெரியாது தான்...'
"இவ்வளவும் எதுக்காக அவர் செய்கிறார் அத்தான்..? கம்யூட்டர் பிஸினெஸ்ஸில் பணத்தை அள்ளிக் குவிக்கிறவருக்கு தென்காசியில் பேக்டரியை நடத்தனும்கிற அவசியம் என்ன அத்தான்..? அவர் பாரினில் படிச்சவர்... சென்னை வாழ்க்கைக்கு பழகினவர் அவரைப் பெற்றவங்களும் மற்ற தொழில்களும் சென்னையிலிருக்க இவர் ஏன் தென்காசியில தங்கனும்னு நினைக்கிறார் அத்தான்..?"
ஷோபா கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டேயிருந்தாள்... அவற்றின் கூர்மையில் பாலமுரளியின் பொறுமை சின்னா.. பின்னமாகிக் கொண்டிருந்தது... அந்த வெறியோடு வீட்டுக்குள் நுழைந்தவனை...
"நில்லுடா..." என்று அதட்டினாள் மேகலா...
அவள் விழிகள் ஷோபாவைப் பார்த்து வெறுப்பைக் கக்கின...
"முரளி... நீ இந்தப்பக்கத்தில் பெரிய மனுசன்.. அதை நினைப்பில வைச்சுக்க..."
மேகலா சொல்லிக் கொண்டிருந்த போது.. ராதிகா சமையலறையின் உள்ளேயிருந்து காபிக் கோப்பைகளுடன் வெளிப்பட்டாள்.. அவளைக் கண்டதும் முரளியின் மனம் கொதித்தது...
"எனக்கு நினைப்பில் இருக்கும்மா.. சிலதுகளுக்குத்- தான் என்னோட லெவல் என்னாங்கற நினைப்பு மனசில இல்லை..."
ராதிகாவைப் பார்த்தபடியே அவன்கூற.. ராதிகா துணுக்குற்றாள்...
'ஏன் இப்படிப் பேசறான்...?'
பாலமுரளியின் பேச்சில் இருந்த ஏதோ ஒன்று அவளை உறுத்தியது...
"அத்தை.. அவர் இப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைகிறார்.. காபி சாப்பிடட்டும்.. அப்புறமாய் என்ன.. ஏதுன்னு விசாரிங்க..."
ராதிகா காபிக் கோப்பைகள் இருந்த டிரேயை நீட்ட.. அலட்சிய பார்வையுடன் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டாள் ஷோபா இன்னொன்றை எடுத்துக் கொள்ளாமல் பாலமுரளி நிற்க.. ராதிகா அதை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்...
"அந்தப் பொண்ணுக்குத்தான் அறிவில்லன்னா.. உனக்குமா புத்தி புல்மேயப் போயிருச்சு...?" மேகலா கோபப்பட...
"அம்மா..." என்று ஆத்திரக்குரல் எழுப்பினான் பாலமுரளி...
"யார்கிட்ட என்ன பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுங்க... என்புத்தி புல் மேயப் போகலை... சிலதுகளுக்குத் தான் அறிவு கெட்டுப் போச்சு.."
"ஏண்டா... நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லாம வேற எதையோ பேசி வைக்கிற... இது நல்லாயில்லைடா முரளி..."
"நானும் அதைத்தான் சொல்றேன்.. இது நல்லாயில்லை..."
"நீ எதுக்காக இந்தப் பெண்ணைத் தேடி குற்றாலத்துக்கு போன...?"
மேகலா ஆத்திரமாகக் கேள்வி கேட்பதை மீனாட்சி ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க.. பாலமுரளி பேச்சை நிறுத்திவிட்டான்... தாயை உறுத்துப் பார்த்தான்...
பதினைந்து வயதிலேயே குடும்பப் பொறுப்பை எடுத்தக் கொண்ட மகனின் அந்தப் பார்வையில் மேகலா தடுமாறிப் போனாள்...
"இது என்னம்மா புதுப் பழக்கம்..?" அழுத்தமான குரலில் வினவினான் பாலமுரளி...
"முரளி..." மகனின் கண்டிப்பில் கண்கலங்கி விட்டாள் மேகலா...
"எல்லாத்துக்கும் நான் விளக்கம் சொல்லனுமா..?" மகன் விடாப்பிடியாய் கேட்க...
"இல்லைடா முரளி..." என்று பின்வாங்கினாள் மேகலா...
அவளது உடல்நிலையை கவனத்தில் கொண்ட ராதிகா...
"விட்டுவிடுங்க அத்தை..." என்று சொன்னாள்...
அதுவரை மேகலாவிடம் பேசிக் கொண்டிருந்த பாலமுரளியின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.. அந்தப் பார்வையின் அனல்வீச்சு ராதிகாவைச் சுட்டது... புரியாமல் திகைத்தவளை கூர்மையாகப் பார்த்தபடி...
"ஒன்றைத் தெரிஞ்சுக்கங்கம்மா... என்னோட செயல்களுக்காக நான் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை... புரிஞ்சதா.." என்று அதட்டினான் பாலமுரளி...
அந்த வார்த்தைகள் தனக்கானவை என்று தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாள் ராதிகா... ஷோபாவின் முகத்தில் தெரிந்த இகழ்ச்சியை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை...
'பாலமுரளியா... இப்படி..?' அவளால் நம்ப முடியவில்லை..
அவனை அவன் நோகடிப்பான்தான்... அதற்காக.. இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இறங்கி விடுவானா..?
பெரியம்மாவுக்கே பாட்டு கிடைக்கும் போது... அந்த விவரத்தை அவளுக்குச் சொல்லிய தனக்கு என்ன கிடைக்குமோ என்ற நினைவில் நடுங்கிப் போனாள் மீனாட்சி...
மெல்ல... வேலையிருப்பதைப் போல அங்கிருந்து அகன்று விட்டாள்..
"நீ உன் ரூமுக்கு போ ஷோபா..." உத்தரவிடும் தொனியில் சொன்னான் பாலமுரளி...
"அத்தான்.. ஆண்ட்டி ஏதோ கேட்டாங்களே..." தயங்குவதைப் போல நடித்தாள் ஷோபா...
'மாய்மாலக்கள்ளி...! எடுத்துக் கொடுக்கிறாளா..' மேகலா மனதுக்குள் கொந்தளித்தாள்...
அந்த நாடகத்தைப் பார்க்க முடியாமல் ராதிகா மாடிக்கு விரைந்து விட... அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த பாலமுரளியின் மனதில் கோபத்தீ கனன்று கொண்டிருந்தது...
'இவ கல்யாணமாகி வந்த பின்னாலும் அவன் இவ பின்னாடியே தென்காசிக்கு வருகிறான்னா... என்ன நோக்கத்தில் வர்றான்..? இவ எப்படி வாழ்கிறான்னு கண்கானிக்க வருகிறானா..? இவ வாழ்க்கை சரியில்லைன்னா என்ன பண்ணுவதாக உத்தேசித்திருக் கிறான்..? இவளுக்கு வாழக்கை கொடுப்பானா..?'
"நீ என் விருந்தாளி ஷோபா.. இனி உன்னை யாரும்... எதுவும் கேட்கவும் மாட்டாங்க.. சொல்லவும் மாட்டாங்க.. உன்னைக் கேட்பது.. என்னைக் கேட்பதைப் போல... ரூமுக்கு போ..." பாலமுரளி அழுத்தமான குரலில் சொன்னான்.. பேசுவது தன் மகன்தானா என்று நம்ப முடியாமல் விழிவிரித்தாள் மேகலா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,32,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,116,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,1,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -106
அம்மம்மா.. கேளடி தோழி...! -106
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-106.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-106.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy