அம்மம்மா.. கேளடி தோழி...! -105

105 வாழவா என்று வரவேற்று.. வாசலுக்கு வந்தது தென்றல்காற்று... "ராதிகாவிடம் பேசுவீங்களா... ஹேமா..." சங்கரின் குரலில் ஏக்க...


105
வாழவா என்று வரவேற்று..
வாசலுக்கு வந்தது தென்றல்காற்று...

"ராதிகாவிடம் பேசுவீங்களா... ஹேமா..." சங்கரின் குரலில் ஏக்கம் கலந்த ஆற்றாமை தொனித்தது...
ஹேமா அவனைக் கருணையுடன் பார்த்தாள்.. அவளுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது...
"இல்லை... நான் பேசுவதில்லை..."
அவளது பதிலில் அவன் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது..
"நீங்களும்.. அவங்களும் நெருக்கமான பிரண்ட்ஸாச்சே..."
"யெஸ்... நாங்க திக்பிரண்ட்ஸ்தான்.. பட்.. அவளோட ஹஸ்பெண்டுக்கு ராதிகா யாரோடு பேசினாலும் பிடிக்காது..."
"ஏன்..?" சங்கரின் புருவங்கள் உயர்ந்தன...
'உன்னால் தான்...'
சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தாள் ஹேமா...
ஒரு நொடி பெருமூச்சொன்று சங்கரிடமிருந்து கிளம்பியது.. அந்த பெருமூச்சு வெளிப்படுத்திய ஏமாற்றத்தின் பாரம் தாங்காமல் ஹேமாவின் இதயம் கனத்தது...
இவ்வளவு ஆழ்ந்த காதலை அவள்மேல் வைத்திருக்கிறானே என்று ஹேமா மனம் தவித்தாள்...
'கொஞ்சம் என்னையும்தான் பாரேன்.. அவளைப் பார்த்த அதே நாளில்தானே... என்னையும் நீ பார்த்தாய்.. என்னையேன் உனக்குப் பிடிக்காமல் போனது...?'
வருடக் கணக்கில் சங்கரின் பின்னாலேயே சுற்றிய ஷோபாவை மறந்துவிட்டு.. சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகமான தன்னை மட்டும் நினைவில் கொண்டு மனதிற்குள் புலம்பினாள் ஹேமா...
அவர்கள் அமர்ந்திருந்த பூங்காவின் மத்தியில் செயற்கை நீருற்று மீறிட்டு வழிந்து கொண்டிருந்தது.. மாலை நேரத்தின் கடல் காற்று அந்த நீருற்றில் பட்டு.. ஈரப்பசையுடன் மலர் செடிகளின் மீது தவழ்ந்து.. அவர்கள் மீது பட்டது.. அதன் குளுமை கூட அந்த இருவரின் மனதிலிருந்த வெம்மையைத் தணிக்கவில்லை...
"ஏன்னு கேட்டா எனக்கு என்ன பதிலைச் சொல்கிறதுன்னு தெரியலை சங்கர்.. அவர் அப்படித்தான்.. பயங்கர கோபக்காரர்.. ராதிகா என்னை சங்கடத்துடன் அவாய்ட் பண்றதைப் போலத் தெரிஞ்சது.. விசாரிச்சேன்.. அவருக்கு யார் கூடப் பேசினாலும் பிடிக்காதுடின்னு மென்று முழுங்கறா.. அதுக்கு மேல என்ன கேட்கிறதுன்னு நானும் விட்டுட்டேன்..."
"ஊஹீம்.. நீங்க செஞ்சது ரொம்பத்தப்பு ஹேமா..."
"தப்பா...?"
இவன் என்ன சொல்கிறான் என்று குழம்பிப் போனாள் ஹேமா...
"யெஸ் ஹேமா.. தப்புத்தான்.. அவன் ராதிகாவைத் தனிமைப் படுத்தறான்... அது உங்களுக்குப் புரியலையா ஹேமா...?"
'உனக்குத்தான் என் மனசு புரியலை...'
இப்போது பெருமூச்சு ஹேமாவிடம் இடம் மாறியது...
"எதுவோ ஒன்னு.. அவளுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு.. இனி அவ வாழ்க்கை அவரோடதான்.. அவளாச்சு.. அவராச்சு.. இதில நாம ஊடே போக முடியுமா சங்கர்..?"
ஹேமாவின் வார்த்தைகளில் அப்படி ஊடே போகவும் கூடாது என்ற மறைமுக அறிவுறுத்தல் இருந்தது..
"அப்படியெல்லாம் ஒதுங்கி விடக் கூடாது ஹேமா.. எப்ப பாலமுரளி ராதிகாவை பிளாக் மெயில் பண்ணி மேரேஜ் பண்ணியிருக்கான்னு தெரிஞ்சதோ... அப்போதிருந்தே நாம் அலர்ட்டா இருக்க வேண்டாமா..?"
'அது என்ன தேவைக்கு...?'
இவன் ராதிகாவின் பேச்சைத் தவிர வேறு பேச்சை பேசவே மாட்டானா என்று கடுப்பானாள் ஹேமா...
"ஏன் சார்... அவளை யாரோ கடத்திக் கொண்டு வைத்திருக்கிறதைப் போலவே பேசி வைக்கறிங்களே... அவர் அவளோட ஹஸ்பெண்ட் சார்.. அடிக்கிற கைதான் அணைக்கும்... தெரியுமில்ல..."
ஹேமாவின் பேச்சை சங்கர் துளிக்கூட ரசிக்கவில்லை.. அதை அவனது முகமே காட்டிக் கொடுத்தது.. இவன் இன்னமும் ராதிகாவை பாலமுரளியின் மனiவியாக ஏற்றுக் கொள்ளவில்லை யென்று ஹேமா நினைத்துக் கொண்டாள்... ராதிகாவைச் சுற்றியே அவனின் நினைவுகள் சுழல்வதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது...
அது தவறு என்று இவனுக்கு யார் சொல்வது..?
துயரத்துடன் தொலைதுரத்தில் தெரிந்த தொடு-வானத்தை வெறித்தாள் ஹேமா... அருகிலிருந்தும் விலகியிருக்கும் அவன் மனதைப் பற்றியே அவளது நினைவுகளும் சுழன்றன...
"உங்க மேரேஜ் எப்போ சங்கர்...?"
ஹேமா கேட்டேவிட்டாள்... அதற்கு அவன் விட்டேற்றியாகப் பதில் சொல்வான்... அவனுக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் தன் மனக்கிடக்கையை வெளிப் படுத்தி விடலாம் என்பது அவளின் எண்ணமாக இருந்தது...
"நெக்ஸ்ட் மன்த்தில் ஹேமா..." என்று அவளது உள்ளக் கிடக்கையை உடைத்தான் சங்கர்...
"என்ன சொன்னீங்க..?" ஹேமாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை....
இவ்வளவு சீக்கிரத்தில் சங்கர் தனது திருமணத்தை முடிவு செய்துவிடுவான் என்று அவள் கொஞ்சம்கூட நினைத்திருக்கவில்லை...
"யெஸ் ஹேமா.. உங்களுக்கு இன்விடேசன் கொடுக்கத்தான் இங்கே வரச் சொன்னேன்..."
சங்கர் இயல்பாக அவன் கையிலிருந்த திருமண அழைப்பிதழை ஹேமாவிடம் நீட்டினான்...
கையிலே கல்யாண அழைப்பிதழை வைத்துக் கொண்டு ராதிகாவைப் பற்றிக் கவலைப் பட்டானா..?
ஹேமாவுக்கு சங்கரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று படிக்க முயல்பவளைப் போல... அவன் விழிகளுக்குள் ஊடுறுவிப் பார்த்தாள்...
அவள் பார்வையைக் கண்ட சங்கர் என்னவென்று கேட்கும் பாவனையில் புருவங்களை உயர்த்தினான்...
"நத்திங் சார்... திடிர்ன்னு கல்யாண இன்விடேசனை நீட்டினீங்களா... நான் திகைச்சுப் போயிட்டேன்..."
"த்ச்சு.. மேரேஜை அவாய்ட் பண்ண முடியாது ஹேமா... பண்ணித்தான் ஆகனும்.. நீ கை நீட்டிய ராதிகாவை பெண் கேட்டோமா இல்லையா...? இப்ப அவ வேறொருத்தனை மேரேஜ் பண்ணிட்டு போயிட்டாளே.. நீ மட்டும் ஏன் தனியாய் நிற்கிறேன்னு என் டாடியும்.. மம்மியும் கோபப் படறாங்க..."
"ஓ... இந்தப் பெண் உங்களுக்கு ரிலேடிவ்வா சார்..?"
"நோ... நோ..."
அப்படியும் இல்லையா..?
ஹேமா கையிலிருந்த திருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தாள்.. மணப்பெண்ணின் பெயர் நித்யா என்று இருந்தது...
'கொடுத்து வைத்தவள்...' ஹேமாவின் கண்கள் லேசாகக் கலங்கின...
"உங்க வீட்டில் பார்த்த பெண்ணா...?"
"அப்படியும் இல்லை..."
"நான் ஒன்று கேட்கலாமா சங்கர்..?"
"ஷ்யூர்.. கேளுங்களேன்..."
"ராதிகா இல்லைன்னு ஆனபின்னாலேதான் இதைக் கேட்கிறேன்.. வேற ஒரு பெண்ணை மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணினீங்களே... அப்போக்கூட என் நினைப்பு உங்களுக்கு வரலையா சங்கர்...?"
ஹேமா கேட்டே விட்டாள்...
"ஹேமா..." சங்கரின் பார்வையில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது...
"நீங்க எனக்கு தங்கை மாதிரி..."
'தங்கையா...?' ஹேமா விக்கித்து விட்டாள்...
"தங்கைதான்... உங்களை வேறு மாதிரி என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது ஹேமா..."
ஹேமாவால் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை... அவனை சில நேரங்களில் பெயர் சொல்லி அழைத்திருக்கிறாள்.. சில நேரங்களில் 'சார்' என்று அழைத்திருக்கிறாள்...
ஒரு நேரம்கூட 'அண்ணா..' என்று அழைக்கத் தோன்றியதில்லை... ஆனால் அவன் கண்களுக்கு அவள் தங்கையாக தோன்றியிருக்கிறாள் என்றால் இதை என்னவென்று சொல்லுவது...?
"ஐ ஆம் ஸாரி..." அவளுக்கு குரலே எழும்பவில்லை..
"இட்ஸ் ஆல்ரைட்.." அவன் இயல்பாகச் சிரித்தான்..
அவளால்தான் இயல்பாக இருக்க முடியவில்லை...
"ஈஸி ஹேமா..." சங்கர் அவளை சமாதானப் படுத்தினான்...
"ராதிகா கூடவே நீங்க இருந்தீங்க.. உங்களிடம் தான் நான் என் மனதைச் சொன்னேன்.. நீங்களும் என் காதலுக்கு ஹெல்ப் பண்ணினீங்க.. உங்களிடம் எனக்கு சகோதர பாசமும்.. பிரண்ட்ஷிப்பும் தானே வரும்..? காதல் வராதே..."
"ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்..."
"குட்.. மறக்காம மேரேஜீக்கு வந்துருங்க..."
"மறப்பேனா சார்... காலஜை கட் அடிச்சிட்டு வந்துர மாட்டேன்..?"
"காலேஜை கட் அடிக்கிறதா..? லீவே போடனும்..."
"அது எதுக்கு தேவையில்லாம...?"
"ஏன்னா.. மேரேஜ் நடக்கிறது தென்காசியாச்சே..."
"தென்காசியிலேயா...?"
ஹேமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. சென்னையிலே பிறந்து வளர்ந்து... வெளிநாட்டில் படித்து முடித்த கோடிஸ்வரனின் திருமணத்தை நடத்த சென்னையில் மண்டபமே கிடைக்கவில்லையா..?
"பெண்ணின் ஊர் தென்காசி..."
அவளது மனதைப் படித்தவனைப் போல அமைதியாகப் பதில் சொன்னான் சங்கர்...
"ஓ..."
பாலமுரளியின் ஊரான தேனூத்து கிராமம் தென்காசிக்கு அருகில்தான் இருக்கிறது என்ற நினைவு ஹேமாவுக்கு வந்தது...
அவளுக்கு எதுவோ புரிந்ததைப் போல இருந்தது...
"சென்னையில இல்லாத பெண்ணா சார்...?" விளையாட்டாகக் கேட்பதைப் போலக் கேட்டாள்...
சங்கர் பதில் சொல்லாமல் மர்மமாகப் புன்னகைத்-தான்... அவர்கள் கிளம்பி.. எதிரும்... புதிருமாகப் பிரிந்து அவரவர் பாதையில் நடந்தார்கள்..
'சோ' வென்ற பேரிறைச்சலுடன் அருவி கொட்டிக் கொண்டிருந்தது... அதைப் பார்க்காமல் வேறு திசையில் செல் போனை காதுக்கு கொடுத்தபடி நடந்தாள ஷோபா..
"என்ன மீனாட்சி.. அருவியைப் பார்க்கச் சொன்னா.. இந்தப் புள்ள வேற திக்கில போய் வைக்குது..?" நாச்சியப்பன் சந்தேகம் கேட்டான்....
"இது அப்படித்தான்ய்யா.. எகனைக்கு மொகனையாத் தான் செஞ்சு வைக்கும்.. நேந்துக் காலையில வந்தவுன்னயே பெரியம்மாவுக்கு நெஞ்சுவலியை வரவைக்கப் பார்த்த புள்ளயில்ல இது..?" மீனாட்சிக்கு ஷோபாவை பிடிக்கவேயில்லை...
"அப்படியாப்பட்ட வில்லங்கம் புடிச்ச புள்ளயா இது..?" நாச்சியப்பன் ஆதங்கப்பட்டுப் போனான்..
ஷோபாவின் நவநாகரிக உடையழகில் அவன் மயங்கியிருந்தான்.. அவளது விரித்து விட்ட வெட்டப்பட்ட கூந்தலையும்... மாசு மறுவற்ற சருமத்தையும் கண்டு அவளது ரசிகனாகவே மாறிவிட்டிருந்தான்.. அப்பேற்பட்ட பெண்... அவனது முதலாளியின் அம்மாவிற்கு நெஞ்சுவலியை வரவைக்கப் பார்த்தாள் என்பதில் அவனுக்கே நெஞ்சுவலி வந்துவிடும் போல இருந்தது...
"அட.. ஆமாம்கிறேன்.. நீ வேற கேள்விமேல கேள்வியா கேட்டுத் தொணதொணக்கிற.. பேசாம வீட்டில இருந்தாலாவது வேலையை முடிச்சிட்டு.. அக்கடான்னு தலையைச் சாய்க்கலாம்.. இன்னைக்கு அதுக்கும் வழியில்லாம போயிருச்சு..."
"என்ன மீனாட்சி... இம்புட்டு தூரத்துக்கு அலுத்துக்கறே..."
"பின்னே என்னய்யா.. இந்த புள்ளைக்கு வால் புடிச்சுக்கிட்டு வந்தா.. இது அருவிக்கரையை விட்டுப்புட்டு.. வேற திக்கில போய்க்கிட்டு இருக்கு.. இப்ப இதுக்கு பின்னால ஓடுறதா.. இல்ல.. அருவிக்-கரையிலேயே நிக்கிறதான்னு ஒரு மண்ணும் புரியலையே..."
"அது பின்னாலதான் போகனும்..."
"நல்லாயிருக்குய்யா உன் நாயம்... அது பின்னாலே மனுசக்கழுதையாலே அலைய முடியுமா..? வேணும்னா நீ போ..."
"அந்தப் புள்ளைக்கு துணையாய் போயிட்டு வான்னு சொல்லித்தானே பெரியம்மா உன்னை அனுப்பிi வைச்சாங்க..?"
"துணையோட போற ஜென்மமாய்யா இது..? இதைக் காவல் காக்க நம்மால ஆகாது..."
"உன்னால ஆகாதுன்னு சொல்லு..."
"அப்ப.. என்னோட நீ கூட்டுச் சேர மாட்ட..,"
"பாவம் மீனாட்சி.. அது பட்டணத்துக்காரப் பொண்ணு..."
"அதுக்கு...?"
"நம்ம ஊரைப் பத்தி அதுக்கென்ன தெரியும்..? வழிதப்பிப் போயிருச்சுன்னா..?"
"உனக்கு இப்ப அது பின்னாலே போயாகனும்.. அதுதானே..?"
எப்படித்தான் இந்தப் பெண்கள் மனதுக்குள் இருப்பதைக்கூட தோண்டியெடுத்து கண்டு பிடித்து விடுகிறார்களோ என்று ஆயாசமாக இருந்தது நாச்சியப்பனுக்கு...
அவனுக்கு ஷோபாவின் பின்னால் போக வேண்டுமென்ற ஆசை மலையளவுக்கு இருந்தது.. அதைக் கண்டுபிடித்து மீனாட்சி சொல்லிவிட்ட பின்னால்... அவள் பின்னால் போவதற்கு யோசனையாகவும் இருந்தது...
போவதா.. வேண்டாமா... என்ற மனப்போராட்டத்துடன் அவன் இருந்தபோதுதான்.. அவன் கையைக் கிள்ளி வைத்தாள் மீனாட்சி...
"ஏய்ய்.. மீனாட்சி.. எதுக்காக புள்ள என் கையைப் பிடிச்சு பிறாண்டி வைக்கிற...?"
ஷோபாவின் பின்னால் அவனை போக விடாத கோபத்தைக் காட்டினான நாச்சியப்பன்..
"அடபோக்கத்த மனுஷா.. அங்கே பாரு கூத்தை.."
மீனாட்சி கை காட்டிய திசையில்.. காருக்குள்ளிருந்து பாலமுரளி இறங்கி... ஷோபாவை நோக்கிப் போனான்...
"நம்மஐயா மாதிரியில்ல இருக்கு...." நாச்சியப்பன் கண்ணுக்கு மேலே கையை வைத்து உற்றுப் பார்த்தான்...
"ஐயா மாதிரியில்ல... ஐயாவேதான்.. நேத்தே நினைச்சேன்.. நேத்தே இந்தப்புள்ள.. வீட்டுக்குள்ளே கூத்துக்கட்டி வைக்காம தேனூத்தை விட்டுப் போகாதுன்னு..." மீனாட்சி வெறுப்புடன் பேசினாள்..
"காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவரு.. புதுப் பெண்டாட்டிய வீட்டில விட்டுப்புட்டு... ரகசியமா இந்தப் புள்ளய பார்க்க வரலாமா...?"
நாச்சியப்பனுக்கு மனம் தாங்கவில்லை.. அவனது மரியாதைக்குரிய முதலாளி... அவன் பார்வையிட விரும்பிய பெண்ணை பார்வையிட வந்து விட்டால் அவன்தான் என்ன செய்வான்...?
அவனுக்கு அவன் கவலை...!



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -105
அம்மம்மா.. கேளடி தோழி...! -105
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-105.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/ammammaakeladitholi-105.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy