அக்கினிப் பறவை -30

30 "சந்தியாக் கண்ணு எப்படிடா செல்லம் இருக்கே.. ?" என்று கேட்டவாறு சந்தானலட்சுமியும் உடன் ஆதுரப் பார்வை பார்த்தவாறு பிரதீப்ப...


30

"சந்தியாக் கண்ணு எப்படிடா செல்லம் இருக்கே..?" என்று கேட்டவாறு சந்தானலட்சுமியும் உடன் ஆதுரப் பார்வை பார்த்தவாறு பிரதீப்பும் உள்ளே வந்தார்கள்.
களைத்த விழிகளால் கணவனை முறைத்த சந்தியா பல்லைக் கடித்துக் கொண்டாள். அவள் முறைப்பை கவனிக்காதவன் போல் சந்தானலட்சுமியிடம்,
"இந்தாங்க அத்தை காபி," என்று டிரேயில் இருந்த காபிக் கப்பை எடுத்துக் கொடுத்தவன்,
"மச்சான்! இந்தாங்க நீங்களும் எடுத்துக்கங்க.." என்று பிரதீப்பிடம் இன்னொரு கப்பை நீட்டினான்  
மச்சானா..?"என்றபடி பிரதீப்பை சந்தியா பார்க்க,
"ரொம்ப தேங்க்ஸ் மச்சான்," என்றபடி அவன் காபிக் கப்பைப் பெற்றுக் கொண்டான்.
"என்ன மாப்பிள்ளை நீங்கள் காபி போட்டுக் கிட்டு.." என்று சந்தானம் கேட்க.
"சமையலே நான்தான் அத்தை.." என்று அவன் சோகமுகம் காட்டினான்.
"அதுசரி.. மாமியார்ன்னு நான் எதுக்கு இருக்கேன்.? நீங்க கவலைப்படாமல் வேலைக்கு கிளம்புங்க.. சந்தியாவிற்கு நான் உணக்கையாய் சமைத்துப்போட்டு பத்திரமாய் பார்த்துக் கொள்கிறேன்." என்று அவள் கூறினாள்.
'இதற்குத்தானா இந்த நாடகம் போட்டாய்..? ' என்று மனதிற்குள் குமைந்தவள்,
"நான் ஆபிஸிற்கு போக வேண்டாமா..?" என்றபடி எழுந்திருக்க முயன்று முடியாமல் படுக்கையில் விழ சந்தானலட்சுமி பதறிப்போய் அருகில் வந்தாள்.
"மசக்கை உடம்போடு ஆபிஸாவது ஒன்றாவது. மண்டையிலேயே போட்டு விடுவேன். வீட்டில் அடங்கி இரு. வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். ஆனானப்பட்ட ஜி.எம்மின் பெண்டாட்டி நீ.. உன்னை மகாராணி போல் அவர் தாங்கிக்கிட்டு இருக்கார். இவ என்னவோ இவ உழைத்துத்தான் உயரணும்போல் இந்தப் பாடுபடறா," என்று சந்தியாவிடம் ஆரம்பித்து பிரதீப்பிடம் குறை சொல்லி சந்தானலட்சுமி முடித்தாள்.
'மகாராணி' என்ற வார்த்தையைக் கேட்டு கொதித்த சந்தியா,
"பெரியம்மா.. அன்னத்தின் மகள் நான். உழைத்துச் சாப்பிட்டுத்தான் எனக்குப் பழக்கம். மகாராணி போல் உட்கார்ந்து சாப்பிடுறதெல்லாம் எனக்கு ஆகாது.." என்று பொரிய சந்தானலட்சுமி சீறினாள்.
"வாயிலேயே ஒன்று போட்டு விடுவேன். யார்கிட்ட என்னப் பேச்சு பேசறே. என்கிட்டயே இப்படி வாயடிச்சா மாப்பிள்ளைகிட்ட எப்படிப் பேசியிருக்கமாட்டே..? அது தான் அவர் போன் பண்ணி 'அவளால் நடக்கச் கூட முடியலை. ஆபிஸ் வருவேன்னு அடம் பிடிக்கிறா.. அவ மனசு கோணி பேசி எனக்குப் பழக்கமில்லை'ன்னு..புலம்புகிறார் "
"யார் ..? உங்க மாப்பிள்ளை..? என் மனம் கோண பேச மாட்டாரா..?"
"குறுக்கே பேசாதேடி. மாப்பிள்ளை உன்னைப் பத்தி கவலை கவலையா புலம்புகிறார். நீ இப்போ வேலைக்குப் போகணுமின்னு அவசியமென்ன..?"
"எனக்கு அவசியம்"
"சந்தியா. நீ நான் வளர்த்த பெண்ணாயிருந்தால்.. என்னை உன் தாய்ன்னு நினைப்பவளாயிருந்தால் என் பேச்சைக் கேளு. இல்லைன்னா உன் இஷ்டப்படி இரு... நான் போறேன்."
"பெரியம்மா.. என்ன பெரியம்மா இப்படிப் பேசறீங்க."
"வேற எப்படிப் பேசச் சொல்றே..? வேலையை விடுன்னு அவர் சொன்னால் கேட்க மாட்டேன்கிறாயாம்.. ஏன்.."
"இப்போ நான் என்ன செய்யணும் பெரியம்மா..?"
"வேலையை விடு. மாப்பிள்ளை அந்த லெட்டரைக் கொடுங்க.."
ஆதித்தன் தயாராய் வைத்திருந்த ராஜினாமாக் கடிதத்தை எடுத்து சந்தானலட்சுமியிடம் கொடுக்க அவள் வாங்கி சந்தியாவிடம் காட்டி,
"ம்ம்... கையெழுத்துப்போடு" என்றாள். 
ஆதித்தன் பேனாவைக் கொடுக்க அதை வாங்கிய சந்தியா பிரதீப்பை 'பார்த்தாயா' என்பது போல் பார்க்க, அவன் 'போடு' என்பதாய் கண்ணசைத்தான். கண்கலங்க தன் வேலையை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்டாள் சந்தியா.
"போதுமா பெரியம்மா.."
"போதாது. இப்ப இந்தக் குழந்தை வேணாம்ன்னு சொல்றயாமே ஏன்..?"
சந்தியாவின் விழிகள் ஆதித்தனை குற்றம் சாட்டும் தோரணையில் பார்க்க,
"அவரை ஏன் பார்க்கிறே..?" என்று அதட்டினாள் சந்தானலட்சுமி.
"தாயில்லாத பொண்ணுன்னு உன்னை நீயே நினைச்சுக்கிட்டு முடிவெடுக்கிறயா..? பெத்தவளுக்கு பெத்தவளா நானில்லை..? உன்னை 'என் பொண்ணு'ன்னு கொண்டாடுகிற உன் பெரியப்பா இல்லை..? அண்ணன்காரன் பிரதீப் இல்லை..? எங்ககிட்ட ஒரு வார்த்தை நீ உண்டாகியிருக்ன்னு சொல்லலை.. அதை விட்டுவிட்டு கண்டதையும் பினாத்தியிருக்க.. ம்ம்."
"பெரியம்மா.. அம்மாவை என்னால் மறக்க முடியவில்லை.." சம்பந்தமில்லாமல் என்ன சொல்வதென்று தெரியாமல் சந்தியா கூற,
"அடி பைத்தியம்! அன்னமே உன் வயிற்றில் பெண்ணாக வந்து பிறப்பாடி," என்று நெற்றி அடி அடித்தாள் சந்தானலட்சுமி.
"பெரியம்மா," என்று சந்தியாவின் கண்கள் விரிய,
"பின்னே.. உங்கம்மா உன்னை விட்டுவிட்டு இருந்திருவாளாடி.. ?உன் மகளாய் வந்து பிறப்பாள் பாரு.." என்று சந்தானலட்சுமி மகளின் தலையை தன் மடி மீது தாங்கிக் கொண்டாள்.
"அம்மா வந்து பிறப்பாங்களா..?" புலம்பியபடி சந்தான லட்சுமியின் மடியில் படுத்திருந்த சந்தியாவைப் பார்த்து நிம்மதி அடைந்தவனாய் ஆதித்தன் அறையை விட்டு வெளியேற பிரதீப் பின் தொடர்ந்தான். 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை கண்ட ஆதித்தன் கூறினான்.
"எனக்கு வேறு வழி தெரியவில்லை பிரதீப். அவள் மனம் மாற இந்த ஜென்மம் பூராவும் காத்திருக்க நான் தயார்தான். அவள் மனம் மாறாவிட்டாலும் பரவாயில்லை அவள் என்னுடன் இருந்தால் போதும் என்பதுதான் எனக்கு.. ஆனால்.. அவள் அம்மாவின் நினைவில் அழிந்தே விடுவாளே.. கவனத்தை திருப்ப எனக்கு இந்த வழிதான் தெரிந்தது."
"எப்படியோ அம்மா சந்தியாவை வழிக்கு கொண்டு வந்துவிட்டாங்க. ஆனால் அவ ஏன் வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்றீங்க. அவ திறமை வீணாகணுமா..?"
"அவளை மாதிரி திறமையானவங்க.. அதே சமயம் பணத்தேவை இருக்கிற இன்னொருவருக்கு இந்த வேலை கிடைப்பது நல்லதில்லையா..? சந்தியா வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டிய தேவை இப்போ அவளுக்கு இல்லை."
ஆதித்தனின் வார்த்தையை பிரதீப் ஏற்றுக் கொண்டான்.
ஆதித்தன் வீட்டில் சமையலுக்கு ஆள் போட்டான். சந்தானலட்சுமி ஊடே வந்து கவனித்துக் கொண்டாள். ஆதித்தன் அவளிடமிருந்து விலகியே இருந்தான். அதனால் மனநிம்மதியுடன் சந்தியா இருக்க பிரவச நாளும் வந்தது.
சந்தானலட்சுமி சந்தியாவை சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைகள் பலித்தன. சந்தியா பெண் மகளைப் பெற்றெடுத்தாள். குழந்தையைக் கையில் எடுத்து காட்டியதும் சந்தியாவின் கண்கள்
 "அம்மா" என்று பனித்தன.
தித்தன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். குழந்தை அழுக தைத் தூக்கிக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தான்.
"போதும். கிளம்பும்போது மகளிடம் என்ன கொஞ்சல்.. கிளம்புங்க நேரமாகிறது." என்று கூறியபடி சந்தியா வந்தாள்.
"என் மகள். நான் கொஞ்சுகிறேன். உனக்கு ஏண்டி பொறாமை."
"ஆமாம். பொறாமைதான். ரொம்பக் கண்டுவிட்டார்." என்று அவள் சிலுப்பிக் கொள்ள ஆதித்தன் உல்லாசமாய் சிரித்தான்.
"ஏய் என் மகள் அன்னலட்சுமிடி. என் சந்தோசத்தை எனக்கு மீட்டுக் கொடுத்த மகாலட்சுமி. வெள்ளிக்கிழமை பெண் பிறந்தால் ஐஸ்வர்யம் பொங்கும்ன்னு சொல்வாங்க. சொன்னது மாதிரி என் வாழ்க்கையை நிறைவாக்கினவடி என் குழந்தை.." என்று மகளை உச்சி முகர்ந்தான் ஆதித்தன்.
சந்தியாவின் முகம் சிவந்தது. பெண் குழந்தை பிறந்ததும் தன் தாயே தன்னிடம் திரும்பி விட்டதுபோல் அமைதி அடைந்து விட்டாள் அவள். அவளைத் தாய் ஆக்கிய கணவன் செய்த பிழையை மன்னித்துவிட்டாள். விலகிப் போன ஆதித்தனை,
"ஏங்க நம்ம பொண்ணுக்கு என்ன பெயர் வைக்கலாம்," என்று ஓர் நாள் அவள் கேட்க, அவன் சிலிர்த்துப் போனான். மனைவியை காதலுடன் பார்க்க,
"கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன பார்வையாம்" என்று அவள் சரசமாட அன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னான் அவன்.
குழந்தைக்கு அனைவரையும் அழைத்து பிரமாண்டமாய் பெயர் சூட்டும் விழா நடத்தினார்கள். ஆதித்தன் தன் தாத்தாவிற்கு அனைத்தையும் கடிதம் எழுதிப் போட்டான். 
'அன்னலட்சுமி' என்று தங்கள் மகளிற்கு இருவரும் ஒரு மனதாய் பெயர் சூட்டினார்கள்.
கண்கள் எங்கோ பார்க்க பழையதில் லயித்திருந்த கணவனின் முன்னால் கைவளையல்களை கலகல வென்று ஆட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தாள் சந்தியா.
"அப்புறம் சாயந்திரம் சீக்கிரம் வருவீங்களா..?"
"என்னமோ டெய்லி லேட்டா வருவது போல் கேட்கிற.. அதுதான் ஐந்தடிச்சால் வீட்டில் வந்து நிற்கிறேனே. உனக்கு ஒன்று தெரியுமா..? ஆபிஸில் இப்போது என் பெயர் துர்வாசர் இல்லை."
"வேறு என்ன..?"
"பெண்டாட்டிதாசன்.."
சந்தியாவின் தலையோடு தலை மோதச் சிரித்தான் ஆதித்தன்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -30
அக்கினிப் பறவை -30
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy