அக்கினிப் பறவை -29

29 பாலசந்தரின் ' இருகோடுகள் ' என்ற திரைப்படத்தி ல்  ' இருகோடு தத்துவம் ' ஒன்றை சொல்லியிருப்பார். ஒரு கோட்டை சிறியதாக...


29

பாலசந்தரின் 'இருகோடுகள்' என்ற திரைப்படத்தில் 'இருகோடு தத்துவம்' ஒன்றை சொல்லியிருப்பார். ஒரு கோட்டை சிறியதாக்க அதைவிட ஓர் பெரிய கோட்டை அதன் பக்கத்தில் போட வேண்டும். ஆதித்தனும் அதையே பின்பற்ற முடிவு செய்தான். 
இப்படியே விட்டால் கண்ணீர் கடலில் மூழ்கி சந்தியா காணமலே போய்விடுவாள். இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. எல்லாமாய் இருந்த தாயின் இழப்பு அவளால் தாங்கிக் கொள்ளக் கூடியதல்ல.. ஆதித்தனின் மேல் பழைய காதல் அவளுக்கு இருந்திருந்தால் அவள் வாழ்க்கையில் ஓர் பற்று இருந்திருக்கும். அவள்தான் அவள் மனதிலிருந்து ஆதித்தனை தூக்கி எறிந்துவிட்டாளே. 
அவளை இந்நிலையிலிருந்து மீட்க ஆதித்தன் நேரம் பார்த்தான். அந்த நேரமும் வந்தது. மாதத்தின் கடைசி நாள் சம்பளம் வாங்கிய சந்தியா அன்று இரவு ஆதித்தனிடம் தானாய் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கினாள். காத்திருந்த மச்சான் கடையைப் பிடித்த கதையாய் ஆதித்தன் தான் நினைத்ததை சாதித்தான்.
அன்று இரவு பணத்தை ஆதித்தனிடம் கொடுத்தாள் சந்தியா.
"என்னிடம் ஏன் கொடுக்கிறாய் சந்தியா.? இந்தா என் சேலரிப் பணமும் இருக்கிறது. இந்த வீட்டின் மகாராணி நீதான். பொறுப்பை எடுத்துக்கொள். இனி என் செலவுக்குக் கூட உன்னிடம் கணக்குச் சொல்லிவிட்டுத்தான் வாங்கிக் கொள்வேன்." என்று சகஜமாய் பேசிக் கொண்டிருந்த ஆதித்தனிடம்,
"ஹலோ. பொறுங்க சார். நான் ஒண்ணும் நீங்க புருசன், நான் பெண்டாட்டின்னு என் சம்பளப் பணத்தைக் கொடுக்கலை. நான் இந்த ஒரு மாதமும் இங்கே தங்கி சாப்பிட்டதற்கான என் பங்குப்பணம். நீங்க பாட்டுக்கு நான்தான் இந்த வீட்டுக்கு மகாராணின்னு பேசிக்கிட்டே போறீங்க. எனக்கு மகாராணி பட்டமெல்லாம் வேண்டாம் சார். நான் ஜஸ்ட் ஒரு பேயிங் கெஸ்ட்," என்று கறாராய் கூறினாள்.
"ஓஹோ." என்று மட்டும கூறிவிட்டு மர்மப்பார்வை ஒன்றை பார்த்தபடி மறுபேச்சு பேசாமல் பணத்தை வாங்கிக் கொண்டான் ஆதித்தன்.
உணவு உண்டதும் வழக்கப்படி சந்தியா படுக்கை யறைக்கு செல்ல பின்னாலேயே சென்ற ஆதித்தன் கதவைத் தாளிட்டான். புரியாமல் விழித்த சந்தியாவிடம்,
"எல்லாத்துக்கும் கூலி உண்டுன்னு நீதான் சொன்னே. நானில்லை. இந்த வீட்டில் நீ தங்க எனக்குப் பணம் கொடுக்கிறாய் ...சரி... உன் தன்மானத்தை பாராட்டுகிறேன். ஆனால்.. சாகப்போகிறவங்க நிம்மதிக்காக உன் கழுத்தில் கட்டினேனே தாலி.. அது நான் கட்டியதென்று ஊரெல்லாம் அறிய உன் கழுத்தில் கிடக்கிறதே.. அதற்கு என்ன கூலி கொடுக்கப் போகிறாய்.? இலவசமாய் எதையும் நீ பெற மாட்டாய்.. அவ்வளவு கணக்குப் பார்க்கிறவளில்லையா நீ.. இந்தக் கணக்கையும் சரி பண்ணு. என் கூலியைக் கொடு." என்றான்.
"ஆதித்தன்... இது சரியில்லை. நீங்கள் ஜென்டில் மேன்னு நினைச்சேன்."
"ஊஹூம். அப்படியல்லாம் தப்புத்தப்பாய் நீயாய் நினைத்துக் கொண்டால் அதற்கு நானா பொறுப்பு.. ? ஆதித்தனாமே.. என் பெயர் இப்போத்தான் ஞாபகம் வருதா..?"
"ஆதித்தன்.. நானே மனசு சரியில்லாமல் இருக்கிறேன்."
"நான் மனசு சரியாய்.. ரொம்ப ரொமான்டிக் மூடில் இருக்கேனேம்மா.."
"ஆதித்தன்.. நான் உங்களை வெறுக்கிறேன்.."
"ஆனால் நான் உன்னை விரும்புகிறேனேடி.."
"ஆதித்தன் வேண்டாம்.. கிட்ட வராதீர்கள்.."
அவளது மறுப்புக்கள் காற்றோடு கரைந்தன. அந்த இரவில் ஆதித்தன் அவளை ஆட்கொண்டான். அன்று மட்டுமல்ல.. அடுத்தடுத்து வந்த நாள்களில் எல்லாம் அவன் அவளது கணவன் என்கிற உரிமையை நிலை நாட்டினான். 
சந்தியா தாயை மறந்தாள். விரும்பாமல் அவள் மீது திணிக்கப்படும் பந்தத்தை உடைக்க வழி தெரியாமல் மலைத்து நின்றாள். ஆசை ஆசைய் காதலித்தவனோடு அவள் இந்த வாழ்வை எவ்வளவு மனம் இனிக்க வாழ்ந்திருக்க வேண்டும். அவன்தான் வெந்தணலை அவள் மீது வாரி இறைத்தானே. அதன்பின் அவனோடு கொஞ்சிக் குலாவ அவளால் எப்படி முடியும்..
ஆனால் அவனால் அது முடிந்தது. அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவளைப் பிரியாமல் அடை காத்தான். ஆசைக் கணவனாய் அவளது விலகலை லட்சியம் செய்யாதவனாய்.. அவளை விலகவும் விடாதவனாய் வாழ்ந்ததில்.. அவர்கள் வாழ்க்கையில் இருவர்.. மூவராக ஆகப் போவதன் அறிகுறியை உணர்ந்தாள் சந்தியா.
சில நாள்களாய் தன்னைச் சோர்வும் தலை சுற்றலும் துன்புறுத்துவதை தாங்கிக் கொண்ட சந்தியா குமட்டலும் வாந்தியும் சேர்ந்து கொள்ளவும் பயந்து போனாள். 
காலையில் எழுந்ததும் காபியுடன் வேலையை ஆரம்பிக்கிறவள் அன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் எழுந்திருக்காததைக் கண்ட ஆதித்தன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். சில்லென்று இருந்தது. அவளோ அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.. 
எழுப்ப மனமில்லாமல் அவனே காபி கலந்து அவளுக்கு எடுத்து வந்து எழுப்பினான். கண்விழித்துப் பார்த்தவள் அவன் காபியுடன் நிற்பதைக் கண்டு முகம் மாறி எழுந்திருக்க முயன்றாள். தலை சுற்றலில் முடியவில்லை. ஆதித்தன் கை கொடுக்க ...மறுக்க முடியாமல் எழுந்து அமர்ந்து காபியைப் பருகினாள். ஒருவாய் பருகியதும் குமட்டிக் கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள். 
பதறிப்போன ஆதித்தன். அவளருகே வந்து
"என்ன செய்யுது சந்தியா.? வா டாக்டரிடம் போகலாம்.." என்று அழைத்தான்.
வாய் கொப்புளித்து படுக்கையில் வந்து அமர்ந்த சந்தியா,
"வேண்டாம்," என்றாள் ஒன்றைச் சொல்லில்.
"ஏன் வேண்டாம்.. இதோ பார்.. முரண்டு பிடிப்பதெல்லாம் என்கிட்ட செல்லாது. நீ வராவிட்டால் நான் தூக்கிப் போய் விடுவேன். என் குணம் தெரிந்தும் பிடிவாதம் பிடிக்காதே.."
"ச்சு.. எனக்கு என்ன உடம்புக்கு என்று எனக்குத் தெரியும்.."
"உனக்குத் தெரியுமா..? நீயென்ன டாக்டரா இல்லை ஜோஸியரா..?"
"ஸ்ஸ்.. தலைவிதி.. இதை என் வாயால் நான் சொல்லணும்கிறது."
"இதோ பார்.. எல்லோரும் அவரவர் வாயால் தான் சொல்ல வேண்டும்.."
சந்தியா முறைத்தாள். பின்னர் கண்களை இறுக மூடிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு,
 "உங்களைப் போன்ற பெண்களை மதிக்காத அயோக்கியனுக்கு வாரிசு வரப் போகிறது.." என்றாள் வெறுப்பாய்.
ஆதித்தனின் முகம் மலர்ந்தது. சந்தியாவின் கடும் மொழிகளை அவன் எப்போதும் போல் இப்போதும் சட்டை செய்யவில்லை. மனைவியின் அருகே அமர்ந்து அவள் முகம் திருப்பியவன் குனிந்து முத்தமிட்டான்.
"அப்போ நம்ம வீட்டில் குட்டிப் பாப்பா வரப்போகிறது என்று சொல்..."
"அது குட்டிப் பாப்பாவோ இல்லை உங்களைப் போல் ஒரு ராட்சசனோ அது பிறந்து வந்தால்தான் நிச்சயம்."
ஆதித்தனின் விழிகள் கூர்மையாகின. அவளைப் பார்வையால் துளைத்தவன்,
"என்னடி சொல்றே..?" என்று கேட்டான்.
"எனக்கு இந்தக் குழந்தை, கிழந்தையெல்லாம் பெற்றுக் கொள்ளும் உத்தேசமில்லை.."
"உன் உத்தேசத்தை நான் கேட்கவில்லை.."
"தினம், தினம் ஜெயிக்கிறோமென்ற திமிரா..? என்னை மீறி.. என்னை நீங்கள் மற்ற விசயத்தில் ஜெயிக்கலாம். இதில் ஜெயிக்க முடியாது. உங்களுக்கு ஒரு குழந்தையை நான் பெற்றுத் தரமாட்டேன்."
ஆதித்தன் வழக்கம்போல் அவளிடம் சவால் விடவில்லை. அலுவலகத்திற்கு போன் பண்ணி இருவருக்கும் லீவ் சொன்னான். வேறு யாரிடமோ போனில் தாழ்ந்த குரலில் பேசினான். பின்னர் பொறுமையாய் சமையலறைக்குள் சென்று சமைக்க ஆரம்பித்துவிட்டான். 
சற்று நேரத்தில் வாசலில் அழைப்பு மணி ஒலிக்க சந்தியா யாராயிருக்கும் என்று யோசித்தவாறு படுத்திருந்தாள். ஆதித்தன் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அறைக்குள் நுழைந்தவர்களைக் கண்ட சந்தியா திகைத்துப் போனாள்.
ஆதித்தன் தன் வழக்கமாய் இதிலும் ஜெயித்தான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -29
அக்கினிப் பறவை -29
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy