அக்கினிப் பறவை -28

28 சந்தியாவின் பொருள்களை கார் டிக்கியில் அடுக்கி வைத்தான் ஆதித்தன். கனகமும் , ஆடியபாதமும் கண்ணீர் விட்டு அழுக வீட்டுச்சாவியை அவர்களிட...


28

சந்தியாவின் பொருள்களை கார் டிக்கியில் அடுக்கி வைத்தான் ஆதித்தன். கனகமும், ஆடியபாதமும் கண்ணீர் விட்டு அழுக வீட்டுச்சாவியை அவர்களிடம் கொடுத்தாள் சந்தியா. அக்கம், பக்கம் குடியிருந்தவர்கள் கூட்டமாய் திரண்டு நிற்க அனைவரிடமும் கை கூப்பி விடை பெற்றுக் கொண்டு காரில் ஏறினாள்.. 
சந்தானலட்சுமியும் கோபாலனும் அவளுடன் பின் சீட்டில் ஏறிக்கொள்ள ஆதித்தனின் அருகில் பிரதீப் அமர்ந்து கொண்டான். ஆதித்தனின் கார் கிளம்பியது. அவள் தாய் அவளை விட்டுவிட்டுப் போனதால் ..எட்டு வயதில் தாயின் கரம் பிடித்து அவள் கால் பதித்த தெருவை விட்டு  சந்தியா பிரிந்து சென்றாள். புதிய வாழ்வைத் தேடிச் சென்றாள்.
ஆதித்தனின் அடுக்கு மாடி குடியிருப்பில் அவன் அபார்ட்மென்ட் வாசலில் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஆரத்தித் தட்டுடன் நின்று வரவேற்றாள். வலது காலை எடுத்து வைத்து  தாய்  தேடித்தந்த கணவரின் இல்லத்திற்குள் பிரவேசித்தாள் சந்தியா. சந்தானலட்சுமி சந்தியாவை அதட்டி பூஜையறையில் விளக்கேற்றி வைக்கச் சொன்னாள். சந்தியா அலட்சியமாய் 'சூள்' கொட்டினாள்.
"இங்கே பூஜை ரூம் இருக்கு. ஆனால் சாமி படம் இல்லை பெரியம்மா.."
"தம்பிக்கு அது வழக்கமில்லாமல் இருக்கலாம். ஆனால் உன் வீட்டிலிருந்து நாம் கொண்டு வந்திருக்கிற கடவுள் படங்கள் இருக்கிறதே. விளக்கைத் துடைத்து எண்ணை ஊற்றி திரியிடு. நான் படங்களை மாட்டுகிறேன்."
சற்று நேரத்தில் பூஜையறை தயாராகி விட சந்தியாவை அதட்டி உருட்டி பால் காய்ச்ச வைத்து பூஜையறையில் படைத்து விளக்கேற்ற வைத்தாள் சந்தானலட்சுமி. வீடெங்கும் சாம்பிராணி, பத்தியின் வாசனை மிதக்க சந்தியா இங்கும் அங்கும் நடப்பதால் ஆதித்தன் 'தேவலோகம்' போல் சொக்கிவிட்டான்.
அத்தனை அலங்கார சாமான்கள் இருந்தும் அமைதி யிழந்திருந்த அவன் மனம் அவள் உருவாக்கிய பூஜை யறையை பார்த்ததும் அமைதி பெற்றுவிட்டது. 
கல்லும், மணலும் செங்கலுமா வீடு..? ஊனும்.. உயிரும் நிறைந்தது தான் வீடு. அதை நேசிப்பவர்களிடம் அது பேசும். இந்த வினாடியில் ஆதித்தன் தன் வீட்டை நேசித்தான். அதுவும் மௌனமாய் அதை அங்கீகரித்துக் கொண்டது.
"இது வாடகை வீடா மாப்பிள்ளை. ? " என்று சந்தான லட்சுமி கேட்க,
"இல்லை அத்தை. சொந்த வீடுதான். ஹவுஸிங் லோன்போட்டு வாங்கினேன். லோனும் அடைந்து விட்டது." என்று ஆதித்தன் கூறினான்.
"கார்.. ஆபிஸில் கொடுத்தா..?" என்று கோபாலன் விசாரிக்க,
"இல்லை மாமா. அதுவும் லோனில் வாங்கியதுதான். அந்த லோனும் அடைந்துவிட்டது. ஆபிஸில் பெட்ரோல் அலவன்ஸ் கொடுப்பார்கள்." என்று பவ்யமாய் விளக்கம் கூறினான் ஆதித்தன்.
அவனுக்கு அவர்களை மிகவும் பிடித்திருந்தது. 'வந்தோம் தாலிகட்டியவன் வீட்டில் பெண்ணை தள்ளி விட்டோம்.' என்று இல்லாமல் அவனது பொருளாதார நிலையை தெரிந்து கொள்ளும் அவர்களது பொறுப்புணர்ச்சி அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 'இத்தனைக்கும் சந்தியா அவர்கள் பெற்ற பெண் இல்லை.'
"இந்தா சந்தியா.." என்று அவளது நகைப் பெட்டியை கொடுத்த சந்தானலட்சுமி.
"பத்திரமாய் உள்ளே வைத்துப் பூட்டு," என்று உத்தரவிட்டாள். அதன்பின்,
"இந்தாங்க தம்பி," என்று ஆத்தித்தனிடம் சில கவர்களை நீட்ட,
"என்ன அத்தை.." என்று வினவினான் ஆதித்தன்.
"இதெல்லாம் அன்னம் சந்தியாவின் பேரில் போஸ்டாபிஸில் வாங்கி வைத்திருக்கும் கிஷான் விகாஸ் பத்திரங்கள். மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள். ஆறு லட்சம் ரூபாய் வரும்." என்று சந்தானலட்சுமி கூற ஆதித்தன் சிரித்தான்.
"சரி அதை ஏன் என்னிடம் கொடுக்கறீங்க. சந்தியாவிடம் கொடுங்க."
"தம்பி இது சந்தியா பணமாயிருந்தாலும்.." என்று சந்தானலட்சுமி இழுக்க,
"அத்தை என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. இனி சந்தியாவுடையது, என்னுடையது என்று தனித்தனியாய் எதுவுமில்லை. இந்த வீடு, கார், என் பேங்க் பேலன்ஸ், இனி வாழ்நாள் பூராவும் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அனைத்தும் சந்தியாவிற்குத்தான் சொந்தம். அதனால் அதையும் அவகிட்டயே கொடுங்க."
சந்தியா இதழ்களை மடித்துக் கடித்துக் கொண்டாள்.
'ஏன் நீ நல்லவனாக இல்லாமல் போனாய்..? ஏன் அந்தக் கொடிய வார்த்தைகளை என்னைப் பார்த்துக் கேட்டாய்..? ஏன்... ஏன்..?' என்று நெஞ்சம் குமுறியது.
சந்தானலட்சுமி சமைத்து அனைவருக்கும் பரிமாற சாப்பிட்டவுடன் கிளம்பினார்கள். ஆதித்தனும், சந்தியாவும் அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு தனித்து நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆதித்தனின் விழிகள் மன்னிப்பை யாசிக்க அதை அலட்சியப்படுத்திவிட்டு சந்தியா படுக்கையறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.
'அம்மா, அம்மா' என்று அன்னையின் நினைவில் மனம் கதற கண்ணீர் விட்டவாறு தூங்கிவிட்டாள். வெகு நேரம் கழித்து ஆதித்தன் அவள் அருகில் நின்று அவளது கண்ணீர் வழிந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றதையோ ஒரு போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு வெளியேறியதையோ அறியாதவளாய் அவள் அயர்ந்து தூங்கினாள்.
காலையில் புது இடத்தில் விழித்து எழுந்தவள் சற்று நேரம் சிந்தனையுடன் அமர்ந்து விட்டுக் கதவு திறந்து வெளிவந்தாள். ஹால் சோபாவில் ஆறடி உயரத்தை சுருக்கிக் கொண்டுஆதித்தன் சுருண்டு படுத்திருந்தான். சமையலறைக்குச் சென்று காபி போடலாம் என்று நினைத்து பாலைத் தேடியவளின் அருகே பால் பாக்கெட் வைக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தாள். ஆதித்தன் நின்று கொண்டிருந்தான்.
"பால் பாக்கெட் டெய்லி ஒரு சின்னப் பையன் கொண்டு வந்து போடுவான். வாசல் கதவில் ஒரு பிளாஸ்டிக் பையை தொங்க விட்றணும்." என்றான்.
பதில் சொல்லாமல் காபி கலந்தவள் இரண்டு கப்களில் ஊற்ற ஒன்றை எடுத்துக் கொண்டவன் ஹாலுக்குச் சென்று பேப்பரை எடுத்துக் கொண்டான். சந்தியா காபி குடித்து கிச்சனை சுற்றிப் பார்த்தாள் சின்ன எவர்ஸில்வர் டப்பாக்களில் மளிகை சாமானும் பெரிய டப்பாக்களில் அரிசி, பருப்பு வகையறாக்கள் இருந்தன.
பிரிட்ஜைத் திறந்து பார்த்தாள். காய்கறிகள் இருந்தன. நிமிசத்தில் சப்பாத்தி, குருமா தயார் செய்து மதியத்திற்கு எலுமிச்சை சாதம் செய்து டப்பாக்களில் நிரப்பி வைத்தவள் குளித்து உண்டு முடித்துக் கிளம்பினாள். செருப்புக்களில் கால் நுழைத்தவளைப் பார்த்து,
"எங்கே கிளம்புற..?" என்றான் ஆதித்தன். சுவரைப் பாத்தவாறு,
"ஆபிசுக்கு.." என்றாள் சந்தியா வெறுப்புடன்.
"அது தெரிகிறது. இரண்டு பேரும் ஒரே ஆபீசிற்குத் தானே போகிறோம். அப்புறம் என்ன தணித்துப் பயணம் கிளம்புற..? சும்மாவே திடீர் கல்யாணம்ன்னு ஆபிசில் பேசிக்கிறாங்க. வெறும் வாயை மெல்கிறவர்களுக்கு அவல் தரப்போகிறாயா..? சேர்ந்து போகலாம்." என்றான் ஆதித்தன் கண்டிப்புடன்.
வேறு வழியின்றி உடன் கிளம்பியவளுடன் காரில் ஏறி அலுவலகம் சென்றான். நாராயணன் அழைக்கவும் இருவரும் அவர் அறைக்குச் சென்றனர்.
"உட்காருங்க சந்தியா.. மிஸஸ் ஆதித்தன் ஆகியிருக்கீங்க. வாழ்த்துக்கள். அதே நேரம் உங்கள் அம்மா இறந்ததற்கு எங்கள் வருத்தங்கள்.." என்றார் நாராயணன்.
அதே அறையில் அமர்ந்திருந்த விமலா,
"மிஸ்டர் ஆதித்தன். உங்களின் மேரேஜ் ரிசப்ஷனை வேண்டாம்ன்னு சொல்லிட்டிங்க. சந்தியாவுடைய அம்மா இறந்துவிட்டதால் துக்கத்திலிருக்கும் அவங்க மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பாராட்டுக்கள்." என்றாள்.
அலுவலகத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து வாழ்ததுக்களைக் கூறி துக்கமும் விசாரித்து விட்டுச் சென்றனர். பகலில் அலுவலகத்தில் வேலை செய்யும் போது மறையும் தாயின் நினைவு மாலையில் சூழ்ந்து கொள்  இரவுகளை துக்கத்துடன் கண்ணீர் விட்டவாறு தூக்கமின்றிக் கழித்தாள் சந்தியா.. ஆதித்தன் அதை அறிந்தான். அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.
இறுதியில் ஒரு துயரத்தை மறக்கடிக்க மற்றோர் துயரத்தைக் கொடுத்தான்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,31,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,21,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -28
அக்கினிப் பறவை -28
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy