அக்கினிப் பறவை -24

24 சந்தியா தவித்துக் கொண்டிருந்தாள். காலையில் அலுவலகம் வந்ததில் இருந்த ஆதித்தனிடம் ஓர் வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இவள் அவன் அறைக...


24

சந்தியா தவித்துக் கொண்டிருந்தாள். காலையில் அலுவலகம் வந்ததில் இருந்த ஆதித்தனிடம் ஓர் வார்த்தை கூடப் பேச முடியவில்லை. இவள் அவன் அறைக்குள் போகும்போதெல்லாம் அவசரமாக போனில் பேச ஆரம்பித்துவிடுகிறான். வேண்டுமென்றே தவிர்ப்பது புரிந்தது. காரணம் புரியாமல் ஏங்கினாள் அவள். இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினாள். ஆதித்தன் அழைத்தான்.
"முக்கியமான லெட்டர்ஸ் என்ன என்ன வந்திருக்கிறது எடுத்து வாங்க.."
பன்மையில் மரியாதையுடன் அழைக்கிறான். திகைத்தாள் அவள். கேள்விக்குறியுடன் நோக்கியபடி உள்ளே வந்தவளின் முகம் பார்க்காமல் அவள் நீட்டிய கடிதங்களைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தவன், ஒவ்வொன்றுக்கும் பதில் கூற ஆரம்பித்தான். அவனது பதில்களை குறிப்பெடுத்து முடித்தவள் எழுந்து போகாமல் சத்யாக்கிரகி போல் அவன் முகம் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
"வேலை செய்யணும்கிற எண்ணம் இல்லையா..?" ஆதித்தன் வினவ,
"அதற்கு முன்னால் எனக்கு ஓர் உண்மை தெரிய வேண்டும்," என்று சந்தியா பதில் கூறினாள்.
"என்ன உண்மை...?"
"உங்கள் மனதில் என்ன இருக்கிறது..?"
"என் மனதில் ஆயிரம் இருக்கும். அதை கேட்க நீங்கள் யார்..?"
"நான் யாரா.. யாரோ நான் தான் எல்லாமும் என்று சொன்னார்களே. அவர்களுக்கு அது மறந்து விட்டதா..?"
"மறக்கவில்லை... அப்படி நான் சொன்னது என்னை எல்லாமுமாய் நினைத்ததாய் நான் நினைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம்.. கடற்கரையில் நேற்று சாயந்திரம் இன்னொருவனுடன் காதல் நாடகமாடிவிட்டு இன்று என்னிடம் நடிக்கிற வேசக்காரியிடம் சொல்லவில்லை.."
"என்னது... என்ன சொன்னீர்கள்..?"
"ஹா.. யாரிடம் இந்த சாகசம்..? நேற்று நீ அலையில் நனைந்து கட்டி அணைத்து கும்மாளம் போட்டாயே.. அவன் யார்..? உன் முன்னாள் காதலனா..? இல்லை இந்நாள் காதலனா..? அவன் மட்டும் தானா.. இன்னும்.."
"வாயை மூடுங்கள்.." என்று சீறினாள் சந்தியா.. 
பெண் சிங்கமாய் சிலிர்த்து எழுந்தவளின் முகம் இன்று கோபத்தில் சிவந்திருந்தது. கண்கள் சிவக்க கர்ஜித்தாள் அவள்.
"யாரைப் பார்த்து என்ன வார்த்தை கூறினீர்கள்..? உங்களைப் பற்றி எத்தனை உயர்வாக எண்ணியிருந்தேன். என் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்களே பெண்களைத் தரக் குறைவாய் பேசக் கூட மாட்டீர்கள் என்று நம்பியிருந்தேனே. என் நம்பிக்கையை நாசமாக்கி விட்டீர்களே. மற்றவர்களைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு தராதரம் வேண்டும். தரம் கெட்ட தனமாய் பேசிவிட்டீர்களே. இதுவே நீங்களாக இருப்பதால் சும்மா விடுகிறேன். ஒரு நாள் ஒரு பொழுதாவது உங்களை என் மனதில் நினைத்துவிட்டேனே. அந்தப் பாவத்திற்காக பொறுக்கிறேன். வேறு யாராவது சொல்லியிருந்தால் குடலை உருவி மாலை போட்டிருப்பேன்."
"நன்றாயிருக்கிறது உன் நாடகம். செய்வதையும் செய்துவிட்டு.. என்னவோ நான் தப்பு செய்தாற் போல் பேசுகிறாயே. உன் பொய் விளக்கத்தைக் கேட்க நான் தயாரில்லை. பெண்களை நம்பக் கூடாதென்று பாடம் படித்திருந்தும், உன்னிடம் மனதை விட்டேனே. உன்னை நம்பினேனே. என்னைச் சொல்ல வேண்டும்."
"யார் விளக்கம் சொன்னது..? எப்போது இவ்வளவு கீழ்த்தரமாய் என்னைப் பேசி விட்டீர்களோ.. அதற்குப் பின்னால் நீங்கள் யாரோ.. நான் யாரோதான்.. உங்கள் முகத்தில் விழிக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு வெறுப்பாய் இருக்கிறது."
"போ. போய்விடு. என் முகத்தில் விழிக்காமல் போய் விடு."
ஆதித்தன் செய்வது அறியாது திகைத்தான். தவறு செய்தவளிடம் இந்த தலை நிமிர்வு வராதே. இனி காலம் கடந்தபின் கலந்து பேச முடியாது. அப்படியானால் நேற்று அவன் கண்ட காட்சி. வெளியேறப் போன சந்தியாவை நிறுத்தியது அவன் குரல்.
"இதற்குப் பதில் சொல்லிவிட்டுப் போ.."
"இந்த 'வா, போ'வையெல்லாம் விட்டு விடுங்கள் சார். மரியாதை தேவை."
உதட்டை மடித்துத் தோளைக் குலுக்கிக் கொண்டான் ஆதித்தன்.
"ம்.. நேற்று நீங்கள் கட்டி அணைத்துக் கொண்டிருந்த அந்த மகானுபாவர் யார் மேடம்..?"
"அது உங்களுக்குத் தேவையில்லாதது சார். என் சொந்த விசயத்தைப் பற்றிப் பேச இனி உங்களுக்கு அருகதையோ, உரிமையோ கிடையாது. நீங்கள் ஜி.எம். நான் உங்கள் பெர்ஸனல் செகரட்டரி அவ்வளவுதான்."
"சரி.. நீங்கள் போகலாம்.."
"ஒரு நிமிசம் சார்.. எனக்கு இன்று மட்டும் லீவ் வேண்டும்."
"ஏன்.. காலையில் நன்றாகத் தானே இருந்தீர்கள்.."
"இப்போது இல்லை.. என் டேபிள் வொர்க்கை பிரியாவிடம் கொடுத்து விட்டுப் போகிறேன்."
அவள் வெளியேறிவிட்டாள். அலுவலகமே இருண்டு போனது போலிருந்தது ஆதித்தனுக்கு. இருண்டது அவன் வாழ்வுதான் என்ற உண்மை புரிய மனம் உடைந்தான். இனி ஒரு பெண்ணிற்கு அவன் வாழ்வில் இடம் இல்லை. ஆனால்.. இவள்.. அவன் கண்ணால் பார்த்தது பொய்யா..?
சந்தியா அலுவலகம் விட்டு வெளியே வந்தாள்.. நெஞ்சம் இன்னும் விம்மிக் கொண்டிருந்தது. உலகையே எதிர்க்காலம். ஆனால் உயிராய் நினைத்த ஒருவனை..?
 அவனது உண்மை முகம் தெரிந்த பின்னால்.. அவளது சக்தி அனைத்தும் வடிந்து விட்டது போல் இருந்தது. மனம் குமுறியது. இனி அவனை ஏற்க அவளால் முடியாது.. இதை.. அம்மாவிடம் எப்படிச் சொல்வாள்.. ?
மகளின் கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருக்கும் அவளின் இதயத்தை.. இதயநோய் கண்டிருக்கும் இந்த நிலையில் எப்படி உடைப்பது. ? 
கால்கள் தன் போக்கில் அவள் தஞ்சம் தேடிய இடத்தை அடைந்திருந்து. நிமிர்ந்து பார்த்தாள். பெருமாள் கோவில். வாசலில் செருப்புக்களை கழட்டி விட்டுவிட்டு 'நீயே தஞ்சம்' என்று அவன் பாதம்பணிய கோவிலின் உள்ளே சென்றாள்.
ன்னம் அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். கனகமும், ஆடியபாதமும் எதிரே வந்து தயங்கி நின்றனர்.
"என்ன கனகம் பாத்திரங்களை கழுவவில்லையா..? என்னங்கண்ணே சரக்கு தீர்ந்து விட்டதா..? என்ன வாங்கணும் சொல்லுங்க.." என்று கேட்டாள்.
ஆடியபாதம் தயங்கியவாறு,
"அம்மா அன்னம் என் கதை தெரியுமில்லையா..?" என்று கேட்டார்.
"இது என்னண்ணே. புதிதாய் கேட்கறீங்க. உங்க வீட்டாரோடு பீச்சுக்குப் போயிருந்தீங்க. சுனாமி அலையில் குடும்பமே தொலைந்துபோக நீங்க மட்டும் மிஞ்சி நிற்கறீங்க. பெண்டாட்டி பிள்ளை, குட்டிகளை தொலைத் துட்டுப் பட்டமரமாய் தனிச்சுப் போயிட்டிங்க."
"அக்கா என் கதையும் தெரியுமில்ல.." கனகம் கேட்டாள்.
"என்னடி இது.. தொழிற்சாலை விபத்தில் புருசனை அள்ளிக் கொடுத்துட்டு ஐந்து வயசுப் பையனோட அல்லாடிக்கிட்டு வாழ்கிறாயே. எனக்குத் தெரியாதா..?"
"அன்னம். நான் பட்ட பரம். கனகம் தனிமரம். இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் என்னன்னு யோசிக்கிறேன். கனகத்தின் மகனை வளர்க்கறதில் என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்." என்று ஆடியபாதம் கூறினார்.
அன்னத்தினால் இதை நம்பமுடியவில்லை. செவியில் விழுந்த வார்த்தைகள் உண்மைதானா என்பது போல் வியந்து நோக்கினாள். கனகமோ, ஆடியபாதமோ இளம்வயதினர் இல்லை. ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை. விதவை மறுமணம் வரவேற்கத் தக்கதுதானே. ஆடியபாதம் குடும்பத்தைத் தொலைத்தவர். கனகத்தின் குடும்பத்தை தன் குடும்ப மாக்க துடிக்கிறார்.
"கனகம்.."
"என்னக்கா.."
"விதவை மறுமணத்திற்கு நான் எதிரில்லை. ஆனால் நீ ஒரு தாய். உன் மறுமணத்தைப் பற்றி உன் மகனிடம பேசு. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே செய்து கொள் ..புரிந்ததா.."
"அவனிடம்தான் முதலில் சம்மதம் கேட்டேன் அன்னம்மா. அவன் என்னை ஏற்றுக் கொண்ட பின்னால் தான் கனத்திடம் கேட்டேன்." என்றார் ஆடியபாதம்.
அவர்கள் வாழ்க்கை - அவர்கள் முடிவு. புன்னகை யுடன் அவர்களை ஆசிர்வதிப்பதுபோல் நோக்கிய அன்னம் ஏதோ பேசப்போகையில் அந்த வலி அவள் இதயத்தைத் தாக்கியது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துடித்தவள் வியர்த்துப் போய் நினைவிழந்து பூமியில் விழுந்தாள்.
ஆடியபாதம் ஆட்டோ பிடிக்க ஓட கனகம் செல்போனில் அருகே ஓடினாள்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -24
அக்கினிப் பறவை -24
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy