அக்கினிப் பறவை -23

23 சந்தியா தன் செல்போனை எடுத்து எண்ளை அழுத்தி காதில் வைக்க மறுமுனையில் , "சொல்லு சந்தியா.." என்ற பிரதீப்பின் குரல் கேட்டத...


23

சந்தியா தன் செல்போனை எடுத்து எண்ளை அழுத்தி காதில் வைக்க மறுமுனையில்,
"சொல்லு சந்தியா.." என்ற பிரதீப்பின் குரல் கேட்டது.
"அண்ணா.. இன்று சாயங்காலம் என் 'அவரை'ப் பார்க்க வருகிறாயா..?"
"ஆதித்தனையா.. எங்கே அவர் வீட்டுக்குப் போய் பார்க்கலாமா..?"
"ஊஹூம்.. அவர் தனியாக வாழ்கிறார் அண்ணா. கல்யாணத்திற்கு முன்னால் அங்கே போவது சரியில்லை. மற்றவர்கள் தவறாய் நினைப்பார்கள்."
"இந்தக் கொள்கையெல்லாம் ஹாஸ்பிடலில் துணைக்கு இருந்தபோது எங்கே போனது..?"
"அண்ணா! அப்போ அவர் நோயாளி. அது ஹாஸ்பிடல். தவிரவும் ராத்திரிக்கு பரமசிவம் வந்து என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவார்."
"சும்மா உன் வாயைக் கிளறினேன் சந்தியா.. என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியாதா..? உன் ஆதித்தனை எங்கே பார்க்கலாம்..?"
"சாயந்திரம் மெரினா பீச்சிற்கு வரச் சொல்லி யிருக்கிறார்."
"நீங்க வழக்கமாக சந்திக்கிற இடமாக்கும்.. ஊம்.. சரி நான் வருகிறேன்."
மாலையில் அலுவலகம் முடிந்து கிளம்பிய போது சந்தியாவின் மனம் இறக்கை விரித்துப் பறந்தது. ஆதித்தன் மருத்துவமனையில் இருந்த முதல் நான்கு நாள்கள் பகல் வேளைகளில் அவள் அவனுடன் துணை இருந்தாள். அடுத்த நாள்களில் அலுவலகம் முடிந்து மாலை வேளைகளில் போய் பார்த்து வந்தாள். அவன் அலுவலகம் வர ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மெரினா பீச்சில் அவர்களுக்கென்று ஒரு இடம் தேர்ந்தெடுத்து அங்கே சந்தித்தார்கள். அந்த வழக்கமான இடத்திற்கு சென்று காத்திருந்த போது பிரதீப் வந்துவிட்டான்.
"ம்ம்.. இதுதான் நீங்கள் தினசரி சந்திக்கும் இடமா..?"
"தினசரி இல்லை அண்ணா.. ஒரு நாள் விட்டு ஒரு நாள்.."
"அப்படியா..ம்.. நம்புகிறேன். சரி உன் ஆதித்தன் பார்க்க எப்படி இருப்பார்..?"
"சிங்கம் போல் இருப்பார்.." அவர் நினைவில் விழிகள் செருக சந்தியா கூறினாள்.
"யாரோ, அவர் 'கடுவன் பூனை' என்று சொன்னதாக நினைவு," பிரதீப் சிரித்தான்.
"போ, அண்ணா! அவரும் இதையே தான் சொல்லி வம்புக்கு இழுக்கிறார்," என்று சந்தியா சிணுங்கினாள். பிரதீப் "சரி, சரி" யென்று சமாதானப்படுத்தினான்.
"அண்ணா, அவர் வரும்வரை கடலோரம் நின்று பேலாமா..?"
அவன் எழுந்து உடன் வர இருவரும் கடலோரம் அலை நீர் கால் நினைக்க, நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
"சந்தியா நன்றாக யோசித்துத்தான் முடிவெடுத்தாயா..?"
"அண்ணா! உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால் நான் ரொம்பவும் பயந்து போயிருந்தேன். திரும்பத் திரும்ப அவர் நினைவு. அவர் நெருப்பாய் சுட்டாலும் அவர் பின்னாலேயே மனம் போனது. என்னால் என் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆபிஸில் எல்லோரும் அவர் மேல் வெறுப்பாய் பேசுவார்கள். எனக்கோ அவர் மேல் குறை சொல்லவே தோன்றாது."
"அதுதான் எனக்கும் ஆச்சர்யமாயிருக்கிறது. எப்படி சந்தியா. இந்த வேலை உனக்குக் கிடைப்பதற்கு அவர்தான் தடையாயிருப்பார்ன்னு சொன்னாயே..?"
"உண்மையும் அதுதான் அண்ணா.. இந்த வேலையை எனக்குக் கொடுக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கார். விமலா மேடம்தான் எனக்காகப் போராடி இந்த வேலையை எனக்குக் கொடுக்க வைத்திருக்கிறார்கள். நான் வேலையில் சேர்ந்த பின்னாலும் என்னை இன்சல்ட் பண்ணிக் கொண்டே இருப்பார்."
"அப்படியிருந்துமா நீ அவரை விரும்பினாய்..?"
"ஆமாம் அண்ணா! நான்தான் சொல்கிறேனே.. அவர் கடுமையானவர்தான் ஆனால் கண்ணியமானவர். பெண்களைக் கண்டால் அவருக்குப் பிடிக்காதுதான். ஆனால் பெண்களின் மனம் புண்படும்படித்தான் பேசுவார். தரக்குறைவாக, அவமானப்படும்படி பேசமாட்டார்.. ஏனோ.. எனக்கு அவர்தான்னு தோன்றிவிட்டது. அதுவும் அன்றைக்கு ஹாஸ்பிடலில் யாருமில்லாத அநாதைபோல் படுத்துக்கிடந்தாரே அப்போது.. உனக்கு எல்லாமுமாய் நான் இருக்கிறேன்னு சொல்லத் தோன்றிவிட்டது."
"சொல்லியும் விட்டாய்.. விடு. என் தங்கை சந்தியா வின் தேர்வு நிச்சயம் சரியானதாகத் தானிருக்கும். மாப்பிள்ளையைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது. எப்போது வருவார்."
"வரும்நேரம்தான்.. வந்துவிடுவார் அண்ணா.." என்று சந்தியா சொல்லிக் கொண்டிருந்த போது உயரமான அலை வந்து அவள்மேல் விழுந்து அவளை நனைக்க தடுமாறி விழுந்து விடாமலிருக்க பிரதீப்பின் தோளைப் பற்றிக் கொண்டவள். கலகலவென நகைத்தாள்.
பாலும், கள்ளும் நிறத்தில் ஒன்றுதான். ஆனால் தன்மை வேறு வேறு அல்லவா..? ஆதித்தனுக்கு அந்தப் பாகுபாடு புரியாமல் போனதுதான் விதியின் விளையாட்டு, ஆணும், பெண்ணும் தொடுவது தவறுதான். அதுவே அண்ணன், தங்கையாக இருந்தால் அந்தத் தொடுகை எப்படித் தவறானதாக இருக்க முடியும்..? பெண் வளர்க்காத பிள்ளை ஆதித்தன். உடன் பிறந்த பெண்களும் இல்லை. உறவான 'தாய்' என்ற பெண்ணும் விலகிப்போனவள். அவனுக்கு என்ன தெரியும் அண்ணன் தங்கை உறவைப் பற்றி. உடன் பிறந்தால்தான் சகோதரப்பாசம் வருமா..? உடன் வளர்ந்தாலும் வருமல்லவா..? எட்டு வயது சந்தியாவின் கரம் பிடித்து பத்து வயது பிரதீப் என்ன உணர்ந்தானோ.. அதே உணர்வு தானே இன்று வரை அவர்களில் நிறைந்திருக்கிறது.
'அண்ணன்' என்பது புனிதமான உறவு. 'அண்ணா' என்று அழைத்தவாறு அவனைத் தொட்டுப் பழகும் சந்தியாவின் நெஞ்சில் என்ன கல்மிஷம் இருந்திருக்க முடியும். அது ஆதித்தனும், சந்தியாவும் சந்தித்துக் கொள்ளும் வழக்கமான இடம். அன்று அந்த இடத்திற்கு வரச் சொன்னவன் அவன்தான். அவன் வரும் நேரத்தில் அவனுக்கு பழக்கமான அவன் அறிந்த இடத்தில் அடுத்தவனுடன் சரசமாடுபவளா தன் அன்புக் காதலி..? என்று ஓர் நிமிடம் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா அந்த ஆறடி உயர ஆண்பிள்ளை..? அவன் நினைத்துப் பார்க்கவில்லை. மனரணம் ஆற மருந்தென்று தேடிவந்த வளால் இன்னும் ரணமானவன் உடனே வந்த வழி திரும்பிச் சென்றான்.
அலை நனைத்த புடவையை சரி செய்தவாறு நிமிர்ந்த சந்தியா தூரத்தில் செல்லும் ஆதித்தனைக் கண்டுவிட்டாள்.
"அண்ணா.. அதோ ஆதித்தன்.." என்றவள்,
"ஆதித்தன்.." என்று கூவி அழைத்தாள்.
அவளது அழைப்பிற்கு திரும்பிப் பார்த்த ஆதித்தனின் கண்களில் நெருப்புப் பொறி பறந்தது. பிரதீப்பின் நெஞ்சில் 'ஏனெ'ன்ற கேள்வி எழுந்தது. சந்தியா அழைக்க, அழைக்க ஆதித்தன் நிற்காமல் விரைந்து காரில் ஏறிச் சென்றுவிட்டான்.
ஒன்றும் புரியாமல் விழித்த சந்தியாவை சமாதானப் படுத்தினான் பிரதீப்.
"சரிசரி.. விடு சந்தியா.. அவருக்கென்ன அவசர வேலையோ.. நாளைக்கு நேரில் போய் விசாரி. நான்தான் அவர் யாரென்று பார்த்துவிட்டேனே. இன்னொரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துப் பார்த்துக் கொண்டால் போயிற்று."
சந்தியா புத்திசாலி. ஆதித்தனின் செயலில் ஏதோ அர்த்தமிருப்பதை உணர்ந்து கொண்டாள். மறுநாள் காலையில் அலுவலகம் சென்றபின் அவனைச் சந்தித்த போது காரணம் கேட்டாள். அவனோ அவள் நெஞ்சில் அமிலத்தை ஊற்றினான். ஒரே திசையில் பயணம் செய்த காதல் பறவைகள் கிழக்கு, மேற்காய் பிரிந்து பறந்தன. வாழ்நாளெல்லாம் யாரின் கரம் பிடித்து நடக்கத் துடித்தாளோ, அவனின் பார்வை படும் இடத்தில் கூட நிற்க அவள் அருவெறுப்படைந்தாள்.
ஒரு பாட்டு ஒன்று உண்டு,
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
             நாளாறு மாதமாய் குயவனை வேண்டி
    கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக்
              கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி'
ஆதித்தனின் நிலையும் அதுதான். காணக் கிடைக்காத கற்பக விருட்சம் சந்தியா. பாலை வனத்தில் நடந்து கால்கள் புண்ணான அவனுக்கு வாழ்க்கை முழுவதும் நிழல் தரும் கற்பகச் சோலையாக இருந்திருப்பாள். ஆனால் சந்தேகப் பேய் ஆதித்தனின் மனதில் புகுந்து கொண்டது. அவன் சந்தியாவை கை நழுவ விட்டான். தன் நாவால் தானே கெட்டான்.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -23
அக்கினிப் பறவை -23
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy