அக்கினிப் பறவை -21

21 "இது சரியான அணுகுமுறை இல்லை சார்.." என்றான் ஆதித்தன் தீர்மானமான குரலில். "உங்களுடைய கருத்தை தவிர மற்றவர்களின் கரு...


21

"இது சரியான அணுகுமுறை இல்லை சார்.." என்றான் ஆதித்தன் தீர்மானமான குரலில்.
"உங்களுடைய கருத்தை தவிர மற்றவர்களின் கருத்தெல்லாம் தவறான அணுகுமுறையாகத்தான் உங்களுக்குத் தோன்றும் மிஸ்டர் ஆதித்தன்.." என்று கண்ணாடியை சரி செய்தவாறு கூறினாள் விமலா.
"நான் உங்களிடம் பேசவில்லை. எம்.டி.யிடம் தான் பேசினேன் மிஸஸ் விமலா.."
"எம்.டி.யிடம் என்னுடைய அணுகுமுறை சரியான தில்லைன்னு சொன்னீர்கள்."
"அது என்னுடைய கருத்து."
"உங்களுடைய கருத்து மற்றவர்களைப் பாதிக்கக் கூடாது. எந்த வகையில் என் அணுகுமுறை தவறான தென்று சொல்கிறீர்கள்."
அந்த போர்டு மீட்டிங்கில் பங்கு பெற்றிருந்த அனைவரும் கவனித்துக் கொண்டிருக்க வடதுருவமும், தென்துருவமும் மோதிக் கொண்டிருந்தன. நாராயணன் அவரது இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். மோதல் உச்சக் கட்டத்தை அடைந்த போது அவர் ஊடே நுழைந்தார்.
"வெயிட் ஆதித்தன். விமலா செல்வதில் பாதி சரி.  நீங்கள் சொல்வதில் பாதி சரி. இரண்டு பேரின் கருத்தையும் ஒன்று படுத்தினால் நம்ம கம்பெனி இன்னும் வளர்ச்சியடையும்." என்று அவர் இரு பொருள் படக் கூறியதும் இருவரும் அப்போதைக்கு போர் நிறுத்தம் செய்தனர்.
மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேற ஆதித்தனும் இருக்கையை விட்டு எழுந்தான்.
"ஒன் மினிட் ஆதித்தன்.." என்று நாராயணன் தடுக்கவும் ஆதித்தன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். இப்போது அவர்கள் இருவர் மட்டுமே அந்த பெரிய கான்பரன்ஸ் ஹாலில் இருந்தனர்.
"உடம்பு எப்படியிருக்கு ஆதித்தன். ஒரு வாரமா ஹாஸ்பிடலில் இருந்தீங்களே.."
"ஃபைன் சார். சாதாரண பீவர்ன்னு நினைச்சது வைரஸ் பீவராயிடுச்சு.."
"ம்ம்.. சந்தியா பக்கத்திலிருந்து கவனிச்சுக் கிட்டாங்க போல இருக்கே..?"
"ஆமாம் சார்.. நான் சந்தியாவை..."
"தெரியும் ஆதித்தன். பரமசிவம் சொன்னான் வாழ்த்துக்கள். இப்படியே மனதை அமைதிப்படுத்தப் பாருங்கள். காய்ச்சலுக்கு மருந்து உண்டு. மன உளைச்சலுக்கு மருந்து இல்லை. அதை நாம் தான் குணப்படுத்திக்கணும்."
"நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்ன்னு எனக்குப் புரியலை சார்."
"வெல். நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். நீங்கள் காய்ச்சலில் படுப்பதற்கு முதல்நாள் மிஸ்டர் ராதாகிருஷ்ணனின் பார்ட்டிக்கு போயிருந்தீர்களா..?"
திடீரென்று எதற்கு இந்த விசாரணை..? அவன் மறக்க நினைப்பதை நினைவு படுத்தும் கேள்வியை கேட்கிறாரே. ஆதித்தன் மௌனமாய் டேபிள் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான். நாராயணின் கூர்விழிகள் அவனை ஆராய்ந்தன.
"ஆதித்தன நான் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை."
"ஆமாம் சார். போயிருந்தேன். அதனால் என்ன பிரச்சனை வந்திருக்கிறது..?"
"பிரச்சனை என்று தான் நினைக்கிறேன். என்னுடைய இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அங்கே மிஸஸ். கபூர்ன்னு ஒரு லேடியை சந்திச்சீங்களா..?"
தலையை படாரென்று உயர்த்தினான் ஆதித்தன். கண்கள் நெருப்புப் பிழம்பாய் ஜொலித்தன.
"பார்ட்டின்னா நிறைய பேரை மீட் பண்ண வேண்டியிருக்கும். இதில் நீங்க சொல்வது யாரை என்று எனக்கு எப்படித் தெரியும்..?"
"இல்லையே ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்திய அந்த லேடியின் பெயர் பூங்காவாமே."
"எனக்கு நினைவில்லை. அத்தோடு அந்தப் பெயரில் என்ன இருக்கிறது..?"
"எதுவும் இல்லையென்றால் மறுநாள் ஏன் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனது..?"
"பார்ட்டியில் பனியில் நிறைய நேரம் நின்று விட்டேனோ என்னவோ.."
"எப்போதும் நீங்கள் நனைகிற பனிதானே ஆதித்தன். இன்று என்ன புதிதாய்..?"
"நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதுதான் புதிது சார்.."
"காரணத்தோடுதான் கேட்கிறேன் ஆதித்தன். மிஸஸ். பூங்கா கபூர் என்னிடம் போனில் பேசினார்கள் ஆதித்தன்."
திடுக்கிட்டு நிமிர்ந்தான் ஆதித்தன், "என்ன பேசினாங்க..?"
"உங்களைப் பற்றி விசாரித்தார்கள். உங்கள் சொந்த ஊர் 'பனையூர்' தானேன்னு கேட்டார்கள். மிஸ்டர் கபூர் நமது மும்பை கம்பெனிக்கு வேண்டிய நபர். அதனால் நான் அவங்க கேட்ட விவரங்களைச் சொல்ல வேண்டியிருந்தது. அவங்க எதற்காக உங்களைப் பற்றி விசாரிக்க விரும்பினார்கள் ஆதித்தன்..? அதற்கும் நீங்கள் உடம்பு சரியில்லாமல் போனதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?"
"நோ சார், நோ சார்.." என்றபடி எழுந்த ஆதித்தன் புயலாய் வெளியேறினான். 
அவன் மனம் கொதித்தது. பூங்காவனம் அவனைப் பற்றி விசாரித்தாளா..? எதற்காக..
குந்தி கர்ணனை அறிந்ததும் என்ன செய்தாள்..? 'மகனே' என்று ஓடி வந்து கட்டிச் சேர்த்துக் கொண்டாளா..? 'இவன்தான் என் மகன்' என்று ஊரறிய முழக்கமிட்டாளா..எதுவும் செய்யாமல் திருட்டுத்தனமாய் சந்தித்து இரண்டாவது மகனான அர்ஜூனனுக்கு உயிர் பிச்சை தானே கேட்டாள். 
அவள் எதற்காக அவனைப் பற்றி விசாரிக்கிறாள்..? விசாரித்துத்தான் என்ன ஆகப் போகிறது.? திரும்பி வர முடியாத ஒருவழிப்பாதையில் சென்று விட்டவள் அவள். 
அவனை மீளாத நரகத்தில் தள்ளி தாயிருந்தும், தந்தையிருந்தும் அநாதையாக்கி பிரிந்து சென்றவள். அழகு தந்த கர்வத்தில் அனைத்தையும் உதறியவள். பெற்றெடுத்த மகனையும் உதறிவிட்டுச் சென்றுவிட்டாள். இனி அவனை அறிந்துதான் என்ன செய்யப் போகிறாள்..?
அவள் என்ன செய்ய நினைத்தாளென்பது அன்று மாலையில் அவனது அபார்ட்மெண்டில் வந்து சந்தித்த கபூர் சொல்லித் தெரிந்தது.
அன்று முழுவதும் அலுவலகத்தில் எரிந்து விழுந்து கொண்டிருந்தான். சந்தியாவே அவன் முகம் பார்க்கப் பயந்தாள். உறுமும் புலிபோல் தன் இருப்பிடம் திரும்பியவன் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது வாசல் அழைப்புமணி ஒலித்தது. கடுப்புடன் சென்று கதவு திறந்தான். கபூர் நின்று கொண்டிருந்தார். அப்படியே முகத்தில் அடித்து விரட்டலாமா..? என்று ஆத்திரம் பொங்கி வரும்போது அவர் உள்ளே வந்தார்.
"எதற்காக இங்கே வந்தீர்கள்..? நீங்கள் யார்..? நான் யார்..? என்னைத் தேடி நீங்கள் ஏன் வரவேண்டும்..?"
"பூங்கா உங்கள் நினைவாகவே இருக்கிறாள் ஆதித்தன்."
"காலம் கடந்த நினைவு. தேவையில்லாத நினைவு.."
"இருக்கலாம். ஆனால் பெற்றவளின் மனம் படும் வேதனையைச் சொல்ல வந்தேன். அவள் உங்களைப் பார்க்க விரும்புகிறாள்."
"எதற்காக..? வேதனைப்படுகிறார்களாமா..? யாரிடம் இந்தக் கதை..? அவங்க பட்ட வேதனையைத்தான் பார்ட்டியில் பார்த்தேனே.. என்ன சிரிப்பு..? சிரிப்பாய் சிரித்ததே உங்கள் குடும்பம்."
"அந்தச் சிரிப்பு இப்போது பூங்காவனத்திடம் இல்லை. இந்தப் பத்து நாள்களாய் அது தொலைந்துவிட்டது. அதை மீட்டுத் தர வேண்டியே நான் இங்கு வந்தேன்."
"எனக்குச் சிரித்துப் பழக்கமில்லை சார். என் சிரிப்பை எனக்கு இரண்டு வயதிருக்கும்போதே உங்கள் மனைவி திருடிச் சென்று விட்டார்கள். அதனால் வேறு எங்கேயாவது போய் உங்கள் மனைவிக்கு சிரிப்பை வாங்கிக் கொடுங்கள். இங்கே அது கிடைக்காது."
"கொதிப்பாய் பேசுகிறீர்கள் ஆதித்தன். நீங்கள் மனது வைத்தால் நடந்த தவறை சரி பண்ணலாம். உடைந்த சொந்தத்தை ஒட்ட வைக்கலாம்."
"சொந்தமா..? யாருக்கு யார் சொந்தம்..?"
"எங்களுக்கு நீங்கள் சொந்தம். எங்கள் மூத்த மகன் என்கிற சொந்தம்."
"என்னது..?" 
திகைத்து விட்டான் ஆதித்தன். இது என்ன புதுக்கதை..?
"ஏங்க.. என்ன விளையாடுகிறீர்களா..? யாருக்கு யார் மகன்..?"
"கோபப்பட வேண்டாம் ஆதித்தன். பூங்காவின் மகன் என் மகன்தான். நீங்கள் மட்டும் என்னை உங்கள் தகப்பனாக ஏற்றுக் கொண்டால் இந்த மேக்னா பவர்ஸ் லிமிடெட் போல பத்து மடங்கு பெரிய கம்பெனி ஆரம்பித்து அதற்கு உங்களை முதலாளி ஆக்குவேன். நீங்கள் தான் அந்தக் கம்பெனியின் எம்.டி. ! வந்து விடுங்கள் ஆதித்தன். உங்களுக்கென்று ஒரு தம்பி, தங்கை, உங்களைப் பெற்றதாய் எல்லோரும் இருக்கிறார்கள். காதலிக்கிறீர்களாமே. உங்கள் கல்யாணத்தை இந்த சென்னையே திரும்பிப் பார்ப்பது போல் நான் நடத்திக் காட்டுகிறேன். எங்களுடன் வந்து விடுங்கள்."
ஆதித்தன், 'பொறுமனமே பொறு' என்று சொல்லிக் கொண்டான். 
'இவர் வெறும் அம்புதான். எய்தது வேறு நபர்.
தனக்கு வெறும் ஜி.எம். பதவி போதுமென்றும், தனக்கு இப்போது இருக்கும் முகவரியே போதுமென்றும் எடுத்துக் கூறினான். புதுமுகவரி தேவையில்லையென்று தீர்மானமாய் கூறி அவரை வெளியேற்றினான். ஆனால் அடுத்த நாள் அவனைப் பெற்ற தாயே அவனைத் தேடி வந்தாள்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,31,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -21
அக்கினிப் பறவை -21
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy