அக்கினிப் பறவை -20

20 மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து அன்னமும் , பரமசிவமும் முதலில் ஆதித்தனின் சாப்பாட்டு விச...


20

மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து அன்னமும், பரமசிவமும் முதலில் ஆதித்தனின் சாப்பாட்டு விசயம் பேசினார்கள்.
"அதெல்லாம் எனக்குச் சிரமமில்லையப்பா.. கடையில் வேலை பார்க்கும் ஆடியபாதத்திற்கு இந்தப் பக்கம்தான் வீடு. அவர் மூன்று வேளையும் வீட்டுக்கு வந்து திரும்புகிறவர். அவரிடம் சாப்பாட்டைக் கொடுத்து விடுகிறேன். நீ ஜி.எம்மை பத்திரமாக பார்த்துக் கொள் போதும்."
அப்புறம் பரமசிவத்தின் குடும்பத்தைப் பற்றிப் பேசினார்கள். அடுத்து சந்தியாவின் அலுவலகத்தைப் பற்றிப் பேசினார்கள். அதற்கடுத்து நாட்டு நடப்பையும், விலைவாசியைப் பற்றியும் பேசினார்கள். எவ்வளவு நேரம் தான் பேச முடியும்..? பேசிப் பேசி ஓய்ந்த பின்னாலும் சந்தியா வந்த பாடில்லை. அப்போதுதான் அன்னத்தின் மனதில் அந்த எண்ணம் உதித்தது. சந்தியாவை ஆதித்தன் அழைத்தது உண்மையில் அலுவலக விசயம் பேசுவதற்காக மட்டும்தானா..?
சலனமேயில்லாத சந்தியாவின் மனதில் சஞ்சலத்தை கண்டதால்தான் அன்னம், ஆதித்தனைக் காண மருத்துவ மனைக்கு வந்தாள். படுத்தும் தூங்கிவிடும் சந்தியா கனவு கண்டு விழித்தாள். விழித்தவள் ஆதித்தனின் நிலையை எண்ணித் தவித்தாள். எந்த நேரத்தில்..? ஊரே உறங்கும் நள்ளிரவில். அது சாதாரண நிகழ்ச்சி அல்ல. 
மகளைப் பாதித்தவனை நேரில் காண வந்தாள். வந்த இடத்தில் அவனும் அவளிடம் மரியாதையுடன் நடந்து கொண்டான். அனுபவசாலியான அன்னம், ஆதித்தன் ஒரு யோக்கியன் என்பதை உணர்ந்து கொண்டாள். 
அவளுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவளுடைய மகளை மணப்பவன் பணத்தில் பெரியவனாக இருக்க வேண்டிய அவசிய மில்லை. குணத்தில் பெரியவனாக இருக்க வேண்டும். அவன் சிடுமூஞ்சியாய் இருந்தாலும் பாதகமில்லை. கொடுமைக்காரனாக மனதைக் கொலை செய்யும் பாதகனாக இருக்கக் கூடாது. ஆதித்தன் அவளது எதிர்பார்ப்புகளின் மொத்த உருவமாய் இருந்தான். அவனைப் பற்றி அவளுக்கு முழுதிருப்தி. இப்போது சந்தியா ஓர் முடிவு சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.
அன்னம் எழுந்து கொண்டாள். பரமசிவத்துடன் பேசிக் கொண்டே ஆதித்தனின் அறைவாசலை அடைந்தவள் பரமசிவத்தின் பக்கம் திரும்பி,
"அடடா, என் பையை நாம் பேசிக் கொண்டிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்து விட்டேனே.." என்றாள்.
அவள் வேண்டுமென்றேதான் மறந்தாற் போல் பையை அங்கேயே வைத்துவிட்டு வந்திருந்தாள். பரமசிவம் சென்றதும் ஆதித்தனின் அறைக்கதவைத் திறந்து,
"சந்தியா," என்று அழைத்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே ஆதித்தனும், சந்தியாவும் அலுவலக விசயம் பேசவில்லை. சந்தியாவின் முகத்தில் குற்ற உணர்ச்சி தெரிந்தது. ஆதித்தனின் முகத்தில் சங்கடம் தெரிந்தது. முதலில் இருவரையும் இயல்பாக்க வேண்டும் என்று முடிவெடுத்த அன்னம் பேசினாள்.
"எதுக்கும்மா பதட்டப்படறே..? உங்க ஜி.எம்கிட்ட பேசிக்கிட்டு இருந்தது ஆபிஸ் விசயமா..? இல்லை சொந்த விசயமா..?"
"அம்மா.. நான்.. நான்.. வந்து.. ஆதித்தனை."
சந்தியா பேச முடியாமல் தடுமாற ஆதித்தன் 'கணீரbன்ற குரலில்,
"அத்தை. நான் சந்தியாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன். எனக்குப் பெண் தருவீர்களா..?" என்று கேட்டான்.
'அத்தை' என்ற அவனது அழைப்பில் மனம் நெகிழ்ந்த அன்னம், சந்தியாவைப் பார்த்து,
"மாப்பிள்ளையைப் பார்த்தாயா சந்தியா. ஒளிவு, மறைவில்லாமல் எப்படி நேரடியாய் கேட்கிறார் பார்த்hயா..? எப்போதும் நிமிர்ந்து பேசுபவள் நீ. இன்றைக்கு ஏன் தடுமாற்றம்..? அம்மாவிடம் என்ன பயம்..?" என்று கேட்டாள்.
'மாப்பிள்ளை'என்ற வார்த்தையில் ஆதித்தனை அவள் அங்கீகரித்து விட்டதை புரிந்து கொண்ட சந்தியா 
"அம்மா..!" என்று ஆனந்தத்துடன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
"பைத்தியம்," என்று கடிந்துகொண்ட அன்னம் அவள் கண்களை துடைத்துவிட்டு
 "சந்தானம் கேட்டாள். 'சந்தியாவிற்கு எல்லாக் கடமையையும் செய்து முடித்து விட்டாயா' என்று. அவளிடம் வீறாப்பாய் பதில் சொல்லி விட்டாலும் என்மனதை அந்தக் கேள்வி அறுத்துக் கொண்டே இருந்தது. 'என் கண்மணிக்கு ஏற்ற கணவனை எங்கே போய் தேடுவேன்'னு மலைத்தேன். 'இதோ உன் கண் முன்னால் இருக்கிறேன் பார்'ன்னு தம்பி உன்னைப் பெண் கேட்டுவிட்டார்." என்று மகளைப் பார்த்து கூறியவள்,
"தம்பி, உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை என் மருமகனாய் இல்லை. மகனாகவே நினைக்கிறேன். நீங்கள் குணமாகி வந்ததும் தாத்தாவுடன் வந்து முறைப்படி கல்யாணம் பேசி முடியுங்கள். சந்தியாவிற்காக நகைகள், சீர்கள் தயாராகவே வைத்திருக்கிறேன். சந்தியா படித்திருக்கிறாள். உங்கள் தகுதிக்கு மற்ற பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டால் இன்னும் நிறைய செய்வார்கள். ஆனாலும் நான் அதில் பாதியையாவது கட்டாயம் செய்வேன்." என்று ஆதித்தனைப் பார்த்துக் கூறினாள்.
"அத்தை. என்ன பேச்சு இது. கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் சந்தியாவிற்கு அது ஈடாகுமா..? எனக்கு பெண் கொடுங்கள்ன்னுதான் கேட்டேன். 'பொன்' கொடுங்கள்ன்னு கேட்கவில்லை.." என்று கூறினான் ஆதித்தன்.
அதுவரை வந்து கதவருகே நின்று இந்த மருத்துவ மனையில் நிச்சயமான கல்யாணப் பேச்சை ''வென்று காதளவு நீண்ட வாயோடு கவனித்துக் கொண்டிருந்த பரமசிவம். ஆதித்தன், "பரமசிவம்," என்று அழைத்ததும்,
"என்னங்க சார்.." என்றான் அவசரமாக.
"ஹாஸ்பிடல் வாசலில் ஒரு ஆட்டோ பிடித்து அத்தையை வீட்டிற்கு அனுப்பி விட்டு நீ ஆபிஸ்போய் சந்தியாவிற்கு லீவ் சொல்லிவிடு. அத்தை.. சந்தியா என்னுடன் துணைக்கு இருக்கலாமில்லையா..?"
"ஏன் சார் வாழ்க்கைக்கே துணையா பொண்ணு தர்றேன்னு சொல்லிட்டாங்க. ஆஸ்பத்திரியில் துணைக்கு இருக்கிறதுக்கா மாட்டேன்னு சொல்லப் போறாங்க.." என்று பரமசிவம் கூற,
"நீ தேறிட்டே பரமசிவம். நல்லா வாய் பேச கத்துக் கிட்ட.." என்று ஆதித்தன் கூறிச் சிரித்தான்.
அன்னம், சந்தியாவைப் பார்த்து, "நோயாளியின் பக்கத்தில் யாருமில்லாதபோது இருக்க வேண்டியது மனிதாபிமானம். உன் கணவராகப் போகிறவரின் துணைக்கு இருக்க வேண்டியது உன் கடமை. இரும்மா.." என்று கூறியவள் ஆதித்தனிடம் விடைபெற்றுக் கொண்டு லேசான மனதுடன் வீட்டுக்குத் திரும்பினாள்.
ஆதித்தன் கண்களால் அழைத்ததை கவனியாதவள் போல் சந்தியா கள்ளச் சிரிப்புடன் வெளியேறி டாக்டரை அழைத்து வந்தாள். 
அடுத்த சில நிமிடங்களில் அவர் கொடுத்த மாத்திரையின் வேகத்தில் அவன் அயர்ந்து உறங்கினாலும் உறக்கத்திலும் சந்தியாவின் கரத்தை பிடித்த பிடியை விடாமல் தூங்கினான். தாயை அண்டியவாறு உறங்கும் குழந்தை உறக்கத்திலும் அன்னையின் விரலைப் பிடித்தவாறு தூங்குவது போல் இருந்தது அவன் செய்கை. புருவங்கள், சுளிக்க உறங்கியவனின் தோற்றம் ஒரு பிடிவாதக்காரக் குழந்தை போல் இருந்தது. கரத்தை விடுவித்துக் கொள்ள விருப்பமில்லாமல் அப்படியே அமர்ந்து கட்டிலின் விளிம்பினில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள் சந்தியா.
நடந்தவை எல்லாம் 'கனவா அல்லது நனவா' என்ற பிரமிப்பு தட்டிற்று அவளுக்கு. 
வேலைக்குச் சென்றாள். வெறுத்து ஒதுக்கியவனின் மேல் விருப்பம் கொண்டாள். அவளது விருப்பத்தை ஏற்றுக் கொண்டவனோ அவளையும் விரும்பினான். 'தடை சொல்வாளோ' என்று பயந்த அன்னையோ ஆசிர்வதித்தாள். எண்ணியது எல்லாம் ஈடேறுமா..? அவள் நெஞ்சம் மகிழ்ந்த வேளையில்,
'அது எப்படி பெண்ணே நினைத்தது எல்லாம் நிறைவேறிவிட்டால் நான் எதற்கு..?' என்று விதி நகைத்தது அவளது புறச்செவிகளில் விழவில்லை.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அக்கினிப் பறவை -20
அக்கினிப் பறவை -20
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s320/Agniparavai.jpg
https://1.bp.blogspot.com/-4RbVR3NwXfg/XkFtg4BZ6zI/AAAAAAAAAxk/sprd6v6QhnkEOV4tyVxeCu22v2I9euIowCPcBGAYYCw/s72-c/Agniparavai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/akkinipparavai-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy