ஊமையின் ராகம் -28,29

28 அன்று இரவு உமாவுடன் தணிகாசலத்தின் வீட்டிலேயே தங்கினான் சிவா.. இரவில் நெருங்கிய மனைவியை விலக்காமல் அணைத்து... அவள் விரும்பியதைக் கொ...


28

அன்று இரவு உமாவுடன் தணிகாசலத்தின் வீட்டிலேயே தங்கினான் சிவா.. இரவில் நெருங்கிய மனைவியை விலக்காமல் அணைத்து... அவள் விரும்பியதைக் கொடுத்தான்... ஒரு இணக்கமுள்ள கணவனாக... இரவு முழுவதும் அவளைப் பிரியாமல்.. தன் மார்பில் அவளது தலை தாங்கி.. உறங்க வைத்தான்...
காலையில் எழுந்து குளித்து உடைமாற்றி அவன் கிளம்புகையில் உமா கண்கலங்க.. அவளது கன்னத்தில் மெதுவாக விரல்களால் தட்டிச் சமாதானப் படுத்தினான்...
"ஏய்ய்... இப்படி நீ அழுமூஞ்சியாய் இருந்தால்... பிறக்கப்போகும் குழந்தையும் அழுமூஞ்சியாகத்தானே இருக்கும்..."
உமா அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டு புன்னகைக்க முயல... அவளுக்குப் பதில் அவன் புன்னகைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்...
"போய் வருகிறேன்..."
"சாயந்திரம் வந்து விடுவீங்கதானே..."
அவன் அதற்குப் பதில் சொல்லாமல்... கையாட்டி விடைபெற்றான்.. அன்று மாலை அவள் அவனுக்குப் போன் செய்தபோது.. மும்பைக்குப் போய்க் கொண்டிருப்பதாகப் பதில் வந்தது...
"மும்பைக்கா?"
"ஆமாம் உமா..."
"அங்கே என்ன வேலை அத்தான்...?"
"ஆபிஸ் விசயமாய்ப் போகிறேன்..."
"எப்போது வருவீங்க...?"
"தெரியவில்லை உமா..."
தெரியவில்லையா....? என்ன அத்தான் இது...?
"ஆறு மாதம் ஆகும் உமா..."
"ஆறு மாதமா....?"
அவளின் மலைப்பிற்கு அவனிடம் பதில் வரவில்லை.. அடுத்து உமா போன் பண்ணிய போதெல்லாம்... 'வேலையில் பிஸி' என்றான்... நலம் விசாரிக்கக் கூட நேரமில்லை என்றான்.. அவனைப் பற்றி ஏக்கத்திலும்... கவலையிலும் அவளிருக்கும் போதே... பிரசவ நாள் நெருங்கிவிட்டது...
ஒருநாள்... அதிகாலையில் உமாவிற்குப் பிரசவ வலி வந்துவிட.. வீடே பறந்து கொண்டு அவளை மருத்துவ மனைக்குக் கொண்டு சேர்த்தது... சற்று நேரத்திலேயே சிவாவின் மகன்... உமாவின் கர்ப்பப் பையை விட்டு வெளியே வந்து... உலகைத் தொட்டு விட்டான்...
"சௌதா... எனக்குப் பேரன் வந்துவிட்டான்..." என்று தணிகாசலம் பரவசமாய்க் கூற...
"அண்ணி... எனக்குப் பேரன் வந்துவிட்டான்..." என்று சௌதாமினி சுந்தரியிடம் ஆர்ப்பரித்தாள்...
சிவாவிற்கு செல்போனில் தகவல் சொன்னார்கள்... அன்று மாலையே மும்பையிலிருந்து.. விமானத்தில் பறந்து வந்து விட்டான் சிவா...
குழந்தையை அவன் கைகளில் அள்ளிக் கொண்ட போது.. வாடிய மலர்போல் கட்டிலில் களைத்துப் படுத்திருந்த உமா... கண் விழித்து அவனைப் பார்த்தாள்....
"அத்தான்..."
அவளது விழிநீர் அவளது ஏக்கத்தைக் கூறியது...
சிவா.. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழந்தையை முத்தமிடுவது போல் குனிந்து கொண்டான்... குழந்தையுடன் உமா வீடு திரும்பும் வரை... அவன் சென்னையில் இருந்தான்.. உமா வீடு திரும்பிய மறுநாள் அவன் மறுபடியும் மும்பைக்குக் கிளம்பிவிட்டான்...
"உங்களுக்குச் சென்னையில்தானே வேலை...?"
"ஆமாம்..."
"அப்புறம் எதற்காக.. மும்பையில் போய் இருக்கிறீங்க...?"
'உன்னிடமிருந்து விலகியிருக்கத்தான்!' மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சிவா...
"சொல்லுங்கள் அத்தான்...."
"என் கம்பெனியின் மும்பை பிரான்சிற்கு டெபுடேசன் போயிருக்கிறேன் உமா..."
"இப்போதுதான் போக வேண்டுமா...?"
சிவா... குழந்தையைக் கவனித்தான்... ரோஜாப்பூக்களின் குவியல் போல் அழகாக இருந்தான் அவனுடைய மகன்...
'இப்போது போயிருக்கத்தான் கூடாது...' சிவாவின் மனம் ஏக்கப் பெருமூச்சு விட்டது..
குழந்தையின் பிஞ்சு விரல்களில் கிடைக்கின்ற எல்லையற்ற இன்பத்தைத் துறந்து எதனிடமிருந்தோ தப்பிக்க முயல்கிறவனாய்... அவன் ஓடியிருக்க வேண்டாம்தானே...
ஆனால்.. அவனுடைய மகனின் பிஞ்சு விரல்களால் கூடச் சிவாவின் மனம் தேடும் அமைதியைக் கொடுக்க இயலவில்லையே...

29

உமா ஆளுயரக் கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டாள்.. குழந்தை பிறந்தவுடன்... சுந்தரியின் கவனிப்பிலும்... சரஸ்வதியின் சீராட்டலிலும்... அவளது ஒல்லியான உடலில் சதைப்படிப்பு தென்பட்டது... பூசினாற் போல் அழகாக இருந்தாள்... முகத்தில் தாயாகிவிட்ட பெருமிதமும்... மனம் நிறைந்த வாழ்க்கையை வாழும் பூரிப்பும் தென்பட்டது...
"உமா.. இன்னுமா ரெடியாகவில்லை....? நேரமாகி விட்டது பார்..." சுந்தரி அறை வாசலில் இருந்து குரல் கொடுத்தாள்.
"இதோ.. வந்திட்டேன்ம்மா..."
உமா அறையை விட்டு அவசரமாய் வெளியேறினாள்... குழந்தையை மடியில் போட்டு... அதற்குப் பட்டுச் சட்டை அணிவித்துக் கொண்டிருந்த சுந்தரி சிமிர்ந்து மகளைப் பார்த்தாள்...
மயில் கழுத்து நிறப் பட்டுப்புடவை உடுத்தி... அதற்கேற்றபடி ஜாக்கெட் அணிந்திருந்த உமா... வெள்ளைக் கல் ஜிமிக்கியும்... வெள்ளைக் கல் அட்டிகையும் அணிந்திருந்தாள்... அவளது முகத்தில் சுடர் விட்ட ஜ்வலிப்பு இன்னும் அவளுடைய அழகை அதிகப்படுத்திக் காட்டியது...
'என் கண்ணே பட்டு விடும் போல இருக்கே... என் மகள்.. துடைத்து வைத்து வெள்ளிக் குத்து விளக்கு போல... என்னமாய் ஜொலிக்கிறாள்...' சுந்தரி பெருமையுடன் மகளைப் பார்த்து.. சரஸ்வதியைத் திரும்பிப் பார்த்தாள்....
சுந்தரி நினைத்ததையே சரஸ்வதியும் நினைத்துக் கொண்டிருந்ததை அவளது பார்வை கூறியது.
"உமா.. குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு உட்காரு.. சுந்தரி.. நீ போய் இரண்டு மிளகாயையும்.. கற்பூரத்தையும் எடுத்துக் கொண்டு வா...."
சரஸ்வதி உத்தரவிட... உமாவின் மடியில் குழந்தையைப் படுக்க வைத்த சுந்தரி.. மாமியாரின் நோக்கம் புரிந்தவளாக.. படியிறங்கிச் சென்றாள்...
"என்ன செய்யப் போகிறீங்க, பாட்டி..."
"அதைப் பார்க்கத்தானே போகிறாய்..."
சுந்தரி... சரஸ்வதி கேட்டவைகளைக் கொண்டு வர... அதை வாங்கி உமாவிற்குத் திலுஷ்டி சுற்றினாள் சரஸ்வதி...
"இதை அடுப்பில் போட்டு விட்டு.. கற்பூரத்தி வாசலில் கொளுத்தி வை..."
"இது எதற்கு, பாட்டி..."
"உனக்கும்.. உன் பிள்ளைக்கும் கண்படாமல் இருக்கத்தான்..."
"யார் கண் வைக்கப் போகிறார்களாம்...?"
"எல்லோரும்தான் கண் வைப்பார்கள்... ஊர் கண்ணில் எந்தக் கண் பொல்லாத கண்ணாய் இருக்குமென்று யாருக்குத் தெரியும்...?"
"ஆமாம் பாட்டி... ஊரில் இருக்கிறவங்களுக்கு என் மேல் கண் போடுவதுதான் வேலையா...?"
"சும்மா பகடி பேசாதே... உமா.. இன்னைக்குக் குழந்தை பிறந்து முப்பது நாள்கள் முடிந்துவிட்டன... அவனுக்குப் பெயர் வைத்து... நீ வீடு கூட வேண்டும்... விருந்திற்கு வருகிறவர்கள் கண் கொள்ளிக் கண்ணாய் இருந்து விட்டால் என்ன செய்கிறது...?"
"இதொல்லாம் ரொம்ப ஓவர் பாட்டி.... இப்படிப் பேசினால்.. நீங்க கொடுக்கும் விருந்திற்கு யார் வருவாங்க...?"
"வருகிறவங்க வருவாங்க... நீ வேலையைப்பார்..."
சற்று நேரத்தில்.. வீடு நிறைய உறவினர் கூட்டம் வந்து நிறைந்து விட்டது... சுந்தரி வந்தவர்களை வர வேற்றபடி... வாசலையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சரஸ்வரியின் அருகே வந்து ரகசியக் குரலில்... கவலைப்பட்டாள்...
"என்ன அத்தை... இன்னும் சௌதாவையும் அவள் வீட்டுக்காரரையும் காணோம்... அதைவிட முக்கியமாய் மாப்பிள்ளையைக் காணோமே..."
"வந்துவிடுவாங்க.. கவலைப் படாதே..."
மருமகளைச் சமாதானப் படுத்தினாலும் சரஸ்வதியின் வயிற்றில் பயப்பந்து உருளத்தான் செய்தது...
'ஏன் இன்னும் அவங்க வரவில்லை... வீடுபூரா வந்திருக்கும் விருந்தாளிகள் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்க ஆரம்பித்து விடுவாங்களே...'
சரஸ்வதி நினைத்து முடிக்கு முன்னால் அவள் அலுகில் வந்தாள் அம்புஜம்...
"என்ன சரஸ்வதி... எப்படியிருக்கிற...?"
தான் எப்படியிருக்கிறோம் என்பதை விலாவாரியாய் விளக்காமல் இனி அம்புஜத்திடமிருந்து தப்ப முடியாது என்று சரஸ்வதிக்குப் புரிந்துவிட்டது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -28,29
ஊமையின் ராகம் -28,29
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-2829.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-2829.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy