உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -28

28 நதியோரப் பாடல்களை... நாயகனே..! நான் மறப்பேனா.. ? "உன் அம்மா.. உண்மையில் யாரை விரும்பினாங்கன்னு உனக்கு இதுவரை தெரியாதில்ல....


28
நதியோரப் பாடல்களை...
நாயகனே..! நான் மறப்பேனா..?

"உன் அம்மா.. உண்மையில் யாரை விரும்பினாங்கன்னு உனக்கு இதுவரை தெரியாதில்ல..? இப்பத் தெரிஞ்சுக்க.. இப்ப நீ பார்த்தியே.. வாழவும் முடியாம.. சாகவும் முடியாம ஒரு ஜீவன் அல்லாடிக்கிட்டு இருக்குதே.. இந்த வரதராஜ மாமாவைத்தான் அவங்க காதலிச்சாங்க.. உயிருக்குயிராய் காதலிச்சாங்க.. காதலில தோத்துப் போனா பித்துப் பிடிச்சதைப் போல ஊர்.. ஊரா தேவதாஸ் மாதிரி சுற்றியலையனும்னு சட்டம் எதுவும் இருக்கா அர்ச்சனா..? இங்கே மாமா அலைகிறாரே.. அவரோட அத்தனை அடையாளங்களையும் தொலைத்துட்டு.. அவரையே நம்பியிருக்கிற பெத்த தாயை மறந்துட்டு.. பத்மா அத்தையை மறக்க முடியாம தன் போக்கில அலைகிறாரே.. ஏன்..? அந்த அளவுக்கு பத்மா அத்தைமேல அவர் உயிரையே வைச்சிருந்தார்.."
"கதிர்..."
"அவராலே சாக முடியாது.. ஏன்னா சாவுக்குப் பின்னாலே பத்மா அத்தையின் நினைவுகள் அவர் மனசில் இருக்குமோ.. இருக்காதோங்கிற பயம்.. வாழவும் முடியல.. ஏன்னா அத்தை அவரோட இல்ல.. அவங்க உன் அப்பாவோட மனைவி.. உனக்கு அம்மா.. அவங்க மேலே வரதாராஜ மாமாவுக்கு என்ன உரிமையிருக்கு..?"
"கதிர்..."
"அத்தை அவங்க கூடப் பிறந்த அண்ணனை விட என் அப்பாமேல் பாசமா இருந்தாங்க.. அப்பாவும் அப்படித்தான்.. அத்தையோட அக்காமேல பாசமா இருக்கிறதைவிட பத்மா அத்தை மேலேதான் உயிரா இருப்பார்.. ஏன்னா.. மனசார.. வாயார.. அண்ணான்னு அத்தை மட்டும்தான் அப்பாகிட்ட சொந்தம் கொண்டாடு வாங்க.. அப்பா அவர் குடும்பத்துக்கு ஒற்றை மகனாம். கூடப் பிறந்த தங்கை இல்லாதவரு.. அந்தத் தங்கையா உன் அம்மாவை மட்டும்தான் நினைச்சிருக்கார்.. அந்த நினைப்புத்தான் இப்ப அவரை படுத்த படுக்கையாய் ஆக்கியிருக்கு அர்ச்சனா.."
"கதிர்..."
"அத்தையின் காதலுக்காக அப்பாவும்.. தாத்தாவும் மட்டும்தான் பேசியிருக்காங்க.. அப்பா போராடியிருக்கிறார்.. ஆனா அத்தை விரும்பினது என் அம்மாவின் தம்பியைத் தானே.. அதனாலேயே உன் சொந்த மச்சினனுக்காக என் குடும்பத்தை அழிக்கப் பார்க்கறியான்னு அத்தையோட அப்பா அடிக்க வந்திருக்கிறார்.."
"அவர் உங்க அப்பாவுக்கு சித்தப்பாதானே கதிர்.."
"சித்தப்பாதான்.. என் அப்பா அவருக்கு சொந்த அண்ணனின் மகன்தான்.. ஆனா சொந்தம் அவருக்கு வேண்டியிருக்கலை அர்ச்சனா.. அவருக்குத் தேவைப் பட்டதெல்லாம் உன் அப்பாவிடம் இருக்கும் பணம் ... அதனால் அவர் குடும்பத்திற்கு கிடைக்கப் போகும் புது வாழ்வு.. அதுக்காக உன் அம்மாவை அவங்க நிர்பந்தம் பண்ணினாங்க.."
"அம்மா முடியாதுன்னு சொல்லாமில்ல..?"
"சொல்லலைன்னா நினைக்கிற..? அத்தை ஒன்னும் வரதராஜ மாமாவுக்கு கொடுமை பண்ணிடலை அர்ச்சனா.. சும்மாவா கூடப்பிறந்த தம்பி நடைபிணமாய் அலையும் போது அதுக்குக் காரணமான உன் அம்மா மேலே என் அம்மா பாசத்தைப் பொழியறாங்க..? எங்களுக்கெல்லாம் தெரியும் அர்ச்சனா.. அத்தை மனசில எத்தனை ரணமிருக்குன்னு.."
"அதுவும் தப்புத்தானே கதிர்..? கல்யாணம் ஆன பின்னாலே ஹஸ்பெண்டை மட்டும் நினைக்காம காதலிச்சவரை நினைக்கக் கூடாதில்லையா..? இது அப்பாவுக்கு அம்மா செய்கிற அநியாயம் கதிர்.."
"நினைச்சேன்.. என்னடா.. இன்னும் உன் அப்பாவுக்கு சாதகமா நீ ஒரு பாயிண்டைக் கூடத் தேடிப் பிடிக்கலைன்னு.. அத்தை என்ன செஞ்சாங்க..? வரதராஜ மாமா பேச வந்தப்ப அவர்கூடப் பேசினாங்களா..? அவரைத் தேடிப் போய் பார்த்தாங்களா..? இல்லை அவரைப் பற்றித்தான் கவலைப் பட்டாங்களா..? இல்லையே.. இதோ இப்பக்கூட அப்பாவைப் பத்தி விசாரிக்கிறாங்க.. எங்க எல்லோரையும் பத்தி விசாரிக்கிறாங்க.. ஆனா.. ஒரு வார்த்தை.. ஒரேயொரு வார்த்தை.. வரதராஜ மாமாவைப் பத்தி அவங்க விசாரிச்சாங்களா..? அவங்க மனசு தங்கம் அர்ச்சனா.. அதை உன் அப்பாவாலேயும் புரிஞ்சுக்க முடியாது.. உன்னாலேயும் புரிஞ்சுக்க முடியாது.."
"அப்படியில்லை கதிர்.."
அர்ச்சனாவின் கண்களில் நீர் தளும்பி விட்டது..
அவளும்தான் என்ன செய்வாள்..? கடத்தி வந்த தாலி கட்டியிருந்தாலும் அதைச் செய்தது அவளுடைய பாசமான அப்பாவாகிற்றே.. அவரை வில்லனாக நினைக்க அவள் மனம் ஒப்பவில்லையே...
"அத்தையோட அக்காவான பெரியத்தைக்கு ஜாதகத்திலே ஏதோ கோளாறு.. கல்யாணம் தள்ளிப் போய்க்கிட்டு இருந்துச்சு.. அவங்களும் முதிர்கன்னியா அவங்களுக்கும் ஒரு விடிவு வராதான்னு காத்துக்கிட்டு இருந்தாங்க.. பணத்தை வாரியிறைச்சிருந்தா பெரியத்தையோட ஜாதகத்தை கண்டுக்காம அவங்க கழுத்தில தாலியைக் கட்ட மாப்பிள்ளை கிடைச்சிருப்பார்.. ஆனா.. பத்மாத்தையோட பிறந்த வீட்டில வசதியில்ல..."
"உங்க குடும்பம் வசதியானது தானே கதிர்.."
"ஆமாம்.. எங்க தாத்தா அந்தக் காலத்திலேயே சொந்தமா தொழிற்சாலை ஆரம்பிக்கனும்னு கும்பகோணத்தை விட்டுட்டு ஓசூர் பக்கம் வந்திட்டார்.. எங்க குடும்பம் செழிப்பா இருந்தது.. அத்தையின் பிறந்த வீடு வறட்சியாத் தான் இருந்தது.. எங்களாலே அத்தையின் குடும்பத்துக்கு செய்ய முடிந்த அளவு உதவியை நாங்க செய்தோம்தான்.. ஆனா கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்த உன் அப்பாவின் வசதிக்கு முன்னாலே எங்கவசதி ஒரு வசதியேயில்ல அர்ச்சனா.."
"ஓ..."
"உன் அம்மாவின் கூடப் பிறந்த அண்ணன்கள் கஷ்ட திசையில் இருந்தாங்க.. உன் அப்பா அவங்களுக்குச் சொந்தமா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்துக் கொடுத்தார்.. ஆளுக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்தார்.. அடமானத்தில் இருந்த குடும்ப நிலங்களை மீட்டு அத்தையின் அப்பாம்மா கையில கொடுத்தார்.. கல்யாணம் ஆகுமா.. ஆகாதான்னு தெரியாம வீட்டிலே முடங்கிக் கிடந்த அத்தையோட அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து.. லட்சக்கணக்கில் சீர் செய்து.. அவங்க பேரில வீடு வாங்கிக் கொடுத்து.. கல்யாணமும் செய்து கொடுத்தார்.. இப்பச் சொல்லு.. இத்தனையும் செய்த உன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அத்தையை அவங்க குடும்பம் ஃபோர்ஸ் பண்ணுமா.. பண்ணாதா..?"
"பண்ணுவாங்கதான்..."
"குடும்பமே விசப் பாட்டிலை... கையில் வைத்துக்கிட்டு உட்கார்ந்துட்டாங்க... அவங்க உண்மையாகவே அதுக்கு தயாராத்தான் இருந்தாங்க அர்ச்சனா.. கரையேற வாய்ப்புக் கிடைச்சிருக்கு அது கை நழுவிப் போனா யாராலே தாங்கிக்க முடியும்..?"
"முடியாதுதான்..."
"எங்க அப்பாம்மா அத்தையை வீட்டைவிட்டு வெளியில் வரச் சொன்னாங்க.. கோவிலில் வைத்து வரதராஜ மாமாவுக்கும் அவங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சுரலாம்ன்னு மன்றாடினாங்க.. அத்தை மறுத்துட்டாங்க.. என் குடும்பம் கரையேற வாய்ப்புக் கிடைக்கிறப்ப நான் ஒருத்தி மட்டும் துன்பப் பட்டால் பட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க.. அவங்க குடும்பம் வாழனும்கிறதுக்காக.. அவங்க மனசுக்குள்ள இருந்த காதலை அவங்க சாகடிச்சுக்கிட்டாங்க.. எங்க வரதராஜ மாமாவை உயிரோட சாகடிச்சாங்க.. அவங்க பண்ணினது தியாகம் அர்ச்சனா.. உயிர் தியாகம்.. அவங்க உயிருக்குயிராய் காதலித்த காதலை அவங்க தியாகம் பண்ணினாங்க.."
"ஆனா கதிர்.. இதையெல்லாம் செய்தது அம்மாவின் குடும்பம்தானே.. அப்பாமேலே என்ன தப்பிருக்கு கதிர்..? அவர் ஆசைப்பட்ட பெண்ணை அடைய என்ன செய்யனுமோ அதைத்தானே அவர் செய்தார்..?"
"இப்பவும் உன் வாயில் இருந்து உன் அம்மா மேல உன் அப்பா ஆசை வைச்சார்ன்னுதானே வருது..? காதல் வைச்சார்ன்னு உன்னாலே சொல்ல முடியலையே.. அவர் ஆசைப்பட்ட பொருளாய் உன் அம்மாவை நினைச்சார்.. அதுக்கு விலையா அவங்க குடும்ப கஷ்டத்தை தீர்த்து வைத்தார்.. அவரைப் பொறுத்த வரை.. உன் அம்மா விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒரு அடிமை..."
"அதிகமா பேசறிங்க கதிர்.. உங்க மாமாவை என் அம்மா கல்யாணம் பண்ணிக்கலைங்கிறதுக்காக என் அப்பாமேலே பழி போடறிங்க.. அவருக்கு அம்மாவின் காதலைப் பற்றி என்ன தெரியும்..?"
"தெரியும்.." நிதானமாகச் சொன்னான் கதிர்வேலன்..
"உன் அப்பாவுக்கு உன் அம்மாவின் காதலைப் பற்றி ஆதியோடு அந்தமாக அத்தனை விவரங்களும் தெரியும்.. அவர் ஒரு ஜெண்டில் மேனா இருப்பார்.. அத்தையோட காதலைப் பற்றிச் சொன்னா விலகிடுவார்ன்னு நினைச்சுத்தான் என் அப்பா உன் அப்பாவின் நெருங்கின நண்பரான திருநாவுக்கரசை தேடிப் போனார்.."
"பெரியப்பாவையா சொல்றீங்க..."
"அவரைத்தான் சொல்கிறேன்.. உன் கண்ணா அண்ணனின் அப்பாவைத்தான் சொல்கிறேன்.. அப்பாகூட அம்மாவும்.. நானும் போயிருந்தோம்.. அவர் வீட்டில்தான் போய் பார்த்துப் பேசினோம்.. அவரோட மனைவி எங்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாங்க.. அப்ப நான் சின்னப்பையன்.. உன் கண்ணா அண்ணனும் அங்கிருந்தான்.. அவனும் நானும் விளையாட்டுக்களைப் பற்றிய பேசின ஞாபகம் இன்னும் என்மனசில் பசுமையா இருக்கு அர்ச்சனா.."
'வந்து போயிருக்கிறது வெறும் உறவுக்காரன் மட்டுமில்லை அர்ச்சனா.. அவன் உன் அம்மாவின் கடந்த கால வாழ்க்கைச் சரித்திரத்தின் பார்வையாளன்.. ஒரு வகையில் பாதிக்கப்பட்டவன்..'
கதிர்வேலனைப் பற்றி அர்ச்சனா சொன்னபோது கண்ணன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்தன...
"அப்பாவும்.. அம்மாவும் எடுத்துச் சொன்னாங்க.. உன் அம்மாவின் நிலையைப் பற்றி உருக்கமா எடுத்துச் சொன்னாங்க.. திருநாவுக்கரசும் அவரோட மனைவியும் பொறுமையா கேட்டுக்கிட்டாங்க.. உன் அப்பாவையும் வரச் சொன்னாங்க.. உன் அப்பாவிடம் திருநாவுக்கரசு பேசினப்ப.. இதெல்லாம் எனக்குத் தெரியும்.. இதுக்கு மேலேயே தெரியும்.. அதுக்கு என்ன இப்பன்னு உன் அப்பா கேட்டார்..."
"கதிர்.." அர்ச்சனாவின் குரல் நடுங்கியது..
"உனக்கு என் நட்பு முக்கியமா.. இவங்க சொல்கிற நியாயம் முக்கியமான்னு உன் அப்பா கேட்டார்.. உன் நட்புத்தான் முக்கியம்ன்னு திருநாவுக்கரசு சொல்லிட்டார்.. அப்ப இவங்களை வெளியே அனுப்புன்னு உன் அப்பா சொன்னார்.. தயவு செய்து வெளியே போயிடுங்க.. எங்களுக்கு பிரகாசம்தான் முக்கியம்.. அவன் செய்கிறது எதுவா இருந்தாலும் கேள்வி கேட்காம நாங்க அதை ஏத்துக்குவோம்ன்னு திருநாவுக்கரசு சொன்னார்.. அதுக்கு அவர் மனைவி மறுத்துப் பேசலை.. கண்ணன் மட்டும் அசையாமல் நின்னான்..."


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -28
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -28
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy