உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -20

20 எதையெதையோ பேச நினைத்தேன்.. உனைக் கண்டதும்.. எதையும் பேச மறந்தேன்... பூஜையறையில் கண்மூடி அமர்ந்திருந்தாள் பத்மா.. அவள் முன்னா...


20
எதையெதையோ பேச நினைத்தேன்..
உனைக் கண்டதும்..
எதையும் பேச மறந்தேன்...

பூஜையறையில் கண்மூடி அமர்ந்திருந்தாள் பத்மா.. அவள் முன்னால் குத்து விளக்கு ஐந்து திரிகளுடன் சுடர் விட்டு ஒளி பரப்பிக் கொண்டிருந்தது.. வீணையின் கம்பிகளை மெதுவாக வருடிய பத்மாவின் விரல்களில் இருந்து புறப்பட்ட நாதம் அந்த வீட்டில் சூழ்ந்தது..
பிரகாசம் இல்லாத தருணங்களில் மட்டுமே பத்மா வீணையைத் தொடுவாள்.. இதையும் வேலை செய்பவர்கள் கவனித்து வைத்திருப்பார்கள் என்ற நினைவில் சொந்த வீட்டில் கூட சுதந்திரமாக இருக்க முடியாதா என்று மனதிற்குள் வெகுண்டாள் அர்ச்சனா..
"வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்..
             வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..
    கொள்ளையின்பம் குலவு கவிதை
             கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்..
    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே..
             ஓதும் வேதத்தின் நின்றொளிர்வாள்..
    கள்ளமற்ற முனிவர் கூறும்..
             கருணை வாசத்துப் பொருளாவாள்.."
பத்மாவின் பாட்டைக் கேட்டு அந்தக் கலைவாணியே வீணையுடன் எழுந்து வந்து விடுவாள் போல அர்ச்சனாவுக்கு இருந்தது.. அந்த அளவுக்கு உள்ளம் உருகி பாடிக் கொண்டிருந்தாள் பத்மா..
"மலரின் மேவு திருவே- உன்மேல்
             மையல் பொங்கி நின்றேன்..
    நிலவு செய்யும் முகமும் - காண்பார்
             நினைவழிக்கும் விழியும்..
    கலகலவென்ற மொழியும் - தெய்வக்
             களி துலங்க நகையும்
    இலகு செல்வ வடிவும் - கண்டுன்
             இன்பம் வேண்டுகின்றேன்..."
திருமகள் துதியைப் பாடிக் கொண்டிருந்த பத்மாவின் பாடலை இடையூறு செய்ய மனமில்லாமல் அன்னையின் அருகே அமர்ந்தாள் அர்ச்சனா.. அவள் வந்ததைக்கூட உணராமல் பாடலில் லயித்திருந்தாள் பத்மா..
"யாதுமாகி நின்றாய் காளி..!
             எங்கும் நீ நிறைந்தாய்.."
பாரதியின் பாடல்களை பாடி முடித்த பத்மா கண் திறந்து பார்த்த போது அர்ச்சனா கை குவித்து கண் மூடியிருந்தாள்.. பத்மா தீபாதரணை காட்ட ஆரம்பித்தாள்.. பூஜை மணி யொலியில் இமை திறந்து கண்பார்த்த அர்ச்சனாவிடம் தீபாதரணைத் தட்டை நீட்டினாள்.. கற்பூர ஒளியை கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள் அர்ச்சனா..
மௌனமாக பூஜையறையை விட்டு வெளியேறிய பத்மா லைப்ரரியின் பக்கம் செல்ல..
'இப்படியிருந்தா வேலைக்காரங்க ஏன் அப்படிப் பேச மாட்டாங்க..?' என்று நொந்து போனாள் அர்ச்சனா..
ஒரு புத்தகத்தை உருவிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்த பத்மா அதைப் புரட்டாமல் தொலை தூரத்தில் வெறித்துப் பார்க்க ஆரம்பித்ததில் கவலைக்கு ஆளானாள் அர்ச்சனா..
'இந்த அம்மா மனசில என்னதான் இருக்கு..?'
"அம்மா.."
பத்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து தோள் தொட்டு அசைத்தாள்...
"ம்ம்ம்..."
அவளின் தனிமையைக் கலைத்ததில் எழுந்த அதிருப்தியை முணுமுணுப்பாக வெளிப்படுத்தினாள் பத்மா...
"நான் காலேஜீக்குப் போகலை.."
"அதுக்கென்ன..?"
"ஏன்னு கேட்டிங்களா..?"
"உன்னை நான் கேள்வி கேட்க முடியுமா..? நீ யாரோட பொண்ணு..! உன் அப்பாவோட பொண்ணாச்சே.. அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட கதிர் வேலனையே கேள்வி கேட்டு துரத்தியடிச்ச பெண்ணாச்சே நீ.."
பத்மா மீண்டும் மலையேறி விட்டாள் என்பதை புரிந்து கொண்ட அர்ச்சனா போச்சுடா என்று மானசீகமாக தலையில் கை வைத்தாள்..
முதல்நாள் இரவுதான் வன்பாடு பட்டு அவளை மலையிறக்கி விட்டாள்.. காலையில் மறுபடியும் மலையேறி விட்டளென்றால் என்னதான் செய்வது..?
"கண்ணா அண்ணனைப் பார்க்கப் போயிருந்தேன்ம்மா.."
"அதையேன் என்னிடம் சொல்ற..? அவன் உன் அப்பாவுக்கு வேண்டப்பட்ட நண்பரோட மகன்.. அதை உன் அப்பாவிடம் சொல்லு.. குளிர்ந்து போயிருவார்.."
"இல்லைம்மா.. இதை அப்பாவிடம் சொல்ல முடியாது.. ஏன்னா நான் அண்ணனைப் பார்க்கப் போனது கதிர் அத்தானுக்கு உதவி செய்கிறது சம்பந்தமாத்தான்.."
"என்ன..?"
பத்மாவின் விழிகளில் தெரிந்த உயிர்ப்பில் மனம் நனைந்தாள் அர்ச்சனா.. கதிர்வேலனின் மீது இத்தனை பாசமா என்றபொறாமை மனதில் வந்தாலும் அதை 'சூ.. சூ' வென ஓட்டி விட்டு.. கிடைத்த வாய்ப்பை இறுக்கிப் பற்றிக் கொண்டாள் அர்ச்சனா..
முதல்நாள் இரவுதான் தாய்க்கும்.. மகளுக்கும் இடையே இருந்த உறவு புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.. அதில் மீண்டும் விரிசல் வந்து விடக்கூடாது.. அதில் மிகக் கவனமாக இருந்தாள் அர்ச்சனா..
"கண்ணனால் கதிர்வேலனுக்கு உதவி செய்ய முடியுமா..?" பத்மா பரபரத்தாள்...
"முடியும்ன்னு அண்ணா சொல்கிறார்ம்மா.."
"ஆனா.. இதுக்கு கதிர் ஒப்புக்கனுமே.."
பத்மா மனம் சோர்ந்தாள்.. அர்ச்சனா அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள்.. கண்ணனின் திட்டத்தைப் பற்றி விவரித்தாள்...
கண்ணன் சொன்னது என்பதினால் விட்டேற்றியாக கேட்டுக் கொண்டிருந்த பத்மாவின் முகத்தில் மெல்ல.. மெல்ல வெளிச்சம் பரவியது..
"இது வேலைக்காகும்ன்னு தான் தோணுது அர்ச்சனா.." என்றாள்..
"பின்னே..? அண்ணன் மூளையைக் கசக்கி கண்டு பிடிச்ச திட்டமாச்சே.. வேலைக்கு ஆகாம இருக்குமா..?" அர்ச்சனா பதில் சொன்னாள்...
"ஆனா ஓசூருக்கு நான் போகனும்னு அண்ணன் சொல்கிறாரே.. நான் எப்படிம்மா அங்கே தனியாப் போக முடியும்..?"
"முடியாதுதான்.." பத்மா மீண்டும் சோர்ந்து போனாள்..
"ஏம்மா.. இப்படிச் செய்தா என்ன..?"
அப்போதுதான் யோசித்ததைப் போலக் கேட்டு வைத்தாள் அர்ச்சனா..
"எப்படிச் செய்தா என்னன்னு கேட்கிற..?"
"நான்தான் தனியாப் போகக் கூடாது.. துணைக்கு நீங்களும் வந்தா..?" அர்ச்சனா கண்சிமிட்டியதில் அவளின் உற்சாகம் வெளிப்பட்டது..
"அர்ச்சனா.." பத்மாவின் குரல் விம்மியது..
அவள் கைநீட்டி மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.. சில நாள்கள் மகளிடம் பாராமுகமாக இருந்த குற்ற உணர்ச்சி அவள் மனதைப் போட்டு அழுத்தியது...
"அம்மாவுக்காக.. என்னவெல்லாம் யோசிக்கறடா கண்ணம்மா.." குரல் கம்ம பேசினாள்..
"அம்மா உன்ன ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேனில்ல..?"
மகளின் முகத்தை கையில் ஏந்தி விழிகளில் நீர் சுரக்க பத்மா கேட்டபோது அர்ச்சனாவும் தேம்பி அழுதாள்..
"அம்மா.."
உதடுகள் பிதுங்க.. சிறு குழந்தை போல அவள் தாயின் முகம் புதைத்து அழுதபோது பத்மாவும் அவளின் தலைமீது கவிழ்ந்து அழுதாள்.. எதற்காக கண்ணீர் விடுகிறோம் என்று தெரியாமலே இருவரும் அழுது முடித்தபோது அவர்களின் மனதிலிருந்த பாரம் சுத்தமாக மறைந்து விட்டிருந்தது.. மனம் நிர்மலமாக இருந்தது..
"நாம சேர்ந்தே போகலாம் அர்ச்சனா.. ஆனா அதுக்கு உன் அப்பா பெர்மிசன் கொடுப்பாரா..?"
அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.. இடையினில் வந்த மனத்தாங்கலையெல்லாம் மறந்து பழைய அம்மாவாக பத்மா பேச ஆரம்பித்ததும் அர்ச்சனாவின் மனதில் இதம் பரவியது..
கானகத்தில் தொலைந்து போனவள் மீண்டு வந்ததைப் போல அவள் உணர்ந்தாள்..
"நிச்சயமா மாட்டார்.."
"பின்னே.. எந்த தைரியத்தில நாம ஓசுருக்குப் போகலாம்ன்னு நீ சொன்ன..?"
"ஓசுருக்குப் போகிறோம்ன்னு சொன்னாத்தானே அப்பா பெர்மிசன் கொடுக்க மாட்டார்..? வொகேனக் கல்லுக்குப் போகிறோம்ன்னு சொன்னா பெர்மிசன் கொடுக்க மாட்டாரா என்ன..? அந்த தைரியத்தில தான் சொன்னேன்ம்மா..?" சமர்த்தாகப் பதில் சொன்னாள் அர்ச்சனா..
"அர்ச்சனா என் சமத்துக்குட்டி.." பத்மா மகளைக் கொஞ்சினாள்..
"அதுசரி.. வொகேனக்கல்லுக்கு என்ன கதையைச் சொல்லப் போகிற..?" அவளின் அடுத்த கவலை ஆரம்பமானது..
"எனக்கு ரொம்பவே தலை வலிக்குதும்மா.. டாக்டர் கிட்டப் போனா அவர் ஏதாச்சும் சில்லுன்னு இருக்கிற பிரதேசத்தில ரெஸ்ட் எடுத்துட்டு வான்னு சொல்றாரு.."
"அடக்கடவுளே..! என் பொண்ணு மேல என் கோபத்தைக் காட்டி அவ தலைவலிக்கிறதைப் பார்க்காம விட்டுட்டேனே.. ஏண்டாம்மா.. எப்போ தலை வலிக்க ஆரம்பிச்சது.? அம்மாகிட்ட ஏண்டா சொல்லலை..? எந்த டாக்டர் கிட்டடா காண்பிச்ச.. வா.. அவர்கிட்டயே என் பொண்ணுக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு விவரம் கேட்கிறேன்..."
பத்மா பதறி எழுந்திருக்க முனைந்தாள்.. அவள் தோள் பற்றி அழுத்தி சோபாவில் உட்கார வைத்தாள் அர்ச்சனா..
"ஹலோ..! இப்ப யாருக்கு என்ன ஆச்சுன்னு இந்தப் பறப்பு பறக்கறிங்க..?"
"உனக்குத் தலைவலி அர்ச்சனா..?"
"அப்படின்னு சொல்லத்தான் போறேன்.. மனசிலாயி..?" 
அர்ச்சனா கண்களைச் சிமிட்ட.. விழி விரித்தாள் பத்மா..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -20
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -20
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy