உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -19

19 கொஞ்சும் மைனாக்களின்... கீச்சு மொழியில் - உன் பேச்சைக் கேட்டது மனம்.. கண்ணனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.. அவன் முன்...


19
கொஞ்சும் மைனாக்களின்...
கீச்சு மொழியில் - உன்
பேச்சைக் கேட்டது மனம்..

கண்ணனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.. அவன் முன்னால் அமர்ந்திருந்த அர்ச்சனா வாயை இறுகி மூடி.. அதன் மேல் ஆள்காட்டி விரலை அழுந்தப் பதித்திருந்தாள்..
'சின்னக் குழந்தைதான்..' கண்ணனின் மனம் கனிந்தது...
அந்தக் குழந்தைத்தனம் மிகுந்த தங்கைக்காக அவன் எதையும் செய்வானே...
"நல்லாக் கேட்டுக்க அர்ச்சனா.." அவன் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்..
"சரிண்ணா.." அர்ச்சனா உதட்டின் மீதிருந்த விரலை எடுத்தாள்...
"கதிர்வேலனோட வீட்டில் நீ இருக்கிறப்ப உன்னைப் பார்க்க வருகிறதுக்கு என் பிரண்டோட கோ-பிரதருக்கு ஒரு சாக்கு வேணும்ல்ல..?"
"ஆமாமில்ல.." அர்ச்சனாவுக்கு இப்போதுதான் விவரம் புரிந்தது..
"அண்ணா.." விழிகளை அகலவிரித்தவளின் தலையில் ஒரு குட்டை வைத்து..
"இப்ப முழி.." என்றான் கண்ணன்..
அவர்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.. அதன்படி அர்ச்சனா ஓசூருக்குக் கிளம்பிச் செல்ல வேண்டும்.. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கதிர்வேலனின் வீட்டில் தங்க வேண்டும்.. அங்கே அவள் தங்கியிருக்கும் நாள்களில் கண்ணனின் நண்பனின் சகலை அர்ச்சனாவைத் தேடி வந்து பார்த்து.. கண்ணனுக்கு ஒரு பொருளை அனுப்பவிருப்பதாக கதை பிணைய வேண்டும்.. அப்படி அவன் வரும்போது அர்ச்சனா வெகு இயல்பாக கதிர்வேலனுக்கும் அவனுக்கும் அறிமுகத்தை உண்டாக்க வேண்டும்.. அந்த அறிமுகப் படலத்தின் போது அந்த சகலை கதிர்வேலனிடம் பேசிப் பழகி.. தொழிலைப் பற்றி விசாரிக்க வேண்டும்.. கதிர்வேலன் பதில் சொல்லும் போது போலியாக வியந்து அந்தத் தொழிற்சாலையா..? அது நன்றாக ஓடிக் கொண்டிருந்ததே என்று சொல்ல வேண்டும்... அப்போது அர்ச்சனா ஊடே புகுந்து தொழிற்சாலையின் நிலவரத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும்... உடனே அந்தச் சகலை உதவி செய்ய நானாயிற்று என்று உதவிக்கரத்தை நீட்ட வேண்டும்..
தெளிவாகத்தான் திட்டம் தீட்டப்பட்டது.. இருந்தும் அர்ச்சனாவுக்கு அதில் ஆயிரம் சந்தேகங்கள் வந்தன...
"அந்தச் சகலை வரும்போது கதிர் வீட்டில் இல்லைன்னா..?" என்று கேட்டு வைத்தாள்..
"அவன் வீட்டில் இருக்கிற சமயம் பார்த்து நீ போன் போட்டு நாராயணனை வரச் சொல்லனும்.." பொறுமையாக எடுத்துரைத்தான் கண்ணன்..
"நாராயணனா.. யார் அது..?" அதற்கும் விழித்தாள் அர்ச்சனா..
"ஊம்.. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன்..! எனக்குன்னு வந்து தங்கையாய் வாய்ச்சிருக்கயே.. அறிவுக்கடலாய்த்தான் இருக்க வேணாம்.. அட்லீஸ்ட் அறிவுக் கொழுந்தாவாவது இருக்கலாமில்ல.."
"அண்ணா..."
"இதை ஒன்னைச் சொல்லிரு.. அந்த நாராயணன் வேற யாருமில்ல.. சாட்சாத் என் பிரண்டோட கோ-பிரதர் இருக்கானில்ல.. அவன்தான் நாராயணன்.. இப்பவாவது உன் மண்டையில ஏறுதா..?"
"ஊம்.."
"இவ்வளவுதானா.. வேற ஏதாவது சந்தேகம் கேட்கனுமா..?"
"கேட்கனும்.."
"அதானே பார்த்தேன்.. இல்லைண்ணா.. எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சுன்னு சொல்லிருவியோன்னு நினைச்சேன்.. எங்கே..? நீ என்ன அப்படியெல்லாம் அண்ணனை பெருமைப்பட வைக்கிற ஆளா..?"
"என்ன அண்ணா.. இது..?"
"போதும்.. போதும்.. கண்ணைக் கசக்காதே.. விசயத்துக்கு வா.."
"ஓசூருக்குப் போன்னு ஈஸியாச் சொல்லிட்டிங்க.. ஆனா எப்படிப் போறதாம்..?"
"வழி தெரியாதா..? வேனும்னா மேப் போட்டுத்தரவா..?"
"அண்ணா.."
"காதலிக்கத் தெரியுது... அடுத்தவங்க டைரியை திருட்டுத்தனமா படிக்கவும் தெரியாது... அந்தக் காதலனுக்கு உதவி செய்யனும்னு காலேஜீக்கு மட்டம் போட்டுட்டு அண்ணனிடம் ஓடிவரத் தெரியுது.. இது மட்டும் தெரியாதா..?"
"நான் ஒன்னும் அவனைக் காதலிக்கலை.."
"நம்பிட்டேன்..."
"அவன் டைரியை திருட்டுத்தனமா படிக்கலை.."
"ஹாலில் வைத்து.. உன் அப்பாம்மா கண்ணுக்கு முன்னாடியா படிச்ச..?"
"அது.. அது வந்து.. நான் என்ன செய்யறதாம்..? பானுதான் டைரியைக் கொண்டு வந்து என்கிட்டக் கொடுத்தா..."
"படின்னு சொல்லிக் கொடுத்தாளா..?"
"யதேச்சையாய் பார்த்தேன்.. வெறும் முகாரியா பாடியிருந்தான்.. பாவமேன்னு பரிதாபப்பட்டு உதவி செய்ய நினைச்சேன்.. இது தப்பா..?"
"தப்பேயில்லை.. உண்மையைச் சொல்லு... அந்த டைரியில அவன் முகாரி ராகம் மட்டும்தான் பாடியிருந்தானா..? உன்னைப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுதலையா..?"
அவன் எழுதியிருந்தான் என்ற நினைவில் உதடு கடித்து கன்னம் சிவந்தாள் அர்ச்சனா.. அவள் கண்களின் பொய்கையில் தெரிந்த பொய்மையில் கண்ணனின் மனம் வியப்பில் வீழ்ந்தது..
'இது என் தங்கையா..? அந்தக் குழந்தையா இவள்..?'
"உன் முகத்தில் வழிகிற வழிசலில் இருந்தே தெரியுது.. அவன் உன்னைப் பத்தி எழுதியிருக்கான்னு.. என்ன எழுதியிருக்கான்..?"
"பெரிசா ஒன்னும் எழுதலை.."
அர்ச்சனா மழுப்பினாள்.. அவள் மனம் பொய் என்று கூவியது.. அவன் எழுதியிருந்தான்.. நிறைய எழுதியிருந்தான்.. காஞ்சிபுரத்தை விட்டுப் போன அந்த கடைசி நாளில் கூட எழுதியிருந்தான்..
'குற்றம் சொல்கிறாள்.. என்மீது குற்றம் காண்கிறாள்.. அப்படியென்றால் அவள் என்மீது காட்டிய நேசமும்.. பிரியமும் பொய்தானா..? அவள் வீசிய பார்வைகளுக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லையா.. அவள் பிரகாசத்தின் மகள் என்பதை உறுதி செய்து விட்டாள்.. இனி இந்த வீட்டில் இருக்க என்னால் முடியாது...'
அர்ச்சனாவின் மனதில் அந்த வரிகள் ஆழமாகப் பதிந்திருந்தன.. அதில் தெரிந்த அவனின் மனக்குமுறல் அவளை ஆட்டிவைத்தது.. அதுதான் பிரகாசத்திற்குப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் அவனைத் தேடிப் போய் உதவிசெய்து அவனைக் கை தூக்கி விட வேண்டும் என்ற உத்வேகத்தை அவளுக்குள் கொடுத்தது...
"ஓகே.. லீவ் தட் மேட்டர்.. எல்லாத்துக்கும் நான் திட்டம் போட்டுக் கொடுக்க முடியாது.. நீயும் கொஞ்சம் யோசிக்கனும்.. என் தரப்பில் என்ன செய்யனுமோ அதை நான் செஞ்சிருவேன்.. உன் தரப்பில் கதிர்வேலனின் வீட்டுக்கு எப்படிப் போகனும்கிறத நீதான் யோசிச்சு முடிவெடுக்கனும்.. இதை நான் சொல்லக் கூடாது.."
"ம்ம்ம்.. யோசிக்கறேன்..."
"அதெல்லாம் மூளையிருக்கிறவங்க செய்ய வேண்டிய வேலை.."
"உங்களுக்குத்தான் மூளையிருக்குதே.. ஏன் கழண்டுக்கிட்டிங்க..?"
"உங்க அப்பாவிடம் தர்ம அடியை வாங்க முடியாதுன்னுதான்.. வேணும்னா சித்தியிடம் கேட்டுப் பாரேன்.."
இயல்பாகச் சொல்வதைப் போலச் சொன்னான் கண்ணன்.. அர்ச்சனாவின் விழிகள் விரிந்தன.. இதை எப்படி அவள் மறந்தாள்...? வெகு காலமாக... சோமசுந்தரத்தின் குடும்பத்தைப் பார்க்க முடியாமல் சிறைபடுத்தப் பட்டிருக்கும் பத்மாவை சிறைமீட்டு அவளுக்குப் பிரியமான அண்ணன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க இதைவிட நல்லதொரு வாய்ப்பு அமையுமா..?
"தேங்க்ஸ் அண்ணா.." மனதார நன்றி சொன்னாள் அர்ச்சனா..
"எதுக்கு..?"
"அம்மாகிட்ட ஐடியா கேட்கச் சொன்னதுக்கு.."
"அதை நான் சொல்லித்தான் நீ செய்யனுமா..? நீயே அதை யோசித்திருக்க வேணாமா..?"
"தோணாம போச்சுண்ணா.."
"விடு.. இப்பத் தோணிருச்சுல்ல.. சித்தியிடம் போ.. நம்ம திட்டத்தைச் சொல்லு.. சந்தோசப் படுவாங்க.. முக்கியமா கதிர்வேலனுக்கு நான் உதவப் போகிறேன்-கிறதையும்.. சொல்லிரு.. அப்பவாவது என்கூட சித்தி முகம் கொடுத்து பேசுவாங்கள்ல..?"
"அண்ணா.."
"சித்தி மேல எனக்கு வருத்தம் கிடையாது அர்ச்சனா.. அவங்க வருத்தத்தைக் கண்டுதான் வருத்தம்.. அவங்க மனசு தங்கம்டா.. உனக்கு அது கொஞ்சமாத்தான் தெரியும்.. எனக்கு நிறையத் தெரியும்.. ஒரு வகையில் அவங்களோட அண்ணன் மகனுக்கு இந்த உதவியைச் செய்வதில் எனக்கு சந்தோசமாயிருக்கு அர்ச்சனா.. உன் அப்பாவுக்கு துணை போன என் அப்பாவின் தவறை இந்த உதவி ஈடுகட்டி விடாதுதான்.. இருந்தாலும் சித்தியின் கோபம் என் வரைக்குமாவது குறையுமில்லையா..?"
"அப்பா என்ன செய்தார்..? பெரியப்பா எதற்கு துணை போனார்..?" அர்ச்சனா குழம்பினாள்..
"விட்டு விடுடா.. நடந்ததை மறந்து விடுவோம்.. இனி நடப்பதை நன்மையாக நடத்திக் காட்டுவோம்.. நீ சித்தியிடம் பேசிட்டு பிளான் முடிவானவுடன் எனக்குத் தகவல் சொல்லு.. அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன்.."
"டன் அண்ணா.." அர்ச்சனா கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்..
"அதை எதையும் சொதப்பாம செய்து முடித்த பின்னாலே சொல்லு.." அலட்டிக் கொள்ளாமல் அவளை வாரினான் கண்ணன்..
"அண்ணா.." என்று சிணுங்கியபடியே அங்கிருந்து கிளம்பினாள் அர்ச்சனா..
"சாப்பிட்டுட்டுப் போ.." என்ற கோகிலாவின் கூவலுக்கு..
"இன்னொருநாளைக்கு வர்றேன் பெரியம்மா.." என்று பதிலுக்கு கூவியபடி காரில் ஏறிப் பறந்து விட்டாள்..
"சாப்பிட்டுட்டு போம்மான்னு சொன்னா இந்தப் பொண்ணு இப்படி ஓடறாளே.." என்று அங்கலாய்த்தாள் கோகிலா..
"ஏண்டி.. வீட்டுக்கு வந்த பொண்ண உன் சாப்பாட்டக் காட்டி விரட்டி அடிச்சுட்டியா..?" அவளை கேலி செய்து சிரித்தார் திருநாவுக்கரசு..
அர்ச்சனா வீட்டுக்குள் போன போது ஹாலின் சோபாக்களைத் துடைத்துக் கொண்டிருந்த பானு அவளை வியப்புடன் பார்த்து..
"என்னம்மா உச்சி வேளையில வீட்டுக்கு வந்திருக்கீங்க..?" என்று கேட்டாள்..
"ஊம்..? உன் கையால எழுமிச்சம் பழத்தை நறுக்கி என் உச்சந்தலையில தேய்ச்சுக்கலாம்ன்னுதான்.. அம்மா எங்கே..?" அதட்டினாள் அர்ச்சனா..
"எங்கே இருப்பாங்க..? பூஜையறை.. அதை விட்டா.. லைப்ரரின்னு இருப்பாங்க.." என்ற பானுவை முறைத்தாள் அர்ச்சனா..
வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் எவ்வளவு உன்னிப்பாக வீட்டில் இருப்பவர்களின் செயல்பாடுகளை கவனிக்கிறார்கள் என்று எண்ணமிட்டபடி..
"வேலையைத் தவிர மத்த எல்லாத்தையும் தெளிவாச் செய்ற பானு.." என்று கண்டனக் குரலில் சொன்னாள்..
பானு வாய்மூடி கொள்ள கோபத்துடன் வாய்க்குள் முணுமுணுத்தபடி பத்மாவைத் தேடிப் போனாள் அர்ச்சனா...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -19
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -19
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-19.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-19.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy