உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-15

15 எனைத் தேடும் ஜன்னலோர உன்முகம்.. தவற விட்ட பேருந்தைத் தாவிப் பிடிக்கும் சக்தியைக் கொடுத்தது.. "அர்ச்சனா.. ?" கண...


15
எனைத் தேடும் ஜன்னலோர உன்முகம்..
தவற விட்ட பேருந்தைத்
தாவிப் பிடிக்கும் சக்தியைக் கொடுத்தது..


"அர்ச்சனா..?"
கண்ணன் ஆச்சரியத்துடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்..
அந்த நேரத்தில் அவளை அவன் அங்கு எதிர் பார்த்திருக்க வில்லை என்பதை அவன் முகம் சொல்லியது..
"காலேஜீக்குப் போகலை..?"
எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்தபடி கேட்டான்..
"போகலை..." ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னவளை உற்றுப் பார்த்தான்...
ஏனென்று அவன் கேட்கவில்லை.. மௌனமாக.. அர்ச்சனாவின் முகத்தை ஆராய்பவனைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்...
கோகிலாவின் வற்புறுத்தலுக்காக காபி.. டிபனைச் சாப்பிட்டு முடித்ததாக பெயர் பண்ணிய அர்ச்சனா..
"ஆபிசுக்குப் போகிறிங்களாண்ணா..?" என்று கேட்டாள்..
"எங்கே போனான்..? உன்னைப் பார்த்துட்டானில்ல.. இனி ஆபிஸ் போன மாதிரிதான்.. அண்ணனும் தங்கையும் ஆபிசுக்கும்.. காலேஜீக்கும் மட்டம் போட்டுட்டு பேசிக்கிட்டு இருங்க.. எனக்கு தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருக்கு.. அதையெல்லாம் முடிச்சுட்டு வந்து சேர்றேன்.." கோகிலா எழுந்து போய் விட்டாள்...
"என்ன..?" கவலையுடன் கேட்டான் கண்ணன்..
"பேசனும்.." ரத்தின சுருக்கமாக பதில் சொன்னாள் அர்ச்சனா..
"மாடிக்குப் போகலாம்.. வா.."
கண்ணன் செல்போனைக் காதுக்கு கொடுத்து முடித்து வைக்க வேண்டிய அவசரவேலைகளைப் பற்றி அவனுடைய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தபடி படியேறினான்.. அர்ச்சனா பின் தொடர்ந்தாள்.. மாடி பால்கனியில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.. அங்கிருந்து தெரிந்த தோட்டத்து நீச்சல்குளத்தை வெறித்துப் பார்த்தபடி அசைவில்லாமல் இருந்த அர்ச்சனாவிடம்..
"ஸ்விம்மிங் பூலை வேடிக்கை பார்க்கத்தான் வந்தியா..?" என்று கேட்டான் கண்ணன்..
"எங்க வீட்டில் ஸ்விம்மிங் பூல் இல்லையா.. என்ன..?" அலுத்துக் கொண்டாள் அர்ச்சனா..
"என்னடா விசயம்..?"
கனிவாக கேட்ட கண்ணனின் கேள்வியில் அர்ச்சனாவின் கண்கள் கலங்கி விட்டன..
"அண்ணா.." என்றவள் பொலபொலவென்று கண்ணீர் துளிகளை உதிர்த்தாள்...
"அர்ச்சனா.. ஏய்ய்.. என்னம்மா இது..?" கண்ணன் பதறிவிட்டான்..
அதுநாள்வரை அர்ச்சனா அதைப் போல கண்கலங்கி அவனிடம் வந்து நின்றதில்லை.. சிரித்த முகமாய்.. துள்ளிபோகும் மான்குட்டியைப் போல.. முகமெல்லாம் மலர்ச்சியுடன் தான் அந்த வீட்டிற்கு வந்து போயிருக்கிறாள்..
அவளுக்கும் கண்ணனுக்கும் இடையில் நிலவும் அந்த ஆத்மார்த்தமான சகோதர பாசம் இன்று.. நேற்று உருவானதல்ல.. அர்ச்சனா பிறந்த போதே உருவான பந்தம் அது..
பிரகாசமும்.. திருநாவுக்கரசும் வெவ்வேறு இனமாக இருந்தாலும்.. சொந்தபந்தம் போல உறவாடிக் கொள்ளும் ஆழ்ந்த நட்பை உடையவர்கள்.. அவர்களது நட்பை பிய்க்க நினைத்தாலும் பிய்க்க முடியாது என்று அவர்களை அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.. இரண்டு வீட்டினரும் சொந்த பந்தமாய் பழகினாலும்.. பத்மா திருநாவுக்கரசின் வீட்டுக்கு கோகிலாவைத் தேடிப் போனதில்லை.. கோகிலா தான் பத்மாவைத் தேடி பிரகாசத்தின் வீட்டிற்கு வருவாள்.. அப்படி வருபவளிடமும் பத்மா கலகலப்பாக பேச மாட்டாள்.. அதைச் சுட்டிக்காட்டி பிரகாசம் உறுமினாலும் பத்மா அமைதியாக எதிர்த்துப் பேசாமல் நிற்பாளே தவிர.. கோகிலாவுடன் பின்னிப் பிணைய மாட்டான்..
அந்தக் குறையைத் தீர்க்க வந்ததைப் போல அர்ச்சனா பிறந்து வந்தாள்.. பேச்சு வந்து "அம்மா" "அப்பா" என்று அழைக்கப் பழகியவுடன் அடுத்து அழைத்த வார்த்தை "அண்ணா" தான்.. பெண் குழந்தை இல்லாததால் அடிக்கடி அர்ச்சனாவை தன் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்து விடுவாள் கோகிலா.. ஆறுவயதுச் சிறுவனாக இருந்த கண்ணன் அர்ச்சனாவைத் தூக்கி வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பான்.. அண்ணா பாரு.. அண்ணா பாரு.. என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. அப்போது தான் அர்ச்சனா முதன் முதலாக அவனைப் பார்த்து மழலையாக.. "அண்ணா.." என்று அழைத்து வைத்தாள்...
அதன் பின்பு.. அர்ச்சனாவுக்கு இரண்டு வீடுகளாக ஆகிப் போனது.. திருநாவுக்கரசும் கோகிலாவும் அவளுக்கு பெரியப்பா.. பெரியம்மாவாக மாறினார்கள்.. கண்ணன் அவளுடைய அண்ணனாக ஆனான்..
அவன் படித்த பள்ளியில்தான் அர்ச்சனாவையும் சேர்த்தார்கள்.. பள்ளியில் எது நடந்தாலும்.. எதிராளியிடம் அர்ச்சனா விடுக்கும் எச்சரிக்கை ஒன்றே ஒன்றுதான்.. அது..
"என் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்.." என்பது தான்..
அதற்கேற்றார் போல அவள் சொல்வதையும் கண்ணன் கேட்டுக் கொடுப்பான்.. அவள் சொல்லாததையும் கேட்டுக் கொடுப்பான்..
அறியாச் சிறுமி பருவத்திலிருந்து அவள் வெளிவந்த பின்னாள்களில் அவளுடைய தோழிகள்.. அது குறித்து அவளைக் கிண்டல் செய்திருக்கிறார்கள்..
"ஏய்ய்.. அவகிட்ட வம்புக்கு போகாதீங்கடி.. உடனே அவ அண்ணன்கிட்டச் சொல்லிடுவா.." என்பார்கள்..
"அடேங்கப்பா.. இவ அண்ணன் பெரிய சூராதி சூரனா..?"
"ஊஹீம்.. வஞ்சிக் கோட்டை வாலிபனாம்டி.."
"அதெல்லாம் நம்ம கொள்ளுப்பாட்டி காலத்து ஹீரோ.. இப்பக் கதையைப் பேசு.. ஆள் எப்படி..? அசத்தலா இருப்பாரா..?"
"அட்டகாசமா இருப்பாரு.."
"அப்ப அவர் தங்கை கூட எதுக்குடி வம்பு வளர்க்கனும்..? ஆயிரம்தான் இருந்தாலும் இவ என் நாத்தனாரா ஆகப் போகிறவ.."
"கனவு காணாதே.. எனக்குத்தான் இவ நாத்தனார்.."
இப்படி அவள் கூடப் படித்த தோழிகளையெல்லாம் அவளுக்கு அண்ணியாகும் ஆசையைத் தூண்டி விடுபவன் அர்ச்சனாவைப் பார்க்க கல்லூரிக்கு வந்து போகும் போது அவளின் தோழிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான்..
"என்னடி உன் அண்ணன் இப்படியொரு ரிஷிய சிருங்கரா இருக்காரு..?"
அவளின் தோழிகள் அதற்கும் கிண்டலடிப்பார்கள்..
அப்படிப்பட்ட கண்ணனிடம் கூட பத்மா முகம் கொடுத்துப் பேச மாட்டாள்.. அது பற்றிய அர்ச்சனாவின் ஆதங்கத்திற்கு..
"விடு அர்ச்சனா.. அவங்க மனசில் என்ன முள் தைத்திருக்குன்னு யாருக்குத் தெரியும்..?" என்று சொல்லி விடுவான் கண்ணன்..
அன்பான திருநாவுக்கரசு குடும்பத்தினரிடம் கூடப் பேசிப் பழக முடியாத அளவிற்கு அம்மாவின் மனதில் என்ன முள் தைத்திருக்கக் கூடும் என்று வெகு நாள் யோசித்திருக்கிறாள் அர்ச்சனா...
அதுவரைக்கும் அதற்கான விடை மட்டும் அவளுக்கு கிடைக்கவே இல்லை...
"என்ன ஆச்சும்மா..? கொஞ்ச நாளா நீயும் நம்ம வீட்டுப் பக்கம் வரலை.. எனக்கும் கம்பெனியில வேலை இருந்துச்சு.. நீயும் எக்ஸாமில பிஸியா இருப்பேன்னு நினைச்சுத்தான் உன்னைப் பார்க்க வரலை... நீ என்னடான்னா.. அண்ணான்னு அழுதுக்கிட்டு வந்து நிற்கிற.. என்னதான் ஆச்சு..?"
கண்ணனின் தூண்டித் துருவலான கேள்விகளில் அர்ச்சனா மனம் திறந்தாள்.. அதில் அடைத்திருந்த துக்கங்களையும்.. துயரங்களையும் அவன் முன்னால் கொட்டினாள்..
"அவன் வந்த பின்னாலேதான் இப்படியெல்லாம் ஆச்சுன்னா.. அம்மா மூடி டைப்தான்.. அப்பாகிட்டக்கூட அதிகமா பேச மாட்டாங்கதான்.. ஆனா என்கிட்ட அப்படி இருந்ததில்லை அண்ணா..."
"புரியுது.."
"இப்ப என்னடான்னா என்கூட எதிரிகிட்டப் பேசறதைப் போலப் பேசறாங்க.. அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்சப் பேச்சையும் நிறுத்திட்டாங்க.."
"அதுக்காக உன் அப்பா வருத்தப் பட்டாரா..?"
"எந்தக் காலத்தில் அவர் அதைச் செய்தார்..?"
"தெரியுதில்ல.. அப்புறம் எதுக்காக அவங்க இரண்டு பேருக்கும் மத்தியில இருக்கிற ரிலேசன் ஷிப்பைப் பத்திப் பேசற.. விட்டு விடு.."
"என் கூடவும் பேசலையே..."
"ம்ம்ம்.." மௌனமாக யோசித்த கண்ணன்
"வந்திருந்தது யாருன்னு சொன்ன..?" என்று கேட்டான்..
"கதிர்வேலன்.."
அதைச் சொல்லும் போது விகசித்த அர்ச்சனாவின் முகத்தைப் பார்த்தவனின் நெற்றிப் புருவங்கள் சுருங்கின.. கதிர்வேலன் என்ற பெயரைச் சொல்வதற்கு இவள் ஏன் இந்த அளவுக்கு சந்தோசம் கொள்கிறாள் என்று அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்...
கதிர்வேலைனப் பற்றிய புகாரைச் சொல்வதும் அர்ச்சனாதான்.. அவன் பெயரைச் சொல்லும் போதே அதை ரசித்துச் சொல்வதும் அர்ச்சனாதான் என்பதில் அவன் விசித்திரத்தைக் கண்டான்..
"அவன் சித்தியோட அண்ணன் மகன்னா.. கும்ப கோணத்துப் பக்கமிருந்தா வந்தான்..?"
"ஊஹீம்.." மறுத்தாள் அர்ச்சனா..
"ஓசூரில இருந்து வந்தான் அண்ணா.." என்றாள்..
"ஓசூரா..?" கண்ணனின் முகம் மாறியது..
"ஓசூர்ன்னா சொன்ன..?" பரபரப்பாக கேட்டான்..
"ஆமாண்னா.." என்று சொன்னாள் அர்ச்சனா..
எதற்காக கண்ணனின் முகம் மாறியது என்று அவளுக்குப் புரியவில்லை..
"ஆனா அர்ச்சனா.. உன் தாய்மாமா மகன்கள் கும்பகோணம் பக்கம்தானே இருக்கிறாங்க..? அவர்களுக்கு கல்யாணம்கூட ஆகிருச்சே..."
"இவன் வேற.. அம்மாவோட ஒன்றுவிட்ட அண்ணன் மகனாம்.."
"என்ன சொன்ன..? என்ன சொன்ன..? ஒன்று விட்ட அண்ணன்னா.. பெரியப்பா மகனா..?"
இதற்காக ஏன் இந்த அளவுக்கு அவன் பரபரப்படை கிறான் என்று புரியாதவளாக அர்ச்சனா..
"ம்ம்ம்.. அப்படித்தான் சொன்னாங்க.." என்றாள்..
"அவர் பெயரென்னன்னு தெரியுமா..?"
"தெரியுமே.. சோமசுந்தரமாம்.. இப்ப அவர் படுத்த படுக்கையாய் இருக்கிறாராம்.." விவரம் சொன்னாள் அர்ச்சனா...
கண்ணன் எதையும் பேசவில்லை.. மௌனத்திலே உறைந்து போனவனாக நீச்சல்குளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
"என்னைச் சொல்லிட்டு நீங்க நீச்சல் குளத்தை வேடிக்கை பார்க்கக் கிளம்பிட்டிங்களா..?" விளையாட்டாய் கேட்டாள் அர்ச்சனா..
தவம் கலைந்தவனைப் போலத் திரும்பிப் பார்த்த கண்ணனின் முகத்தில் ஏதோ இருந்தது.. ஒரு பெருமூச்சுடன்...
"நீ இதைப் பத்தியெல்லாம் நினைச்சு கவலைப் பட்டுக்காதே.." என்றான்..
"அண்ணா..?"
"வந்து போயிருக்கிறது வெறும் உறவுக்காரன் மட்டுமில்லை அர்ச்சனா.. அவன் உன் அம்மாவின் கடந்த கால வாழ்க்கைச் சரித்திரத்தின் பார்வையாளன்.. ஒரு வகையில் பாதிக்கப்பட்டவன்.. அவனைப் பார்த்த பின்னால் உன் அம்மா மாறிப் போனதில ஆச்சரியம் ஒன்னுமில்லை.."
"ஏன் அண்ணா.."
"ஏன்னு கேட்டா நான் என்ன பதிலைச் சொல்ல.. நானும் அப்பச் சின்னவன்தான்.. எனக்கும் எதுவும் தெரியாதுதான்.. ஆனா.. வளரும் போது உங்க வீட்டைப் பத்தி என் அப்பாவும்.. அம்மாவும் பேசிக்கிறதைக் கேட்டு வளர்ந்தவன் தானே.. நானே இப்படிங்கிறப்போ.. அந்தக் கதிர்வேலன் எத்தனையைக் கேட்டிருப்பான்..?"
"அப்படி எதைக் கேட்டிருப்பான்னா..?"
"தெரிந்துக்கிட்டு என்ன செய்யப் போகிற..? தொலைந்து போன உன் அம்மாவின் கடந்தகால வாழ்வை உன்னால் திருப்பித்தர முடியுமா..? இல்லை.. அவங்களாலே தொலைந்து போன ஓர் ஆத்மாவுக்கு உயிர் தர முடியுமா..?"
"அண்ணா.. அம்மாவுக்கு என்ன குறை..? அப்பாவோட வொய்ஃப்ங்கிறதில அவங்களுக்கு எத்தனையோ பெனிபிட்ஸ் இருக்கே.. வசதியான வாழ்க்கை... கோடிஸ்வரிங்கிற அந்தஸ்து.. அவங்க பிறந்த வீட்டுக்கு அப்பா எவ்வளவோ செய்திருக்காரே.. பணத்தை வாரி இறைச்சிருக்கார் அண்ணா.."
"எதற்காக..?" நிதானமாகக் கேட்டான் கண்ணன்...
"அது எதற்கான விலை அர்ச்சனா..?"
"அண்ணா.."
"இதுக்குத்தான் சொல்றேன்.. விட்டு விடுன்னு.. பணம் மட்டும் ஒருத்தருக்கு சந்தோசத்தைக் கொடுத்து விடாது.. இதை நீ புரிஞ்சுக்கிற காலம் ஒன்னு வரும்..அப்ப உனக்கு நான் இப்பச் சொன்ன எல்லாமும் புரியும்.. அதைவிடு.. உனக்கு அந்தக் கதிர்வேலனைப் பிடிக்காதா..?"
"யார் சொன்னது..?"
இதைக் கேட்ட அர்ச்சனாவின் குரலில் இருந்த வேகத்தைக் கணக்கிட்ட கண்ணனின் இதழ்களில் இளநகை அரும்பியது..
"ஸோ.. உனக்கு அவனைப் பிடிக்கும்.."
"அப்படி நான் சொன்னேனா..?"
"அப்ப பிடிக்காது.."
"அப்படி நான் சொன்னேனா..?"
"எப்படித்தான் நீ சொல்ற..?"
"பிடிக்கும்.. ஆனா பிடிக்காது.."
"தெளிவுதான்.. போ.."
தங்கையின் கன்னம் தட்டிச் சிரித்தான் கண்ணன்.. அர்ச்சனாவின் குழந்தைத்தனமான அந்த சுபாவத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது.. அது குறையாமல் அப்படியே இருக்க வேண்டுமே என்று அவன் கவலை கொண்டான்..
"சித்தியை டிஸ்டர்ப் பண்ணாதே அர்ச்சனா.."
"அம்மாவை நான் எங்கே டிஸ்டர்ப் பண்ணினேன்..?"
"உன்கூட அவங்க பேசனும்.. உன் அப்பாகிட்ட இயல்பா பழகனும்.. வீட்டில எப்பவும் போல அவங்க இருக்கனும்னு நினைக்கிறதுகூட அவங்களுக்கு நீ கொடுக்கிற டிஸ்டர்ப்தான்.."
"அண்ணா.." அர்ச்சனா திகைத்துப் போனாள்..
இந்தக் கோணத்தில் அவள் நினைத்துப் பார்க்க வில்லையே..
"யோசி அர்ச்சனா.. நீ மூட்-அவுட்டா இருக்கிறப்ப.. உன்கிட்ட வந்து சிரித்துப் பேசுன்னு யாராவது சொன்னா உன்னால அது முடியுமா..?"
"முடியாதுதான்.." ஒப்புக்கொண்டாள் அர்ச்சனா..
"சித்தியும் அப்படித்தான்.. அவங்க மனசு ரணமாய் இருக்கு.. அதை ஆற்ற உன்னால்கூட முடியாது.. அவங்களை அவங்க போக்கிலே விட்டுவிடு.. விலகி நிற்கக்கற்றுக்க.. அதை விட்டுட்டு உன் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணினான்ங்கிற ஒரே காரணத்துக்காக கதிர்வேலனின் மேலே குற்றம் சொல்லாதே..."
ஏனோ தெரியவில்லை.. கதிர்வேலனின் பக்கம் ஏதோ ஒரு நியாயம் இருக்கக்கூடும் என்பதில் அர்ச்சனாவின் மனம் விசித்திரமான அமைதியைக் கொண்டது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-15
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-15
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy