உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -14

14 லேசாகத்தான் சிரித்தாய்.. அந்தச் சிரிப்பில் எதற்கும்.. அசையாத என்மனம் அசைந்தது ஏன்.. ? "அம்மா.." அர்ச்சனா அழைத்...


14
லேசாகத்தான் சிரித்தாய்..
அந்தச் சிரிப்பில் எதற்கும்..
அசையாத என்மனம் அசைந்தது ஏன்..?


"அம்மா.."
அர்ச்சனா அழைத்தாள் சமையலறையில் வேலையாக இருந்த பத்மாவின் உடலில் விறைப்பு வந்தது.. திரும்பிப் பார்க்காமலே
"என்ன..?" என்று கேட்டாள்..
"நீங்க எதுக்காகம்மா சிரமப் படனும்..? அதுதான் ராஜாத்தி இருக்கில்ல..? அவங்களைச் செய்யச் சொல்ல வேண்டியது தானே.." என்றாள் அர்ச்சனா..
திரும்பிப் பார்த்த பத்மாவின் விழிகளில் ஏளனம் இருந்தது.. அது போன்ற பார்வையை அதற்கு முன்னால் அவள் பத்மாவிடம் பார்த்தது இல்லை..
'இவன் வந்துட்டுப் போனான்.. எங்கம்மா டோட்டலா சேன்ச்சாகிட்டாங்க..'
அவள் அதற்கும் கதிர்வேலனை மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்..
"ஏம்மா இப்படிப் பாக்கறிங்க..?" ஆதங்கத்துடன் தான் அர்ச்சனா கேட்டாள்..
"இல்லை.. இப்பத்தான் நான் வேலை செய்கிறதைப் போல அக்கறைப் படறியே.. அதனால கேட்கிறேன்.. இதுக்கு முன்னாலே நான் வேலை செய்து நீ பார்த்ததே இல்லையா..?" நறுக்குத் தறித்ததைப் போல பத்மா கேட்டாள்...
"அம்மா.." அர்ச்சனா வாயடைத்துப் போனாள்..
"போதும் அர்ச்சனா.. நிறையப் பார்த்தாச்சு.. நீ ஒன்னும் சின்னப்பெண்ணில்லை.. ஆச்சு.. இன்னும் ஆறு மாசத்தில என்ஜினியரிங் படிப்பை நீ முடிக்கப் போற.. நல்லது எது.. கெட்டது எதுன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கனும்.. யாரும் பக்கத்தில நின்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்க முடியாது.."
"இப்ப என்ன ஆச்சுன்னு இப்படியெல்லாம் பேசறிங்கம்மா..?" அர்ச்சனாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது..
"எவ்வளவோ ஆகிப் போச்சு.. எதையும் நான்வாய் விட்டுச் சொன்னதில்லை.. அதனாலேயே எனக்கு எதுவும் நடக்கலை.. நான் இந்த வீட்டில் சந்தோசமா இருக்கிறேன்னு ஆகிப் போகுமா..?"
"அம்மா.. இதைப் போலல்லாம் இதுக்கு முன்னாலே நீங்க பேசினது இல்லைம்மா.." மனத்தாங்கலுடன் நினைவு படுத்தினாள் அர்ச்சனா..
"அது போல நான் இருந்தாத்தானே உனக்குப் பிடிக்கும்.. இல்லையா அர்ச்சனா..?" பத்மாவுக்கு பேச முடியாமல் தொண்டை அடைத்ததில் அர்ச்சனா பதறிப் போனாள்..
"அம்மா.."
"ப்ம்ச்சு.. போதும் அர்ச்சனா.. எனக்குன்னு எதையும் நான் யோசிச்சது இல்லை.. அப்படி யோசிச்சாத்தான் உனக்கும்.. உன் அப்பாவுக்கும் பிடிக்காதே.." பத்மா முகம் திருப்பிக் கொண்டாள்..
"எப்போதுமே நான் உங்களுக்காக அப்பாகிட்ட சப்போர்ட் பண்ணியிருக்கேனே அம்மா.."
"இனிமேல் அதைச் செய்யாதே.."
"அம்மா.."
"எனக்கு வேண்டியது மரியாதை.. பரிதாபமில்லை.. உன் பரிதாபத்தால இந்த வீட்டில் நான் வாழனும்னா அது வாழ்க்கையில்லை.. நீ நான் பெத்த மகள்.. உனக்காக நான் பரிந்து பேசனும்.. காபந்து பண்ணனும்.. அதை எனக்காக நீ செய்தா எனக்கு அது மரியாதையாகுமா..?"
"நீங்க தேவையில்லாம மனதைப் போட்டு உழப்பிக்கறிங்கம்மா.." என்று சொல்லி விட்ட அர்ச்சனா.. பத்மாவின் பலத்த கன்டனப் பார்வைக்கு ஆளானாள்..
"உனக்கும்.. உன் அப்பாவுக்கும்.. என் யோசனைகள் தேவையில்லைதான் அர்ச்சனா.. நான் யோசிக்கவே கூடாதுன்னுதான் நீங்க நினைப்பீங்க.. அப்படியே என்னைப் பார்த்துப் பழக்கப் பட்டுட்டிங்கள்ல.. நான் புதிதா யோசிச்சா உங்களுக்கு அது தேவையில்லாததாத்தான் தோணும்..."
"நான் அப்படிச் சொல்லலைம்மா.. அப்பாவிடம் நான் பேசறேன்..."
"என்ன பேசப் போற..?"
"நீங்க அம்மாவை ட்ரீட் பண்றவிதம் சரியில்லைன்னு சொல்லப் போறேன்.."
"அதை புதுசாவா சொல்லப் போற..? ஏற்கனெவே பலதடவை நீ சொன்னதுதானே அர்ச்சனா..?"
"நான் என்னதான்ம்மா செய்யனும்..?"
"எதுவும் செய்ய வேணாம்.. இப்போதைக்கு இந்த இடத்தை விட்டுப் போனாப் போதும்.. எனக்கு நிறைய வேலை இருக்கு.."
பத்மா வேலையில் கவனமாகிவிட.. அர்ச்சனாவுக்கு அழுகை.. அழுகையாய் வந்தது.. சற்று நேரம் நின்று பார்த்தாள்.. அர்ச்சனா என்ற ஒருத்தி அங்கே நிற்காததைப் போன்ற பாவனையுடன் பத்மா தன் போக்கில வேலைகளைச் செய்து கொண்டிருந்ததில் அவளுக்கு என்னவோ போல இருந்தது...
அம்மா அவளை ஒதுக்குகிறாளா..? ஒரே மகள்.. அதுநாள் வரை அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள் அவளின் அம்மா.. எங்கிருந்தோ ஒருவன் அண்ணன் மகன் என்று சொல்லிக் கொண்டு அங்கே வந்தான்.. அவளுடைய அம்மா மகளிடமிருந்தும்.. கணவரிடமிருந்தும் தள்ளி நின்று விட்டாள்..
"எல்லாம் அவனால வந்தது.." தன்னையறியாமல் அர்ச்சனா குமுறி விட்டாள்..
அதுநேரம் வரை அவளைக் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் சமையல் செய்து கொண்டிருந்த பத்மா.. அவள் சொன்னதைக் கேட்டதும் விசுக்கென்று தலை தூக்கி மகளை முறைத்தாள்..
"எவனால வந்தது..?" தீர்க்கமாக கேட்டாள்..
"அது.. வந்து.. ஒன்னுமில்லைம்மா.." சமாளிக்க முயன்றாள் அர்ச்சனா..
"கதிர்லேனைத்தானே சொன்ன..?" கூர்மையான பார்வையுடன் கேட்டாள் பத்மா..
அர்ச்சனா பதில் சொல்லவில்லை.. அவளுடைய மௌனம் உண்மையை.. சொல்லிவிட.. பத்மா கோபத்துடன் பொரிந்தாள்..
"நினைச்சேன்.. நீ இதைப்போல அவனிடம் எதையாவது பேசி வைச்சிருப்பன்னு நினைச்சேன்.. கடைசியில நான் நினைச்சதைப் போலத்தான் ஆகியிருக்கு.. அவனை என்ன சொல்லி துரத்தி விட்ட..?"
"அம்மா.."
"உன்னோட வெளியில் போயிட்டு வந்தவன்.. விடிகிறதுக்குள்ள பெட்டியைத் தூக்கிட்டுக் கிளம்பறான்னா.. நீ எந்த அளவுக்கு அவனைப் பேசியிருக்கனும்..?"
"நான் ஒன்னும்  சொல்லலை.."
சொல்லும் போதே அர்ச்சனாவின் குரல் உள் வாங்கியது.. உரத்துப் பேச முடியாமல் கிணற்றுக்குள் இருந்து பேசுவதைப் போல அவள் குரல் உள்வாங்கியது..
"உன் குரலே உன்னைக் காட்டிக் கொடுக்குதே.. உனக்கு எதற்காக கதிர்மேல வன்மம் வந்துச்சு..? அவனை என்ன சொல்லி விரட்டியடிச்ச..? அவனே தொழிலில் நஷ்டம் வந்திருச்சுன்னு அதைத் தூக்கி நிறுத்த போராடிக்கிட்டு இருக்கான்.. இங்கே அவன் பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு வந்தான்.. அவன் வந்த வேலை முடிகிறதுக்குள்ள ஊரைப் பார்த்துப் போக வைச்சுட்டயேடி.."
"என்னம்மா நீங்க.. என்னவோ நான் அவனை துரத்தி விட்டதைப் போல என்மேல பழி போடறிங்களே.."
"நீ அந்த வேலையைத்தானே செய்து வைச்சிருக்கிற..? இங்கே கதிர் தங்கியிருந்தா உன் அப்பாவோட சொத்து குறைஞ்சிரும்னா விரட்டி விட்ட..?"
"சும்மா.. சும்மா.. என்னையே குறை சொல்லாதீங்கம்மா.. விருந்தாளியாய் வந்த மனுசன் என்ன செய்யனும்..? வீட்டில் ஏதாவது பிரச்னை வந்தா பட்டுக்காம ஒதுங்கி நிற்கனும்.. அதை விட்டுட்டு உங்களைத் தூண்டி விட்டா நான் கேள்வி கேட்க மாட்டேனா..?"
வேகத்துடன் பேசிவிட்ட அர்ச்சனா..
"ஓ.." என்று பத்மா உதட்டைக் குவிக்கவும் தன் தவறை புரிந்தவளாக நாக்கைக் கடித்தாள்..
"அதுதான் உன் கோபமா..? உன் அப்பாவுக்கு செருப்பா நான் இருந்தேன்.. அது கதிர் சொல்லிக் கொடுத்து மாறிவிடக் கூடாதுன்னு நீ நினைச்சிருக்கிற.."
"இல்லம்மா.."
"உங்கப்பா கொடுத்து வைத்தவர் அர்ச்சனா.. நீ அவருக்கு மகளா பொறந்திருக்கிற.. நான் கொடுத்து வைக்கலை.. நீ என் வயிற்றில் பிறந்திருக்கயே.."
பத்மா அடுப்பை அணைத்து விட்டு வேகமாக போய் விட்டாள். கொந்தளிக்கும் அவள் மனதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது.. அதுபோன்ற மனநிலையில் அவள் மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள எப்போதுமே அர்ச்சனாவைத்தான் தேடுவாள்..
அப்போது அந்த நினைவே இல்லாமல் மகளைப் புறக்கணித்து தனிமையை நாடி அவள் போய் விட்டதை அர்ச்சனாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
நைந்த உள்ளம் ஆறுதலைத் தேடியது.. வெளியே வந்து காரைக் கிளப்பினாள்.. டிரைவர் ஓடி வந்தான்..
"வேண்டாம்.." என்று கையசைத்து விட்டுக் காரைக் கிளப்பினாள்..
திருநாவுக்கரசின் வீட்டிற்கு அவள் போனபோது.. அவர் அலுவலக அறையில் மும்முரமான வேலையில் இருந்தார்.. அர்ச்சனாவைக் கண்டவுடன் வேலைகளைப் போட்டு விட்டு இன்டர்காமை காதுக்கு கொடுத்து..
"கோகி.. நம்ம அர்ச்சு வந்திருக்கிறா பாரு.." என்று அறிவித்தார்..
"நான் போய் பார்த்துக்கறேன் பெரியப்பா.." அவருக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போனாள் அர்ச்சனா..
"வாடியம்மா.." கோகிலா கை விரித்தாள்..
அவள் கைகளுக்குள் புகுந்த அர்ச்சனாவின் உச்சந்தலையில் செல்லமாக முத்தமிட்டாள் கோகிலா..
"அண்ணா எங்கே..?" என்ற அர்ச்சனாவின் கேள்விக்கு..
"அதானே பார்த்தேன்.." என்று சிரித்தாள்..
"இந்த வீட்டில உன் பெரியப்பா இருக்கார்.. நானிருக்கேன் வேலையாள்கள் இருக்காங்க.. இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதே.. உனக்கு உன் அண்ணன் தான் முதல்ல.. நாங்கள்ளாம் அப்புறம் தான்.."
கோகிலா வாத்சல்யத்துடன் அர்ச்சனாவின் கன்னம் தொட்டு வழித்தாள்.. அவள் தோளில் கை வைத்து அழுத்தி சோபாவில் அமரவைத்தாள்..
"உன் அண்ணன் மாடியிலதான் இருக்கான்.. ஹாலைக் கடந்துதான் அவன் வெளியில போகனும்.. உன்னைப் பார்த்த பின்னாலே வெளியில போவனா..? அதனால தைரியமா காபி.. டிபனைக் காலி பண்ணு.. அதுக்கப்புறமா உன் அண்ணன்கூடப் பேசு.." என்று ஐடியா சொல்லிக் கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்..
கோகிலா சொன்னதைப் போலவே மாடிப் படியில் இறங்கி வந்த கண்ணன் காபி.. டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்ச்சனாவைக் கண்டதும் தேங்கி நின்றான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -14
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -14
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy