உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -13

13 கொட்டுகிற மழையில் நனைந்தபோது.. என் மனமும் நனைந்தது.. ஏன்.. ? உன்னோடு நனைந்த தாலா... "ஏய்ய்..." அவன் கர்ஜித்தான...


13
கொட்டுகிற மழையில் நனைந்தபோது..
என் மனமும் நனைந்தது.. ஏன்..?
உன்னோடு நனைந்த தாலா...


"ஏய்ய்..."
அவன் கர்ஜித்தான்.. அவனது பயங்கரமான முகத் தோற்றத்தில் அரண்டு போனவளாக அர்ச்சனா பின்வாங்கினாள்..
"இவ்வளவு தான் உன் எல்லை..! சும்மா ஹலோ.. ஹிலோன்னு கடுப்பேத்திக்கிட்டு இருந்த.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.. நீ ஒன்னும்.. என்னை அத்தான்.. பொத்தான்னு கூப்பிடனும்கிற அவசியம் எனக்கில்லை.. அதே சமயத்தில ஹலோ.. ஹிலோன்னு கூப்பிட்டா கேட்டுக்கிட்டுப் போகனும்கிற அவசியமும் எனக்கில்ல.. நீ யாரு என்னோடு பேச..?"
"நான் யாரா..?" அர்ச்சனா விக்கித்துப் போனாள்..
அவள் யாரோ.. அவன் யாரோவா.. அவளுக்கும் அவனுக்கும் யாதொரு உறவும் இல்லையா..?
அதுவரை அவர்களுக்கு இடையே இருந்த மெல்லிய இழைகளால் ஆன கண்ணுக்குத் தெரியாத நேச வலை அறுபட்டு விழுவதை உணர்ந்தாள் அர்ச்சனா.. அவளால் அதைத் தாங்க முடியவில்லை..
"நீ சுயநலப் பிறவிடி.. உன்கூடப் பேசுவது கூடப் பாவம்.. உனக்கு உன் அம்மாவின் மரியாதையைப் பற்றியோ.. உணர்வுகளைப் பற்றியோ எந்தவொரு கவலையுமில்லை.. உனக்கு உன் வீட்டில் எதுவும் மாறாமல் இயல்பாக இருக்கனும்.. உன்னைச் சுற்றியிருக்கிறவங்க மத்தியிலே உன் வீடு மதிப்பு.. மரியாதையா.. உயர்வா இருக்கனும்.. அதனால உன் அம்மாவின் மதிப்பும்.. மரியாதையும் போகிறதா இருந்தா அதைப் பத்தி நீ யோசிக்கக்கூட மாட்ட.. அப்படியே அவங்க இருக்கனும்னு நினைப்ப.."
"இல்லை.." அர்ச்சனா மறுத்தாள்..
"அம்மாவுக்காக அப்பாகிட்ட நான் பேசியிருக்கேன்.."
"போராடியிருக்கயா..?" அவன் கேட்டான்..
"சொல்லு.. உன் அம்மாவின் மதிப்புக்காகவும்.. மரியாதைக்காகவும்.. உன் அப்பாவிடம் நீ போராடியிருக்கயா..? நீ அதைச் செய்ய மாட்ட.. அதை விட்டுட்டு.. அப்பா.. அப்பா.. அம்மா பாவம் அப்பா.. போனாப் போகுது அப்பா.. இந்த வீட்டில வேலைக்காரியாய் ஒரு மூலையில் கிடக்கட்டுமே அப்பான்னு செல்லம் கொஞ்சியிருப்ப.."
'என்னவெல்லாம் பேசுகிறான்..' அவளுக்கு துக்கம்.. துக்கமாக இருந்தது..
அவள் பத்மாவுக்காக யோசித்ததே இல்லையா..? கூடவே அவளுடைய அப்பாவின் மீதும் பாசம் வைத்திருக்கிறாளே.. அது தவறா..?
"அம்மா.. அப்பா சேர்ந்திருக்கனும்னுதான எந்த மகளும் நினைப்பா..?" அவள் கண்ணீருடன் கேட்டாள்..
"தப்பேயில்லை.. அப்படி அவங்க சேர்ந்து இருக்கனும்ங்கிறதுக்காக உன் அம்மா மட்டும் விட்டுக் கொடுத்து அவமானங்களைச் சகித்துக்கிட்டுப் போகனும்னு நினைக்கிற பாரு.. அதுதான் தப்பு.."
"என் பக்கமும் நீங்க யோசிக்கனும்.."
"என்ன தேவைக்கு..?" அவன் கடுமையான குரலுடன் கேட்டான்...
"உன்னைப் பத்தி யோசிக்க உன் அப்பா இருக்கிறார்.. உன் அப்பாவைப் பத்தி யோசிக்க நீ இருக்கிற.. ஊடே வர எனக்கு விருப்பமில்லை.. எனக்கு இருக்கு ஆயிரம் வேலை.."
"ப்ளீஸ்.. நான் சொல்கிறதைக் கேளுங்க.."
"எதுக்காக கேட்கனும்..? பிரகாசத்தோட மகளுக்கும் எனக்கும் எந்தவொரு சொந்தமுமில்ல.. உன் அப்பாவை என் அத்தையின் ஹஸ்பெண்டாத்தான் நான் நினைச்சிருக்கேன்.. சொந்தம்ன்னு நினைச்சதில்லை.. நீயும் அப்படித்தான்..."
"என் அப்பா நல்லவர்.."
"அது உனக்கு.. எனக்கில்லை.."
"அவர் யாருக்கும்.. எந்தவொரு கெடுதலையும் நினைத்ததில்லை.."
"ஹ.." அவன் இகழ்ச்சியாக நகைத்தான்..
"போ.. போய்.. உன் அப்பாவிடம் வரதராஜன் என்ன ஆனார்ன்னு கேளு.. அப்பத் தெரியும் உன் அப்பா நல்லவரா.. இல்லை கெட்டவரான்னு.."
"யார் அவர்..?"
"உன் அப்பாவாலே அடையாளமில்லாம ஆக்கப் பட்டவர்.. வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழாம ஊர்.. ஊரா அலைகிறவர்.. கொலைசெய்தவனைக்கூட விட்டு விடலாம்.. அவன் ஓரே நிமிசத்தில சாகடிச்சுருவான்.. இப்படி அணு அணுவா சாகடிச்சு வாழ விடாம அலைய விட்டிருக்காரே.. உன் அப்பா.. அவரை விட்டுரச் சொல்றியா..?"
"கதிர்.."
முதன் முதலாக அவன் பெயரைச் சொல்லி அவள் அழைத்தபோது அவன் முகம் சுளித்தான்..
"ச்சே.. என் பெயரைச் சொல்லிக் கூப்பிடாதே.."
விருவிருவென்று அவன் போய் விட்டான்.. ஸ்தம்பித்துப் போனவளாக அர்ச்சனா பெஞ்சில் முழங்கால்களைக் கட்டி அதில் முகத்தைக் கவிழ்த்தாள்.. இருள் சூழ்வதையோ.. பூங்காவில் ஆள் நடமாட்டம் குறைவதையோ அவள் கவனிக்கவே இல்லை.. நேரம் ஓடிக்கொண்டிருந்தது.. அசையாமல் அவள் அமர்ந்திருந்தாள்..
மதுவாசனையை அவள் நாசி உணர்ந்ததில் திடுக்கிட்டுப் போய் தலை நிமிர்ந்தாள்..
நான்கு ரௌடிகள் கும்பலாக அவளருகில் நின்றிருந்தார்கள்..
"என்னா குட்டி.. தனியா உக்காந்திருக்க.. மச்சானுக்காக காத்திருக்கயா..?" என்றான் அவர்களில் ஒருவன்..
"நான்தாண்டா.. அந்த மச்சான்.." என்றான் இன்னொருவன்..
"ஊஹீம்.. நான்தான்.." என்றான் மற்றொருவன்..
"நீங்க மூன்று பேரும் இல்லை.. நான்தான் இவளுக்கு மச்சான்.. இல்ல கண்ணு.." இளித்தான் நான்காமவன்..
"எதுக்குடா நமக்குள்ள அடிச்சுக்கனும்.. நாம நாலு பேருமே மச்சானா இருந்திட்டாப் போகுது.."
முதலாமவனின் கூற்றை மற்ற மூவரும் ஏற்றுக் கொள்ள அவர்களுக்குள் சமாதான உடன்படிக்கை உருவானது.. அர்ச்சனா திகிலுடன் பெஞ்சுக்குப் பின்னால் குதித்து ஓட ஆரம்பித்தாள்.. அவர்கள் துரத்தினார்கள்..
'இன்னும் கொஞ்ச தூரம்தான்...'
பூங்காவின் நுழைவாயிலை குறி வைத்து அவள் ஓட ஆரம்பித்த போது.. மரத்தின் வேரில் கால்தடுக்கி குப்புற விழுந்தாள்.. அவள் எழுந்து கொள்வதற்குள் அவர்கள் நால்வரும் அவளைச் சுற்றி வளைத்து விட்டார்கள்..
"ஹி.. ஹி.."
சகிக்க முடியாத சிரிப்புடன் நெருங்கியவனின் முதுகில் ஒரு கை விழுந்தது..
"எவன் அவன்..?" என்று திரும்பியவனின் மூக்கின் மீது முஷ்டி குத்தியதில் அவன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது..
"ஐயோ.. அப்பா.." என்று அவன் அலறியதில் மற்ற ரௌடிகள் பின்வாங்கி.. குத்தியது யார் என்று கவனித்தார்கள்..
"அதான பார்த்தேன்.. உன்னை மாதிரிப் பொறுக்கியெல்லாம் அடிபட்டா அம்மான்னு கூப்பிட மாட்டிங்கடா.. அப்பான்னுதான் கூப்பிடுவீங்க.. பெத்த தாயின் நினைப்பிருந்தா மத்த பொம்பளைகளை தெய்வமா இல்ல பார்த்திருப்பீங்க...?"
கதிர்வேலன் பேசியபடி மரத்தின் மறைவிலிருந்து வெளிப்பட்டான்.. குனிந்து கை கொடுத்து அர்ச்சனாவைத் தூக்கிவிட்டான்.. எழுந்து நின்ற அர்ச்சனா பயத்துடன் அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்..
"டாய்.."
வீராதிவீரர்களான மற்ற மூவரும் ஒன்றாக சேர்ந்து பாய்ந்து வர.. கதிர்வேலன் விட்டானே ஒரு உதை..
'அது எப்படி ஒரே உதையில் மூணு பேரும் ஒன்னாச் சாஞ்சிட்டானுக..?' அர்ச்சனா இமை கொட்டி விழித்தாள்..
"வா.."
அவளை முரட்டுத்தனமாய் இழுத்தபடி பூங்காவை விட்டு வெளியேறினான் கதிர்வேலன்..
காரில் ஏறி வீடு வந்து சேரும் வரை அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.. அவனுடன் பேச வேண்டும் என்று அவள் சொன்னதற்காக டிரைவரை மறுத்து விட்டு அவனே காரை ஓட்டிக் கொண்ட வர ஒப்புக் கொண்டிருந்ததால்.. காருக்குள் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமில்லை..
அர்ச்சனாவின் வீடு இருக்கும் பகுதியை கார் நெருங்கிய போது அவள் தயக்கத்துடன்..
"கதிர்.." என்று அழைத்தாள்.. அவன் கண்கள் சிவக்கத் திரும்பி அவளை முறைத்தான்..
"நான் கதிர்வேலன்.. பிரகாசமில்ல.. என் கடமையை நிறைவேற்றத்தான் நான் திரும்பி வந்தேன்.. டிரைவர் வேண்டாம்ன்னு நான்தானே சொல்லி காரை ஓட்டிக்கிட்டு வந்தேன்..? உன்னை திருப்பிக் கொண்டு போய் விட வேண்டிய கடமை எனக்கிருந்துச்சுல்ல.. அதான்.. என் கடமைக்காக திரும்பி வந்தேன்.. வந்து பார்த்தா நீ ஆபத்தில இருந்த.. காப்பாத்தினேன்.. நீயின்னு இல்ல.. உன் நிலைமையில எந்தப் பொண்ணு இருந்தாலும் நான் இதைத்தான் செய்திருப்பேன்.. மத்தபடி நான் சொன்னது சொன்னதுதான்.. இனிமே நீ யாரோ.. நான்யாரோதான்.."
அவள் வீட்டுப் போர்டிகோவில் காரை நிறுத்தி விட்டு இறங்கியவன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகமாக வீட்டுக்குள் போய் விட்டான்.. வாசலில் தேங்கி நின்ற அர்ச்சனாவுக்கு அழுகை.. அழுகையாய் வந்தது.. அவனுடைய பாராமுகத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
அன்று இரவு முழுவதும் தூக்கமின்றி அவள் தவித்தாள்.. மறுநாள் காலையில் எழுந்ததும் அவனைத் தேடிப் போனபோது அவள் முகம் பார்க்காமல்..
"கதிர் ஊருக்குப் போயாச்சு.." என்று சொன்னாள் பத்மா...
"அம்மா.." அர்ச்சனா விக்கித்து விட்டாள்..
போய் விட்டானா..? அவளிடம் ஓர் வார்த்தை கூடச் சொல்லாமல் அவனுடைய ஊருக்குக் கிளம்பிப் போய் விட்டானா..?
"ஏன்..?"
"எனக்குத் தெரியாது.. நீ காலேஜீக்குக் கிளம்பு.. உனக்கான டிபன் டைனிங் டேபிளில் ரெடியா இருக்கு.. உன் அப்பாவிடம் சொல்லி விடு.. பத்மா அவளோட வேலையை முடிச்சுட்டுத்தான் ரெஸ்ட் எடுக்கப் போயிருக்கான்னு.."
விட்டேற்றியாய் பேசிவிட்டு நகர்ந்த தாயைப் பார்த்தபோது அவள் மனதில் தனிமை சூழ்ந்தது.. அவளுக்குத் தெரியும்.. பத்மா இல்லாத வெறுமையையும் தனிமையையும் இட்டு நிரப்ப பிரகாசத்தாள் ஒருபோதும் முடியாது என்பது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -13
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -13
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirththene-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy