உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே-31

31 மணம் பரப்பாத மலரும்... இசை பரப்பாத யாழும்.. ஒளி பரப்பாத நிலவும்.. இப் புவியில் இல்லையடி தோழி..! "யெஸ்... அவங்க உன்னை...

31
மணம் பரப்பாத மலரும்...
இசை பரப்பாத யாழும்..
ஒளி பரப்பாத நிலவும்..
இப் புவியில் இல்லையடி தோழி..!


"யெஸ்... அவங்க உன்னைப் பெண் பார்க்கத்தான் வந்திருந்தாங்க..."
கோட்டைக் கழற்றியபடி வெகு நிதானமாகச் சொன்னார் பிரகாசம்.. அதிர்ந்து நின்றாள் அர்ச்சனா..
"அப்பா.. நீங்களா இதைச் செய்தது..? ஐ கான்ட் பிலிவ் திஸ்.. என் அப்பா எனக்கு விருப்பமில்லாம கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறாரா..?"
"உன்னைக் கேட்கலைன்னு சொல்லு.. உனக்கு விருப்பமில்லைன்னு சொல்லாதே.. விருப்பமில்லாம எப்படிப் போகும்..? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தவன் சாதாரண ஆளில்ல.. பிஸினெஸ்மக்னெட்.. பரம்பரை கோடிஸ்வரன்.. என் பக்கச் சொந்தக்காரன்.. வீட்டுக்கு ஒரே மகன்.. இவனைக் கல்யாணம் பண்ணிக்க நீ கொடுத்து வைத்திருக்கனும்.."
"நான் கொடுத்து வைக்க வேணாம்ப்பா.."
"முட்டாள் மாதிரி பேசாதே அர்ச்சனா.. என்னைவிட பலமடங்கு அதிகமான பணம் அவனிடம் இருக்கு.."
"இருந்தா..?"
அர்ச்சனாவின் மனதிற்குள் கோபம் வந்தது.. பிரகாசம் எதற்காக இப்படிப் பேசுகிறார் என்று அவள் ஆத்திரம் கொண்டாள்.. பணம்.. பணம்.. என்று பேசுகிறவரால் கதிர்வேலனின் வீட்டிலிருக்கும் உயிர்ப்பைப் புரிந்து கொள்ள முடியுமா என்றிருந்தது அவளுக்கு...
'பணம் மட்டுமே வாழ்க்கையில் சந்தோசத்தைக் கொடுத்து விடாது.. இதை நீ புரிஞ்சுக்கிற காலமும் வரும்..'
கண்ணனின் வார்த்தைகள் அவள் நெஞ்சினில் சுழன்றன...
அவன் என்ன யட்சனா..? எப்படி மிகச் சரியாக அவளது வாழ்வின் போக்கைக் கணித்தான்..? இன்று அவள் புரிந்து கொண்டு விட்டாளே.. பணத்தினால் சந்தோசத்தையும்.. உயிர்ப்பையும் விலை கொடுத்து வாங்கி விடமுடியாது என்பதை தெரிந்து கொண்டு விட்டாளே...
"எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைப்பா.."
அர்ச்சனா மறுத்து விட்டாள்.. பிரகாசம் நிமிர்ந்து பத்மாவை சுட்டெரிப்பதைப் போல பார்த்தார்.. அவரின் கூர்மையான அந்தப் பார்வையில் அவள் புருவம் சுருங்கினாள்..
"இதைத்தானே நீ எதிர்பார்த்த..?"
அவரின் கேள்வியில் பத்மா கொதித்துப் போனாள்.. பெண்ணைப் பெற்றவளிடம் ஒருவார்த்தை கூட கலந்து பேசாமல் பெண் பார்க்க அவருடைய சொந்தக்காரர்களை அவர் வரவழைத்து விட்டதில் மனக்கசப்புடன் இருந்தவளை பிரகாசத்தின் வார்த்தைகள் உசுப்பி விட்டன..
"எதையும் நான் எதிர்பார்க்கலை.. என் பெண்ணைப் பெண் பார்க்க உங்க சொந்தக்காரங்க இன்னைக்கு வந்து நிற்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை..."
"ஓ.. என் சொந்தக்காரனுக்கு பெண்ணைக் கொடுக்காம உன் பெரியப்பா மகன் பெத்து வைத்திருக்கிற அந்த ரௌடிக்கு பெண் கொடுப்பேன்னு நீ எதிர் பார்த்தியோ.."
இது எப்படி அவருக்குத் தெரிந்தது என்ற பதட்டத்துடன் தாயும்.. மகளும்.. அவரின் முகத்தைப் பார்த்தார்கள்..
"எல்லாம் எனக்குத் தெரியும்டி.. கடைசியில என் மகளையே எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டல்ல.. நீ கெட்டிக்காரிதாண்டி..."
"அப்பா.. அம்மாவைக் குற்றம் சொல்லாதீங்க..."
"நீ பேசாதே.. என்னைக்கும் இல்லாம உனக்கு தலைவலி வந்தப்பவே நான் சந்தேகப்பட்டேன்.. அதுக்கு வைத்தியமா ஊர் விட்டு ஊர் போகச் சொன்ன டாக்டர் ராம்மோகன் கண்ணனுக்கு பிரண்டா இருந்தான்.. திருநாவுக்கரசுகிட்ட கேட்டேன்.. தொடர்ந்தடியா இரண்டு நாள் சேர்ந்தாப்புல நீ கண்ணனைப் போய் பார்த்து பேசியிருக்கிற.. ஒன்னும்.. ஒன்னும் இரண்டுன்னு கணக்குப் போடக்கூடத் தெரியாத கூமுட்டையில்ல உன் அப்பா.. அதுக்கேத்தாப்புல நீ ஊட்டி கொடைக்கானலை அவாய்டு பண்ணிட்டு வொகேனக்கல் பக்கமா கை காட்டின.. ஓசூருக்கும் வொகேனக்கல்லுக்கும் இடையில என்பது கிலோ மீட்டர் இடைவெளிதான்ங்கிறது எனக்குத் தெரியாதா..?"
"அப்பா..."
"உன்னை ஃபாலோ பண்ண ஆள் அனுப்பினேன்.. என் சந்தேகம் வீண் போகலை.. நீ பாதிவழியிலேயே லீவ் ஆசையைக்காட்டி மகேஷைக் கழட்டி விட்டுட்ட.. ஓசூருக்குப் போய் இறங்கிட்ட.. நீங்க அங்கே இருந்த ஒவ்வொரு நாளும் எங்கேயெங்கே போனீங்கன்னு எனக்கு டெய்லி ரிப்போர்ட் வந்துக்கிட்டே இருந்தது.."
காவேரிப் பாட்டியின் ஊருக்குப் போனதை அவர் அறிந்து வைத்திருக்கிறார் என்ற நினைவில் உதட்டைக் கடித்தாள் அர்ச்சனா...
"என் மனைவியும் மகளும் என் விரோதியின் வீட்டுக்கு என்னிடம் பொய் சொல்லி விட்டுப் போய் உறவு கொண்டாடிட்டு வர்றாங்க.. அன்றைக்கே நான் முடிவு பண்ணிட்டேன்.. உன்னை என் ஸ்டேட்டஸ்க்கு இணையான என் சொந்தக்காரனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு.."
"நீங்க முடிவு பண்ணினாப் போதுமா..?"
ஆத்திரத்துடன் கேட்டாள் பத்மா.. அவளின் உரிமை மறுக்கப்பட்ட போது அவள் தாய் அவளுக்காக பரிந்து பேசவில்லை.. இங்கே அப்படியில்லையே... அர்ச்சனாவுக்காக பரிந்து பேச அவளிருக்கிறாளே...
"இது என் வீடு.. இவ என் மகள்.. ஸோ.. டிஸிசன் அத்தாரிட்டி என்னிடம் மட்டும்தான் இருக்கு..."
"அப்ப நான் யார் இந்த வீட்டில..?"
"என் கடைக்கண் பார்வை பட்டதாலே.. குப்பையில கிடந்து கோபுரத்தில ஒட்டிக்கிட்டவ..."
"யாருக்கு வேணும் உங்க கோபுரம்..? நான் கேட்டேனா.. குப்பை மேடு வேண்டாம்.. கோபுரம்தான் வேண்டும்ன்னு நான் கேட்டேனாங்கிறேன்.."
"நீயேண்டி கேட்கப் போகிற..? குப்பையைக் கிளர்ற கோழிககு வைரத்தோட மதிப்பு தெரியுமாடி..? நீயும் அப்படித்தான்.. ஆனா என் பெண்ணையும் உன்னைப் போல ஆக நான் விடமாட்டேன்..."
"அதைத்தான் நானும் சொல்றேன்.. அவ என்னைப் போல ஆகிவிடக் கூடாது.. மனதுக்குப் பிடித்த வாழ்வை வாழனும்.."
"என்னடி சொன்ன..?"
மிருகமாகி விட்டார் பிரகாசம்.. அவரின் ஓங்கிய அறைகளில் தரையில் விழுந்த பத்மாவைப் பார்த்து விரல் உயர்த்தி எச்சரிக்கை விடுத்தார்..
"உன்னைக் கொன்று புதைக்க நான் தயங்க மாட்டேன்... ஜாக்கிரதை..."
மீண்டும் கை ஓங்கியவரின் முன்னால் விழுந்து மறித்த அர்ச்சனா அவரைத் தடுத்து நிறுத்தினாள்...
"இப்ப  உங்களுக்கு என்னதாம்ப்பா வேணும்..?"
"நான் பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளையைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்.."
"சரி.."
அர்ச்சனாவின் ஒற்றைச் சொல்லில் தரையில் விழுந்திருந்த பத்மா துடித்துப் போனாள்...
"அர்ச்சனா.. அவசரப்படாதே.."
"நீங்க பேசாதீங்கம்மா.. இது என் வாழ்க்கை.. அப்பா சொன்ன மாப்பிள்ளையைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..."
"இவ என் மகள்டி..."
வெற்றிப் பார்வையுடன் பிரகாசம் மாடிக்குப் போய் விட்டார்.. அர்ச்சனா தோட்டத்துக்குப் போனாள்.. அன்று ஒருநாள் கதிர்வேலனுடன் அவள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் ஏறி அமர்ந்தாள்... முழங்கால்களைக் கட்டித் தலையைக் கவிழ்த்தாள்... அவளது விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது..
"ஏண்டி அப்படிச் சொன்ன..?" பத்மாவின் ஆத்திரமான குரலில் தலையை நிமிர்ந்தாள்..
"அம்மா..."
"அப்படிக் கூப்பிடாதே.. கடைசியில நீயும் உன் அப்பாவைப் போலத்தான்னு காட்டிட்ட இல்ல.. அதுசரி.. பெற்றது நானா இருந்தாலும்.. உன் உடம்பில் ஓடறது உன் அப்பாவின் ரத்தமாச்சே.. மனசைப் பத்தி உங்களுக்கென்னடி தெரியும்..? அன்றைக்கு நான் என் அண்ணியோட தம்பி மனசைக் கொன்று கூறு போட்டேன்.. இன்றைக்கு உன் முறையாடி..? என் அண்ணியோட மகனின் மனசைக் கொல்லப் போறியா..?"
"அம்மா..."
"அன்றைக்கு நான் வரதராஜனின் மனசைக் கொன்றேன்னா அதற்கான நிர்பந்தம் எனக்கு இருந்தது.. உனக்கு என்ன நிர்பந்தம் இருக்கு அர்ச்சனா..?"
"அம்மா..."
"என்னைப் போல நீயும் ஆகனுமா அர்ச்சனா..? உன் அப்பா மனசு போல அவருடன் சந்தோசமா வாழவும் முடியாம.. அவரை விட்டுப் போகவும் முடியாம இத்தனை வருசமா எனக்குள்ளே நான் போராடிக்கிட்டு இருக்கேனே.. அந்தப் போராட்டத்தை நீயும் போராடனுமா..?"
"அம்மா..."
"உன் அப்பாவைப் போல நீயும் பணத்தைப் பெரிசா நினைச்சுட்டியேடி.. மனதைப் பெரிசா நினைக்கலையே.."
"அம்மா..."
"உன் அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளை உன் அப்பா சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்காக உன்னைக் கட்டிக்குவான்.. ஆனா என் அண்ணன் மகன் கதிர்வேலன் உன்னையே சொத்தா நினைக்கிற பிள்ளைடி.. அதோட மதிப்பு உனக்கு எங்கே தெரியப் போகுது..?"
பத்மா வெறுப்புடன் வீட்டுக்குள் சென்று விட்டாள்.. அர்ச்சனாவின் செல்போன் இசைத்தது.. இயந்திரம் போல எடுத்து யாரென்று கூடப் பார்க்காமல் காதுக்கு கொடுத்தாள்..
"ஹலோ..."
"நானாடி உன்னைக் காதலிக்கச் சொன்னேன்..?" மறுமுனையில் சீறினான் கதிர்வேலன்..
"கதிர்.." அர்ச்சனா திக்கித் திணறினாள்..
"அத்தை இப்பத்தான் போன் போட்டாங்கடி.. கடைசியில உன் அப்பனுக்கு ஏத்த மகள்ன்னு புரூவ் பண்ணிட்டல்ல.. நீயெல்லாம் ஏண்டி வாக்குக் கொடுக்கிற..? என்னைத் தேடிவந்து காதலிக்கிறதா சொன்னவ நீதானேடி.. எதுக்காகடி காதல் சொன்ன..? உன் அப்பன் மிச்சம் வைத்திருக்கிற பகையைத் தீர்த்து விடலாம்ன்னு சொன்னயா..? உனக்கு இருக்கிறது எத்தனை நாக்குடி..? எனக்கு வாக்குக் கொடுத்த அதே நாக்குத்தானே உன் அப்பாவுக்கும் வாக்குக் கொடுத்திருக்கு..? கடைசியில என் வரதராஜ மாமா சொன்னதை உண்மையா ஆக்கிட்டயேடி.."
கதிர்வேலன் பொரிந்து தள்ளி விட்டான்.. அர்ச்சனாவிற்கு 

பேசுவதற்கான வாய்ப்பை அவன் கொடுக்கவே இல்லை


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே-31
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே-31
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy