உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -27

27 நீரோடு செல்கின்ற ஓடத்தின்... நீயாயங்களை நீ அறிவாயா .. ? "எங்கே போறோம்.. ?" மலைப்பாங்கான கிராமச் சாலையில் ஓடிக்...


27
நீரோடு செல்கின்ற ஓடத்தின்...
நீயாயங்களை நீ அறிவாயா..?



"எங்கே போறோம்..?"
மலைப்பாங்கான கிராமச் சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரில்.. காரை ஓட்டிக் கொண்டிருந்த கதிர்வேலனின் அருகில் அமர்ந்திருந்த அர்ச்சனா கேட்டாள்..
"என் பாட்டியின் வீட்டுக்கு.."
"மாமாவோட அம்மாவா..?"
"ஊஹீம்.. அம்மாவோட அம்மா.."
"அவங்க இந்தக் கிராமத்தில தனியாவா இருக்கிறாங்க...?"
"ஒருவகையில் அப்படித்தான்.."
"புரியலை..."
"கூட அவங்க மகனும் இருக்கிறார்.. ஆனா அவர் கூட இருக்கிறார்ன்னு சொல்ல முடியாது.. நினைச்சா வருவார்.. நினைச்சா போவார்.. அவரை ஒரு கணக்கில எடுத்துக்க முடியாது.."
"அவங்க மகன்னா..?"
"எனக்கு தாய்மாமா.."
"ஓ..."
அர்ச்சனா அதற்கு மேல் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.. அவனுடனான அந்தக் கார் பயணத்தை ரசித்தவளாய் அவன் தோள்மீது தலைசாய்த்துக் கொண்டாள்.. அவனும் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தான்..
குளுமையான காற்றும்.. மரங்கள் அடர்ந்த சூழலும் அவளை எங்கோ அழைத்துச் சென்றன.. கிராமத்தில் நுழைந்த கார்.. வீட்டுக்கு முன்னால் பெரிய திண்ணைகளோடும்.. அகன்ற தடிமனான தூண்களோடும் இருந்த வீட்டின் முன்பாக நின்றது..
இறங்கியவர்களை வாசலில் வந்து வரவேற்றாள் காவேரிப் பாட்டி..
"பாட்டி.. இவதான் அர்ச்சனா.."
அவன் அறிமுகப் படுத்திய போது எதற்காக அவளைக் கட்டிக் கொண்டு காவேரிப் பாட்டி அழுதாள் என்று அர்ச்சனாவுக்குப் புரியவில்லை...
"உள்ளே வாம்மா.."
அர்ச்சனாவை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.. கூடத்தின் நடு மையத்தில் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது.. அதில் கதிர்லேவன் உட்கார்ந்தான்.. காவேரிப் பாட்டி கவனிக்காத சமயத்தில் அர்ச்சனாவையும் இழுத்து உட்கார வைத்துக் கொண்டான்..
அதை கண்டு கொள்ளாததைப் போல குறுநகையுடன் உள்ளே போய் விட்டாள் காவேரிப் பாட்டி.. இரண்டு தட்டுக்களில் குழிப் பணியாரங்களை நிரப்பி அவள் கொண்டு வந்த போது இளசுகள் இருவரும் ரகசியம் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்..
"வாவ்.. குழிப் பணியாரமா..? எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாட்டி.."
ருசித்துச் சாப்பிட்ட அர்ச்சனாவை எதற்காக அந்த அளவுக்கு வாத்சல்யத்தைக் கண்களில் தேக்கிக் கவனித்துப் பார்த்தாள் காவேரிப் பாட்டி என்றும் அர்ச்சனாவுக்குப் புரியவில்லை...
கதிர்வேலனிடம் ரகசியமாகக் கேட்டபோது அவன் மௌனம் சாதித்தான்.. அவன் முகம் மாறிப் போயிருந்தது.. கற்பாறையின் கடினத்தோடு இருந்த அவன் முகத்தைப் பார்க்கவே அர்ச்சனாவிற்கு பயமாக இருந்தது...
வேலை மெனக்கெட்டு அவளை அந்தக் கிராமத்திற்கு எதற்காக அவன் அழைத்து வந்தான் என்பது அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது..
"மாமா எங்கே பாட்டி..?" கதிர்வேலன் மௌனத்தை உடைத்துக் கேட்டான்..
"யாருக்குத் தெரியும்..?" காவேரிப் பாட்டி கண்ணீர் சிந்தினாள்..
"ரெண்டு மாசத்துக்கு முன்னாலே வந்தவன்தான்.. இன்னும் கண்ணில காணலை.. எங்கே அலைகிறானோ.. என்னசெய்கிறானோ.. இது கொடுமைடா கதிர்வேலா.."
பொங்கி அழுத காவேரிப் பாட்டியைத் தேற்றும் வகை தெரியாமல் திகைத்தாள் அர்ச்சனா..
"ஏன் கதிர் இப்படி அழுகிறாங்க..?" பயத்துடன் கதிர்வேலனிடம் ஒன்றினாள்..
"விதி..! அழுகிறாங்க.. வேற என்னத்தைச் சொல்ல..?"
சிவந்த கண்களை உருட்டிக் கதிர்வேலன் பதில் சொன்ன தினுசில் இவனிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கவே கூடாது என்ற காலங்கடந்த ஞானோதாயம் அர்ச்சனாவுக்குள் ஏற்பட்டது..
வாசலில் ஏதோ சப்தம் கேட்டது.. காவேரிப் பாட்டி யாரென்று பார்த்து விட்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனாள்.. போனவள் திரும்பி வந்தபோது அவளுடன் தாடி மீசையும்.. அழுக்கு உடைகளுமாக ஒல்லியான ஒரு மனிதர் வந்தார்..
"மாமா.." கதிர்வேலன் ஊஞ்சலில் இருந்து அவசரமாக எழுந்து அவர் பக்கமாக சென்றான்..
"கதிர்.." அர்ச்சனா பயத்துடன் கதிர்வேலனின் பின்னால் ஓடினாள்..
"யாரு..?"
கதிர்வேலனைக் கவனிக்காமல் அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நின்ற அர்ச்சனாவின் முகத்தையே உற்றுப் பார்த்தார் அந்த மனிதர்.. அவர் விழிகளின் தீட்சண்யமான தேடுதலில் நடுங்கிப் போனாள் அர்ச்சனா..
"அது யாரோ ஒரு தெரிஞ்ச பொண்ணுப்பா.. நீ உள்ளே வா..."
அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போக முயன்றாள் காவேரி அந்த மனிதர் நகரவில்லை.. அர்ச்சனாவையே உற்றுப் பார்த்தவரின் கண்களில் இனம் கண்டு கொண்ட மின்னல் வந்ததில்..
"கடவுளே.." என்று பயந்து போனாள் காவேரிப் பாட்டி..
"இன்னைக்குப் பார்த்துத்தானா இவன் வந்து நிற்கனும்..? இத்தனை மாசமா வீட்டுப் பக்கம் வராதவன்.. வராத விருந்தாளி வந்திருக்கிற நேரம் பார்த்து வந்திருக்கானேடா கதிர்வேலா.."
"விடுங்க பாட்டி.. எல்லாம் இறைவன் செயல்.. நடக்கனும்னு விதிச்சிருக்கு பாட்டி.. நாம என்ன செய்ய முடியும்..?"
பேச்சு பேச்சாக இருக்க.. எதிரே நின்றவரின் முகத்தில் தெரிந்த உணர்வலைகளையே அவதானித்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன்.. அர்ச்சனாவோ அவரின் பார்வையிலே அரண்டு போனவளாக அவன் முதுகோடு பல்லி போல ஒட்டிக் கொண்டிருந்தாள்..
"இது.. இது.. பத்மாவோட பெண்தானே..!"
அவர் சரியாக அடையாளம் கண்டு கொண்டதில் அர்ச்சனா ஆச்சரியப்பட்டுப் போனாள்.. அடுத்து அவர் பேசியவார்த்தைகள்தான் அவளைப் புரட்டிப் போட்டு அடித்தன..
"வேண்டாம்டா கதிர்வேலா.. அம்மாவைப் போலத் தான் பெண்ணும் இருப்பா.. இவ உன்னை உயிரோடு சாகடிச்சுருவாடா.. விட்டிருடா.. இந்தக் குடும்பத்துக்கு ஒரு வரதராஜன் போதும்டா.. நீயும் கூட்டுச் சேர்ந்திராதேடா.. இவளை தள்ளி நிறத்து.."
வரதராஜனின் கூக்குரலில் காவேரிப் பாட்டி கதிர்வேலனை வாசலுக்கு இழுத்துக் கொண்டு போனாள்.. கதிர்வேலனே இழுத்துச் சொல்லப்படும் போது அர்ச்சனா எதற்காக அங்கே நிற்கப் போகிறாள்..? அவள் கதிர்வேனைத் தொடர்ந்து ஓட்டம் பிடித்தாள்..
"நீ கிளம்புடா பேராண்டி.."
காவேரிப் பாட்டி கை குவித்து விட்டாள்... அதற்கு மேலும் அவளைச் சோதனைக்கு ஆளாக்க வேண்டாமென்று கதிர்வேலன் காரில் ஏறிவிட்டான்.. அவன் அழைப்பதற்குள் அவசரமாக காருக்குள் பாய்ந்து விட்டாள் அர்ச்சனா..
"ஏன் அவர் அப்படிச் சொன்னார்..?"
கிராமத்தை விட்டுக் கார் வெளியேறிய பின்பு ஆசுவாசமாக பெருமூச்சை விட்ட அர்ச்சனா கேட்டாள்..
கதிர்வேலன் பதில் சொல்லாமல் சுழித்தோடிய ஆறின் அருகே காரை நிறுத்தினான்.. இறங்கிச் சென்று நதிநீரில் முகம் பார்த்தான்..
"அவர் அப்படித்தான் சொல்வார் அர்ச்சனா.. ஒரு வகையில் அவரது பயம் உண்மையானதுதான்.. ஏன்னா.. அவரோட இந்தப்பித்து பிடிச்ச நிலைமைக்கு உன் அம்மாதான் காரணம்.."
"கதிர்.."
அர்ச்சனாவின் முன்னால் திறக்காத பல கதவுகள் திறந்தன.. சின்னஞ்சிறுமியாக அவளிருந்த போது.. கும்பகோணத்துப் பக்க கிராமத்தில் ஆற்றங்கரையில் அவளுக்கு பத்மா பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது.. பரிதாபமான முகத்துடன் அவளிடம் வந்து கெஞ்சிப் பேசிய அந்த மனதரின் முகத்தை இன்று நினைவு கூர்ந்தாள் அவள்..
'அவர்.. இவர்தான..' அவள் மூளையில் மின்னல் வெட்டியது..
"கதிர் இவரை நான் பார்த்திருக்கேன்.." பரபரத்தாள்..
"உன் அம்மாவிடம் பேச டிரைபண்ணியிருப்பார்.. அப்ப பார்த்திருப்ப.. ஆனா.. அத்தை பேசியிருக்க மாட்டாங்களே.."
"கரெக்ட்.. அம்மா பேசலை.."
"அவங்களாலே பேச முடியுமா அர்ச்சனா..? உயிருக்குயிராய் காதலித்த மனிதரை விட்டு விட்டு உன் அப்பாவுக்கு கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம் அவங்களுக்கு உண்டாகிருச்சு.. அதுக்கப்புறம் அவங்களாலே வரதராஜ மாமாவிடம் பேச முடியுமா..?"
"ஆனா கதிர்.. அம்மா ஏன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க..? உங்க வரதராஜ மாமா அம்மாவுக்கு முறை மாமன் சொந்தம்தானே..? இருந்தும் ஏன் அம்மாவின் காதல் தோற்றுப் போனது..?"
அன்பான அப்பாவை ஏன் அம்மா திருமணம் செய்து கொண்டாள் என்று கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதற்காக நொந்து போனாள் அர்ச்சனா..
ஆனால் அந்தக் கேள்வியை அவள் கேட்டுத்தானே ஆக வேண்டும்..? அது போன்ற தருணத்தில் அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க அவளால் முடியுமா..?
"முதல்ல ஒன்னு சொல்றேன் கேட்டுக்க.. உன் அம்மா உன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கலை.. உன் அப்பாதான் உன் அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. அதுக்கான வழிமுறைகளா சாம.. தான.. பேத.. தண்டம்ன்னு அனைத்து முறைகளையும் கையில் எடுத்துக்கிட்டார்.. உன் அப்பா உன் அம்மாவுக்கு யாரோ தான்.. என் தாய்மாமா உன் அம்மாவுக்கு முறைமாமன் மகன் தான்.. இருந்தும் என்னத்தை கிழித்து விட முடிந்தது..? இந்த முறைமாமன் மகன் சொந்தத்தால் உன் அப்பா உன் அம்மாவின் கழுத்தில் தாலி கட்டுவதை தடுத்து நிறுத்த முடியவில்லையே..."
பத்மாவுக்கு நடந்தது கட்டாயத் திருமணம்.. அது அவளுக்கு விருப்பமில்லாத திருமணம் என்ற உண்மையில் அதிர்ந்து நின்றாள் அர்ச்சனா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -27
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -27
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy