உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -21

21 குழந்தையைத் தூங்கவைக்க.. நீலாம்பரி பாடினாய்.. என் மனதினைத் தூங்கவைக்க.. என்ன பாடப் போகிறாய்.. ? அழகாக கதை பிணைந்து விட்டாள...


21
குழந்தையைத் தூங்கவைக்க..
நீலாம்பரி பாடினாய்..
என் மனதினைத் தூங்கவைக்க..
என்ன பாடப் போகிறாய்..?

அழகாக கதை பிணைந்து விட்டாள் அர்ச்சனா.. அவளுக்குத் தலைவலியாம்.. அதுவும் வெறும் தலைவலி இல்லையாம்.. தாங்க முடியாத தலைவலியாம்.. அவள் துடித்த துடிப்பில் அது நடிப்பென்று தெரிந்திருந்தும் பத்மா பதறித்தான் போய் விட்டாள்..
பிரகாசம் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அர்ச்சனா தலைவலியை வரவைத்துக் கொண்டதால் கண்ணனின் நண்பனான டாக்டர் ராம் மோகனுக்கு போன் போனது.. துணைப் போனாக பிரகாசத்திற்கும் தகவல் சொல்லப் பட்டது..
அடித்து விழுந்தபடி பிரகாசம் வீட்டிற்கு ஓடி வந்தால்.. ராம் மோகன் அர்ச்சனாவிற்கு விட்டமின் ஊசியைப் போட்டுக் கொண்டிருந்தான்..
"என் பொண்ணுக்கு என்ன ஆச்சு..?" என்று பதறிய பிரகாசத்தை மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடி தோரணையாக ஓர் பார்வை பார்த்தான்..
"ஸ்ட்ரெஸ்ஸஸ்..."
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்..
"என் பெண்ணுக்கு ஸ்ட்ரெஸ்ஸஸா..? எப்படி..?"
"என்னைக் கேட்டா..? நீங்கதான் அதுக்குப் பதில் சொல்லனும்.."
"இப்ப எப்படியிருக்கா ராம்..?"
"இன்ஜெக்சன் போட்டிருக்கேன் சார்.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. உங்க பெண்ணுக்குத் தேவையானத மன அமைதி மட்டும் தான்.."
பிரகாசம் குற்ற உணர்வில் நைந்து போனார்.. அவர் வீட்டில்தான் அது இல்லையே.. எப்படி அவர் மகளுக்கு மன அமைதியைக் கொடுப்பார்..?
"காலேஜீக்கு மெடிகல் லீவைக் கொடுத்துட்டு வீட்டில ரெஸ்ட் எடுக்கச் சொல்றேன் ராம்.."
"வீட்டிலயா..? நோ.. நோ.."
மறுப்பாக தலையை அசைத்தான் ராம் மோகன்..
"ஏன் ராம்..?"
"வீட்டுப் பிரச்னைகளால்தான் இவங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸஸ் வந்திருக்கனும்.. ஊட்டி.. கெடைக்கானல்.. ஏற்காடுன்னு எங்கேயாவது மலைப் பிரதேசமா பார்த்து அனுப்பி வையுங்க.."
ராம்மோகன் பரிந்துரைத்து விட்டு..
'எப்படி..?' என்று கண்களால் அர்ச்சனாவிடம் வினவ.. அவள் பிரகாசத்தின் முதுகிற்குப் பின்னாலிருந்து..
'தூள்..' என்று சைகை செய்தாள்..
ராம்மோகன் கிளம்பிப் போனதும் பிரகாசம்.. மகளை எந்த ஊருக்கு அனுப்பலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார்..
"ஏம்மா.. ஊட்டிக்கு போகிறயா.. இல்ல கொடைக்கானலுக்குப் போகிறயா..?" என்ற அவரின் கேள்விக்கு..
"ரெண்டு ஊரும் வேணாம்ப்பா.. வொகேனக்கல்லுக்குப் போகிறேன்.." என்றாள் அவரது மகள்..
"வொகேனக்கல்லா..?" அவரின் நெற்றி சுருங்கியது..
அர்ச்சனா அவரை யோசிக்க விடவேயில்லை.. தலையைத் தலையை அவள் பிடித்தபடி அவள் பேசிய விதத்தில் பிரகாசத்தின் யோசிக்கும் திறன் பறந்தே போய் விட்டது..
"ஆ.. தலை வலிக்குதுப்பா.. ஸ்ஆ.. ஊட்டி.. கொடைக்கானல் எல்லாம் ஏற்கனெவே பார்த்த இடம் தானேப்பா.. அங்கே போனா தலைவலி அதிகமாத்தான் ஆகும்.. ஸ்ஆ.."
"பொறுமையா பேசும்மா.. அலட்டிக்காதே.. அப்படியே சோபாவில் சாய்ந்து படுத்துக்கறியா..? அப்பா தலையணையை கொண்டு வரேன்..."
"வேணாம்ப்பா.. படுத்தா அதிகமா தலைவலிக்குது.."
"அப்ப வேணாம்.. வேணாம்.. இப்படியே உட்கார்ந்துக்க.. ஏம்மா..?"
"என்னப்பா..?"
"ஏற்காட்டுக்கு போயிட்டு வாயேன்.."
"அதுவே காடு.. எனக்கு அங்கே போனா பயமாயிருக்கும்ப்பா.. ஸ்ஆ.. தலையை வலிக்குதே.."
"ஸ்ட்ரெயின் பண்ணிக்காதேம்மா.. கேரளாப் பக்கம் வேனும்னா போயிட்டு வர்றியா..?"
வொகேனக்கல்லைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை சுற்றுலா வாசஸ்தலங்களையும் பிரகாசம் சொல்லிக் கொண்டே வர.. 'ஸ்ஆ.. தலையை வலிக்குதே..' என்ற பிண்ணனி இசையுடன் அத்தனை இடங்களையும் நொட்டை சொல்லி மறுத்து விட்டாள் அர்ச்சனா..
"வொகேனக்கல்ன்னா அருவி இருக்கும்ப்பா... அதைப் பார்க்கிறப்பவே தலைவலியெல்லாம் பறந்தே போய் விடும்.."
"குற்றாலத்தில் கூட அருவி இருக்கேம்மா.."
"அதில குளிச்சுக் குளிச்சு அலுத்துப் போச்சுப்பா.. நீங்க வொகேனக்கல் பக்கம்தான் இன்னும் அழைத்துக் கிட்டுப் போகலை.. அதனால ரெஸ்ட் எடுக்கப் போகனும்னா அங்கே போறேன்.. இல்லேன்னா தலைவலியைத் தாங்கிக்கிட்டு இங்கேயே இருந்துடறேன்.. 'ஸ்ஆ..' தலையை வலிக்குதே.."
நிராயுதபாணியாக நின்றார் பிரகாசம்.. அவர் என்ன தான் கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல எடுத்துச் சொன்னாலும்.. 'போனால் வொகேனக்கல்லுக்குத்தான் போவேன்.. இல்லாவிட்டால் தலை வலியோடு வீட்டுக்குள் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுப்பேன்..' என்று அடம் பிடிக்கும் மகளை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை..
"வொகேனக்கல்லுக்கு நான் வர முடியாதும்மா.. அம்மாவைக் கூப்பிட்டுக்கிட்டுப் போ.."
அர்ச்சனா கேட்காமலே பத்மாவிற்கு அனுமதி கிடைத்து விட்டது.. கட்டை விரலை உயர்த்திக் காட்டிய மகளிடம் பத்மாவிற்கு வாத்சல்யம் பெருகியது..
சிலசமயம் பிள்ளைகள் பெற்றவர்களைத் தாலாட்டு கிறார்கள்..
"வொகேனக்கல்லில என் பிரண்டோட அத்தை வீடு இருக்குப்பா.. நாங்க அங்கே ஸ்டே பண்ணிக்கறோம்.. ரிசார்ட்டெல்லாம் வேணாம்.."
"நோ.. நோ.. அடுத்தவங்க வீட்டில தங்கக் கூடாது.."
"அப்ப நீங்களும் கூட வாங்க.. அம்மாவும்.. நானும் மட்டும் தனியா ரிசார்ட்டில தங்கறதுங்கிறது சரிப்படாதுப்பா.."
அர்ச்சனா சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தார் பிரகாசம்.. அவருக்கு வொகேனக்கல் என்ற பெயரைக் கேட்டாலே ஒவ்வாமை வந்தது.. அதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்த அர்ச்சனா கச்சிதமாக திட்டம் போட்டாள்..
"அம்மாவையும்.. அர்ச்சனாவையும் கவனமா பார்த்துக்கனும் சதிஷ்.. அவங்க கூடவே இருக்கனும்.."
டிரைவருக்கு கட்டளை போட்டுத்தான் வழியனுப்பி வைத்தார் பிரகாசம்.. ஆனால் காஞ்சிபுரத்தைத் தாண்டி நான்கு வழிச் சாலையை கார் தொட்டதும் அர்ச்சனா..
"சதிஷ் அண்ணா.." என்று அன்பொழுக அழைத்தாள்...
எஜமானரின் மகள் பாசமாக அண்ணா என்ற உறவு முறையைச் சொல்லி அழைத்தால் எந்த டிரைவர் தான் கவிழ்ந்து போக மாட்டான்..
"என்னம்மா..?" என்று பாசத்துடன் கேட்டு அவன் அதில் வழுக்கி தலை குப்புற விழுந்தான்..
"காரை நிறுத்தி சாவியை என் கையில் கொடுங்கண்ணா.."
"அம்மா..?"
"அப்பாவுக்குத் தெரியாம நான் பார்த்துக்கறேன்.. நாங்களே ரெஸ்ட் எடுக்க ஊர் விட்டு ஊர் போறோம்.. அங்கேயும் சுமைபோல நீங்களும் கூட வந்தா அதுவே எனக்கு ஒரு ஸ்ட்ரெஸ்தானே.."
"அதானே..."
"பார்த்தீங்களா.. உங்களுக்கே இது புரியுது.. அப்பாவுக்குப் புரியலையே.. நீங்க லீவ் எடுத்ததே இல்லையேண்ணா.."
"ஆமாம்மா.. ஐயா கோவிச்சுக்குவார்.. அதான்.." டிரைவர் தலையைச் சொரிந்தான்...
"கவலையே படாதீங்க.. நாங்க வொகேனக்கல்லில இருக்கப் போகிற அத்தனை நாளும் உங்களுக்கு லீவுதான்.. கிளம்பறப்ப போன் பண்றேன்.. நீங்க பஸ்ஸில வந்து எங்க காரில ஜாயின் பண்ணிக்கங்க.. அதுவரைக்கும் குடும்பத் தோட என்ஜாய் பண்ணுங்க.. குலதெய்வம் கோவில் திருவிழா வருது.. போகனும்னு சொன்னீங்கள்ல..?"
"சொன்னேன்தான்.. ஆனா ஐயா லீவு கொடுக்க-லியேம்மா.."
"நான் கொடுத்தாச்சு.. கார் சாவியை இந்தப் பக்கம் தள்ளிட்டு அந்தப் பக்கம் ஓட்டம் பிடிங்க.. குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோட போயிட்டு வாங்க.. இந்தாங்க..."
"என்னம்மா..?"
"பணம்ண்ணா.. பணமில்லாம எப்படி என்ஜாய் பண்ணுவீங்களாம்..? கிராமத்தில இருக்கிற குலதெய்வ கோவிலுக்குப் போறிங்க.. அங்கே உங்க அங்காளி.. பங்காளியெல்லாம் வந்து கூடியிருப்பாங்க.. நீங்க புதுத் துணிமணிகளோட போயி இறங்க வேணாமா..? கை குளிர செலவளிக்க வேணாமா..?"
வேண்டாமா.. வேண்டாமா.. என்று கேட்டு அர்ச்சனா கொடுத்த நூறுரூபாய் கட்டுக்களில் வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான் சதீஷ்...
அவனும் மனிதன்தானே.. அவனுக்கும் கிராமத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலின் திருவிழாவுக்கு போக வேண்டுமென்ற ஆசை இருக்காதா..?
"ரொம்ப நன்றிங்கம்மா.."
அர்ச்சனாவின் கையில் இருந்த நோட்டுக் கற்றைகளை அவசரமாகப் பிடுங்கிக் கொண்டபடி நன்றி நவின்றான் சதீஷ்..
"இதை ஐயாகிட்டச் சொல்லிடாதீங்கம்மா.. நான் யார் கண்ணிலயும் படாம ராத்திரியோட ராத்தியா என் குடும்பத்தோட எங்க ஊருப்பக்கம் போயிடறேன்.. திருவிழா முடிஞ்சாலும் அங்கேயே இருக்கிறேன்.. நீங்க கிளம்பி வர்ற அன்னைக்கு நானும் கிளம்பி வர்றேன்.. நானும் ஊருப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சும்மா.. இத்தனை நாள் லீவு கிடைக்கிறது குதிரைக் கொம்பும்மா.. இந்தச் சாக்கிலயாவது எங்க ஊருப் பக்கம் திகட்டத் திகட்ட இருந்துட்டு வர்றேனே..."
அவள் சொல்ல வேண்டியதையெல்லாம் சதீஷ் சொல்லியதில் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் அர்ச்சனா..
"அதற்கென்ன அண்ணா.. நான் அப்பாகிட்டச் சொல்ல மாட்டேன்.. எனக்கென்னண்ணா.. எங்க அம்மா கூட இருக்காங்க.. ஊரில என் பிரண்டோட குடும்பம் இருக்கு.. மனசார ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பறப்போ உங்களுக்குப் போன் போடறேன்.. ஆனா ஓன்னு.."
அந்த ஒன்னு என்னவாக இருக்கக்கூடும் என்று திகிலடைந்து போனான் சதிஷ்...
"என்னம்மா..?"
"அப்பா அடிக்கடி உங்களுக்குப் போன் பண்ணி எங்களைப் பத்தி விசாரிப்பாரே.. அப்ப என்ன செய்வீங்க..?"
"நீங்க பக்கத்திலே இருக்கிறதைப் போலவே பேசி சமாளிச்சுருவேன்ம்மா.. உங்ககிட்ட என்னைப் பத்தி கேட்டா நீங்களும் அப்படியே சொல்லிருங்க.." என்றான் அவன்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -21
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே. -21
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy