உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -16

16 குளிர்காலக் காற்றின் தனிமையும்.. மழைக்கால இரவின் கொடுமையும்.. உன் நினைவை என் மனதில் விதைத்தன... சோர்வுடன் வீட்டுக்குத் திர...


16
குளிர்காலக் காற்றின் தனிமையும்..
மழைக்கால இரவின் கொடுமையும்..
உன் நினைவை என் மனதில் விதைத்தன...


சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினாள் அர்ச்சனா.. மனதுக்குள் மலையளவு பாரம் ஏறி அமர்ந்திருந்தது.. அதை இறக்கி வைக்கும் வழிதெரியாமல் தவித்தவளாக வீட்டுக்குள் நுழைந்தவளை விட்டேற்றியாக ஓர் பார்வை பார்த்துவிட்டு பூஜையறைக்குள் போய் விட்டாள் பத்மா..
'அம்மா.. என்கூடப் பேசுங்கம்மா..' மனதுக்குள் மறுகினாள் அர்ச்சனா..
தூங்கினால் தேவலையென்று தோன்றியதில் மாடியேறினாள் எதிரே வந்த பானுவின் கையில் ஒரு டைரி இருந்தது..
"சின்னம்மா.. இந்த நோட்டுப் புத்தகம் நம்ம வீட்டில தங்கியிருந்த ஐயாவோட ரூமில இருந்துச்சு.."
பானு அந்த டைரியை நீட்டினாள்.. வாங்கிக் கொண்ட அர்ச்சனா.. அது யாருடையது என்ற நினைவுடன்..
"நீ போ பானு.." என்று தலையாட்டி விட்டு அவளுடைய அறைக்குள் சென்றாள்..
டைரியைப் பிரித்தவளின் பார்வையில்..
ஆஹா.. அடுத்தவரின் அந்தரங்கத்தை
             அறிந்து கொள்வதில்
    உங்களுக்குத்தான் எத்தனை ஆசை..?
                            - கதிர்வேலன்..
என்ற வரிகள் கண்ணில் பட்டன..
என்னவோ அவனே அவள் முன்னால் நின்று புருவங்களை உயர்த்துவதைப் போல அவளுக்குத் தோன்றியதில் பட்டென்று டைரியை மூடிவிட்டாள்..
'இவனோட அந்தரங்கத்தை அறிஞ்சுக்கிட்டாலும்..'
எரிச்சலுடன் அறைக்கதவைத் தாழிட்டு விட்டுக் கட்டிலில் விழுந்தாள்.. அவள் விழுந்த வேகத்தில் அவள் கையிலிருந்த டைரி எகிறி தரையில் விழுந்து விரிந்தது.. அதன் விரிந்த பக்கங்களில் ஒரு பக்கம் அவள் பார்வையில் பட்டது..
'யார் நீ..?'
அந்தத் தலைப்பே வித்தியாசமாக இருக்க.. குனிந்து அந்தப் பக்கத்தைப் பார்த்தாள்.. கூடவே..
'நானா டைரியைப் புரட்டிப் பார்க்கிறேன்..? அதுவா தரையில் விழுந்து என்னைப் பார்.. படின்னு கண்ணை விரிச்சா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..?' என்று அவள் மனதுக்கு சமாதானமும் சொல்லிக் கொண்டாள்..
'அர்ச்சனைப் பூக்களின்..
             அழகையும் மேன்மையையும்..
    உன்னுள்ளே அடக்கி நின்றும்..
             ஒன்றுமறியாப் பேதையைப் போல்..
    கண்விரித்துச் சிரிக்கிறாயே..
             பெண்ணே..! நீ யார்..?'
அந்தக் கவிதையில் அவள் கண்கள் ஜ்வலித்தன..
'அர்ச்சனைப் பூக்கள்..'
அவன் அவளைத்தான் குறிப்பிட்டிருக்கிறான் என்று புரிந்து போனதில் அவள் மனதுக்குள் குளுமை பரவியது..
அவசரமாக எழுந்து அமர்ந்தவள் அவன் டைரியை எடுத்து மடியில் வைத்துப் பிரித்துப் படித்தாள்..
'இவன் மட்டும் என்னைக் கேட்காம என்னைப் பத்தி இவன் டைரியில எழுதலாம்.. நான் மட்டும் இவனைக் கேட்காம இவன் டைரியைப் படிக்கக் கூடாதா..?' தலையைச் சிலுப்பிக் கொண்டாள்..
அவன் அங்கு வந்து தங்கியிருந்த நாள்களில் என்ன எழுதியிருக்கிறான் என்பதைப் பற்றி அறியும் ஆவல் அவள் மனதில் குறுகுறுத்தது..
'அத்தையின் வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டுமா..? ஆமாம் என்கிறார்கள் அம்மா.. எனக்கு அதில் விருப்பமில்லை.. அதிக நாள்கள் ஆனால்தான் என்ன..? காஞ்சிபுரத்தில் தங்குவதற்கு ஹோட்டல்கள் இல்லாமல் போய் விட்டதா என்ன..?'
அந்தப் பக்கத்தின் வரிகள் காஞ்சிபுரத்திற்கு வந்தாலும் பத்மாவின் வீட்டில் தங்க அவன் பிரியப் படாததை தெரிவித்தது.. அர்ச்சனாவின் மனம் கூம்பியது.. அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்..
'அழகாக இருக்கிறாள்.. அத்தையின் பெண்ணாம்.. பிரகாசத்திற்கு இப்படியொரு மகளா..?'
அவளின் கேள்வியில் அவள் முகம் கோபத்தில் சிவந்தது...
'ஏன் இருக்கக் கூடாதா..?' என்ற கேள்வியுடன் அதற்கடுத்த பக்கத்திற்கு தாவினாள்..
'அத்தான் என்று அழைக்க மாட்டாளாம்.. ஆனால்.. அவளுடைய தோழி என்னை ஆர்வமாகப் பார்த்தால் சண்டைக்குப் போவாளாம்.. பெண்ணே..! உன் பெயர் என்ன..? புதிரா..?'
'போடா..' நாக்கை மடித்துக் கடித்துக் கொண்டே அர்ச்சனாவின் முகத்தில் இளநகை பரவியது..
'இவன் கள்ளன்..' என்ற நினைவுடன் டைரியில் பார்வையைப் பதித்தாள்..
'என் கூடப் பேச விரும்பினாள்.. அவளுடைய அப்பா வந்ததில் பேச்சு நின்றுவிட்டது.. அவள் மனம் அதிலேயே உழலும் என்பது எனக்குப் புரிந்தது.. தோட்டத்திற்கு வர வைத்தேன்.. பேசினேன்.. அதில் அவள் முகத்தின் சஞ்சலம் மறைந்து நிம்மதி பரவயிதில் எனக்குள் எதற்காக இத்தனை சந்தோசம் வருகிறது..?'
அர்ச்சனாவின் கண்கள் பனித்து விட்டன.. டைரியைப் புரட்டினாள்.. அவள் மனக்கண்ணில் அவனுடன் தோட்டத்தில் பேசிய அன்றைய நாள் நினைவுக்கு வந்தது..
'வேண்டாம்.. மனமே சொன்னால் கேட்டுக் கொள்.. அவள் என் அத்தையின் மகளாக இருக்கலாம்.. ஆனால் கூடவே பிரகாசத்திற்கும் அவள்தான் மகள்.. அதை மறந்து விடாதே..'
'இவனுக்கு எதற்காக என் அப்பாவின்மீது இத்தனை வன்மம்..?'
அர்ச்சனாவுக்குப் புரியவில்லை.. பிரகாசத்திடம் குறைகள் உண்டுதான்.. ஆனால் அவளைப் பொருத்தவரை அவர் அருமையான அப்பாவாயிற்றே.. அவரை கதிர்வேலன் குறைசொல்வதை அவளால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்..?
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாலும் அவள் டைரியின் அடுத்த பக்கத்தைப் படிக்கத்தான் செய்தாள்...
'இளங்கோ கைவிரித்து விட்டான்.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. தொழிலை விட்டு விடுவதா..? அவனுக்கு எத்தனையோ செய்திருக்கிறேன்.. அத்தனையும் அவனுக்கு மறந்து விட்டதா..? ம்ஹீம்.. இது நன்றி கொன்றவர்களின் உகலம்..!'
கதிர்வேலனின் விரக்தியில் அர்ச்சனாவின் கை டைரியைப் புரட்டுவதை நிறுத்தியது..
'இது என்ன..? இவன் என்ன சொல்கிறான்..?'
கதிர்வேலனின் எழுத்துக்கள் கொட்டிய வேதனையில் மனம் நைந்தாள் அர்ச்சனா.. அவள் மனதுக்குப் பிடித்தவனின் மனதில் இத்தனை குமுறலா..? ஏன்..?
அவளும்.. பத்மாவும் அவனுடன் கோவிலுக்குப் போயிருந்த போதுகூட இதுபோல ஏதோ பத்மாவிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை இப்போது நினைவு கூர்ந்தாள் அர்ச்சனா..
'இவனுக்கு என்ன பிரச்னை..?'
அவள் முகத்தில் குறுகுறுப்பு மறைந்து யோசனை வந்திருந்தது... தீவிரமான முகபாவத்துடன் டைரியை ஊன்றிப் பார்த்தாள்..
'அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. அவங்க நகைகளையும்.. ராதாவின் நகைகளையும் போட்டு ஆரம்பித்த தொழில்..! கேட்டதும் தூக்கிக் கொடுத்துட்டாங்க.. எத்தனை நம்பிக்கையாய் கொடுத்தாங்க.. அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தானா..? நான் விழலை விதைக்கவில்லையே.. விதையைத்தானே விதைத்தேன்.. பயிராக அது மாறாமல் விழலாக எப்போது.. எந்த நொடியில் மாறியது..?'
திடகாத்திரமான கதிர்வேலனின் ஆறடி உயரத் தோற்றம் அவள் மனதில் வந்து நின்றது..
ஆண்மை மிகுந்த கம்பீரமான தோற்றம்.. கண்களில் ஒரு கண்டிப்பு.. சிரிக்கக் கூலி கேட்கும் முகம்.. பிரகாசத்திடம் பேசும் போதும்.. பிரகாசத்தைப் பற்றிப் பேசும் போதும்.. அவனிடம் தெரியும் குரோதம்.. நீபாவிடம் பேசும்போது வெளிப்பட்ட மிடுக்கு.. அர்ச்சனாவிடம் பேசும் போது தெரிந்த குழைவு.. பத்மாவிடம் பேசும் போது வந்து அமர்ந்த வாத்சல்யம்.. என்று பல்வேறு முகத்தோற்றங்களைக் காட்டிய அவன் தோல்வியை மனதில் சுமந்து கொண்டு வந்து நின்றவனா..?
'கொடுமை..!' அவள் கண்களில் நீர் துளிர்த்தது..
'உத்தம்சந்த்திடம் கடனாகக் கேட்டு விட்டேன்.. ஈடாக சொத்துப் பத்திரங்களைக் கேட்கிறான்.. இவன் தொழில் ஆரம்பிக்கப் பணம் கேட்டபோது கொடுத்தேனே.. அப்போது எந்தப் பத்திரத்தை ஈடாக நான் கேட்டேன்..? வட்டி கூட வாங்கிக் கொள்ளவில்லையே.. அந்தப் பணத்தையும் இவன் வட்டிக்கு விட்டு அந்த வட்டியில் கிடைத்த லாபத்தில் சிறுகச்சிறுகக் கொடுத்து அடைத்தானே.. இவன் போன்றவர்கள் வாழ்வதுதான் இந்த உலகமா..?'
அர்ச்சனா கண்களை மூடிக் கொண்டாள்.. அங்கிருந்த நாள்களில் தினந்தோறும் வெளியே சென்ற கதிர்வேலன் இதற்காகத்தான் சென்றானா..? உதவி கேட்டு.. அது கிடைக்காத நிலையில் மனம் நொந்துதான் வீடு திரும்பினானா..?
'தினகரனும் மறுத்து விட்டான்.. இவனைச் சொல்லியும் குற்றமில்லை.. நான் போவதற்குள் இவனுக்கு என்னைப் பற்றிய போன் கால்கள் போயிருக்கின்றனவே.. இவனும்தான் என்ன பண்ணுவான்.. வாழ்க உத்தம்சந்த்..!'
அடுத்து வந்த பக்கங்கள் கதிர்வேலனின் உதவியினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும் அவனுடைய நண்பர்கள் உதவிசெய்ய மறுத்து கை விரித்த கதைகளை விவரித்தன...
அர்ச்சனாவுக்கு துயரமாக இருந்தது.. இப்படியென்று தெரிந்திருந்தால் அப்பாவிடம் வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்று அவள் நினைத்தபடி பக்கத்தைப் புரட்டிய போதுதான் பிரகாசத்தின் பெயர் அவள் கண்ணில் பட்டது.. அந்தப் பக்கத்தை ஊன்றிப் படித்தாள் அர்ச்சனா..
'பிரகாசத்திடம் பணம் வாங்கித் தருவதாக அத்தை சொல்கிறார்கள்.. எப்படி அவர்களால் இப்படிச் சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை.. நான் சிங்கம்..! சிறு நரியல்ல.. என் அப்பாவின் ரத்தம் என் உடலில் ஓடும் போது பிரகாசத்தின் உதவியை எப்படி நான் ஏற்பேன்..?'
அர்ச்சனாவின் புருவங்கள் சுருங்கின.. எதனால் இந்த அளவுக்கு கதிர்வேலன் பிரகாசத்தின் மீது விரோதம் பாராட்டுகிறான் என்று புரியாமல் அவள் திகைத்தாள்.. அடுத்து வந்த பக்கங்களில் அதைப்பற்றி அவன் ஏதாவது சொல்லியிருக்கிறானா என்று புரட்டிப் பார்த்தாள்.. ஒரேயொரு பக்கத்தில் அவன் அதைப் பற்றி ஏதோ எழுதியிருந்தான்.. அவன் கோடிட்டுக் காட்டுவதை இனம் கண்டு கொள்ள அர்ச்சனாவினால் முடியவில்லை..
'அத்தையின் கோபம் காலம் காலமாக அவர்களின் மனதில் உறைந்து கிடக்கும் ரணங்களால் உண்டானது.. பிரகாசத்திற்கு அது புரியாமல் இருக்குமா..? அப்பாவின் ஆணி வேரை அரித்ததைப் போல என்னையும் இவர் அரித்திருப்பாரோன்னு அத்தை சந்தேகப் படுகிறார்கள்.. இதில் மட்டும் நான் பிரகாசத்தின் மீது குற்றம் சொல்ல மாட்டேன்.. ஏனென்றால் பிரகாசத்திற்கு நான் தொழில் ஆரம்பித்ததும்.. அதில் வளர்ந்ததும் தெரியாது.. அப்பாவுடன் கதை முடிந்தது என்று தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டு இவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.. நான் வந்து நின்ற பின்புதான் அப்பாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருந்திருக்கிறான் என்ற விவரமே அவருக்குத் தெரிந்தது.. அப்படியிருக்கையில் இவராவது என் தொழிலைத் தொட்டிருப்பதாவது.. நோ சான்ஸ்...'
இந்த மட்டிலும் அவனுடைய தொழில் நசித்ததிற்கான காரணமாக பிரகாசத்தை அவன் குறிப்பிட வில்லை என்பது அர்ச்சனாவிற்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது.. அதே சமயத்தில் அவனுடைய அப்பாவின் தொழிலைக் கெடுத்தது பிரகாசம்தான் என்று அவனும் பத்மாவும் நினைப்பதில் அவளுக்கு வருத்தமாக இருந்தது..
டைரியை மூடி வைத்து விட்டு சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.. கதிர்வேலனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் விருட்சமாக அவள் மனதில் வளர்ந்து நின்றது..
அதைச் செய்யாவிட்டால் அவளால் நிம்மதியாக உறங்க முடியாது என்று தோன்றிவிட்டதில் என்ன செய்வது என்று யோசித்தபடி நகம் கடித்தாள் அர்ச்சனா...
மாலை மயங்கி இரவுதான் வந்தது.. அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக யோசித்தபடி அவள் உலவியதில் கால்வலி வந்ததுதான் மிச்சம்.. தீர்வுதான் கிடைக்க வில்லை...
"சின்னம்மா.. சின்னம்மா.." அறைக்கதவை தட்டினாள் பானு..
"என்ன..?" கதவைத் திறந்த அர்ச்சனா அதட்டினாள்..
"ஐயா சாப்பிட வந்திட்டாரு.. உங்களைக் கூப்பிடறாரு.."
"வர்றேன்.."
அர்ச்சனா போனபோது டைனிங் ஹாலில் பிரகாசம் மட்டுமே அமர்ந்திருந்தார்.. சமீப காலமாக பத்மா பரிமாற வருவதில்லை என்பதை நினைவில் கொண்ட அர்ச்சனா பிரகாசத்தின் முன்னால் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்...
"நீயும் உட்காரும்மா.. சேர்ந்து சாப்பிடலாம்.. செர்வ் பண்ண பானு வரட்டும்.." என்றார் பிரகாசம்.
"வேணாம்ப்பா.. நாமே போட்டுக்கலாம்.." அர்ச்சனா தட்டைப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்..
"தனியா சாப்பிடறோமே.. இதைப் பத்திக் கொஞ்சமாவது அவ நினைச்சுப் பார்க்கிறாளான்னு பாரு.." பல்லைக் கடித்தபடி தனிந்த குரலில் சொன்னார் பிரகாசம்..
வேலைக்காரர்கள் கேட்டு விடுவார்களாம்.. அவருடைய கௌரவம் குறையக் கூடாதாம்...
இந்த ஜாக்கிரதை உணர்வு பத்மாவை உரத்த குரலில் வேலைக்காரர்களின் முன்னிலையில் திட்டும் போது ஏன் ஏற்படவில்லை என்று நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா..
"ஆக்சுவலா அப்பா.. தனியாய் சாப்பிடறது அம்மா தான்.. நீங்களும் நானும் சேர்ந்துதானே சாப்பிடறோம்..? இது தனியில்லையே..?" என்று கேட்டாள் அர்ச்சனா..
பிரகாசத்தினால் பதில் பேச முடியவில்லை.. அவர் வேறுவகைகளில் பத்மாவின் பொறுப்பில்லாத தன்மையை விமரிசித்துக் கொண்டிருந்தார்.. இது வேலைக்கு ஆகாது என்ற நினைவுடன் அர்ச்சனா கை கழுவ எழுந்தாள்.. அங்கேயும் விடாமல் பின் தொடர்ந்து வந்த பிரகாசம்..
"இப்படித்தான் அன்னைக்கு ஒருநாள்.." என்று எதையோ சொல்ல ஆரம்பித்தார்..
அன்றைக்கு பத்மா என்ன செய்து வைத்தாள் என்று கேட்பதில் அர்ச்சனாவுக்கு துளிக்கூட விருப்பமில்லை.. அந்த ஒரு நாளில் மட்டும் புதிதாக எதைக் கண்டுபிடித்து அவர் சொல்லப் போகிறார் என்ற நினைவில்.. வராத தூக்கம் வந்து விட்டதைப் போல கண்களைச் சொக்கி..
"ஹாவ்.." என்று நீளமாக ஒரு கொட்டாவியை விட்டு வைத்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -16
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -16
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaleuyirthene-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy