உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -26

26 வாசலில் நான் போட்ட கோலத்தை உனது வண்டி.. அழிக்காமல் விலகிச் சென்றதில்.. என் மனம் உவகை கொண்டது.. "இது உன் வேலைதானே.. ...


26
வாசலில் நான் போட்ட கோலத்தை
உனது வண்டி..
அழிக்காமல் விலகிச் சென்றதில்..
என் மனம் உவகை கொண்டது..


"இது உன் வேலைதானே..?" கடுகடுப்பாக கேட்டான் கதிர்வேலன்..
இரவு நேரத்தின் மொட்டைமாடி இதம் தரும் குளுமையோடு இருந்தது.. சுற்றுச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.. அவனோ குறுக்கும் நெடுக்குமாக நடந்து கோபம் கொண்ட சிங்கம் போல மொட்டை மாடியின் நீளத்தை அளந்து கொண்டிருந்தான்..
"என் வேலையாகவே இருக்கட்டும்.. உங்களுக்குத் தேவை பண உதவி.. அதை நாராயணன் கடனாக் கொடுக்கிறார்.. நீங்க வட்டியோட திருப்பிக் கட்டப் போறிங்க.. இதில உங்களுக்கு என்னதான் பிரச்னை..?"
"இது என் பிரச்னை..! அதில உனக்கு எதுக்கு அக்கறை..?"
"ஏனா..?"
அர்ச்சனாவுக்கு தொண்டையை அடைத்தது.. ஏன் என்று அவன் அறிய மாட்டானா..? அதுநாள்வரை தகப்பனை ஏமாற்றி அறியாதவள் அவனுக்காக
பொய் சொல்லி விட்டு அவன் இருக்குமிடம் தேடி ஓடி வந்திருப்பது எதற்காக என்பதை அவன் அறிய மாட்டானா..?
"ஆமாம்.. ஏன்னுதான் கேட்கிறேன்.. கிளம்பும் போதே உனக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமு-மில்லைன்னு சொல்லிட்டுத்தானே வந்தேன்..? நீ யார்..? நான் யார்..? நான் இவ்வளவு சொன்ன பின்னாலும் எனைத் தேடி எதுக்காக நீ வரனும்..?"
"எதுக்காகன்னு கேட்டா நான் என்ன பதிலைச் சொல்கிறதாம்..?"
அவளுக்கு கண் கலங்கியது.. கதிர்வேலனின் சைகையைக் கவனித்து.. அவனைப் பின்பற்றி மொட்டை மாடிக்கு வந்திருந்தாள்.. முழுநிலவின் ஒளியும்... தென்னங்கீற்றின் சளசளப்பும்.. வேப்ப மரத்தின் காற்றுமாக மொட்டை மாடியின் சூழல் அவள் மனதில் ரம்யத்தை விதைத்தது..
அந்த ரம்யம் அவன் மனதில் இறங்கவில்லையா..?
"இந்தக் கண்ணைக் கசக்கற வேலையை எல்லாம் எவனாவது இளிச்சவாயன் அகப்பட்டா அவனிடம் வைத்துக்க.. என்னிடம் வேண்டாம்.."
கதிர்வேலனின் கடுமை என்றும் இல்லாத வகையில் அன்று அவளை அதிகமாகவே பாதித்தது.. அவள் மேல் இருக்கும் கோபத்தில் அவன் பண உதவியை மறுத்து விடுவானோ என்று அவள் பயந்தாள்..
'அப்படி ஆகக் கூடாது.. என் கதிர் ஜெயிக்க வேண்டும்..'
மனதில் எழுந்த நினைவில் அவள் நிலை குலைந்தாள்..
'என் கதிர்..'
இதை ஏன் அவனிடம் சொல்லி விடக் கூடாது..?
மனதில் அவன் மீது மயக்கம் ஏற்பட்டு விட்டது.. அவனது துன்பம் அவளைப் பாதிக்கிறது.. அதனால் அவனுக்கு உதவி செய்வதற்காக பெற்றவரிடம் பொய் சொல்லி விட்டு அவனைத்தேடி அவள் ஓடி வந்திருக்கிறாள்.. அப்படியிருக்கும் போது அவள் மனதில் உள்ளதை ஏன் ஒளித்து வைக்க வேண்டும்..?
"வேற எந்த இளிச்சவாயனும் எனக்கு வேணாம்..."
"பின்னே..?"
"இந்த இளிச்சவாயனே போதும்.."
"என்னது..?"
"ஐ லவ் யு..."
அர்ச்சனா சொல்லி விட்டாள்.. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கதிர்வேலன் நின்று விட்டான்..
"என்ன சொன்ன...?"
"ஊம்..? சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.. போவிங்களா.. சும்மா கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னைத் துளைத்து எடுத்துக்கிட்டு.."
அர்ச்சனா சுற்றுச் சுவரிலிருந்து விலகி மாடிப் படிகளில் இறங்கப் போனாள்.. கதிர்வேலன் தாவி அவள் கையை பிடித்தான்.. அவளின் வளை கரம் அவனிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டதில் அவள் போக முடியாமல் நின்று விட்டாள்.. அவனது இரும்புப் பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொள்ள அவள் முனையவில்லை.. அசையாமல் நின்றவளை அவன் சண்டியிழுத்தான்.. அவன் மார்பில் அவள் விழுந்தாள்.. கதிர்வேலனின் கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன..
"நிஜமாத்தான் சொல்கிறயாடி..?"
அவள் காதோரமாக கிசுகிசுத்தான்.. அவனது மீசையின் ரோமங்கள் உராய்ந்ததில் அவளின் காதில் குறுகுறுப்பு ஏற்பட்டது.. அதுவரை அவளறியாத ஆணின் ஸ்பரிசத்தில் அவள் மயங்கிப் போனாள்...
"ஊஹீம்.. பொய்தான் சொல்றேன்.."
"ஹ.. பொய் சொல்கிறவதான் என் கைக்குள்ள நிக்கிறாளாக்கும்..? என்னை பாடாய் படுத்திட்ட
அர்ச்சனா.."
"நானா பாடாய் படுத்தினேன்..? நீங்கதான் என்னைப் பாடாய் படுத்திட்டிங்க.. என்கிட்டச் சொல்லாமக் கொள்ளாம காஞ்சிபுரத்தைவிட்டு கிளம்பி வந்த ஆள்தானே நீங்க.."
அர்ச்சனாவின் குரல் கம்மியது.. அதில் உணர்ந்த அவள் துக்கத்தில் அவள் தலை தடவி சமாதானப் படுத்தினான் கதிர்வேலன்..
அர்ச்சனா விம்மலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்..  அவளது உச்சந்தலையில் முகம் பதித்தவனுக்கு அவனுடைய அத்தனை துன்பங்களும்.. போராட்டங்களும்.. மறந்து போய்விட்டன..
"அர்ச்சனா.."
"ம்ம்ம்..."
"ஐ லவ் யு டி.."
"ஒன்னும் வேணாம்..."
"அப்படிச் சொன்னா எப்படி..? காதலை ஆரம்பித்து வைக்கிற வரைக்கும் தான் உன் எல்லை.. அதுக்கப்புறம் என் எல்லைதான்.. இனி நீ வேணாம்னாலும் உன்னை விட்டுவிட என்னால் முடியாது.."
"யாரு விடச் சொன்னதாம்..?"
அவள் சிணுங்கியபடி அவன் முதுகுப்புறத்தில் கைகளைப் படறவிட்டு அவனோடு பின்னிப் பிணைந்து கொண்டாள்..
கதிர்வேலன் உலகை மறந்தான்.. அவர்கள் இருப்பது அவன் வீட்டு மொட்டை மாடியில் என்பதையும் மறந்தான்.. தரையில் சரிந்து அமர்ந்தான்.. அவளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டான்.. குனிந்தான்..
"அத்தான்.."
அவனுடைய முத்தத்தில் பேச்சிழந்தாள் அர்ச்சனா.. அவன் கழுத்தை வளைத்த அவளின் தந்தம் போன்ற கைகளில் முத்தமிட்டு..
"அழகிடி நீ.." என்று சிலாகித்தான் கதிர்வேலன்..
"இந்த அழகியிடம்தான் இவர் இத்தனை நாளா முறைச்சுக்கிட்டு இருந்தார்.." சிணுங்கினாள் அர்ச்சனா..
"அது அப்படி.." அவள் மீது கவிழ்ந்தான் அவன்..
"இப்ப என்னவாம்..?" அவளுக்கு மூச்சுத் திணறியது..
"சொல்லவா..?"
அவள் காதோரமாக அவன் பேசிய ரகசியப் பேச்சுக்களில் அவள் உடல் உஷ்ணமானது.. கதிர்வேலனின் சூடான இதழ்கள் அவள் கன்னம் தொட்டு அவள் முகமெங்கும் ஈரமுத்தங்களை பதித்தன..
"இப்பாவாவது நான் கதிர்ன்னு கூப்பிட்டுக்கலாமா..?" அவள் கொஞ்சினாள்..
"கூப்பிட்டுக்க.. உனக்கில்லாத உரிமையா..? நான் உன் கதிர்வேலன்டி.." உஷ்ணப் பெருமூச்சுடன் அவளைத் தழுவிக் கொண்டான் கதிர்வேலன்...
அர்ச்சனாவுக்கு அந்த நொடிகளைப் பிடித்திருந்தது.. அவனுடன் கழித்துக் கொண்டிருந்த அந்த மணித்-துளிகளை.. மழைக்கு ஏங்கிய சாதகப்பட்சி மழைத் துளிகளை சேகரிப்பதைப் போல அவள் சேகரித்து மகிழ்ந்தாள்...
"மங்கியதோர் நிலவினிலே..
             கனவிலிது கண்டேன்..."
அவள் காதோரமாக பாரதியின் கவிதை சொன்னான் அவன்.. அவர்களுக்குள் அது நாள்வரை இருந்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டு அன்று காணாமல் போய் விட்டது..
மெதுவாக அர்ச்சனாவை தரையில் சரித்து.. அவள் மீது சரிந்தான் கதிர்வேலன்.. அவள் மறுக்கவில்லை.. மாறாக அவன் தலைமுடியைக் கலைத்து அவன் மீதான அவளது உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தாள்..
அவளின் அந்த பரிபூரண ஒப்படைப்பில் மனம் நெகிழ்ந்தான் கதிர்வேலன்.. அவனே யாதுமாக அவனிடம் சரணடைந்து விட்டவளைக் காதலுடன் பார்த்து தன்னுடன் இறுக்கிக் கொண்டான்..
"நாராயணனின் உதவியை ஏத்துக்கங்க.." அர்ச்சனா கேட்டுக் கொண்டாள்..
"அங்கேயிருந்து இங்கே எப்படி உதவிக்கு ஏற்பாடு செய்த..?" வியந்தான் கதிர்வேலன்..
"அண்ணனிடம் சொன்னேன்.. அண்ணன்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தாங்க.." அர்ச்சனா விவரித்தாள்..
"கெட்டிக்காரிதான்.." அவன் அதற்கும் ஒரு முத்தம் கொடுத்தான்..
"தப்பா எடுத்துக்காதீங்க.. எப்படியாவது உங்களுக்கு உதவனும்.. நீங்க ஜெயிக்கனும்.. அதுதான் எனக்கு வேணும்.." உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள் அர்ச்சனா..
"நீ சொன்னாலும் நான் யோசிக்கனும் அர்ச்சனா.." என்றான் கதிர்வேலன்..
"இதில் யோசிக்க என்ன இருக்கு..?"
"நிறைய இருக்கு.. முதலில் இந்தப் பண உதவியில் உன் அப்பா சம்பந்தப் பட்டிருக்காரான்னு எனக்குத் தெரியனும்..."
"இல்லவே இல்லை.. உண்மையாகவே இந்த நாராயணன் ஒரு பைனான்சியர்தான்.. உங்களுக்காக அண்ணன் கேரண்டி மட்டுமே கொடுக்கிறாங்க.."
"அதுவும் கூட எதுக்கு..?"
"உங்க மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..? கடன் வாங்கிட்டு அதைத் திருப்பிக் கொடுக்காத ஆளா நீங்க..? தொழிலை சரி செய்து கம்பெனி ஓட ஆரம்பிச்சுட்டா.. வாங்கின கடனை வட்டியோட திருப்பித் தந்துர மாட்டிங்களா..? ப்ளீஸ்.. எனக்காக.."
அர்ச்சனாவின் அந்த 'எனக்காக..' என்ற சொல்லில் மசிந்தான் கதிர்வேலன்.. அர்ச்சனாவின் கன்னத்தோடு கன்னம் இழைத்து..
"ஓகே.." என்று சொன்னான்..
மறுநாள் காலையில் நாராயணன் அவனிடம் வாங்க வேண்டிய கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டு பணப் பெட்டியை நீட்டினான்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -26
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே -26
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaaleuyirthene-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirtheneunnaaaleuyirthene-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy