உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-22

22 காலை நேரம்.. வானம் பார்த்தேன்.. கனவில் வந்த.. உன் முகம் தெரிந்தது.. தோட்டத்தில் இருந்த முல்லைக்கொடியில் மலர்களைப் பறித்துக...


22
காலை நேரம்.. வானம் பார்த்தேன்..
கனவில் வந்த..
உன் முகம் தெரிந்தது..


தோட்டத்தில் இருந்த முல்லைக்கொடியில் மலர்களைப் பறித்துக் பூக்குடலையில் போட்டுக் கொண்டிருந்தாள் ராதா.. வாசலில் கார் ஹாரன் சப்தம் கேட்டதும்.. மலர் பறிப்பதைவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.. அவர்கள் வீட்டு வாசலில்தான் கார் நின்றிருந்தது..
'யாரா இருக்கும்..?'
வாசலுக்குப் போக போனவள்.. வீட்டுக்குள் இருந்து சட்டையை மாட்டியபடி வெளியே வந்த கதிர்வேலனை கண்டதும் தேங்கி நின்றாள்..
'அண்ணன் பார்த்துக்கும்..
மலர்களைப் பறிப்பதைத் தொடர்ந்தாள்..
"யார் வேணும்..?"
காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்தபடி கேட்டான் கதிர்வேலன்..
"நீங்கதான் வேணும்.." உல்லாசமாகச் சொன்னபடி காரை விட்டு இறங்கிய அர்ச்சனாவைக் கண்டதும் திகைத்து விட்டான்..
'இவ எப்படி இங்கே வந்தா..?'
பிரகாசத்தின் மகளாவது.. அவனைத் தேடி ஓசூருக்கு வருவதாவது..
அவனால் நம்ப முடியவில்லை.. கையைக் கிள்ளிப் பார்க்கும் அவா மனதில் தோன்றினாலும் அது தெருவென்பதால் அந்த அவாவை அடக்கிக் கொண்டான்..
"நீ எப்படி இங்கே..?" அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே..
"கதிர்.." என்று அழைத்தபடி பத்மா காரின் மறுபுறத்தில் இறங்கினாள்..
"அத்தை..?..!"
நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பத்மாவின் அருகே ஓடினான் கதிர்வேலன்.. பத்மாவின் கண்கள் கலங்கியிருந்தன..
"நீங்கதானா அத்தை..?" என்ற கதிர்வேலனின் பரபரப்பில்..
"நானேதான் கதிர்.." என்று பொலபொலவென்று அழுதுவிட்டாள்..
"உள்ளே வாங்கத்தை.."
அர்ச்சனாவை மறந்து பத்மாவை கைபிடித்து அழைத்துச் சென்றான் கதிர்வேலன்.. அதற்குள் ராதா வீட்டுக்குள் ஓடிப் போய் தகவல் சொல்லி விட்டதில் பெரிய நாயகி வாசலுக்கு ஓடிவந்தாள்...
"பத்மா.." அவளின் விரித்த கைகளுக்குள்..
"அண்ணி.." என்று பாய்ந்து விட்டாள் பத்மா..
பெண்மணிகள் இருவரும் 'கோ'வென்று கதறி அழுக ஆரம்பித்து விட்டார்கள்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராதாவும் தேம்பினாள்..
இமைகளைச் சிமிட்டி கண்ணீரை மறைத்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன்.. அர்ச்சனாவுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அவளுக்கு அழுகை வரவில்லை.. வராத அழுகையை வா.. வா.. என்று அழைக்க முடியாமல் அங்கே உணர்ச்சிப் பிழம்பாக நின்றவர்களை வேடிக்கை பார்த்தபடி அவள் நின்றாள்..
பெரிய நாயகிதான் முதலில் சுதாரித்துக் கொண்டாள்..
"இவதான் உன் மகளா பத்மா..?"
பத்மாவிடமிருந்து விலகி அர்ச்சனாவின் அருகில் வந்தாள்...
"ஆமாம் அண்ணி.. ராதா வளர்ந்துட்டா.."
பத்மா ராதாவின் அருகில் சென்றாள்..
சற்று நேரம் அங்கே நல விசாரணைகள் நடந்து முடிந்தன.. அர்ச்சனாவிடமிருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு போன கதிர்வேலன் அவர்களுடைய பெட்டிகளைக் கொண்டு வந்தான்..
"அர்ச்சனாவுக்கு உடம்பு சரியில்லை அண்ணி.. ஒரு மாற்றத்துக்கு வேற ஊருக்குக் கூப்பிட்டுக்கிட்டுப் போங்கன்னு டாக்டர் சொன்னார்.."
"இங்கே வருகிறதுக்கு உன் வீட்டுக்காரர் ஒப்புக்கிட்டாரா பத்மா..?"
பெரியநாயகி அவர்களுக்காக காபி கலந்தபடி கேட்டாள்..
"இல்லை அண்ணி.." என்றாள் பத்மா..
"வொகேனக்கல்லுக்குப் போகிறதாச் சொல்லிட்டு இங்கே வந்தோம்.."
"அதானே பார்த்தேன்.." கேலியாக பேசினான் கதிர்வேலன்...
"நீங்க எதை வேணும்னாலும் பார்த்துக்கங்க.. இப்ப எங்களுக்கு ஒரு ரூமைக் காட்டுங்க.. இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்க இங்கேதான் தங்கப் போறோம்.." என்றாள் அர்ச்சனா..
"பொய் சொல்லிட்டு ஏன் வரனும்..?" பொதுவாக கேட்டான் கதிர்வேலன்..
"வேற வழி..? உண்மையைச் சொன்னா அப்பா பெர்மிசன் கொடுத்துருவாரா..?" பதிலுக்கு கேட்டாள் அர்ச்சனா..
"அப்படி இங்கே வரனும்கிற அவசியம்தான் என்ன..?" முகம் சுளித்தான் அவன்..
"பாருங்க அத்தை.. அம்மாவும் நானும் வந்ததில் அத்தானுக்கு விருப்பமில்லை போல.. அது தெரியாம.. அத்தையைப் பார்ப்போம்.. ராதாவைப் பார்ப்போம்.. அவங்ககூட சேர்ந்து இருப்போம் அந்த சந்தேசத்தில என் தலைவலி சரியாகி விடும்ன்னு இங்கே கிளம்பி வந்தவங்களை எப்படிப் பேசறாருன்னு பாருங்க.. கிளம்புங்கம்மா.. நாம நம்ம ஊருக்கே திரும்பிப் போயிரலாம்.. இப்பவே எனக்குத் தலைவலி வந்துருச்சு.. ஸ்ஆ.. தலையை வலிக்குதே.."
அர்ச்சனா தலையை பிடித்துக் கொண்டாள்.. கதிர் வேலனைத் தவிர மற்ற பெண்கள் மூவரும் அர்ச்சனாவைச் சூழ்ந்து கொண்டார்கள்..
"வராத விருந்தாளிக வந்திருக்காங்க.. அவங்க கிட்ட இப்படித்தான் பேசறதா..? உன் அப்பா உனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தாரா கதிர்..?" பெரிய நாயகி மகனைக் கடிந்து பேசி விட்டாள்..
சூடான காபியைக் குடித்தால் தலைவலி குறையுமென்று ராதா சொன்னதன் பேரில் அவசரமாக அர்ச்சனாவுக்கு முதல் காபி கப்பைக் கொடுத்தாள் பெரியநாயகி...
அவள் குடித்து முடித்ததும் கவலையுடன்..
"இப்ப எப்படியிருக்கு..?" என்று கேட்டாள்...
"தித்திப்பா இருக்குது அத்தை.. என்ன ருசி.. என்ன மணம்.. காபின்னா இதுதான் அத்தை காபி.." என்று புகழ்ந்தாள் அர்ச்சனா..
"அவங்க உன் தலைவலியைப் பத்திக் கேட்டாங்க.." இடக்காக எடுத்துக் கொடுத்தான் கதிர்வேலன்..
"அதைக் கேட்டாங்களா..? நான் காபியைக் கேட்டாங்களோன்னு நினைச்சிட்டேன்.." அசடு வழிந்தாள் அர்ச்சனா..
"அதுசரி.. தலையை இந்த அளவுக்கு வலிக்குது.. அதை நொடிப் பொழுதில மறந்து போயிடறயே.. அது எப்படி..?" வெகு அக்கறையாக விசாரித்து வைத்தான் கதிர்வேலன்...
'இப்ப அதான் ரொம்ப முக்கியம்.. டேய் அத்தான்.. உனக்கு கொழுப்புடா..' பல்லைக் கடித்தாள் அர்ச்சனா..
"வந்தவங்களுக்கு எந்த ரூமைக் கொடுக்கலாம் கதிர்..?" பெரியநாயகி யோசனை கேட்டாள்..
"இது என்ன அவங்க வீட்டைப் போல பங்களாவா அம்மா..? இருக்கிறது மூணுரூம்.. அதில ஒன்னில நானிருக்கேன்.. மத்ததில நீங்களும்.. ராதாவும் இருக்கீங்க.. இதில எந்த ரூமை இவங்களுக்குக் கொடுப்பீங்க..?" எரிந்து விழுந்தான் கதிர்வேலன்..
"சிம்பிள்.." பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் அர்ச்சனா..
"ராதா ரூமில் நான் தங்கிக்கறேன்.. அத்தை ரூமில் அம்மா தங்கிக்கட்டும்.. அப்பத்தான் அவங்க விடிய விடிய கதை பேச தோதா இருக்கும்.. என்ன ராதா..?"
"சூப்பர்.. அர்ச்சனா.."
வந்த சில நிமிடங்களுக்குள் அவன் குடும்பத்துடன் சங்கமமாகி விட்டவளை ஒரு தினுசாகப் பார்த்தபடி வாசல்பக்கமாகப் போனான் கதிர்லேவன்.. சற்றுப் பொறுத்து காற்று வாங்க வந்தவளைப் போல அங்கே வந்த அர்ச்சனாவிடம்..
"என்ன..? காத்து இந்தப் பக்கமா அடிக்குது..?" என்று புருவங்களை உயர்த்தினான்..
"ஏனாம்..? ஓசூர் பக்கம் காத்தடிக்கக் கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா..?" அவளும் பதிலுக்கு புருவங்களை உயர்த்தினால்..
கதிர்வேலன் உள் பக்கமாக பார்த்தான்... பத்மாவும்.. பெரிய நாயகியும் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தார்கள்.. ராதா அவர்களின் வாய் பார்க்கத் தோதாக சுவரில் சாய்ந்து அமர்ந்து முழங்கால்களைக் கட்டிக் கன்னத்தில் கை வைத்திருந்தாள்..
கதிர்வேலன் அர்ச்சனாவின் பக்கம் திரும்பினான்.. கூர்மையாக அவளைப் பார்த்தான்..
"உன் மனசில என்ன ஐடியா ஓடுது..?" என்று கேட்டான்..
அர்ச்சனா உதடுகளைக் கடித்தாள்.. அவனுடைய கோபம் சமனப் படவில்லை என்பதில் அவளுக்குத் துக்கமாக இருந்தது..
"என் மனசில் ஓடறது ஐடியா இல்லை.." என்று சொல்லி விட்டாள்..
"பின்னே..?" அவன் விடுவதாக இல்லை..
"நினைவுகள்.."
அர்ச்சனா சட்டென்று தோட்டத்துப்பக்கமாக நகர்ந்து முல்லைக்கொடியின் பக்கமாக போய் நின்று விட்டாள்..
"இங்கே எதுக்கு வந்த..?" அவன் கடிந்தபடி அருகில் வந்தான்..
"இருட்டு நேரம்.. வீட்டுக்குள்ளே போ.."
"எனக்குத் தெரியும்.. யாரும் எனக்குச் சொல்ல வேணாம்.. சொல்லாம வந்தவங்களுக்கு என்னைப் பத்தி எதுவும் சொல்ல உரிமையில்லை.. நான் மட்டும் இவரை அத்தான்னு கூப்பிடக் கூடாதாம்.. கதிர்ன்னும் சொல்லக் கூடாதாம்.. இவர் மட்டும் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்பாராம்.. எந்த ஊர் நியாயம் இது..?"
"ஓசூரின் நியாயம் இதுதான்.. எங்க வீட்டுக்கு வந்து தொலைச்சிருக்க.. உன் அப்பா கேள்வி கேட்டா பதில் சொல்கிறது யாரு.. நீயா.. நானா..?"
"இவரு பெரிய கோபிநாத்.. ரியாலிட்டி ஷோ நடத்த வந்திட்டாரு..."
"நான் கதிர்வேலன்.. வேற யாருமில்ல.. ஷோ நடத்தறதெல்லாம் பெரிய மனுசங்க வேலை.. நான் சாமான்யன்.. எனக்கு எதுவும் தெரியாது.."
அவன் முள்ளைப் போலக் குத்தியதில் அவள் மனம் வலித்தது.. இணக்கமாக ஓர் வார்த்தை அவன் பேசிவிட மாட்டானா என்று அவள் மனம் தவித்தது...
அவன் பேசினான்.. மலர் போல மனதை வருடும் வார்த்தைகளைப் பேசாமல்.. முள்ளாக அவள் மனம் குத்தும் வார்த்தைகளைப் பேசினான்..
"குத்தம் சொல்கிறவங்க இங்கே வந்திருக்கக் கூடாது.. நானே உன் அம்மாவையும் அப்பாவையும் பிரிக்கிறவன் என்கிறப்ப எந்த நம்பிக்கையில உன் அம்மாவை இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்த..? இதுதான் சாக்குன்னு உன் அம்மாவை இங்கேயே இருக்க வைச்சிட்டா நீ என்ன பண்ணுவ..?"
அவன் வார்த்தை முள்களில் காயப்பட்டது அவள் மனது..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-22
உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே.-22
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s320/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
https://1.bp.blogspot.com/-rsRAlJ2YuKI/XiMVnzQsL3I/AAAAAAAAAwo/Z04STTPF0zk_xShDrlXdDMsYlfGmlerCgCPcBGAYYCw/s72-c/Uiryethene%2Bunnale%2Buiryethene.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirthenenunaaleuyirththene-22.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/uyirthenenunaaleuyirththene-22.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy