ஊமையின் ராகம் -38

38 சௌதாமினிக்கு இது புதிய செய்தி.. இத்தனை நாள்களாக... பெரியவர்களின் மனதிற்கேற்ப... உமா... சிவாவிற்குக் கழுத்தை நீட்டியிருக்கிறாள் என்...


38
சௌதாமினிக்கு இது புதிய செய்தி.. இத்தனை நாள்களாக... பெரியவர்களின் மனதிற்கேற்ப... உமா... சிவாவிற்குக் கழுத்தை நீட்டியிருக்கிறாள் என்றே அவள் நினைத்திருந்தாள்....
சிவாதான் உமாவின் மீது காதல் கொண்டு... அவளை மணக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து... இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்த்து.. அவள் கழுத்தில் தாலியைக் கட்டியிருக்கிறான் என்றே அவள் நினைத்திருந்தாள்...
இன்றோ... அந்த நினைவிற்கு மாறாக... உமாவின் ஆவேசக் காதலைப் பற்றி.... சௌதாமினி அறிந்து கொள்ள வேண்டி வந்து விட்டது... காதலுக்காகத் தன்னையே ரணப்படுத்திக் கொண்ட உமாவின் இந்த இன்னொரு முகத்தைப் பற்றி அவள் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை...
"அவளுக்குக் கால் கொப்புளித்து விட்டது.. டாக்டரிடம் ஓடினோம்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. அபசகுனம்ன்னு நினைத்துப் பின் வாங்கிட்டாங்க... உமாவின் கால் ரணம் ஆறி அவள் பழையபடி எழுந்து நடமாட.. ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, சௌதா..."
"கொடுமை..."
"கொடுமைதான்... அப்போதே என் மனதில் பயம் ஆரம்பித்து விட்டது... உன் அண்ணன் இரண்டாவது தடவையாக மாப்பிள்ளை வீட்டாரை அழைத்தார்... இந்தமுறை உமா.. குத்து விளக்கின் திரியில் தன் சேலை முந்தானையைப் பற்ற வைத்துக் கொண்டாள்..."
"ஐயோ..."
சௌதாமினி... வாய் பொத்திக் கூவினாள்... சுந்தரி விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்...
"பழைய கதை திரும்பவும் தொடர்ந்தது... உமாவை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போனோம்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... அவங்க வீட்டிற்குத் திரும்பிப் போனாங்க... ஆனால் அடுத்தடுத்துப் பெண் பார்க்க யாரையும் நான் வரவிடவில்லை...."
"ஏன்..." என்று சௌதாமினி கேட்கவில்லை... அவளுக்குத்தான் காரணம் தெரியுமே.... எனவே மௌனமாகத் தன் அண்ணன் மனைவியின் முகத்தைப் பார்த்தாள்...
"எனக்கு உமாவின் மனதில் யாரோ இருப்பது தெரிந்து விட்டது, சௌதா... அந்த யாரோ ஒருவனுக்காக... தன் உயிரைப் பணையம் வைக்கவும் உமா தயாராக இருந்ததையும் புரிந்து கொண்டு விட்டேன்... அந்த யாரோ ஒருவன் 'யார்' என்றுதான் எனக்குத் தெரியவில்லை..."
"உமாவிடம் கேட்டீர்களா...?"
"கேட்டால் சொல்லி விட்டு மறு வேலைதான் பார்ப்பாள் அவள்.. உன் மருமகளின் குணம் பற்றி உனக்குத் தெரியாதா...? அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையைப் பிடுங்க... ஒரு நாள் ஆகுமே..."
"அதைச் சொல்லுங்க..."
"அன்றைக்குக் கோவிலுக்கு நீ சிவாவுடன் வந்தாயே... நினைவிருக்கிறதா, சௌதா..."
"மறக்குமா, அண்ணி..."
"அன்றைக்குச் சிவாவைக் கண்டதும் உமாவின் கண்களில் தெரிந்த ஒளியும்... அவள் முகம் மலர்ந்த விதமும்... அவளை எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டது... உமாவின் மனதில் இருப்பது சிவாதான் என்பதைத் தெரிந்து கொண்டதும்தான் நான் உன்னிடம் பேச்சையே ஆரம்பித்தேன்..."
"நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா..."
"எதைச் சொல்கிறாய்...?"
"நானும் சிவாவின் மனதில் உமாவின் மேலிருந்த காதலைத் தெரிந்து கொண்டுதான்.. உங்களைப் பார்க்க அன்று கோவிலுக்கு வந்தோன்..."
"சிவா உமாவைக் காதலித்தாரா...?"
"ஆமாம் அண்ணி.. அவன்தான் என்னிடமும்.. அவனுடைய அப்பாவிடமும் சண்டை போட்டான்.. கட்டினால் உமாவைத்தான் கட்டுவேன்னு ஒற்றைக்காலில் நின்றான்... அவனுக்காகத்தான்.. அன்றைக்கு நீங்கள் அந்தக் கோவிலுக்கு வருவீங்கன்னு தெரிந்து வைத்துக் கொண்டு அங்கே வந்தேன்... இல்லாவிட்டால்.. எங்கள் ஏரியாவில் இருக்கும் கோவிலை விட்டு.. அங்கே சாமி கும்பிட நான் வருவேனா...?"
சுந்தரி.. கைவேலையை விட்டு விட்டு... சௌதாமினியின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்... பிள்ளைகளுக்காகத் தாங்கள் பாடுபட்டதை... அந்த இரண்டு அன்னைகளும் பகிர்ந்து கொண்டு... ஒருவரையொருவர்... புரிந்தும் கொண்டனர்...

39
"சிவாவிற்கு உமாவின் மேல் அளவு கடந்த காதல் அண்ணி.. என்ன ஒன்று.. உமா.. தன் மனதிலிருப்பதை வாய் விட்டுச் சொல்ல மாட்டாள்... ஆனால் சிவா.. பளிச்சென்று தன் மனதைத் திறந்து உள்ளது உள்ளபடி பேசிவிடுவான்.. அது ஒன்றுதான் இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்..."
"இப்போது மனதிலிருப்பதை உமா வெளியில் சொன்னால் எனக்கு நிம்மதியாக இருக்கும்... அவள்தான் மனதிலிப்பதை வெளியில் சொல்லாமல்.. மனதில்
பூட்டி வைத்துக் கொண்டு தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருக்கிறாளே..."
"கவலைப் படாதீங்க அண்ணி... உமாவை நான் பார்த்துக் கொள்கிறேன்..."
"நீ பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமா சௌதா..."
"சிவா... உமாவைக் காதலித்துக் கைப்பிடித்தவன் அண்ணி... உமாவிற்காக... அவனுடைய அப்பாவின் பேச்சையும் மீறி இந்த வீட்டு வாசல்படியை மிதித்தவன்.. இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க அவன் படாதபாடு பட்டது.. பாசத்திற்காக இல்லை... உமாவின் மேல் அவன் வைத்திருந்த காதலுக்காக..."
"அது எனக்கே இப்போதுதான் தெரியும்.. உமாவிற்குத் தெரியுமா...?"
"இது என்ன அண்ணி... சின்னப்புள்ளைத்தனமா... இப்படி ஒரு கேள்வியைக் கேட்கறீங்க... கல்யாணம் பண்ணி இரண்டு வருசம் சேர்ந்து குடித்தனம் பண்ணி ஒரு குழந்தைக்கு தாய்... தகப்பனாவும் ஆகிட்டாங்க.. இதுவரைக்குமா சிவாவின் காதல் உமாவிற்குத் தெரியாமல் இருக்கும்...?"
"இல்லை சௌதா.. தெரிந்தது போல்... எனக்குத் தெரியவில்லை..."
"நீங்க சும்மா... மனதைப் போட்டு உழப்பிக்காதீங்க அண்ணி.. எதை வைத்து இப்படிச் சந்தேகப்படறீங்க..."
"இவள் ஏன் இப்படி சோர்வாக இருக்கிறாள்...?"
"சிவா பக்கத்தில் இல்லைங்கிற ஏக்கமாக இருக்கும்..."
"சிவாவும்தான் ஏன் பக்கத்தில் இருக்காமல்... மும்வைக்கு ஓட வேண்டும்...?"
"உமா எங்கள் வீட்டில் இல்லாமல்... பிரசவத்திற்கு இங்கு வந்து விட்டாளே... அதனால் இருக்கும்..."
"இதெல்லாம் உன் அனுமானம்தான், சௌதா... நிச்சயமாய் உன்னால் சொல்ல முடியுமா...?"
"நீங்கள் நினைப்பது போல் இல்லை... அதை மட்டும் என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்..."
சுந்தரியின் மனம் சமாதானமடையவில்லை.. குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது வந்தவன்... அதற்குப் பின்னால் உமாவையும் குழந்தையையும் பார்க்க வரவேயில்லை... அதுதான் சுந்தரிக்குக் கவலையாக இருந்தது...
சௌதாமினியின் கூற்றுப் பிரகாரம் அவன்... உமாவைத் தீவிரமாகக் காதலித்திருந்தால்.. பிரிவில் உமா வாடுவது போல அவனும் வாடியிருக்க மாட்டானா...? மாறாக... அவன்தான் மும்பைக்கு போயிருக்கிறான்... அவன் நினைத்திருந்தால் மும்பை டெபுடேசனைத் தவிர்த்திருக்க முடியாதா...?
நல்ல நேரத்தில் உமாவைக் கொண்டு போய்ச் சிவாவின் வீட்டில் விட்டுவிட்டு... திரும்பினார்கள்...
உமா இல்லாத வீடு வெறிச்சென்று இருக்க, சுந்தரி கண் கலங்கினாள்...
"குட்டிப் பையன் சும்மா அழுது கொண்டே இருப்பான்... இவள் எப்படித்தான் தனியாகச் சமாளிக்கப் போகிறாளோ.. இங்கேயானால்.. ஆள்மாற்றி.. ஆள் தூக்கி வைத்துக் கொண்டே இருப்போம்..."
"அங்கே சௌதாமினி இருப்பாள்.. அவள் ஒருத்தி போதாதா... நீயேன் கண் கலங்குகிறாய்...?"
"இல்லை அத்தை.. இவளே பச்சைப் புள்ளை.. இவள் முகத்தைப் பார்த்து.. நான்தான் இவளுக்கு என்ன வேணும்னு கண்டுபிடித்துச் செய்வேன்.. இப்ப.. இவளே கையில் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கிறாள். தனக்கே என்ன வேண்டும்ன்னு வாய்விட்டுக் கேட்காதவள்.. பிள்ளையை எப்படிப் பார்த்துக் கொள்வாள்...?"
"இந்தா... சுந்தரி.. நீ முதலில் புலம்புவதை நிறுத்து உமாவின் குழந்தைக்கு உமா மட்டும்தான் இருக்கிறாளா...? பிள்ளையைப் பெற்ற தகப்பன்... சிவா இருக்கிறான்... பேரனைக் கொஞ்சச் சௌதாமினியும்.. அவளுடைய வீட்டுக்காரரும் இருக்கிறாங்க.. என்னவோ அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்திருப்பது போல் இப்படி அலை பாய்கிறாயே..."
சுந்தரி கண்களில் நீர் மல்க.. டிவி திரையை உயிர்ப்பித்தாள்.. டிவியில் பாடல் காட்சி தோன்றியது...
"சிப்பியிலே முத்து... அது
    சிப்பிக்கென்ன சொந்தம்..
    தென்னையிலே இளநீர்... அது
    தென்னைக்கென்ன சொந்தம்...
    ஓங்கி வரும் முல்லை... அது
    ஒரு கொடியின் பிள்ளை...
    எடுத்துக் கொண்டு போனால்.. அது
    கொடிக்கு என்ன சொந்தம்..."
சுந்தரி வாய்விட்டு அழவே ஆரம்பித்துவிட... மற்றவர்கள் படாதபாடுபட்டு அவளைத் தேற்றினார்கள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -38
ஊமையின் ராகம் -38
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-38.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-38.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy