ஊமையின் ராகம் -36 , 37

36 " நல்ல நேரம் இருக்கிறபோதே கிளம்பி விட வேண்டும்.. எல்லோரும் மசமசன்னு ஆளுக்கொரு திசையில் நிற்கக்கூடாது.. என்ன புரிகிறதா... ?&qu...


36

"நல்ல நேரம் இருக்கிறபோதே கிளம்பி விட வேண்டும்.. எல்லோரும் மசமசன்னு ஆளுக்கொரு திசையில் நிற்கக்கூடாது.. என்ன புரிகிறதா...?" அருணகிரி சப்தம் போட்டுக் கொண்டிருந்தார்..
"நாங்க எல்லோரும் ரெடிதான்.. முதலில் உங்க தம்பி ரெடியாகி வந்து விட்டாரான்னு பாருங்க..." என்று சரஸ்வதி கேலி போல் கணவனிடம் கூறினாள்...
"நான் அப்போதே ரெடியாகி விட்டேன், அண்ணி..." வேதகிரி.. அடக்கத்துடன் அருணகிரியின் அருகில் வந்து நின்றார்...
"பார்த்தாயா.. நீ சொல்வது போல் நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம்..." அருணகிரி பெருமையுடன் பார்த்தார்...
"சௌதா.. உன் அப்பாவும்... பெரியப்பாவும் கூட்டணி போட்டு விட்டாங்க... இந்தக் கூட்டணி பலமான கூட்டணி. நம்மால் உடைக்க முடியாது... வா... நாம் இவர்களை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்ப்போம்..."
"பெரியம்மா... இவங்க கூட்டணியைப் போல் ஸ்ட்ராங்கான கூட்டணி ஒன்று ஹாலில் சேர்ந்திருக்கு.. அதுவும் இந்தக் கூட்டணி போல்தான்.. பெவிகால் போட்டது போல் ஒட்டிக் கொண்டிருக்கு.. பிய்த்தாலும் பிய்க்க முடியவில்லை...."
"எது.. அது..?"
சரஸ்வதி கேலியாக வினவியபடி ஹாலைப் பார்த்தாள்... தணிகாசலமும்.. பாலசுப்ரமணியமும்.. ஒருவர்கையை ஒருவர் பிடித்துக் கொண்டு... ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தனர்...
மகனும்.. மருமகனும் அவ்வாறு ஒற்றுமையாய்ப் பேசிக் கொள்வதைப் பார்த்த சரஸ்வதிக்குப் பெருமை பிடிபட வில்லை....
"சுந்தரி.. ஹாலைப் பார்த்தாயா...?"
"ம்ம்... அதெல்லாம் அப்போதே பார்த்து விட்டேன்... இது உங்களுக்குத்தான் புதுசு.. எனக்குப் பழசு..."
"இது எப்போதிருந்து...?"
"ரொம்ப நாளாவே நடக்குது..."
"இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டுத்தானே.. வீட்டுப் பொம்பளைகளைப் பிரித்து வைத்தாங்க...?"
"ஆமாம் அத்தை.. இப்ப இரண்டு பேரும் கொஞ்சிக் குலாவிக் கொள்வதைப் பார்த்தால்.. எப்படி இருக்கிறது தெரியுமா? என்னவோ... இவர்கள் இருவரும் நல்லகுடி நாணயம்.. தூத்துக்குடி வெங்கலம் போல் பில்ட் அப் பண்ணிக் கொள்கிறார்களே.. பொம்பளைகள்தான் சண்டை போட்டுக் குடும்பத்தைப் பிரித்து விட்டது போலவும்... இவர்கள் இரண்டு பேரும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும்... என்ன ஒரு நடிப்பு...!"
"இவர்கள் மட்டுமில்லை சுந்தரி.. உலகில் நிறையப் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்..."
"என்னவோ போங்க அத்தை... இவர்கள் இரண்டு பேருமே நடிப்பதில் மன்னர்கள்... ஒருவருக்கொருவர் நடிப்பதில் விட்டுக் கொடுத்து விட் மாட்டார்கள்..."
"நிஜம்தான், அண்ணி..."
"பரவாயில்லையே.. சௌதா கூட நான் சொல்வதை ஒப்புக் கொண்டு விட்டாளே..."
"உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்..."
மகளும்.. மருமகளும் பேசிக் கொள்வதைக் கேட்ட சரஸ்வதி சிரித்தாள்...
"என்னவோ போங்கம்மா... இரண்டும் இரண்டு அகப்பை.. இரண்டுமே கழன்ட அகப்பை என்கிறது இந்த வீட்டில் இருக்கிற பிரகிருதிகளுக்குத்தான் பொருந்தும்..."
சரஸ்வதி அந்தப் பேச்சிற்கு முத்தாய்ப்பு வைத்து முடித்தாள்...
"உமா... உன் பெட்டிகள் எங்கேம்மா..."
தணிகாசலம் வினவினார்... உமா ஏதோ சிந்தனையாய் ஜன்னல் பக்கத்தில் நின்று வெளியே வெளித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்... தகப்பனார் அழைக்கவும் திரும்பிப் பார்த்து மலங்க.. மலங்க விழித்தாள்...
மகளைக் கவலையுடன் பார்த்த சுந்தரி....
"அவளுடைய பெட்டிகளை ஹாலில் வைத்திருக்கிறேன், பாருங்கள்..." என்று குரல் கொடுத்தாள்...
"அப்படியா.. எல்லாவற்றையும் சரியாக எடுத்து வைத்துக் கொண்டாயாம்மா..." தணிகாசலம் மீண்டும் உமாவிடம் கேட்க... அவள் பழையபடியே விழித்து வைத்தாள்...
"எல்லாம் சரியாகத்தான் எடுத்து வைத்திருக்கிறாள்... அப்படியே ஏதாவது மறந்து வைத்து விட்டிருந்தாலும்... நம்ம வீட்டில்தானே இருக்கப்போகிறது.. நாம் போய்க் கொடுத்துக் கொள்ளலாம்..." என்று சுந்தரி குரல் கொடுத்தாள்...

37
சௌதாமினியின் புருவங்கள் உயர்ந்தன.... மருமகளை யோசனையுடன் பார்த்தாள்... நாத்தனாரின் பார்வையைக் கண்ட சுந்தரி... ஒரு பெருமூச்சுடன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டாள்...
"என்ன அண்ணி.."
"உன்னிடம் சொல்வதற்கு என்ன சௌதா... உமா முன்போல் இல்லை... எதையோ பறிகொடுத்தவள் போல் இப்படி ஆகிவிட்டாள்..."
"என்ன அண்ணி சொல்கிறீங்க....?"
"அவள் அதிகம் பேச மாட்டாள்..."
"அதுதான் எனக்குத் தெரியுமே..."
"எதுவாக இருந்தாலும்.. மனதில் போட்டுப் பூட்டிக் கொள்வாள்..."
"அதுவும் எனக்குத் தெரியுமே..."
"இப்போது அவள் மனதை எந்தக் கவலை அரிக்கிறதுன்னு எனக்குத் தெரியவில்லை, சௌதா... இதுவரை அவளுக்காக யோசித்துப் பார்த்து.... பார்த்து செய்ய நான் அவள் பக்கத்தில் இருந்தேன்... இனி எப்படித்தான் வாழப் போகிறாளோ..."
சுந்தரி ஆற்றாமையுடன் புலம்ப... சௌதாமினிக்குச் 'சுருக்' கென்றது...
"என்ன அண்ணி இப்படிப் பேசுகிறீங்க...?"
"இப்படிப்பட்ட ஊமைக் குணம் கொண்ட மகளைப் பெற்ற தாய்... வேறு எப்படிப் பேசுவாள், சௌதா..."
"என்னவோ... வேற்று மனுசரின் வீட்டில் போய் உங்கள் மகள் வாழ்க்கை நடத்துவதைப் போலவே நினைத்துப் பேசுகிறீங்களே... அது என் வீடு என்பது உங்களுக்கு மறந்து விட்டதா...? உங்கள் இடத்தில் நான் இருந்து உமாவைக் கவனித்துக் கொள்ள மாட்டேனா.. என் அண்ணன் மகளை இப்படியே மனதிற்குள் போட்டுப் புழுங்கிக் கொண்டிருக்க நான் விட மாட்டேன் அண்ணி.... என்னை நம்புங்கள்...."
"என்னவோ சௌதா... நீ பேசுவதைக் கேட்கும் போது எனக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது..."
"அந்த ஆறுதல் என்றைக்குமே நிலைக்கும் அண்ணி...."
"உன்னிடம்  சொல்வதற்கு என்ன சௌதா... நீ என்னவோ... நம் இரண்டு குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும்... உன் அண்ணன் மகளை வெளியே கல்யாணம் பண்ணிக் கொடுக்க விடக்கூடாது என்பதற்காகவும் தான் பெண்ணை விட்டுக் கொடுக்காமல்... போராடி.. உன் மருமகளாக்கிக் கொண்டாய்...."
"ஒரு கை தட்டினால் சத்தம் வருமா அண்ணி... இரண்டு கைகளும் ஒன்று சேர வேண்டுமே..
நான் மட்டுமா.. நம் குடும்பத்தை ஒன்று சேர்க்கப்பாடுபட்டேன்...? நீங்களும்தானே...."
"இல்லை சௌதா... உன்னைப் போல் எனக்குப் பரந்த மனதில்லை... நான் சுயநலக்காரி..."
"அண்ணி...?"
"ஆமாம் சௌதா... நான் உன்னிடம் சிவா... உமாவின் கல்யாணத்தை ஆதரித்துப் பேசியது... நம் குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக இல்லை... சிவாவும்.. உமாவும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக..."
"அண்ணி..."
"உனக்குத் தெரியாதது இல்லை சௌதா... உன் அண்ணனின் கோபத்திற்கு முன்னால்.. என்னால்... குடும்ப ஒற்றுமையைப் பற்றியெல்லாம் பேசியிருக்க முடியாது..."
"அது தெரிந்த விசயம்தானே அண்ணி.. நான் தூது விட்டபோதே.. அண்ணன் என்னைத் தூக்கியெறிந்து விட்டவர்தானே..."
"சௌதா... நடந்ததையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதே.. உமா பாவம்... ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்... நீ அவளுக்குத் தாயாய் இருப்பாய் என்ற நம்பிக்கையில்தான் நான் இதையெல்லாம் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்..."
"அந்தக் கவலையே உங்களக்கு வேண்டாம் அண்ணி... உமா என் மருமகள் இல்லை... மகள்..."
"எனக்கு இது போதும் சௌதா... உன் அண்ணனின் கோபத்திற்குப் பயந்து நான் வாய் மூடிக் கொண்டேன்.. உன் அண்ணன் வெளியிடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்..."
"ம்ம்ம்..."
"சௌதா.. இதைச் சொல்லும் போதே எனக்கு நெஞ்சம் பதறுகிறது..."
"ஏன் அண்ணி...?"
"முதல் முறை பெண் பார்கக மாப்பிள்ளை வீட்டார் வந்தபோது நம் உமா.. கொதிக்கிற பாலைத் தூக்கிக் காலில் ஊற்றிக் கொண்டு விட்டாள்..."
"அண்ணி..."
சௌதாமினி விழி விரிய அதிர்ச்சியுடன் நின்று விட்டாள்.. சுந்தரியின் கண்கள் கலங்கியிருந்தன..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -36 , 37
ஊமையின் ராகம் -36 , 37
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-3637.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-3637.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy