ஊமையின் ராகம் -34

34 இரவின் அமைதியில் அறைக்குள் வந்தாள் உமா... குழந்தையை அருகில் படுக்க வைத்து... கண்மூடித் தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான் ...


34

இரவின் அமைதியில் அறைக்குள் வந்தாள் உமா... குழந்தையை அருகில் படுக்க வைத்து... கண்மூடித் தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான் சிவா...
உமா குழந்தையை மெதுவாகத் தூக்கி... தொட்டிலில் படுக்க வைத்தாள்.. சன்னமான விளக்கொளி அறையில் நிறைந்திருக்க... குழல் விளக்கை அணைத்தாள்... அவன் அருகே படுத்தாள்.. அவன் புறம் திரும்பி... அவனது முடியை விரல்களால் அளைந்தாள்...
அதற்கு மேல் தூங்குவது போல் பாவனை செய்யச் சிவாவால் முடியவில்லை.. அவன் வேகத்துடன் திரும்பி.. அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்...
"அத்தான்..."ஆசையுடன்  முணுமுணுத்தவாறு அவனது அணைப்பினில் அடங்கிப் போனாள் அவள்...
அன்று இரவு.. சிவா வழக்கத்திற்கு மாறாக அதிக ஆவேசம் காட்டினான்.. பழக்கமில்லாத அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத உமா திணறினாள்.. சிவா அவளை விடுவிக்கும் எண்ணமே இல்லாமல் தூங்கிப் போனபோது... உமாவின் மனதில் எல்லையற்ற சாந்தி நிலவியது...
அவனது செய்கைகளைக் கண்டு எங்கே அவன் தன்னிடமிருந்து விலகிப் போய் விட்டானோ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு.. அவன் தன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிட்டான் என்பதில் நிறைவு வந்து விட்டது...
குழந்தையின் அழுகுரலில் விழித்து எழுந்தவள்... அருகே படுத்திருந்தவன் தூக்கம் கலையாமல்... மெதுவாய் அவனது கைகளை விலக்கி விட்டு எழுந்தாள்...
ஆனால்... அதற்குள் அவன் விழித்து விட்டான்...
"என்ன உமா...?"
"ஒன்றுமில்லை அத்தான்... குழந்தை அழுகிறான்..."
"இரு...நான் அவனைத் தூக்குகிறேன்...."
சிவா அவசரமாய் எழுந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான்.. அவனது பரிவிலும்... பிரியத்திலும்... மனம் நெகிழ... குழந்தையை வாங்கிக் கொண்டாள் உமா...
குழந்தையுடன் அமர்ந்திருந்தவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க... தலை நிமிர்ந்து அவன் பார்வையைச் சந்தித்த உமா.. புருவங்கள் மேலேற...
"என்ன அத்தான்...?"என்றாள்...
"ஒன்றுமில்லை..."
"சும்மா சொல்லுங்கள்..."
"உமா.. உனக்கு என்னைப் பிடிக்குமா...?"
அவனை வியப்புடன் பார்த்த உமா... சத்தமில்லாமல் சிரித்தாள்...
"என்னடி...?"
அவனின் இந்தக் கேள்விக்குப் பதிலை அறிய அவனது மனம் துடித்த துடிப்பை அறியாமல்... அவள் சுவா  தீனமாய்ப் பதில் கூறினாள்....
"இன்னொரு குழந்தைக்கும் அப்பா ஆகிவிட்ட பின்னால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமா...? அவசரப்பட்டு... இப்போது போய் இந்தக் கேள்வியைக் கேட்கறீங்களே... இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு அவசரம் கூடாது, அத்தான்..."
சிவாவின் முகத்தில் ஓர் இறுக்கம் வந்தது.. புருவங்கள் முடிச்சிட... அவளையே பார்த்தான்..
'ஓ.. உன் குழந்தைக்கு அப்பா என்பதால் உனக்கு என்னைப் பிடிக்கிறதா... இப்போதும்...எனக்காக... என்னைப் பிடிக்கவில்லை....' சிவா மனம் கசந்தான்...
குழந்தை உறங்கிவிட்டான்.. அவனைத் தொட்டிலில் கிடத்திவிட்டு... உமா கட்டிலுக்கத் திரும்பியபோது சிவா கட்டிலின் ஓரத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான்...
"அத்தான்..." உமா மெல்லிய குரலில் அழைத்தாள்... அவனிடமிருந்து பதில் வரவில்லை..அவன் தோள் மேல் கை வைத்தாள்... அவன் உடலில் அசைவில்லை...
தூங்குகிறான் என்று முடிவு செய்த உமா அயர்ந்து உறங்கி விட்டாள்.. விழித்து எழும் போது... சூரியனின் கதிர்கள் அறைக்குள் நன்றாகப் பரவியிருந்தன...
அவசரமாய் திரும்பிச் சிவாவைப் பார்த்தாள்... அருகே அவன் இல்லை... தொட்டிலைப் பார்த்தாள்... தொட்டிலில் குழந்தையும் இல்லை...
அறையை விட்டு வெளியே வந்தாள்... மாடி ஹாலில் தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த சரஸ்வதியின் மடியில் குழந்தை இருந்தான்...
"இவன் எப்படி உங்ககிட்ட வந்தான், பாட்டி..."
அவள் புரியமல் வினவ... அவளது அறியாமையை ரசித்துச் சிரித்தாள் சரஸ்வதி...

35

"ஊம்... உன் பிள்ளை கால் முளைத்துத் தொட்டிலை விட்டு இறங்கி.. தானாய் நடந்து வந்தான்..." சரஸ்வதி தன் நகைச்சுவையைத் தானே மெச்சிச் சிரித்துக் கொண்டாள்...
"போங்க பாட்டி..." உமா செல்லமாய்ச் சிணுங்கினாள்...
அப்போது கையில் காபிக் கோப்பையுடன் மாடிப்படியேறி வந்த சுந்தரி... காபியை உமாவிடம் நீட்டியபடி...
"உன் பாட்டி போவது இருக்கட்டும்... உன் புருசன் ஊருக்குப் போய்விட்டாரே... அது உனக்குத் தெரியுமா...?"என்று வினவினாள்...
காபியை மறந்து கலங்கிப் போய் அன்னையைப் பார்த்தாள் உமா...
"எப்போம்மா போனார்...?"
"விடியற்காலையிலேயே... குளித்து டிரஸ் மாற்றிக் கிட்டு குழந்தையைத் தூக்கிக் கிட்டு கீழே வந்தார்... நான் காபி கொடுத்தேன்.. குடித்தார்.. உமா அசதியாய்த் தூங்குகிறாள்... விடிய.. விடிய... குழந்தை அழுது கொண்டேயிருந்தான்.. இப்போதுதான் அவள் தூங்க ஆரம்பித்தாள்... தூங்கட்டும்.. குழந்தையை நீங்க பார்த்துக்கங்கன்னு சொல்லி என்னிடம் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டார்..."
"எங்கே போகிறார்ம்மா... எங்கள் வீட்டிற்கா....?"
"இல்லைம்மா... மும்பைக்குப் போய் விட்டாராம்... சௌதாவிடம் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை போல... அவள் இங்கே போன் பண்ணினாள்.. மகன் அவளிடம்
கூடச் சொல்லாமல் கிளம்பிவிட்டதில் அவளுக்கு வருத்தம்..."
'என்னிடமும்தான் சொல்லவில்லை...' உமாவிற்கு மனம் வலித்தது.. துக்கம் தொண்டையை அடைத்தது...
காபியைக் கசாயம் குடிப்பது போல் விழுங்கி விட்டு உள்ளே சென்று செல்போனைக் கையில் எடுத்தாள்... அவனுக்குப் போன் பண்ணினாள்.. அழைப்பொலி போய்... துண்டிக்கப்பட்டது...
இது உமாவிற்குப் பழக்கமான ஒன்றுதான்... ஆனால் முதல் நாளிரவில் அவன் நடந்து கொண்ட விதம்.. அவளுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தது...
இரவனில் வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு... விடியலில் அதைப் பறித்துப் போட்டு விட்ட அவனுடைய குரூரம் அவளது நெஞ்சைத் தாக்கியது...
"உமா.. குளித்துவிட்டு வா... நான் குழந்தையைக் குளிப்பாட்டி வைத்திருக்கிறேன்..." சரஸ்வதி குழந்தையுடன் தன் அறை நோக்கி நடந்தாள்...
குளித்து.. உடைமாற்றி... மகனைத் தேடிச் சென்ற உமா.. உயிரில்லாத வெறும் கூடு போல் தன்னை உணர்ந்தாள். வீட்டில் உள்ளவர்கள் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்க, உமா மட்டும்... தன் உணர்வுகளைத் தனக்குள் புதைத்துக் கொண்டு நடமாடினாள்...
"உமா...இங்கே பாரேன்..."
"என்ன பாட்டி..."
"குழந்தை அச்சு அசலாய்ச் சிவாவைப் போலவே இருக்கிறானே... இவன் சிரிக்கும்போது அப்படியே சின்ன வயதில் சிவா சிரித்தது போலவே இருக்கு...."
சரஸ்வதி அழைக்கவும் உமா ஓடிப்போய் மகனைப் பார்த்தாள்...
"ஆமாம் பாட்டி.. இத்தனை நாள் நான் இதைக் கவனிக்காமல் போய் விட்டேனே..."
"நீ எங்கே இவனைக் கவனித்தாய்...? சதா உன் புருசனின் நினைவுதான்... பிள்ளையின் நினைவு கூட உனக்கு இருக்க மாட்டேன் என்கிறது.. என்னவோ.. நாங்கள் இருக்கப்போய்க் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறோம்... நாங்கள் இல்லாவிட்டால்.. நீ என்ன பண்ணுவாயோ... புருசனின் நினைப்பை விட்டுவிட்டு... கொஞ்சம் பிள்ளையையும் கவனி..."
சரஸ்வதி கேலியாகக் கூறிய இந்த வார்த்தைகளைச் சிவாவின் முன்னால் கூறியிருந்தால்.. ஒரு வேளை அவனுடைய மனத்தாங்கல் ஓடியே போயிருந்திருக்கும்...
அது என்னவோ... அவன் வந்து விட்டால்.. அவன் முன்னிலையில்... வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் உமாவிடம் உரிமை பாராட்டுவார்கள்... அவன் போய் விட்டால் உமாவை அவனுடன் இணைத்துக் கேலி பேசுவார்கள்...
பாவம் உமா.. மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தாமல் அவள் விட்டதினால்.. திருமணம் செய்து கொண்டு விட்ட கடமைக்காக அவள் தன்னுடன் வாழ்கிறாள்... காதலினால் இல்லையென்று சிவா நினைத்து விட்டான்...
தன் நினைவைப் பல வகையாய் அவன் வெளிப்படுத்திப் பார்த்து விட்டான்... உமா அதற்குப் பதில் சொல்லிய விதத்தில் அவளை விட்டுப் பிரிந்து போய்விட்டான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -34
ஊமையின் ராகம் -34
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-34.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-34.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy