ஊமையின் ராகம் -32, 33

32 " ஏன் சௌதா லேட்... ?" சரஸ்வதி கோபத்துடன் வினவினாள். " கிளம்ப மனசிருந்திருக்காது..." அம்புஜம் ஊடே புகுந்து கூ...


32

"ஏன் சௌதா லேட்...?" சரஸ்வதி கோபத்துடன் வினவினாள்.
"கிளம்ப மனசிருந்திருக்காது..." அம்புஜம் ஊடே புகுந்து கூற... சரஸ்வதியின் முகத்தில் எள்ளும்... கொள்ளும் வெடித்தது...
நொடிப்பொழுதில்... நிலைமையை யூகித்து விட்ட சௌதாமினி... சரஸ்வதியின் கையைப் பிடித்துக் கொண்டு...
"கோபப்படாதீங்க பெரியம்மா... சிவா மும்பையிலிருந்து வந்தவுடன்... அவனையும் அழைத்துக் கொண்டு சேர்ந்து வந்து விடலாமேன்று நினைத்தேன்... ஆனால்.. ஏனோ சிவாவின் பிளைட் லேட்டாகி விட்டதாம்... அதனால்.. அவன் நேரே ஏர்போர்ட்டிலிருந்து இங்கே வந்து விடுகிறேன்னு சொன்னான்.. அதனால்தான் லேட்டாகி விட்டது பெரியம்மா..." என்று சமாதானம் சொன்னாள்...
'பூ...இவ்வளவுதானா....' என்று நினைத்துக் கொண்டாள் அம்புஜம்...
ஊதி... ஊதிப் பெரிதாக்கிவிட நினைத்த பிரச்சனை இப்படி புஸ்வாணமாய்ப் போய் விட்டதே என்று அவளுக்கு இருந்தது....
"சரி... சரி... உள்ளேவா... உன் மருமகள்தான் ரொம்பவும் விசனப்பட்டுக் கொண்டிருக்கிறாள்... அவளிடம் வந்து காரணத்தைச் சொல்லு..."
"என்னது... உமா கவலைப் படுகிறாளா...? பச்சை உடம்புக்காரி... மனசைப் போட்டு அலட்டிக்கலாமா...?"
சௌதாமினி அவசரமாய் உள்ளே விரைய.... சரஸ்வதி அம்புஜத்தை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தாள்...
"ம்ஹும்.. இப்ப இருக்கிற இளசுகளுக்கு... மருமகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கத் தெரியவில்லை... இப்படித் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டால்... நாளைக்கு மாமியார் குடுமிதான்.. மருமகள் கையில் சிக்கும்... பின்னால் குத்துதே... குடையுதேன்னு வந்து நிற்கும்ங்க..."
அம்புஜம் அருகிலிருந்தவளிடம் சௌதாமினியைக் கண்ஜாடை காட்டி அங்கலாய்க்க ஆரம்பிக்க.. சரஸ்வதி உள்ளே நகர்ந்தாள்...
"அத்தை! அவர் வரவில்லையா...?"
உமாவின் கண்கள்... சௌதாமினியின் பின்னால் அவன் தென்படுகிறானா என்று துழாவின..
"வந்துவிடுவான் உமா..."
"எப்போது...?"
"கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான்..."
சௌதாமினி சமாதானமாய்க் கூறினாலும்... உமாவின் மனம் சமாதானம் அடையவில்லை....
'அவன் வருவானா...' அவள் விழிகள்... அவன் வரும் வழி நோக்கிக் கொண்டே இருந்தன...
 'அந்தச் சிவகாமி மகனிடம்...
    சேதி கொல்லடி..
    என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி...
    வேறு எவரோடும்...
    நான் பேச வார்த்தை ஏதடி...
    வேலன் இல்லாமல் தோகை ஏதடி...'
மனம் திரை இசைப் பாடலை இசைத்தது.. விழி அவன் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்தது...
நேரம் நகர.. நகர... உமாவின் மனம் பதைத்தது... ஏன் இந்த விலகல்.. என்று மறுகினாள் அவள்... அவன் முகம் காணத் துடித்தாள்..

33

'கண்கள் சரவணன்...
    சூடிடும் மாலை....
    கன்னங்கள் வேலவன்...
    ஆடிடும் சோலை...
    பெண்ணெனப் பூமியில்..
    பிறந்த பின்னாலே...
    வேலை வணங்காமல்...
    வேறென்ன வேலை...
    நெஞ்சே தெரியுமா...
    அன்றொரு நாளிலே...
    நிழலாடும் விழியோடு ஆடினானே...
    அன்று நிழலாடும் விழியோடு ஆடினானே...
    இன்று கண்ணில் நின்றாடச் சொல்லடி...'
அவளது நெஞ்சம் தவித்துப் பாட... அவள் கண்களில்  கண்ணீர்த் திரை விழுந்தது... அந்தக் கண்ணீர்த் திரையினூடே... சிவா தெரிந்தான்.. அவசரமாய் விழி துடைத்துப் பார்த்தாள். அவனேதான்.. அவளது நீர் மல்கும் கண்களைப் பார்த்தபடி அருகே வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டான்...
"அத்தான்..." அவள் நாத் தழுதழுக்க அழைத்தாள்...
"ம்ம்..." அவன் அவளைப் பாராமல் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்...
"ஏன்... இவ்வளவு லேட்...?"
"ப்ளைட் லேட்..."
"இன்றைக்கு விசேசம்ன்னா இன்றைக்குத்தான் வர வேண்டுமா...? நேற்றே வந்திருக்கக் கூடாதா...?"
"வேலை இருந்தது..."
அவன் விட்டேற்றியாய்ப் பதில் அளித்தது அவளைப் பாதிக்கவேயில்லை... அவள் அவனைப் பார்த்ததே மிகப் பெரிய வரம் என்பது போல்.. அவனையே ஆவலாகப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்...
அவன் அவளது பார்வையைக் கவனிக்காமல் இல்லை... அதைக் கவனித்துக் கொண்டே... கவனிக்காதவன் போல்... குழந்தையின் முகத்தைப் பார்த்து... உதட்டைச் சுழித்துக் கொஞ்சிக் கொண்டேயிருந்தான்...
"சிவா.. ஏற்கெனவே லேட்டாயிடுச்சு... குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே வா..."
சௌதாமினி உரத்த குரலில் அழைக்கவும்.. சிவா... உமாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்.. மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டான்...
'நான் வரவேண்டாமா... ஏன் என்னை நீங்கள் கூப்பிடவில்லை....'
உமா அசையாமல் நின்றுவிட்டாள்...
"உமா... உன்னை வேறு தனியாய் அழைக்கணுமா....?"
இப்போது சத்தம் போடுவது சுந்தரியின் முறையாகி விட்டது... உமா பதுமை போல் கீழே இறங்கினாள்...
அவள் வரவிற்காகக் காத்திருந்தவர்கள் திரும்பி மாடிப்படியைப் பார்க்க.. சிவாவும் யதேச்சையாய்த் தன் பார்வையை மாடிப்படியை நோக்கித் திருப்பினான்... பார்த்த விழிகளை வேறுபுறம் திருப்ப முடியாமல் அசைவற்று நின்று விட்டான்...
'அழகு தெய்வம்.. மெல்ல.. மெல்ல...
             அடியெடுத்து வைத்ததோ....'
எப்போதோ அவன் கேட்ட பாடல் வரிகளுக்கு இன்று உயிர் கொடுத்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் உமா... பூஞ்சை உடலுடன் அவள் இருந்தபோதே... மதி மயங்கி நின்றவன் சிவா...
இன்று பூரிக்கும் மௌனத்தின் அழகோடு அவன் எதிரே வந்து சேரவும் அயர்ந்து விட்டான்... அதே நேரம் கணவனை ஏறிட்டும் பார்த்த உமாவும்... அவனது கண்களில் தெரிந்த ஆவலைக் கண்டு கொண்டாள்...
சற்று முன்பு வரை அவள் மனதில் குடி கொண்டிருந்த கிலேசம் மறைய.. மயக்கும் புன்னகையோடு... அவனை நெருங்கி.. அவனது கரங்களைப் பற்றிக் குழந்தையை வாங்கித் தொட்டிலில் படுக்க வைத்தாள்.. பின் கணவனுடன் உராய்ந்து நின்று கொண்டாள்...
"குழந்தைக்கு பெயர் வையுங்கோ..."
உமா.. தணிகாசலத்தையும்.. பால சுப்ரமணியத்ரையும் பார்த்துத் தயங்கி நிற்க... பாலசுப்ரமணியம்.. மருமகளை ஊக்குவித்தார்...
"ம்ம்... சொல்லும்மா... நீ என்ன பெயர் செலக்ட் பண்ணியிருக்கிற...?"
"அவர் என்ன பெயர் செலக்ட் பண்ணியிலுக்கிறாராம் மாமா..."
"சொல்லுடா சிவா... உன் பொண்டாட்டி கேட்பது காதில் விழுகவில்லையா...?"
"ஆதித்யன்..."
"அருமையான பெயர்.. அதையே வைத்து விடுவோம்..."
குழந்தையின் காதுகளில் மூன்று முறை பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.. விருந்து ஆரம்பமானது.. அன்று இரவு சௌதாமினியும்.. பாலசுப்ரமணியமும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவிட... சிவா.. உமாவோடு... அவள் வீட்டில் தங்கிவிட்டான்...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஊமையின் ராகம் -32, 33
ஊமையின் ராகம் -32, 33
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s320/IMG-20191217-WA0035.jpg
https://1.bp.blogspot.com/-He-aEkzx0xY/XhNOvdQomHI/AAAAAAAAAwY/E-aLhWtZzLYYN0wJwJ0v_BBKrm56xGAiwCPcBGAYYCw/s72-c/IMG-20191217-WA0035.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-32-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/umaiyinraagam-32-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy