பொதிகையிலே பூத்தவளே -74

74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. ? கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....


74
தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்..? கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்.. 
அடர் வனத்தில், தொடர் மழையில் நனைந்தபடி சுற்றிச் சுற்றி வந்தாள்.. மலைவாழ் மக்களிடம் கலந்து உரையாடினாள்.. ஏதாவது ஒரு சொல்லில் சிக்கலின் நூல்முனை கிடைத்து விடாதா என்று தவித்தாள்.. கிடைத்தது.. வனமலரின் பெரியம்மா மகளென்று சொல்லிக் கொண்ட ஒரு பெண்ணின் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது..
"யாரு சொல்லுவாங்க அப்படியொரு வார்த்தய..? சின்ன ஜமின்தாரு சொன்னாரு.. நாங்க கையெடுத்துக் கும்பிடற சாமியல்லோ அவரு.."
"அப்படி என்ன வார்த்தையைச் சொன்னாரு..?"
"எங்க வனமலரும் ரூபிணியம்மா போலதான்னு சொன்னாருங்கம்மா.. வனமலர்ன்னா ஐயாவுக்கு அவ்வளவு இஷ்டம்.. உங்க இனத்தக் காக்க உன்னப் போல இருந்தாப் போதும்... எங்கேயோ கொண்டு போயிடலாம்ன்னு சொல்லுவாருங்கம்மா.. அவரோட கூடப் பொறந்த தங்கச்சியப் போலன்னு எங்க வனமலர் மேல பாசம் காட்டுவாரும்மா.. அதனால நாங்கள்ளாம் எதைக் கேக்கிறதா இருந்தாலும் வனமலரை முன்னால் தள்ளி விட்டு பின்னால் நின்னுதான் கேப்போம்.. தங்கச்சி கேட்டா அண்ணன்காரர் இல்லேன்னு சொல்லிருவாரா..? அதிலயும் எங்கய்யா மதுரை மீனாட்சியம்மனைக் கும்பிடறவரு.. ஆனானப்பட்ட மீனாட்சிக்கே சீர் செஞ்ச அண்ணன் அழகரோட கதயத் தெரிஞ்சவரு.. வனமலர தங்கச்சியா நினைச்சாரும்மா.."
'அப்படியா..?' மீனாவின் நெஞ்சம் குலுங்கியது..
அப்படித்தான் என்பதை ஒட்டு மொத்த மலைவாழ் ஜனங்களும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.. பாசமாகப் பார்த்த ஒரு பார்வை.. அதில் மீனா பொறாமை கொண்டாளா..?
'என்ன தவறு செய்து விட்டேன்..'
வனமலரின் மீது நாத்தனார் காய்ச்சலைக் காண்பிக்காமல் சக்களத்திக் காய்ச்சலைக் காட்டி விஷ்வாவிடம் சண்டை போட்டு விட்டத் தன் தவறை எண்ணி நொந்து போனாள் மீனா.. தலை வலித்தது.. ஓய்வு தேடி அரண்மனைக்குத் திரும்பினாள்.. காமினி ஷீட்டிங்கில் இருந்தாள்.. எப்போதும் அரண்மனைக்கு வரும்போது காமினியுடன் வருவதைப் போலப் பார்த்துக் கொள்வாள் மீனா.. தனித்து அரண்மனையில் மாட்டிக் கொண்டதில்லை.. அன்று உண்மையைத் தேடிக் கண்டு பிடித்து விட்டதில் உடல் ஓய்ந்திருந்தது.. மனதின் சந்தோசம் அயர்வைத் தந்தது.. அவளது விஷ்வா குற்றமற்றவன்.. தங்கையைப் போல வனமலரிடம் பிரியம் காட்டியவன்.. தகாத முறையில் ஒரு போதும் நடந்திருக்க மாட்டான்.. மீனாவுக்கு அது போதும்..
"அம்மா.. சாப்பிடறிங்களா..?"
மீனா மாடியேறும் போது டைனிங் ஹாலில் இருந்த வேலைக்காரி கேட்டாள்..
"வேண்டாம்.. தலை வலியா இருக்குது.." மீனா படியேறி விட்டாள்..
அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் நுழைந்து கட்டிலில் விழுந்தவளைக் காலிங்பெல் அலறி எழுப்பியது.. சலிப்புடன் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.. வெளியே துளைக்கும் பார்வையுடன் விஷ்வா நின்றிருந்தான்.. அவனைத் தனிமையில் கண்ட மீனாவின் மனம் பொங்கியது.. கண்களில் காதல் வழிந்தது..
"விஷ்வா.."
தாயைத் தேடும் கன்றாக அவனைத் தேடிய அவளது குரலில் அவனது புருவங்கள் உயர்ந்தன.. கண்கள் ஒளிர்ந்தன.. அவள் அரண்மனைக்குத் திரும்பி வந்தபோது.. விஷ்வா மாடியில் நின்றிருந்தான்.. பரந்த மைதானம் போல இருந்த பெரிய பால்கனியில் நின்றிருந்தவன் அவள் மட்டும் தனியே திரும்பியதில் கேள்வி மனதில் எழும்ப என்னவென்று கேட்கலாம் என்று மாடிப்படிகளில் இறங்கப் போனான்.. மீனா தலைவலி என்று சாப்பாட்டைத் தவிர்த்து மாடியேறி வந்ததில் கவலையானவன் என்னவென்று விசாரிக்க அவள் அறையின் கதவைத் தட்டியிருந்தான்..
"மீனா..?"
அந்த ஒற்றை அழைப்பே போதுமானதாக இருந்தது.. அவள் பாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனது முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாள்.. அது அரண்மனை என்பதோ.. அவர்கள் இருவரும் தனியறையில் இல்லை.. மாடியறையின் வாசலில் நிற்கிறார்கள் என்பதோ அவளது நினைவிலே இல்லை.. அவள் நினைவில் நின்றதெல்லாம் அவளுடைய விஷ்வா குற்றமற்றவன் என்பது மட்டுமே..
"ஏய்ய்.. என்னடி ஆச்சு..?"
கள்ளுண்ணும் வண்டாக ஆனந்தத்துடன் அவளது பிடறியில் கரம் வைத்து இறுக்கிப் பிடித்து அவளுடைய முத்த மழைக்கு முகத்தைக் கொடுத்தான் விஷ்வா..
"ஐ லவ் யு விஷ்வா.. ஐ லவ் ஒன்லி ஒன்லி ஒன்லி யு.."
"என் மீனா.."
விலகிப் போன காதலி மீண்டு விட்டாள் என்பதில் அவளைத் தழுவிக் கொண்டான் விஷ்வா.. அவன் மார்பில் முகம் புதைத்திருந்த மீனாவிற்கு இது போதும் என்றிருந்தது.. இதுவரை பட்ட துன்பம் போதும்.. இதோ, இந்த நொடியில் அனைத்தும் அவனாக தழுவி நிற்கிறாளே.. இது மட்டும் போதும்..
"பாத்துக்கங்க மாமா.. பட்டப்பகலில் அரண்மனையோட கௌரவத்தைக் காற்றில பறக்க விடுகிற உங்க சின்ன மகனைப் பார்த்துக்கங்க.. வீட்டில சின்னக் குழந்தை இருக்கு.. கல்யாணத்திற்குக் காத்திருக்கிற தங்கை இருக்கிறா.. வேலையாள்கள் இருக்குதுக.. ஜமின்தார்ங்கிற பெருமையோடு வாழும் நீங்க இருக்கறிங்க.. ஜமின்தாரிணியான அத்தை இருக்கிறாங்க.. அந்த நினைப்பு எதுவுமில்லாம வேலை செய்ய வந்தவளைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நட்டுநடு அரண்மனையில நிக்கிறாரு.. ச்சே.. வெட்கம் மானம் இவருக்குத்தான் இல்லை.. இவளுக்குமா இல்லாமப் போச்சு..?"
அனுபமாவின் சத்தத்தில் அவசரமாக விலகி நின்ற மீனா திரும்பிப் பார்த்தாள்.. அங்கே விஷ்வாவின் அப்பா கோபாவேசத்துடன் நின்றிருக்க பக்கத்தில் நித்யகோகிலவாணி, ரங்கநாதன் மற்றும் அனுபமா நின்றிருந்தார்கள்.. அனுபமாவின் முகத்தில் அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்ற வெற்றிக்குறி.. இதை நழுவ விட்டு விடக் கூடாது.. என்னவொரு தைரியமிருந்தால் இந்த மீனா என்பவள் அரண்மனைக்-குள்ளேயே விருந்தாளியாக நுழைந்திருப்பாள்.. ஏன் இந்த அரண்மனையில் கால் வைத்தோம் என்று அவளைக் கதறவைத்து விரட்டியடிக்கா விட்டால் அவள் எப்படி அனுபமா ஆவாள்..?
"விஷ்வா.. என்னடா அசிங்கம் இது..?"
தந்தையின் கோபத்தைக் கண்டு விஷ்வா அஞ்சவில்லை.. அஞ்சி நடுங்கி அவன் முதுகுக்குப் பின்னால் அட்டையைப் போல ஒட்டிக் கொண்ட மீனாவைத் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தியபடி..
"நீங்க கோபப்படறதைப் போல எதுவும் நடக்கலை அப்பா.." என்றான்..
"இப்போ நடந்ததுக்கு நான் கோபப்படலைன்னா கானாடுகிரி ஜமின்தார் என்பதற்கே அர்த்தமில்லாமப் போய்விடும் விஷ்வா.. இது என் அரண்மனை.."
"இது நம் அரண்மனை.. இந்த ஜமின் வம்சத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கும் இருக்குப்பா.."
"உன் பொறுப்பைத்தான் நாங்க எல்லோரும் பார்த்தோமே.." ஊடே புகுந்தான் ரங்கநாதன்..
"அதைச் சொல்லுங்க.. ஆடுகிற ஆட்டத்தை யெல்லாம் அயல் நாட்டிலே வைச்சுக்கிட்டு ஒதுங்கி இருந்துருக்கனும்.. இப்படி ஊருக்கு வந்து மரியாதையோடு வாழ்கிறவங்க மத்தியிலே அசிங்கம் செய்யக்கூடாது.." அனுபமா தூண்டி விட்டாள்..
"மரியாதைன்னா என்ன தெரியுமா..? குடும்ப கௌரவம் குலையாம வாழ்கிறது.. இந்த கானாடுகிரி ஜமினுக்குன்னு ஒரு கௌரவம் இருந்தது.. என் தாத்தா காலத்தோடு அது காற்றில் பறந்திருச்சு.. அப்ப இருந்த ஜமின்தார்கள் இங்கே இருக்கிற மலைவாழ் ஜனங்களைக் காப்பாற்றி ரட்சிக்கிற ரட்சகர்களா இருந்தாங்க.. இப்ப..? கூடப் பிறந்தவனை ஊருக்குள் வரவிடாம செய்ய துரோகம் பண்ணச் சொல்லிக் கொலைகாரன்களைக் காப்பாற்றிப் பாதுகாத்துக்கிட்டு இருக்காங்க.."
"கொலைகாரன்களைக் காப்பாத்தறாங்களா..? யாரைடா சொல்கிற..?"
விஷ்வாவின் தந்தை குழப்பத்தோடு கேட்டார்.. ரங்கநாதனின் முகம் வெளிறியது.. விஷ்வாவின் முகமோ கோபச் சிகப்பில் ஜிவுஜிவுத்திருந்தது..
"அப்பா.. கிரியின் முறைப்பெண் வனமலரை என் சாக்லெட் பேக்டரியில் மேனேஜரா இருந்த வினோத் என்னும் நாய் கடித்துக் குதறி கொட்டும் அருவியில் உச்சியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்றிருக்கிறது.. அந்த நாயின் பெயர் வெளியே வராமல் உங்க மூத்த மகன் அடைக்கலம் கொடுத்திருக்கிறான்.. எதுக்காக தெரியுமா..? எனக்குத் துரோகம் செய்து என் சாக்லெட் பேக்டரியை நஷ்டத்தில் ஓட வைப்பதற்காக.."
கானாடுகிரி ஜமின் வம்சம் மலைவாழ் இன மக்களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்டது..  அந்தக் கடமையிலிருந்து விஷ்வாவின் தாத்தா காலம்வரை யாரும் தவறியதில்லை.. விஷ்வாவின் அப்பா அப்படி செயல்பட முடியாமல் ரங்கநாதனும், நித்ய கோகில வாணியும் தடுத்து வைத்திருந்தார்கள்..
"அதது இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கனும்ப்பா.. நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆளுகளைக் கேட்கும் என்கிற பழமொழியை நான் சொல்லித்தான் தெரிந்துக்கனுமா..? அந்த ஜனங்க அடங்கிக் கிடக்கிற வரைதான் நாம் ஜமின்தார் என்கிற ஹோதாவில இருக்க முடியும்.."
"ரங்கன் சொல்கிறதுதான் சரிங்க.. அவங்க பயம் குறையாம இருக்கிற வரைதான் நமக்குப் பாதுகாப்பு.."
தவறான வழிகாட்டுதலில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்த பாதையிலிருந்து விலகி நெடுந்தூரம் வந்து விட்ட குற்ற உணர்ச்சியில் நீதியை நிலை நாட்டக் கிளம்பி விட்டார் ஜமின்தார் கோபிநாதன்..
"ரங்கநாதா.. விஷ்வா சொல்வது உண்மையா..?" 
மூத்தமகனைப் பார்த்து கர்ஜித்தார்.. அனுபமா அத்தையைக் கிளப்பிவிட..
"இது சரியில்லைங்க.." என்று ஆட்சேபித்தாள் நித்ய கோகிலவாணி..
"நீ வாயை முடு.." 
மனைவியை அவர் அடக்கியதில் அனுபமா பீதியானாள்.. அவளுடைய மிகப்பெரிய பலமே நித்யகோகில வாணிதான்.. அவளே அரண்டு போய் வாயை மூடிக் கொண்டால் அனுபமா என்ன ஆவாள்..? ரங்கநாதனாவது ஏதாவது பேசுவானா என்று பார்த்தாள்..
"அப்பா.. நாம் கேட்க வந்தது என்ன..? இவன் பேசுவது என்ன..? விசயத்தைத் திருப்பி விடப் பார்க்கிறான்.. முதலில் நீங்க இவன் செய்தது சரியா என்பதை விசாரியுங்க.." மனைவியின் வயிற்றில் பாலை ஊற்றிவிட்டான் ரங்கநாதன்..
"அதை அப்புறமா விசாரிச்சுக்கிறேன்.. முதலில் நீ, நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லு.. விஷ்வா சொல்வது உண்மையா..?"
"அப்பா.. அந்த வினோத் நல்லவன்தான்ப்பா.."
"நல்லவனா இருந்திருந்தா எதுக்காக விஷ்வா அவனை டிஸ்மிஸ் செய்தான்..? விஷ்வாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனை நீ எப்படிப் பக்கத்தில் வைத்துக்கிட்ட...?"
இந்த மாமனார் இவ்வளவு அறிவார்ந்தவராக திடிரென்று மாறித் தொலைக்கக்கூடாது என்று வெறுத்துப் போனாள் அனுபமா.. இது என்ன சீரியலா..? திடிரென்று மாற்றங்களாக வந்து குவிய..?
"அப்பா.. அது வந்து.."
ரங்கநாதன் என்ன பதிலைச் சொல்வது என்று அவசரமாக யோசித்தான்.. அவனது செல்போன் அலறியது.. எடுத்துப் பேசியவனின் முகம் அச்சத்தில் வெளுத்தது..
"என்னடா..?" கோபிநாதன் அரட்டினார்..
"அப்பா.. அந்த வினோத் அருவி உச்சியில் கால் வழுக்கிக் கீழே பாறையில் விழுந்து இறந்துட்டானாம்.."
"வனமலர் கால் வழுக்கி விழுந்த அதே அருவி உச்சியில் தான் இவனும் கால் வழுக்கி விழுந்திருக்கிறானாம் அண்ணா.. அதையும் சொல்லு.. அதுதான் வழுக்குப் பாறைன்னு தெரியுதில்ல.. இவன் ஏன் அங்கே போனானாம்..?" நமட்டுச் சிரிப்புடன் கேட்டான் விஷ்வா..
"விஷ்வா..?"
"அப்பா.. நம்ம ஊர் மலைவாழ் ஜனங்களைப் பற்றி உங்களுக்கே நல்லாத் தெரியும்.. காப்பாத்தறவங்களுக்காக உயிரையே கொடுப்பாங்க.. விசுவாசமானவங்க.. அதுவே அவங்களுக்குத் தீங்கு நினைச்சா இருக்கிற இடம் தெரியாம ஆக்கிருவாங்க.. கிரியை என்ன வாயில் விரலை வைத்துக் கொண்டிருக்கும் பச்சைக் குழந்தைன்னு அந்த வினோத் நினைத்தானா..? ஆதாரமில்லாம எதிரிக்கும் தீங்கு செய்யக் கூடாதுங்கிற அறத்தோடு இருக்கிறவன் கிரி.. அவன் தேடிய ஆதாரத்தை அண்ணன்தான் அவனுக்குக் கொடுத்திருக்கிறான்ப்பா.."
"ரங்கநாதனா..? எப்பக் கொடுத்தான்..? எப்படிக் கொடுத்தான்..?"
"நான் கொடுத்தேனா..? என் தலையில் நானே மண்ணை வாரிப் போட்டுக்குவேனா..? வினோத்தைக் காட்டிக் கொடுக்க நான் என்ன முட்டாளா..?" தன் வாயால் தானே கெட்டான் ரங்கநாதன்..
"அப்ப இல்லைங்க.. இப்பத்தான் உங்க தலையிலே நீங்களே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டு இருக்கீங்க.." தலையில் அடித்துக் கொண்டாள் அனுபமா..
"அப்பா.. நேத்து அந்த வினோத் பார்ல குடிச்சுக்கிட்டு இருந்தான்.. நானும் கிரியும் அங்கேதான் இருந்தோம்.. நாங்க அங்கே இருந்ததை அண்ணன் பார்க்கலை.. வினோத் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து, ' குடித்துட்டு விழுந்து கிடக்கிறதா இருந்தா உன் ரூமிலேயே விழுந்து கிடக்க வேண்டியதுதானே..? இங்க வந்து குடிக்கிறயே.. குடிபோதையில் நீதான் அந்த வனமலரைக் கைவைத்து அருவியில் இருந்து தள்ளி விட்டன்னு உளறி வைத்தா கிரி உன் கதையை முடிச்சிருவான்.. அது தெரியுதா இல்லையா' ன்னு கத்தினான்.. அப்ப கிரியின் முகத்தை நீங்க பார்க்கனுமே.. இன்றைக்குக் காலையிலேயே எனக்கு நியூஸ் வந்திருச்சு.."
"ரங்கா.."
கோபிநாதன் ஓங்கி விட்ட அறையில் ரங்கநாதன் மாடிஹாலின் சுவரில் மோதி விழுந்தான்.. அனுபமா அலறிக்கொண்டு கணவனின் அருகில் ஓடினாள்.. கோகிலவாணி அதிர்ச்சியுடன் வாய் பொத்தி பின்னால் நகர்ந்தாள்..
"உனக்கும் ஒரு தங்கை இருக்கிறா.. மறந்து போச்சா..? நம்மை நம்பி வாழ்கின்ற ஜனங்கள்டா அவங்க.. காவலுக்கு வேலியா நிற்கலேன்னாலும் பரவாயில்லை.. கண்ட நாய்களையும் கடித்துக் குதற அனுமதிக்கிறதா..? நான் கொடுக்காத காவலை என் மகன் விஷ்வா கொடுத்துக்கிட்டு இருக்கிறதால்தான் இந்த ஜமின் தலை நிமிர்ந்து நிற்குது.. இல்லேன்னா என் வம்சப் பெருமை என்னுடனே முடிந்து போயிருக்கும்.."
"அப்பா.." விக்கித்துப் போனான் ரங்கநாதன்..
"கானாடுகிரி மலை ஜமினின் பெருமையை இந்த உலகம் பூரா கொண்ட போய் சேர்த்தது விஷ்வாதான்.. கூடவே இருந்து நீ என்ன செய்த..? உழைக்க அஞ்சி அரண்மனைக்குள்ளே குளிர் காய்ந்த.."
"அப்பா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.."
அதுதான் சமயமென்று மீனாவை இழுத்துக் கொண்டு தந்தையின் தாள் பணிந்தான் விஷ்வா..
"இன்றைக்கு நாங்க நடந்துக்கிட்ட முறை தவறுதான்.. உணர்ச்சி வசப்பட்டுட்டோம்.. மன்னித்துக்கங்க.. மீனாவை நான் காதலிக்கிறேன்ப்பா.. இவளோட நிர்வாகத் திறமையைப் பற்றி உங்களுக்கே தெரியும்.. என் தொழில்கள் இந்த கானாடுகிரியில் அழியாமல் கட்டிக் காப்பாற்றியவள்.. மலைவாழ் மக்களுக்கு கல்வி நிறுவனம், ஹாஸ்பிடல்ன்னு நம்ம ஜமின் கட்டிக் கொடுக்கக் காரணமா இருந்தவள்.."
தான் கட்டிக் கொடுத்ததாகச் சொல்லாமல் கானாடுகிரி ஜமின் கட்டிக் கொடுத்தது என்று விஷ்வா சொன்னதில் உச்சி குளிர்ந்து போன ஜமின்தார் கோபிநாதன், விஷ்வநாதன் - மீனாம்பிகை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.. இரண்டு அண்ணன்களும் மனைவி சகிதமாக நின்றால்தான் மணமேடை ஏறுவேன் என்று ரூபிணி திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அடுத்த முகூர்த்தத்திலேயே அவர்களின் திருமணம் கானாடுகிரி ஜமின் அரண்மனையில் நடந்து முடிந்தது.. 
காமினி படப்பிடிப்பை சாக்காக வைத்துத் திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டாள்.. தருண் சோகமாக தாடியை அதிகமாக வளர்த்துக் கொண்டான்.. மூர்த்தியும் புனிதாவும் நம்ப முடியாத ஆனந்தத்துடன் திகைத்து விட்டார்கள்.. மோகணாவுக்கு தமக்கை நினைத்த வாழ்க்கை கிடைத்து விட்டது என்பதில் பரம சந்தோசம்.. 
திருமணத்தில் அழையா விருந்தாளியாக உறவு கொண்டாடி ஆனந்தனும் மனைவி குழந்தையுடன் கலந்து கொண்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. அவனுடைய குழந்தையை வாங்கித் தன் மார்போடு சேர்த்து அணைத்து கொஞ்சி மகிழ்ந்த மீனாவின் விழிகள் பாசத்தில் நிறைந்தன.. 
அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் ரூபிணியின் திருமணத்தை முடித்து வைத்து விட்டு மனைவியுடன் தேநிலவுக்கு சுவிட்சர்லாந்துக்குக் கிளம்பிச் சென்றான் விஷ்வா.. விஷ்வரூபம் மால் ஆறுமுகத்தின் மேற் பார்வையில் இயங்க ஆரம்பித்தது..
பொதிகையில் பூத்தவள் மீனா.. பொய்கையின் அருங் குணங்களைக் கொண்டவள்.. அவளது அருமை தெரிந்து அவளை ஆட்கொண்டுவிட்டான் அவளது விஷ்வநாதன்.

...முற்றும்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -74
பொதிகையிலே பூத்தவளே -74
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-74.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-74.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy