பொதிகையிலே பூத்தவளே -72

72 ' தப்பிக்க மார்க்கமில்லை.. ' தவியாய் தவித்தாள் மீனா.. அசையாமல் நின்றிருந்தவனின் துளைக்கும் பார்வை அவளைத் துரத்தியது.. அவன்...


72
'தப்பிக்க மார்க்கமில்லை..'
தவியாய் தவித்தாள் மீனா.. அசையாமல் நின்றிருந்தவனின் துளைக்கும் பார்வை அவளைத் துரத்தியது.. அவன் அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.. தனிமையில் சந்திக்க விடாமல் தவிர்ப்பவளிடம் அது குறித்துக் கேள்வி கேட்கவில்லை.. ஆனால், அவனது பார்வை அவளை இம்சித்தது.. துரத்தியது.. ஓடி ஒளிய இடமின்றி அவள் துடித்தாள்..
"என்ன பார்க்கறிங்க..?"
இயல்பாகக் கேட்டபடி காமினி திரும்பிப் பார்த்தாள்..
"விஷ்வாவைப் பார்த்தீங்களா..?" கள்ளமில்லாமல் சிரித்தாள்..
மறுக்கவும் முடியாமல் ஆமோதிக்கவும் முடியாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. காமினியின் மனதில் கள்ளமில்லை.. மீனாவின் மனதில் கள்ளம் புகுந்து விட்டதே.. அன்று காமினி கண்ட கள்ளமில்லா போர்க்குணம் கொண்ட மீனா கானாடுகிரி மலையில் தொலைந்து போய் விட்டாளே.. இப்போது இருப்பது வெறும் கூடு..
விஷ்வரூபம் மாலின் கடைசித்தளம் விஷ்வாவுக்கானது.. பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டிருந்த தளம்.. அவனுடைய அறையும், விருந்தினர்களின் அறைகளும் அங்கே இருந்தன.. அவற்றில் ஒரு அறையைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றாள் காமினி.. சோபாவில் மீனாவுடன் உட்கார்ந்தாள்.. போனை எடுத்து அவளுக்கும் மீனாவுக்கும் ஜூஸ் அனுப்பும்படி ஆறுமுகத்திடம் சொல்லி விட்டு மீனாவைப் பார்த்தாள்..
"ஹப்பா.. ஃப்ரீ மைண்டா இதுபோல இருந்து எவ்வளவு நாளாகுது..? எப்போப் பார்த்தாலும் ஷீட்டிங், ஷீட்டிங், ஷீட்டிங்... ஃப்ரீயா ஒரு நிமிசம் உட்கார முடியாது.. ஓடிக்கிட்டே இருக்கனும்னுதான் ஆசைப்படறோம்.. ஓட ஆரம்பிச்சா ஓய்வுக்கு மனம் ஏங்குது.."
மீனா பதில் சொல்லாமல் தலையை ஆட்னடிhள்.. காமினி சளசளவென்று பேசிக் கொண்டிருந்தாள். ஜூஸ் வந்தது.. மீனாவிடம் ஒரு தம்ளரை நீட்டி விட்டுத் தானும் ஒன்றை உறிஞ்ச ஆரம்பித்தாள்..
"உங்களிடம் பேச எனக்குப் பிடித்திருக்கு மீனா.. அப்போதும் இப்போதும் ஒன்று போலவே இருக்கறீங்க.. ஐ லைக் யு.. இதுவே மும்பையா இருந்திருந்தா என் ஸ்டேட்டஸ்ற்காகவும், நான் பிலிம் ஸ்டார் என்கிறதுக்காகவும் மட்டுமே என்னிடம் பேச போட்டி போடுவாங்க.. உங்களுக்கு இந்த ஐடெண்டியெல்லாம் தேவைப்படறதில்லை... எனக்காகவே என்னிடம் பேசறிங்க.. உங்களிடம் பேசும் போது நான் நானா இருக்கிறேன் மீனா.. விஷ்வாவும் இதைத்தான் சொல்றான்.."
"ஓ..."
காமினி நீண்ட நாள் கழித்து சந்திக்கும் தோழியிடம் பேசுவதைப் போலக் கலகலவென்று பேசித்தள்ளினாள்.. மீனா புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்..
அவள் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களை போனில் படம் பிடித்து வைத்திருந்தாள்.. அவற்றை மீனாவிடம் காட்டினாள்..
"இது மும்பையில் நடந்த பங்சன்.. இது ஃபாரினில் அவுட்டோர் ஷீட்டிங் போனபோது எடுத்தது.. இங்கே நான் ஷீட்டிங்கிற்காக போன போது விஷ்வாவை மீட் பண்ணினேன்.. பிஸி பிஸின்னு ட்வெண்டி ஃபோர் அவர்ஸிம் காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருந்தவன் எங்க ஷீட்டிங் முடிந்த அன்றைக்கு செலபரேட் பண்ண நடந்த பார்ட்டிக்கு வந்திருந்தான்.."
காமினி காட்டிய போட்டோக்களில் விஷ்வாவும் இருந்தான்.. காமினியுடன் பேசியபடி.. சிரித்தபடி என்று இருந்த போட்டோக்களில் ஒன்றில் காமினி யாருடனோ பேசிக் கொண்டிருக்கப் பக்கத்தில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
'இந்தப் பார்வை.?'
மீனாவின் மனதில் மின்னலடித்தது.. அவள் அவசரமாக காமினியின் கையிலிருந்த போனை ஏறக்குறைய பிடுங்கி அந்தப் போட்டோவைப் பார்த்தாள்.. அதில் விஷ்வா காமினியைச் சிலாகிக்கும் பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
'இது.. இது.. இது.. இதே போலதானே வனமலரையும் அவன் பார்த்தான்..? இதே பார்வையைத்தான் அந்த போட்டோவிலும் பார்த்தேன்..
மீனா வைத்த கண்ணை எடுக்காமல் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
"மீனா..? ஆர் யு ஆல்ரைட்..?"
காமினி மீனாவின் விரல்களைத் தொட்டாள்.. காமினியை ஏறிட்டுப் பார்த்த மீனாவின் விழிகளில் தவிப்பு இருந்தது..
"ஒன்னுமில்லை.."
"நத்திங்ன்னா ஓகே.. பட்.. என்னாலே ஒன்றை மட்டும் கெஸ் பண்ண முடியுது.. இந்த போட்டோ உங்களை ஏதோ ஓர் வகையில் அபெக்ட் பண்ணுது.. ஆம் ஐ ரைட்..?"
என்னவென்று மீனா சொல்வாள்..? மௌனம் சாதித்தாள்..
"என்னை உங்க ஃபிரண்டா நினைத்தாச் சொல்லுங்க.." காமினி வார்த்தைகளால் மீனாவின் மௌனத்தை உடைத்தாள்..
"சொல்லக் கூடாதுன்னு இல்லை காமினி.. எப்படிச் சொல்கிறதுன்னுதான் யோசிக்கறேன்.." சங்கடத்துடன் சொன்னாள் மீனா..
"நீங்க மனதில் உள்ளதை வெளிப்படையாப் பேசறவங்களாச்சே.. என்னிடம் பேச என்ன தயக்கம்..?"
"அது.. அது.. வந்து.. காமினி.. நீங்க தப்பா நினைத்து விடக்கூடாது.."
"உங்களைப் போய் தப்பா நினைப்பேனா..?"
"இந்தப் போட்டோவில் விஷ்வா உங்களை பிரியமா பார்த்துக்கிட்டு இருக்காரில்ல..?"
"அதுவா..?" காமினி முறுவலித்தாள்..
"அது பிரியம் மட்டுமில்லை.. அப்ரிசேசனும் சேர்ந்திருக்கு.. என்னுடைய நேர்மை, தொழில் பக்தின்னு புரொடூயுசர் என்னிடம் புகழ்ந்து பேசிக்கிட்டு இருந்தார்.. பக்கத்தில் நின்றிருந்த விஷ்வா அதை அப்ரிசியேட் பண்ணுவதைப் போல் என்னைப் பார்த்திருப்பான்.. நான் என்று இல்லை.. ரூபிணியையும் அவன் இப்படிப் பார்ப்பதுண்டு.. இதில் என்ன இருக்கு..?"
"ரூபிணியையும் பார்ப்பாரா..?"
"ஊம்.. அவ ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வர்டு.. அவளோட அம்மா பேசுவதையே தவறுன்னு சொல்லி விடுவா.. அதையும் அவங்களோட முகத்துக்கு நேரே சொல்லுவா.. விஷ்வாமேல பாசம் அதிகம்.. விஷ்வாவின் ஃபேமிலியில் அவன்மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் ஒரே ஜீவன் ரூபிணி மட்டும்தான்.. பெரியண்ணாவும் பெரியண்ணியும் விஷ்வாவுக்கு எகைன்ஸ்ட்டாவே பேசுவாங்க.. பெரியம்மா மனதை பாய்சனாக்குவாக்குவாங்க.. ரூபிணி அதைத் தட்டிக் கேட்பா.. செம இண்டலிஜெண்ட்.. ஸ்மார்ட் அண்ட் ஆக்டிவ் கேர்ள்.."
'வனமலர் ஸ்மார்ட் அண்ட் ஆக்டிவ் கேர்ள்டி.. இண்டலிஜென்டான பொண்ணு..' விஷ்வா கானாடுகிரி மலையில் நின்று சொன்னது மீனாவின் காதுகளில் ஒலித்தது..
"அவன் புத்திசாலித்தனமும் ஸ்மார்ட்னெஸ்ஸீம் எங்கிருந்தாலும் அப்ரிசியேட் பண்ணும் தன்மையுடையவன்.."
காமினியின் விழிகளில் இன்னும் ஏதேனும் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி இருந்தது.. மென்மையான அவளது பார்வை மீனாவின் மனதைப் படிக்க முயன்றது.. மனதோடு பேச முயன்றது.. திரை விலக்கி மனம் விட்டுப் பேச முடியாமல் தனக்குள் போராடினாள் மீனா.. நத்தை தன் கூட்டுக்குள் ஒளிந்து கொள்ள முயல்வதைப் போல மௌனமென்னும் கூட்டுக்குள் உட்புக முயன்றாள்.. காமினி விடவில்லை..
"விஷ்வா யாரையாவது இம்பார்ட்டன்ஸ் கொடுத்துப் பார்க்கிறதை நீங்க நோட் பண்ணினீங்களா மீனா..? அதனால்தான் கானாடுகிரியை விட்டு வந்தீங்களா..?" ஆழ்ந்த குரலில் கேட்டாள்..
மீனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. காமினி மிகச் சரியாகக் கணித்திருக்கிறாள்.. ஆனாலும் அதை எப்படி ஒப்புக் கொள்வது..? அப்படி ஒப்புக் கொண்டால் விஷ்வாவின் மீது வினோத் சுமத்திய குற்றத்தைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கும்.. அதை முழு மனதாக மீனாவே நம்பாதபோது காமினியிடம் சொல்ல முடியாதே..
"அப்படியெல்லாம் இல்லைங்க.. இது நான் பிறந்து வளர்ந்த மதுரை.. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. ஏதாச்சும் மலைப்பகுதியில் இருந்தால் உடம்பு குணமாகும்ன்னு நினைச்சுத்தான் கானாடுகிரிக்குப் போனோம்.. அங்கே அப்பாவுக்கு குணமாகிருச்சு.. மோகனாவும் ஏஜ் அட்டெண்ட் பண்ணிட்டா.. இரண்டு பெண்களை வைத்துக்கிட்டு சொந்த ஊரில் இருக்காமல் அசலூரில், அதுவும் மலையில் இருக்கிறோமேன்னு அப்பாவும், அம்மாவும் கவலைப் பட்டாங்க.. ஸோ, ரிட்டர்ன் ஆகிட்டோம்.."
"ஈஸிட்..?" நம்பாத தொனியில் கேட்ட காமினி..
"அப்படின்னா நீங்க ஏன் விஷ்வரூபம் மாலில் வேலையை கண்டினியூ பண்ணலை மீனா..? இங்கேதானே வேலை பார்த்தீங்க..?" என்று மடக்கினாள்..
அதற்கும் மீனாவிடம் பதில் இருந்தது..
"கானாடுகிரி மலையில் நான் ஜெனரல் மேனேஜர்.. விஷ்வா சாரோட அத்தனை தொழில்களின் மேனேஜர்களும் என் கண்ட்ரோலில் இருந்தாங்க.. சம்பளமும் லட்சக் கணக்கில் வாங்கினேன்.. இங்கே அப்படியில்லை.. ஆறுமுகம் சார்தான் மேனேஜர்.. நான் அவருக்குக் கீழே வேலை பார்த்தாகனும் சம்பளமும் ஆயிரக்கணக்கில்தான் கிடைக்கும்.."
"இதுதான் ரீசனா..?"
"இதுவும் ஒரு ரீசன்.. நாங்க அதிகமாச் செலவளித்துப் பழக்கப்படாதவங்க காமினி.. கானாடுகிரி மலையில் குடியிருக்க குவார்ட்டர்ஸ், கார், டிரைவர், வேலையாள்ன்னு எல்லா வசதிகளும் கிடைத்தது.. வீடு வாடகை இல்லை.. வேலையாளுக்கும், டிரைவருக்கும் விஷ்வாவே சம்பளம் கொடுத்தார்.. காருக்கான பட்ரோலும் கம்பெனி பணம்தான்.. மோகனாவின் ஸ்கூல் ஃபீஸ் ஒன்றுதான் நாங்க அதிகமாச் செலவளித்த தொகை.. மற்றபடி வீட்டுச் செலவு ரொம்ப ரொம்பக் கம்மி.. லட்சக்கணக்கில் வாங்கின சம்பளம் சேர்ந்து ஒரு கோடியை நெருக்கிக் கையில் இருந்தது.. எங்க வீடு இருந்த ஏரியா, மெயின் ஏரியா.. பஸ் ஸ்டாண்ட், கடைத் தெரு, ஸ்கூல்ன்னு எல்லாமே ரொம்பப் பக்கம்.. அந்தக் காலத்தில எங்க அப்பாம்மா வாங்கிப் போட்ட இடம்.. அப்பாவோ சக்திக்கு ஏத்ததைப் போல சிமிண்டு தளத்தில கட்டியிருந்தாரு.. தரையில் சிமிண்ட் பேந்து வீடு உழமானமாக இருந்தது.. பார்த்தேன்.. கையில இருந்த பணத்தைப் போட்டு வீட்டை இடிச்சுக் கட்டிட்டேன்.. கிரௌண்ட் ப்ளோரில் ரெண்டு கடையிருக்கு.. ஒன்னில் அப்பாவுக்காக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டேன்.."
"குட் டிசிசன் மீனா.. உங்க அப்பா ஏர்ன் பண்ணிக்கிட்டு இருந்தவரில்ல.."
"ஆமாங்க.. சின்னவயசிலேயே வேலைக்குப் போயிட்டாராம்.. குடும்பபாரத்தை சுமந்து சுமந்து நெஞ்சுவலி வந்து உட்கார்ந்துட்டாரு.. மகள் சம்பாதிக்க தான் உட்கார்ந்து சாப்பிடுகிறோம்ங்கிற எண்ணம் அவருக்கு வந்துரக் கூடாது.. அதனாலதான் அவரு உக்காந்துக்கிட்டே சம்பாதிக்கிறதுக்குத் தோதா கடையைக் கட்டிக் கொடுத்தேன்.."
"நீங்க லேடிஸ் பொட்டிக்ஸ் ரன் பண்றிங்களாமே.."
"ஆமாம்.. பெண்களுக்கான சேலை, சுரிதார், மாடர்ன் டிரஸ், இன்னர்ஸ், நைட்டிஸ், பிளவுஸ் பிட்ஸ்ன்னு ஜவுளி ஒரு செக்சன்.. காதில் போடும் ஸ்டட்லில் இருந்து காலில் போடும் கொழுசு மிஞ்சி வரை எல்லா லேட்டஸ்ட் டிசைனிலும் கவரிங் நகைகள் இன்னொரு செக்சன்.. நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டு, ஹேர்பேண்ட், ஹேர் பின், நெயில்பாலிஷ், லிப்ஸ்டிக், பவுடர், பெர்ப்யூம், ஃபேஸ் கிரிம், ஸ்கின் லோசன், மேக்-அப் செட்டுன்னு வேறொரு செக்சன்.. லேடிஸ் டெய்லர் ஒருத்தங்க வேற இருப்பாங்க.. கடையில் ஒருபக்கம் அவங்களுக்காக கண்ணாடி தடுப்புபோட இடம் கொடுத்திருக்கிறேன்.. மெஷின், இடம், என்னுடையது.. உடல் உழைப்பு அவங்களுடையது.. வருகின்ற சார்ஜில் ஆளுக்கு பாதின்னு பேசியிருக்கிறோம்.."
"சூப்பர்.. 50/50 அக்ரிமெண்டா..?"
"ம்ம்ம்.. இதைப்போல கடைக்குள் சின்னதா பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம்ங்கிற எண்ணமும் இருக்கு.. இடம், மெட்டிரியல்ஸ் நான் கொடுத்திருவேன்.. உடல் உழைப்பு அவங்களுடையது.."
"எக்ஸெலண்ட் மீனா.. ஆக லேடிஸ் உங்க கடைக்குள் எண்ட்ரி கொடுத்தா அவங்களுக்கான அத்தனை வேலைகளையும் முடித்து விடலாம்ன்னு சொல்லுங்க.."
"சரியாச் சொன்னீங்க.. என் கடைக்கான பெயரே 'மதுரா' 'பெண்களுக்கான பிரத்யேக உலகம்..' என்கிறதுதான்.."
"ஒன்லி ஃபார் லேடிஸ்.. செம ஐடியா.."
மீனா குதூகலப்பட்டிருக்க வேண்டும்.. அவளுக்கென்று ஒரு தொழிலை அவள் உருவாக்கியிருக்கிறாள்.. அதைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறாள்.. புதுவிதமான யுக்திகளைப் புகுத்தியிருக்கிறாள்.. அதை காமினியிடம் விவரிக்கும் போது உற்சாகம் கரை புரண்டு ஓட வேண்டாமா..? அவள் விட்டேற்றியான வெறுமையான மனநிலையுடன் பேசியதை வறண்டிருந்த அவளது குரல் காட்டிக் கொடுத்தது..
"மூணு வீடுகள வாடகைக்கு விட்டிருக்கோம்.. கடைகளில இருந்து நல்ல வருமானம் வருது.. அதனால வெளியில வேலைக்குப் போக வேண்டாம்ன்னு அப்பாம்மா அபிப்ராயப் பட்டாங்க.. நானும் சரின்னு கடையில உக்காந்துட்டேன்.."
"இப்ப இங்கே வந்திருக்கிறீங்களே.."
"மால் ஓப்பனிங் வேலையில என் ஹெல்ப் வேண்டும்ன்னு விஷ்வா சார் கேட்டுக்கிட்டார்.. நன்றிக்கடன்னு ஒன்னு இருக்கு.. அவர் மட்டும் வேலை கொடுத்து சமயத்துக்கு உதவியும் செய்யலைன்னா இந்த நிம்தியான வாழ்கையை நாங்க நினைச்சுக்கூடப் பார்த்திருக்க முடியாது.."
"ஸோ.. நன்றிக்கடனைக் கழிக்கத்தான் நீங்க இங்கே வந்திருக்கிறீங்க.."
"ஆமாங்க.."
"உங்களுக்கும் விஷ்வாவுக்கும் இடையிலே நன்றிக்கடனைத் தவிர வேறு எதுவும் இல்லை..?"
இல்லையென்ற உடனடிப்பதிலைச் சொல்ல முடியாமல் ஊமையானாள் மீனா..
"உங்களை நீங்களே ஏமாத்திக்கறிங்கன்னு நான் சொல்ல மாட்டேன் பட்.. என்னை ஏமாத்த டிரை பண்ணாதீங்க.."
"காமினி.."
"விஷ்வா உங்க மேல இண்ட்ரெஸ்ட் காட்டினான்.. ஃபாரின்லேயே குடியிருக்கிறவன் மதுரையில் தேங்கி நின்றான்.. உங்களுக்காக... நீங்க கானாடுகிரி மலைக்குப் போனதும் அங்கே இடம் மாறினான்.. டூ இயர்ஸா ஓப்பன் பண்ண முடியாம தேங்கிக் கிடந்த வேலைகள் எல்லாம் இப்ப ஜெட் வேகத்தில் நடக்குது.. அவனும் ஃபாரினையும் கானாடுகிரியையும் மறந்து மதுரையிலே ஸ்டே பண்ணியிருக்கிறான்.. எதற்காக..?"
"இந்த மாலின் திறப்பு விழாவுக்காக.."
"நோ மீனா.. உங்களுக்காக.. உங்களுக்காக மட்டும்தான் அவன் மதுரைக்கு வந்திருக்கிறான்.. இங்கே ஸ்டே பண்ண ஒரு ரீசன் வேண்டும் அதுக்காக மாலை ஓப்பன் பண்ணப் போறான்.."
"எப்படியிருந்தாலும் இந்த மாலைத் திறந்துதானே ஆகனும்..?"
"ஷ்யூர்.. அதை எப்போதோ செய்திருக்கனும்.. ஆனா அவன் செய்யலை.. பிகாஸ், நீங்க திறப்பு விழாவுக்கு மதுரைக்கு வரனும்னு நினைப்பீங்க.. அப்படி வந்து போனிங்கன்னா மதுரையிலேயே இருந்து விடலாமான்னு உங்க மனது மாறி விடும்ன்னு யோசிச்சான்.. அதனால் இங்கே வேலைகளை ரன் பண்ண விடாம லாக் பண்ணி வைச்சிருந்தான்.."
"என்னது..?"
இமை விரித்தாள் மீனா.. இது அவளுக்குத் தெரியாத தகவல்.. விஷ்வா வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும்..
"நான் இங்கே இல்லாத நாள்களில் நீ கானாடுகிரி மலையை விட்டு நகரக்கூடாது.." என்று கட்டளையிட்டு விட்டுத்தான் போவான்.
"உங்க மேல அவனுக்கு இருந்த இண்ட்ரெஸ்ட்டை என்னிடம் சொல்லியிருக்கிறான்.. இது மேரேஜில் முடிந்தாகனும் காமினி.. அதுவரை மீனா மதுரைக்கு போகக்கூடாதுன்னு சொல்லுவான்.. அப்படி அவ மதுரைக்குப் போனா நாங்க பிரிந்துடுவோம்ன்னு தோணுதுன்னு சொன்னான்.. இப்ப என்னடான்னா நீங்க மதுரைக்கு வந்து செட்டிலாகிட்டிங்க. அவன் உலகம் முழுவதும் அவனுக்கு இருக்கிற தொழிலகளை மறந்து உங்களுக்காக மதுரையில் வந்து உட்கார்ந்திருக்கிறான்.. கிரேட்.."
"நான் அவரை வரச் சொல்லலை.."
"பிரிஞ்சு வந்துட்டிங்களே.. அவன் உங்களை ஃபாலோ பண்ணாம என்ன செய்வான்..? அவனோட லவ்வை சந்தேகப்படறிங்களா..?"
'நான் அவனையே சந்தேகப் படறேன்..'
மனதுக்குள் குமுறினாள் மீனா.. கடல்நீர் நடுவே குடிநீர் தேடும் சோகம் என்று அவளை விட்டுப் போகும்..?
"என் மனதில் சில கேள்விகள் இருக்கு காமினி.."
"அப்ப, அதுக்கான ஆன்சரைத் தேடி நீங்க கானாடுகிரி மலைக்கு இல்ல ஓடியிருக்கனும்..? மதுரையில உங்களுக்கு என்ன வேலை..?"
"காமினி.."
"தொலைத்த இடத்தில்தான் பொருளைத் தேடனும் மீனா.. தொலைந்தா தொலைந்து விட்டுப் போகட்டும்ன்னு நம்மால் இருக்க முடிந்தால் பிராப்ளமே இல்லை.. உங்களால் அப்படி இருக்க முடியுமா..? உங்க மனதைத் தொட்டுச் சொல்லுங்க.. நீங்க இப்ப சந்தோசமா இருக்கறிங்களா..?"
காமினியின் கேள்வியில் மனமுடைந்து விம்மினாள் மீனா.. ஆதரவாக அணைத்துக் கொண்டாள் காமினி..
"நம்முடைய லைஃபில் பலரை மீட் பண்ணுவோம் மீனா.. யாரோ ஒருவர் நம் மனக்கதவைத் தட்டித் திறந்து விடுவார்.. அந்த ஒருவருக்காக நம் உயிரையும் கொடுப்போம்.. அப்படி என் மனக் கதவைத் தட்டித் திறக்கும் பவர் மேனுக்காக நான் தினம் தினம் காத்திருக்கிறேன்.. எனக்குக் கிடைக்காத காதல் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.. அதை கைநழுவ விடப் போறிங்களா..? இல்லை காப்பாற்றப் போறிங்களா..?"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -72
பொதிகையிலே பூத்தவளே -72
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-eOkjObsbSfU/XRG1BpaE_qI/AAAAAAAAApM/xSwxc-s_nicTu6SIu_9J_QRCDML1HdDZQCPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-72.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-72.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy