பொதிகையிலே பூத்தவளே -71

71 விஸ்வரூபம் மாலின் திறப்பு விழாவுக்காக வந்திருந்தாள் காமினி.. விழா ஏற்பாடுகளில் கவனமாக இருந்த மீனா காமினி வந்ததைக் கவனிக்கவில்லை.. ...


71

விஸ்வரூபம் மாலின் திறப்பு விழாவுக்காக வந்திருந்தாள் காமினி.. விழா ஏற்பாடுகளில் கவனமாக இருந்த மீனா காமினி வந்ததைக் கவனிக்கவில்லை.. அவளுக்குப் பின்னால் வந்து நின்ற காமினி கண்களைப் பொத்தியதும் திடுக்கிட்டுப் போனாள்.. விஷ்வாதான் இப்படி விளையாடுகிறானோ என்ற எண்ணம்.. வலிமையான விரல்களாக இல்லாமல் பஞ்சு போன்ற மென் விரல்களின் ஸ்பரிசத்தில் அது வேறு யாரோ ஒரு பெண் என்பதை உணர்ந்து கொண்டவளின் மனதில் ஏமாற்றம் ஏன் வந்து சேர வேண்டும்..?
"யாரு..?"
கண்களைப் பொத்திய கைகளைப் பற்றினாள் மீனா..
"யார்ன்னு தெரியலையா..?" சிரித்த முகத்துடன் முன்னால் வந்தாள் காமினி..
'இவளை எப்படி மறந்தேன்..?' மீனாவின் முகம் மலர்ந்தது..
"ஹவ் ஆர் யு மீனா..?" நாசுக்காக அவளை அணைத்துச் சிரித்தாள் காமினி..
"நல்லா இருக்கேங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..?"
"பீக்கில இருக்கேன்.. உங்களை மீட் பண்ணினப்பதான எனக்கு நியு ஃபிலிமில் புக் ஆனது.. அந்தப் படம் சூப்பர் ஹிட்.. அடுத்தடுத்து வந்த இரண்டு பங்களும் உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டன.. யு ஆர் எ லக்கி பெர்சன் மீனா.."
"சும்மா சொல்லாதீங்க.. நீங்க ஃபிலிம் ஸ்டார்.. உங்களுக்கான சக்சஸ் உங்களுக்குக் கிடைச்சிருக்கு.. இதில நான் எங்கே வந்தேன்..?"
"நீங்க எங்கேயும் வரலை.. நான்தான் மதுரைக்கு வந்தேன்.. உங்களைப் பார்த்தேன்.. உங்களுக்குத் தெரியுமா மீனா..? அந்த ஃபிலிம் புக் ஆகிறவரைக்கும் எனக்கு ஸ்டார் வேல்யூ இல்லை... ஹீரோயினா இரண்டு ஃபிலிம்களில் நடித்திருந்தேன்.. தட்'ஸ் ஆல்.. அது ஒன்றும் பெரிதா ஓடலை.. எப்படி இந்த மேஜிக் நடந்ததுன்னு தெரியலை.. விஷ்வாவும் இதையேதான் சொல்றான்.. உங்களை மீட் பண்ணின இந்த டூ இயர்ஸில எக்கச்சக்க சக்சஸ்ஸாம்.. எதுவும் ஃபெயிலியர் ஆகலையாம்.. புதுசா வேற பிஸினெஸ் ஸ்டார்ட் பண்ணினாம்.. கானாடுகிரியில நஷ்டத்தில ரன் ஆகிக்கிட்டு இருந்த அவனோட கம்பெனிகளையும் பேக்டரிகளையும் ஸேவ் பண்ணி லாபத்தில ரன் பண்ண வைத்தது நீங்கதானாமே குரோர்ஸ் கணக்கில லாபம் குவிந்ததாமே.. அதில் டிரஸ்ட் ஃபார்ம் பண்ணி, மலைவாழ் ஜனங்களுக்கு ஹாஸ்பிடல், ஸ்கூல்ன்னு கட்டிக் கொடுத்திருக்கிறானாமே.. இன்னும் காலேஜ் கட்ட ஐடியா பண்ணியிருக்கிறானாம்.. இத்தனைக்கும் காரணம் நீங்கதான்னு சொன்னான்.."
'இதையெல்லாம் எப்போச் சொல்லியிருப்பான்..?'
மீனாவுக்குத் தெரியவில்லை.. கானாடுகிரியில் இருந்த போது விஷ்வா காமினியைப் பற்றி எப்போதாவது பேசுவான்.. அவளிடம் மீனாவைப் பற்றிப் பேசுவான் என்பதைச் சொன்னதில்லை..
'ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸ்.. போனில் பேசியிருந்திருப்பாங்க..'
காமினி முன்பைவிட அழகாகத் தெரிந்தாள்.. வெற்றிகளை ஈட்டி விட்ட சந்தோசம் அவளது முகத்தில் இருந்தது.. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவளைப் பார்த்தது.. அப்போது மீனாவுக்கு விஷ்வா யாரோ எவரோ.. சம்பளம் கொடுக்கும் முதலாளி என்றிருந்தாலும் எந்த நொடியிலும் வேலையை விட்டு ஓடத் தயாரான நிலையில் இருந்தாள்.. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேச மாட்டாள்..
இப்போதும் அப்படித்தான் என்றாலும் இடைபட்ட காலத்தில் நீயின்றி நானில்லை என்று அவனைச் சரணடைந்தவள் மீனா.. அனைத்தும் அவனே என்று உருகியவள்.. இன்று வெறுத்துப் பிரிந்து வந்தபின்பும் அவனை மறக்க முடியாமல் துடித்துக் கொண்டிருப்பவள்.. அவளுக்கு விஷ்வா யாரோ எவரோ.. காமினிக்கு அன்றும் விஷ்வா உறவு.. இன்றும் அவனது உறவினராக விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள்..
"ஷீட்டிங்கை போஸ்ட்போன் பண்ணச் சொல்லிட்டேன்.. இந்த பங்சன் எனக்கு வெரி இம்பார்ட்டண்ட்.. பிகாஸ், விஷ்வா எனக்கு மோஸ்ட் இம்பார்ட்டாண்ட்.."
'அவனுக்கும் நீங்க இம்பார்ட்ண்ட்தான்..'
மீனாவின் மனம் வெறுமையானது.. விஷ்வாவை விட்டுத் தொலை தூரத்தில் விலகி நிற்பதைப் போல உணர்ந்தாள்.. காமினியைப் போல உரிமையுடன் அந்த விழாவில் மீனாவால் வலம் வர முடியுமா..? ஒரு வேலையாளாக வலம் வரலாம்.. அவன் அதற்காகத்தானே அவளை அழைத்திருக்கிறான்..
அவன் தொட்டால் பாகாய் உருகு விடுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டபின்பு மீனா தனிமையில் இருப்பதில்லை.. விஷ்வரூபம் மாலுக்கு வரும் போதெல்லாம் பக்கத்தில் ஆள்கள் வேலை செய்வதைப் போலப் பார்த்துக் கொள்வாள்.. இல்லாவிட்டால் ஆள்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பகுதிகளில் நின்று மேற்பார்வை செய்வாள்.. திருத்தங்களைச் செய்வாள்..
விஷ்வாவுக்கு அவளின் திட்டம் புரியத்தான் செய்தது.. அவனும் அங்கே வந்து நின்று உறுத்துப் பார்ப்பான்.. அவன் வந்து விட்டால் அவளிடம் தோன்றும் தடுமாற்றத்தையும், நடுக்கத்தையும் கோபத்துடன் ரசிப்பான்.. வேலையைப் பற்றிப் பேசுவதைப் போல அவளிடம் பேசுவான்.. மீனா ஒட்டாத குரலில் பதிலளித்து விட்டு வேறு பக்கம் நகர்ந்து விடுவாள்..
'விழாவுக்கு மும்பையில் இருக்கும் காமினியை இன்வைட் பண்ணியிருக்கான்.. ஃபாரின்ல இருந்தெல்லாம் ஆள் வருவாங்கன்னு சொல்றான்.. மினிஸ்டர், கலெக்ட்டர்ன்னு அத்தனை பேருக்கும் இன்விடேசன் போயிருக்கு.. இந்தா இருக்கிற எங்க வீட்டுக்கு ஒரு இன்விடேசன் வரலை.. கட்டாயம் நீங்க வந்து கலந்துக்கனும்னு ஒரு வார்த்தைக்காவது அப்பாம்மாவைக் கூப்பிடலை.. அது சரி.. நாங்க யாரு..? ஒட்டா, உறவா..? வேலைக்காரங்கதானே..' மீனா மனதுக்குள் குமுறினாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..
அன்பு, பாசம், மரியாதையை எல்லாம் கேட்டு வாங்கக் கூடாது.. அவை தானாகக் கிடைக்க வேண்டும்.. முக்கியத்துவமும் அப்படித்தான்.. மீனா கேட்டுத்தான் விஷ்வா அவளது குடும்பத்தை விழாவுக்கு அழைக்க வேண்டுமா..? தானாக அழைத்திருக்க வேண்டாமா..? அதுவரை அவன் அழைக்கவில்லை என்றால் அந்த நினைவே அவன் மனதில் இல்லை என்றுதானே அர்த்தமாகிறது..?
மீனா இறுகிய முகத்துடன் வேலைகளைக் கவனித்தாள்.. அவள் வந்த பின்னால்தான் எல்லாம் சரியாக நடக்கிறது என்று ஆறுமுகம் அபிப்ராயம் தெரிவித்தார்.. பக்கத்தில் நின்றிருந்த விஷ்வாவின் பார்வை அவளைக் குற்றம் சாட்டியது..
"எப்போதும் நான் பக்கத்திலேயே இருக்க முடியாதே சார்.." அவனது குற்றம் சாட்டும் பார்வைக்கான விளக்கத்தை ஆறுமுகத்திடம் சொல்வதைப் போல ஜாடையாகச் சொன்னாள் மீனா.. அவனுக்கா அது புரியாது..? அவன் பல்லைக் கடித்தான்..
"வீட்டை எடுத்துக் கட்டினப்ப ரெண்டு கடையையும் கட்டியாச்சு சார்.. அப்பாவுக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.. எனக்கு ஷாப்.. அப்பாம்மா கண்ணுக்கு முன்னாலே நான் இருக்கிறதில அவங்களும் நிம்மதியா இருக்காங்க.. தேவை  இருந்தது.. வேலைக்கு வந்தேன்.. இப்ப அப்பாவுக்கும் குணமாகிருச்சு.. எனக்கும் பணவசதி கூடுச்சு.. இருக்கிற இடத்திலேயே பிழைக்க என்ன செய்யனுமோ அதைச் செய்தாச்சு.."
"அவங்க ஏணியில ஏறிட்டாங்க ஆறுமுகம்.. இனி ஏணியின் உதவி அவங்களுக்குத் தேவையில்லை.." விஷ்வா குத்தலாகச் சொன்னான்..
"மீனா அப்பேற்பட்ட பொண்ணு இல்ல சார்.." என்னவோ விஷ்வாவுக்கு மீனாவின் குணத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பதைப் போல ஆறுமும் பரிந்து பேசினார்..
"வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பொண்ணு, காலேஜ்.. காலேஜ் விட்டா வீடுன்னு கைக்குள்ள பொத்திப் பொத்தி வளர்த்தான் மூர்த்தி.. மகன் சரியில்லை.. மனசுக்குள்ளே வைச்சு வைச்சு மருகி மருகி நோயில விழுந்துட்டான்.. குடும்ப பாரம் சுமக்க மீனா வேலைக்கு வர வேண்டியதாகிருச்சு.. அப்பவும் நான் இங்க மேனேஜரா இருக்கிறதினாலதான் மூர்த்தி மகளை அனுப்பி வைச்சான்.. இல்லேன்னா திண்ணையில ஒரு இட்லிக்கடையைப் போட்டுக்கலாம்.. நீ வேலைக்கு போக வேண்டாம்ன்னு வீட்டில நிறுத்தியிருப்பாங்க.."
விஷ்வா பதில் சொல்லவில்லை.. மீனாவை ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டுப் போய் விட்டான்.. அவனில்லாத இடம் வெறிச்சென்று ஆகி விட்டதைப் போல இருந்தாலும் மீனா சமாளித்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.. விருந்தினர்கள் வருவார்கள் என்று விஷ்வா சொல்லியிருந்தான்தான் காமினி வருவாள் என்று சொல்லவில்லை..
"அப்படியே நில்லுங்க மீனா.."
நான்கடி தள்ளி நின்று அவளைத் தலை முதல் கால்வரை பார்த்த காமினி..
"வாவ்.." என்றாள்..
"என்னங்க..?"
"வாட் எ சேன்ஜ்..! அன்றைக்கு பார்த்த மீனாவா நீங்க..? அசத்தறிங்க போங்க.."
"என்னத்த அசத்தறேனாம்..? அதே முஞ்சிதாங்க.. இப்பவும் இருக்கு.. வேற மூஞ்சிக்கு மாறலையே.."
"அதே ஃபேஸ்தான்.. பட் என்ன ஒரு தெளிவு.. அன்றைக்கு பார்த்த மீனாவிடம் ஒரு இன்னொஸன்ஸ் இருந்தது.. பயம் இருந்தது.. தயக்கம் இருந்தது.. இப்போ டோட்டலா ஜேன்ஜ் ஆகியிருக்கீங்க.. நேர்கொண்ட பார்வை, புத்திசாலித்தனம், கண்டிப்புன்னு வெளுத்துக் கட்டறிங்க.. கானாடுகிரியில விஷ்வாவோட அத்தனை கம்பெனிகளையும் கண்ட்ரோலில் வைத்திருந்தீங்களாமே.. விஷ்வா அப்ரிசியேட் பண்ணுவான்.."
"என் வேலையைத்தானே நான் செய்தேன்..?"
"அதை தைரியமா செய்திருக்கீங்க.. வெல்டன் மீனா.. யு டிட் எ கிரேட் ஜாப்.."
காமினி பாராட்டியதில் கூச்சப்பட்டாள் மீனா.. இப்படி முகத்துக்கு நேரே புகழுரையைக் கேட்க லஜ்ஜையாக இருந்தது சங்கடத்துடன் அவள் புன்னகைத்தபோது..
"ஐ அக்ரி வித் யு.." என்றபடி அங்கே வந்தான் தருண்..
'தருணா இது..?' மீனா வாய் பிளந்தாள்..
அன்று பார்த்த தருணிடம் ஒர் சிறுபிள்ளைத்தனம் இருந்தது.. இன்றோ வாட்ட சாட்டமாக ஓர்வித முரட்டுத்தனத்துடன் இருந்தான்.. ஜீன்ஸ், டிசர்ட் என்று இருந்தவன் கோட், சூட் அணிந்து கம்பீரமாக நின்றான்..
"என்னதடா அக்ரி பண்ற..?"
"நீ சொன்னதைத்தான் காமினி.. மீனா டிட் எ கிரேட் ஜாப்.." என்று ஒப்பித்தான் தருண்..
'இதில் மட்டும் இவன் மாறல.. அப்படியே கடலை வறுக்கிறான்..' மீனா உதட்டில் துளிர்த்த சிரிப்பை வாயைத் துடைப்பதைப் போல நாசுக்காக மறைத்தாள்..
"நான் எதுக்காக சொன்னேன்னு உனக்குத் தெரியுமாடா..?"
"எதுக்குச் சொன்னால் என்ன..? மீனா எதைச் செய்தாலும் அது சிறப்பானதாத்தான் இருக்கும்.."
"இவனை சிறப்பாச் செய்யனும் காமிணி.." விஷ்வாவின் குரல் கேட்டது..
'வந்துட்டானா.. யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னேன்னு சொல்கிறதைப் போல.. தருண் முன்னாடி வந்தா, அவனைத் தொடுத்துக்கிட்டு இவன் வந்திருவானே..'
"செய்.. எதாவது செய்..
             இன்றாவது செய்..
    நன்றாவது செய்.."
என்று பாடினாள் காமினி.. காமரசம் கொட்டும் பாடல் அந்தச் சூழலில் நகைச்சுவை சொட்டும் பாடலாக மாறிப் போன விந்தையை நினைத்து வியந்தாள் மீனா.. இடம், பொருள், ஏவல் என்பது அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பது இதுதானோ..
காமினியும் விஷ்வாவும் கலாய்த்ததில் தனக்கொன்றும் சேதாரம் ஏற்படவில்லை என்பதை மீனாவிடம் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தான் தருண்.. காமினியின் பாடலை ஒரு புன்னகையுடன் புறம் தள்ளினான்.. விஷ்வாவிடம் சலனமில்லாத முகத்துடன் பேசினான்..
"மால் ரொம்ப அழகா இருக்கு அத்தான்.. பட்.. டூ இயர்ஸா இதை ஓப்பன் பண்ணாம ஏன் லேட் பண்ணினீங்க..?"
"மும்பையில ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியை ஓப்பன் பண்ண வேண்டியிருந்தது.. அதற்க்கப்புறம் நான் இந்தியாவிலேயே இல்லையேடா.. ஃபாரின்ல இருந்தேன்.. ஸோ.. இங்கே வேலை கம்ப்ளீட் ஆகியிருந்தாலும் ஓப்பன் பண்ண லேட்டாகிருச்சு.."
"ஊஹீம்..?"
பெரிய மனிதனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு விஷ்வாவிடம் தலையைத் தலையை ஆட்டியபடி மீனாவை கள்ளப் hபர்வை பார்த்தான் தருண்.. அதை கண்காணித்துக் கொண்டிருந்த விஷ்வா..
"லுக் அட் மி தருண்.." என்று உறுமினான்..
"நீயென்ன பெண்ணா..?" காமினி வாய் பொத்தி சிரித்தாள்..
"தருண்.. யு ஆர் எ மெச்சூர்டு மேன்.."
"யா.. யா.. யா.. அத்தான்.."
"பார்க்க மட்டும் மெச்சூர்டா இருந்தால் போதாது.. பிஹேவியரும் மெச்சுர்டா இருக்கனும்.." எரிச்சலுடன் சொன்னான் விஷ்வா..
"நீங்க எதைப்பத்தி பேசறிங்க அத்தான்..? ஐ கான்'ட் அன்டஸ்டான்டு" நெற்றியை சுருக்கி விவரம் கேட்டான் தருண்..
"படுத்தாதேடா.. சரி வா.."
"எங்கே அத்தான்..?"
"மாலைச் சுற்றிக் காட்டறேன்.."
"'ம் ஸோ டயர்டு அத்தான்.."
"அப்ப ரெஸ்ட் எடுக்க போ.. இங்கே உனக்கு என்ன வேலை..?"
விஷ்வா விரட்டிய விரட்டலில் தருண் ஏக்கத்துடன் மீனாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போய் விட்டான்..
"பாவம்டா அவன்.. வந்தவுடனே இப்படியா விரட்டுவ..?" அனுதாபப் பட்டாள் காமினி..
"இம்மெச்சூரா பிஹேவ் பண்றான்.. எரிச்சல் வராதா..?"
"அழகான பெண்களைக் கண்டுட்டா எல்லா ஆண்களும் இம்மெச்சூரா பிஹேவ் பண்ணத்தான் செய்வாங்க.. மீனா அழகான பெண்..! யு நோ.. தருண் அப்போதும் மீனாவிடம் இப்படித்தான் ஜொள் விடுவான்.. ஹா.. ஹா.."
விஷ்வா காமினியுடன் இணைந்து சிரிக்கவில்லை.. மாறாக மீனா என்னவோ தருணை மயக்கிப் பார்வையிட வைத்ததைப் போல அவளை முறைத்தான்.. போடா என்று முகம் திருப்பிக் கொண்டாள் மீனா..
"விஷ்வா.. நானும் தருணும் மாலில் ஸ்டே பண்ணிக்குவோம்.. மற்ற கெஸ்ட்டுக்கு ரூம்ஸ் அரேன்ஜ் பண்ணிட்டியா..?"
"பண்ணியாச்சு.."
"கானாடுகிரியில் இருந்து வருவாங்க இல்லையா..?"
"தெரியலை.. வந்தால் ஸ்டே பண்ண ரூம்ஸ் மாடியில் இருக்கு.. ஆனா அவங்க வரனுமே.."
மீனாவின் முகத்தை ஆராய்ந்தபடி காமினிக்குப் பதில் சொன்னான் விஷ்வா.. அவனுடைய குடும்பத்தில் இருந்து மாலின் திறப்பு விழாவுக்கு வருகை தருவார்கள் என்பதில் மீனாவுக்குள் பதட்டம் வந்தது..
'இதையேன் நான் யோசிக்கலை..?'
"அவங்க வரமாட்டாங்க காமினி.. இதை உறுதியா என்னால் சொல்ல முடியும்.." என்றான் விஷ்வா..
ஸ்விட்ச் போட்டதைப் போல மீனாவின் முகத்தில் வெளிச்சம் பரவியது..
"எதை வைத்து அப்படிச் சொல்கிற..? அவங்க மதுரைக்கு வருவதை லைக் பண்றவங்களாச்சே... மீனாட்சியம்மனும் சொக்கநாதரும்தானே உங்க குலதெய்வம்.."
"கரெக்ட்தான் காமினி.. கோவிலுக்கு மட்டும்ன்னா அவங்க வருவாங்க.. மாலின் திறப்பு விழான்னா வரமாட்டாங்க.."
"அதுதான் ஏன்..?"
"பிகாஸ், அண்ணன் தனியா எந்த பிஸினெஸ்ஸையும் ஆரம்பிக்கல.. இது நம்பர் ஒன்.. அடுத்ததா, திறப்பு விழாவுக்கு ஃபாரினர்ஸ், மினிஸ்டர்ஸ், கலெக்டர்ன்னு வருவாங்க.. அதில் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜெலஸ் வரும்.."
"அதைச்சொல்லு.. அண்ணாவும் அண்ணியும் அந்தக் காலத்தில இருந்து வெளியே வர விரும்புவதே இல்லை விஷ்வா.. கானாடுகிரி அரண்மனை, ஜமின்தார் ஜமின்தாரினிங்கிற பெருமை.. காட்..! ஐ கான்ட் டாலரேட்.."
"விடு.. அவங்க குணம் அப்படி.."
விட்டேற்றியாகச் சொல்வதைப் போல மீனாவின் முகத்தை ஊன்றிப் பார்த்தான் விஷ்வா.. அவள் முகம் சிவக்கத் தலைகுனிந்தாள்.. அவன் கண்களில் பல்ப் எரிந்தது.. இப்படி அவள் நாணத்துடன் அவனைப் பார்த்து எத்தனை நாள்களாகிறது..
"மீனா.. என் ரூமுக்குவாங்க.. பேச நிறைய மேட்டர் இருக்கு.."
காமினி மீனாவின் கையைப் பிடித்து இழுத்தபோது மறுக்க முடியவில்லை.. அவளுடன் நடந்த மீனா திரும்பிப் பார்த்தாள்.. அங்கே அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்வா..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -71
பொதிகையிலே பூத்தவளே -71
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-71.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-71.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy