பொதிகையிலே பூத்தவளே -70

70 விஸ்வரூபம் மாலில் பிரவேசித்த மீனாவுக்கு ஆரத்தி ஒன்றுதான் எடுக்கவில்லை.. ஆறுமுகமும் விஷ்வரூபம் மாலின் மற்ற ஊழியர்களும் தடபுடலாக வரவ...


70

விஸ்வரூபம் மாலில் பிரவேசித்த மீனாவுக்கு ஆரத்தி ஒன்றுதான் எடுக்கவில்லை.. ஆறுமுகமும் விஷ்வரூபம் மாலின் மற்ற ஊழியர்களும் தடபுடலாக வரவேற்றுக் கொண்டாடினார்கள்.. பழகிய இடம்.. பழகிய மனிதர்கள் என்பதில் மீனாவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தாள்..
'இந்த மால்தான் என் வாழ்வை மாற்றிக் காட்டியது..'
நன்றியுடன் மாலைச் சுற்றி வந்தாள்.. அதன் ஒவ்வொரு அங்குலமும் அவளுடன் பேசுவதைப் போலவே இருந்தது.. இங்குதான் அவள் விஷ்வாவைச் சந்தித்தாள்.. இங்குதான் அவள் அவனை முறைத்தாள்.. இங்குதான் அவளுக்கு விஷ்வாவின் மீதான பகைமையுடன் கூடிய நூதனமான ஈர்ப்பு உருவானது.. இங்குதான் அவள் விஷ்வாவை எதிர்த்து நின்றாள்.. இங்குதான் அவள் விஷ்வாவிடம் நன்றிக்கடன் பட்டாள்.. இங்குதான் அவள் விஷ்வாவின் முன்னால் ஏதேனும் ஒரு மலைவாசஸ்தலத்தில் அவளுக்கு வேலை வாங்கித்தர முடியுமா என்று இறைஞ்சி நின்றாள்.. இங்குதான் அவன் அவளை கானாடுகிரி மலைக்கு வருகிறாயா என்று அழைப்பு விடுத்தான்.. இங்குதான் அவளுக்கும் விஷ்வாவிற்கும் இடையேயான உறவு அரும்பியது..
'இங்குதான்.. இங்குதான்.. இங்குதான்..' அவளது மனம் கூவியது..
அவளது வாழ்வின் அதிமுக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக நின்ற கட்டிடத்தை அவள் பாசத்துடன் பார்த்தாள்.. சுவர்களை வருடி முத்தம் கொடுத்தாள்.. முதல் தளத்தில் யாருமேயில்லை..
"கொடுத்து வைத்த சுவர்.."
யாருமில்லா தளத்தில் யார் பேசுவது என்று அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. பேசுவது அவன்தான் என்பதை அவள் இனம் கண்டு கொண்டாலும் எங்கேயிருந்து பேசுகிறான் என்று குழம்பிப் போனாள்.. திகைப்புடன் அவள் பார்த்தபோது பக்கத்திலிருந்த அறையிலிருந்து விஷ்வா வெளிப்பட்டான்.. அவளையே பார்த்த வண்ணம் நெருங்கி வந்தான்.. அலட்சியமாகக் கலைந்து முன் நெற்றியில் கவர்ச்சியாகப் படிந்திருக்கும் சிகை.. துளைக்கும் பார்வை.. கம்பீரமான நடை.. அவளது மனம் அவனது தோற்றத்தில் மயங்கித் தன் வயமிழந்து அவனிடம் ஓடியது.. விலகி ஓட வேண்டும் என்ற நினைவின்றி அவள் அவனையே ஆவலுடன் பார்த்தபடி செதுக்கி வைத்த சிலை போல நின்று விட்டாள்.. அவனது விழிகள் பிரகாசித்தன.. வெகு அருகில் அவன் வந்த பின்னால்தான் அசையாமல் அங்கேயே நின்றுவிட்ட தன் முட்டாள்தனத்தை உணர்ந்தாள் மீனா.. அவள் விலகி ஓடுவதற்குள் அவளது இருபக்கமும் கைகளை ஊன்றிச் சிறை பிடித்து விட்டான் விஷ்வா..
சுவரோடு சுவராக பல்லி போல ஒட்டிக் கொண்ட மீனாவின் இதயம் தடதடத்தது... தப்பிக்கும் பிரயத்தனங்கள் எதற்காக என்று அவளது மனம் சிரித்தது.. புதிதாக அவன் அவளைத் தொடுகிறானா..? அவனும் அதைத்தான் கேட்டான்..
"ஏன் ஓடப் பார்க்கிற மீனா..? என் விரல் உன்மீது பட்டதில்லையா..?"
அவளுடைய முகத்தோடு முகம் வைத்து.. ரகசியக் குரலில் அவன் கிசுகிசுத்த போது அவள் தன்னை மறந்தாள்.. அவளது கன்னத்தின் மீது படிந்த அவனது சூடான மூச்சுக்காற்று அவளை ஏதோ ஓர் நதியில் நீராட அழைத்துச் சென்றது.. எங்கோ தொலைதூர தொடுவானை நோக்கிப் பறப்பதைப் போல உணர்ந்தாள்.. அவனைத் தேடிய உடலும் மனமும் அவளுக்கு எதிராக உருகியதில் விம்மினாள்.. அதில் விஷ்வா சினம் கொண்டான்.
"ஏண்டி அழுகற..? நான் தொட்டா உன் மேரேஜ் நின்று விடுமா..?"
"ஷட் அப் விஷ்வா.." மீனா சீறினாள்..
"விஷ்வா..!" அவன் பலமாக சிரித்தான்..
"இப்போ மட்டும் விஷ்வான்னு கூப்பிடறியே.. உன் வீட்டில் ஏண்டி சார்ன்னு கூப்பிட்ட.. அவங்க முன்னாடி நடிக்கிறயா..?"
"அது உங்க வழக்கம்.."
"எதுடி என் வழக்கம்..?"
"அதுசரி.. ஆயிரம் பேரோட பழகிக் களிக்கிறவருக்கு ஒத்தைப் பழக்கத்தைச் சொன்னா எதுன்னு தெரியாதுதான்."
"ஓ.. இப்படிக் கேட்டா.. நீ அப்படி வருவ..? குட்.. நானும் உன் டிரெண்டையே ஃபாலோ பண்றேன்.. ஆயிரம் என்ன..? இந்த வெர்ல்டை சுற்றி வருகிற எனக்குக் கோடி பேரோட பழக்கம் இருக்கு.. பட்.. அவங்களும் நீயும் ஒன்றில்லை.. நீ கோடியில் ஒருத்திடி.. எனக்காகப் பிறந்தவ.. மைண்ட் இட்.."
மீனாவின் விம்மல் அதிகரித்தது.. அவளது மனம் பாடியது.. அந்தப் பாடலின் வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தில் அவளது மனம் வலித்தது..
'உனக்காகப் பொறந்தேனே எதழகா..
             பிரியாம இருப்பேனே பகலிரவா..'
அவனைத்தான் அவள் பிரிந்து வந்து விட்டாளே.. பகலிரவாகப் பிரியாமல் இருப்பதென்பது சாத்தியமா..? பகலிரவாக அவனை நினைத்து மனதுக்குள் அழுது கொண்டிருப்பதுதான் சாத்தியப்படுகிறது..
அவனைப் பார்த்தால் மனதின் கட்டுப்பாடு காற்றோடு பறந்து விடும் என்று அவனிடமிருந்து பார்வையை விலக்கித் தலை குனிந்தாள் மீனா.. விஷ்வா சினம் கொண்டான்.. அவளையே உறுத்துப் பார்த்தான்.. அந்தப் பார்வையின் கோபத்தில் அவள் துவண்டாள்.. விஷ்வாவின் விரல்நுனி அவளது கன்னத்தில் பட்டது.. மீனாவின் தளிர்மேனி நடுங்கியது.. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. ஆத்திரம் அதிகரித்தவனாக அவளது முகத்தை இறுக்கிப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான் விஷ்வா..
"ஏண்டி..? என் முகத்தைப் பார்க்கப் பிடிக்கலையா..?"
'இவன் இப்படித்தான் பேசுவான்..'
அவருக்குத் தெரியும்.. அவளுக்கு அவன் முகத்தை மட்டும்தான் பிடிக்கும் என்று.. அவன் முகம் பார்த்துத்தான் அவள் மயங்கிப் போனாள்.. எவரையும் நேர்கொண்ட பார்வை பார்க்கும் தைரியசாலி, அவன் முகத்தை நேருக்குநேர் பார்க்க முடியாத கோழையாக இருந்தாள்..
"ஆமாம் பிடிக்கலை.." தந்நெஞ்சறியப் பொய் சொன்னாள் மீனா..
அவன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. தவித்துப் போனாள் மீனா..
'இப்படிப் பார்த்துத் தொலைக்காதேடா..' மனதுக்குள் அரற்றினாள்.. தாளமாட்டாத அவளது தவிப்பை மறைக்க..
"பெரிய மனிதனுக்கு இது அழகில்லை.." என்று சீறினாள்..
"அப்போ.. நான் அழகில்லைன்னு சொல்கிற.."
'இம்சையே..! நான் எங்கேடா அப்படிச் சொன்னேன்..?' மீனாவுக்கு வெறி வெறியாக வந்தது..
"உங்க நடத்தை அழகில்லைன்னு சொன்னேன்.."
"அதை நீ அழகு படுத்த வேண்டியதுதானே..? நீ சொன்னா நான் எதையும் கேட்பேன்னு உனக்குத் தெரியுமேடி.."
அவன் உல்லாசமாக நகைத்தான்.. அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் நாணத்தில் அவள் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டவனுக்குக்குள் காதல் பெருக்கெடுத்தது.. விரல் நுனியால் தொட்டவன் கையால் அவளது கன்னம் பற்றி வருடினான்.. மீனா இமை மூடித் துடித்தாள்..
'ஊஹீம்.. இது கூடாது.. இவன் தொட்டால் என்னால் தடுக்க முடியாது.. மயங்கிப் போயிருவேன்னு தெரிந்து வைத்திருக்கிறான்..
அவனைக் காயப்படுத்தி அந்த உல்லாச மனநிலையிலிருந்து வெளியில் கொண்டு வந்து விடும் வேகம் கொண்டாள் மீனா..
"அந்த வனமலர் சொன்னாலும் நீங்க எதையும் கேட்பீங்கன்னு எனக்குத் தெரியும்.." வெடுக்கென்று சொன்னாள்..
மீனா எதிர்பார்த்ததைப் போலவே அவன் வெகுண்டான்..
"ஏய்ய்.. அவ பெயரை ஏண்டி தேவையில்லாமல் இழுக்கற..?"
"தேவையோடுதான் இழுக்கறேன்.. என்னவோ எனக்கு மட்டும் இம்பார்ட்டன்ஸ் கொடுத்து என் பேச்சை மட்டும் கேட்டதைப் போலப் பேச வேணாம்.."
"என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுங்கிற முடிவோட இருக்கடி.."
"தெரியுதில்ல.. சொல்லாதீங்க.."
"மீனா.."
அவன் கோபத்துடன் தள்ளிப் போய் விடுவான் என்று அவள் நினைத்திருக்க அவன் தாபத்துடன் அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.. அவனது மீசையின் ரோமங்கள் அவள் கன்னத்தில் உரசிக் காயப்படுத்தின.. சூடான வெப்பக் காற்று அவளது முகத்தின் மீது படிய..மீனா தந்நிலை மறந்தாள்..
பிரிவு என்பது கொடியது.. விஷ்வா வேண்டாம் என்ற முடிவை மீனாதான் எடுத்தாள்.. அவன் எத்தனையோ விளக்கம் சொல்லியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரிந்து ஓடிவந்தாள்.. ஓடி வந்தவளால் ஓர்நொடி அவனை மறந்து இருக்க முடிந்ததா..? இருபத்தி நான்கு மணி நேரமும் அவனுடைய நினைவுதான்.. உடலும் மனமும் அவனைத் தேடிக் களைத்ததில் சோர்ந்து போயிருந்தவளால் அவன் தொட்டதும் விலகி ஓடிவிட முடியவில்லை..
மீனா தொய்ந்து அவன் மார்பில் புதைந்தாள்.. வெற்றிப் புன்னகையுடன் அவளைத் தழுவித் தன்னுடன் இறுக்கிக் கொண்டான் விஷ்வா.. கிடைத்த வாய்ப்பை நழுவவிட அவன் என்ன முட்டாளா..? அத்துடன் அவளைவிட அதிகமாக அவனுடைய உடலும் மனமும் அவளைத் தேடுகிறதே..
ஆவேசத்துடன் அவளைத் தழுவி முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான்.. அவள் சுயநினைவிலிருந்து நழுவி அவனுடைய தளுவலுக்குள் தொலைந்து கொண்டிருந்தாள்.. வலிமையான அவனுடைய கரங்களுக்குள் அவளுடைய தளிருடல் நடுங்கிக் கொண்டிருந்தது..
"ப்ளீஸ்.. டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ.. ஐ லவ் யு.. ஐ லவ் ஒன்லி யு..." கரகரத்தது அவன் குரல்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -70
பொதிகையிலே பூத்தவளே -70
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-70.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-70.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy