பொதிகையிலே பூத்தவளே -69

69 ஏதேனும் வம்பு கிடைக்குமா என்று வாயைக் கிண்டிய மூதாட்டிக்கு அவல் கிடைக்கவில்லை.. ஏமாற்றத்துடன் அவள் நடையைக் கட்டினாள்.. புனிதாவின...


69

ஏதேனும் வம்பு கிடைக்குமா என்று வாயைக் கிண்டிய மூதாட்டிக்கு அவல் கிடைக்கவில்லை.. ஏமாற்றத்துடன் அவள் நடையைக் கட்டினாள்.. புனிதாவின் சகஜமான வரவேற்பிற்கு விஷ்வா பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.. விஷ்வா யாரென்று திரும்பிப் பார்த்தவர்கள், அவன் மீனாவின் குடும்பத்திற்குத் தெரிந்தவன் என்பதைப் புரிந்து கொண்டவர்களாய் வந்த வேலையில் கவனத்தைத் திருப்பினார்கள்..
"தம்பி வந்திருக்கிறார்ன்னு ஒரு போன் பண்ணுகிறதுக்கு என்ன மீனா..?" புனிதா மகளை கடிந்து கொண்டாள்..
"இப்போத்தான் வந்தாரும்மா.. கடையில் கூட்டமிருந்ததினால கூட்டம் குறையட்டும்ன்னு உட்கார்ந்துட்டார்.." மீனா மெல்லிய குரலில் பதில் சொன்னாள்..
"தப்பு மீனா.. தம்பி எப்பேர்பட்டவர்ன்னு மத்தவங்களுக்குத்தான் தெரியாது.. உனக்குமா தெரியாது..?"
புனிதா என்னவோ, விஷ்வாவை கடையில் உட்கார வைத்தது தவறு என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அந்த வார்த்தைகளைச் சொன்னாள்.. விஷ்வாவின் விழிகளோ என்னை உனக்குத் தெரியாதா என்று குற்றம் சாட்டின.. மீனா தவித்துப் போனாள்..
'இப்படிப் பார்க்காதே..' என்று மனதுக்குள் மருகினாள்..
'இப்படிப் பார்த்தால் நான் தொலைந்து விடுவேன்.. காற்றில் கரையும் கற்பூரமாக கரைந்து விடுவேன்... கலையும் மேகமாய் மறைந்து விடுவேன்.. உன் பார்வையைத் தாங்கும் சக்தி எனக்கில்லை..'
"ஒவ்வொரு நிமிசத்தையும் வீணடிக்க முடியாத தம்பி நம்மைப் பார்க்க வந்ததே பெரிய விசயம்.. தம்பி காலடிபட நம்ம வீடும் கடையும் புண்ணியம் பண்ணியிருக்கனும்.. அவரை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வராம இங்க உக்கார வைச்சுட்டியே மீனா.." புனிதா மறுபடியும் ஆற்றாமைப் பட்டாள்..
"இங்கே உக்காந்திருந்தா அவ்வளவுதான்.. அம்மா என்னைத் தாளிதம் பண்ணிக்கொட்டிருவாங்க.. நீங்க தயவு செய்து எங்க மாளிகைக்கு வாரீகளா..?" மீனா முணுமுணுத்தாள்..
"வந்துதானே ஆகனும்..? இங்க உன்னோடு தனியாப் பேச முடியாது போல இருக்கே.." பதிலுக்கு விஷ்வாவும் முணுமுணுத்தான்.
"பேசிய வரை போதும்.." மீனா நொடித்தாள்..
"எனக்குப் போதாதே.." விஷ்வா ரகசியமாக இமை சிமிட்டினான்..
அரண்டு போனாள் மீனா.. அது மதுரை.. பக்கத்தில் புனிதா இருக்கிறாள் கடையில் பொருள் வாங்க வந்திருப்பவர்கள் ஏரியாவாசிகள்.. மீனாவை நன்கு அறிந்தவர்கள்.. அவர்களில் எவராவது ஒருவர் விஷ்வாவின்  இமைசிமிட்டலைப் பார்த்து விட்டால் என்ன செய்வது..?
'இவன் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறான்..'
ஒழுங்கு மரியாதையாய் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடும் முடிவுடன் மீனா எழுந்த போது மூர்த்தி அங்கே விரைந்து வந்தார்..
"தம்பி நீங்களா..? மோகனா வந்து சொன்னப்ப என்னால நம்ப முடியல.. இங்க வந்து பாத்தா நிஜமாவே நீங்க வந்திருக்கீங்க.."
விஷ்வாவின் மீது அவளைப் பெற்றவர்கள் பொழிந்த பிரியத்தில் இதம் கொண்டாள் மீனா.. என்னதான் அவனை வேண்டாம் என்று மீனா விலகி வந்திருந்தாலும் அவன் மீதான அவளது காதல் ஒருதுளி கூடக் குறையவில்லை.. ததும்பத்ததும்ப அவள் மனதில் நிரம்பியிருந்தது அவளைக் காண அவன் ஓடோடி வந்திருப்பதில் இனம் புரியாத திருப்தி அவளது மனமெங்கும் வியாபித்திருந்தது..
"அக்கா.." மோகனா அருகில் வந்தாள்..
"நீ எப்படி வந்த..?"
"அப்பவே வந்திட்டேன்.. டிரஸ் மாத்தினதும் உனக்குக் காபி டிபன் கொடுக்கனும்.. கடையைப் பார்த்துக்கிட்டு அக்காவை அனுப்பிவைன்னு அம்மா சொன்னாங்களா.. அதுக்காக கீழே வந்தேன்.. சார் வந்திருந்தாரா.. உன்னை டிஸ்டர்ப் பண்ணாம கடைக்குள்ள சுத்திக்கிட்டு இருந்தேன்.."
"உன்னை நான் பார்க்கலையே.."
"சார் வந்ததும் நீ உன்னையே மறந்திட்ட.. என்னையா கவனிச்சிருக்கப் போகிற..? கிழவி உள்ளே எண்ட்ரி ஆனதும், ஆஹா, வினை வினையை இழுக்க எண்ட்ரி கொடுக்குதேன்னு சார் வந்திருக்கிற விவரத்தை அம்மாகிட்டச் சொல்லிக் கையோடு இழுத்துக்கிட்டு வந்தேன்.. அம்மா உள்ளே எண்ட்ரி கொடுத்ததும் கிழவி ஓடியே போயிருச்சில்ல.. எப்புடி என்னோட அட்டாக்..?"
"கில்லாடிடீ நீ.."
"அஃது.."
அக்காவும் தங்கையும் ரகசியக் குரலில் கிசுகிசுத்துப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்.. மோகனாவிடம் புதிய ஸ்கூல் எப்படி இருக்கிறது என்று விசாரித்தான் விஷ்வா..
"ஸ்கூல்தான் புதுசு சார்.. ஊர் பழசுதானே..? ஸோ, சீக்கிரமா செட் ஆகிட்டேன்.." என்றாள் மோகனா..
"நீதானே.. உன்னை அண்டார்டிகாவில விட்டாலும் அங்கே இரண்டு பென்குவினை பிரண்ட் பிடிச்சிருவியே.. ஸ்மார்ட் கேர்ள்.." என்றான் விஷ்வா..
"ஸ்மார்ட் கேர்ளா..? வால்தான் இல்ல.." மீனா சிரித்தாள்..
வெகுநாள்களுக்குப் பின்னால் அவள் சிரிக்கிறாள் என்பதைக் கனிவுடன் கவனித்தாள் மோகனா.. வீட்டிலும் வெளியிலும் தேவை ஏற்பட்டால் மீனா சிரித்துப் பேசுவாள்தான்.. அவையெல்லாம் வலுக்கட்டாயமாகச் சிரிக்கும் சிரிப்பு.. வரவழைத்துக் கொண்ட சிரிப்பு.. தானாய் சிரிக்கும் சிரிப்பல்ல.. அது விஷ்வாவைக் கண்டதும்தான் வெளிப்படுகிறது..
மோகனா கடையைப் பார்த்துக் கொள்ள, மீனா - விஷ்வாவுடன் மாடிக்குப் போனாள்.. விஷ்வா மூர்த்தியின் டிபார்ட்மெண்டல் ஸ்டோரைச் சுற்றிப் பார்த்தான்.. பெரிய பேக்டரியை அவனுக்குச் சுற்றிக் காட்டுவதைப் போலப் பெருமையுடன் சுற்றிக் காட்டினார் மூர்த்தி..
"ஒரு குண்டூசிகூட இல்லைன்னு சொல்லக் கூடாதுங்கிறது மீனாவோட ஆர்டர்.. அதனால அத்தனை அயிட்டத்தையும் வாங்கி வைச்சிருக்கோம்.."
"அப்படியா..?"
"பலசரக்கு வாங்க வருகிறவங்க காய்கறியையும் பழங்களையும் வாங்க வேற கடைக்குப் போகனுமான்னு மீனா கேட்டுச்சு.. அதனால காய்களையும் பழங்களையும் சேர்த்து விற்க ஆரம்பிச்சோம்.."
"வெரிகுட் டிசிசன்.."
"பக்கத்து கிராமங்கள்ல இருந்து மார்க்கட்டுக்கு வர்ற காய்கறிகளை இங்கேயே வரவழைச்சிருவோம்.. பழங்கள் எல்லாம் கொடைரோடில இருந்து வந்திரும்.. நம்ம கடையில வாங்கற ரெடிமேடு இட்லி தோசை மாவை புனிதாவே வீட்டில் அரைச்சுப் பாக்கெட் போட்டுக் கொடுத்து அனுப்பிச்சிருவா.. தயிர் கப்புகளும் அவ பிரிப்பரேசன்தான்.. குவாலிட்டி நல்லா இருக்கிறதால வந்தவுடனே வித்துப் போகும்.. அது அவளோட வருமானம்.."
"கிரேட்.."
சிறுபிள்ளையைப் போல தங்களின் வியாபாரத்தைப் பற்றி விஷ்வாவிடம் பேசித் தள்ளிக் கொண்டிருந்தார் மூர்த்தி.. இரண்டாவது மாடிக்குப் படிக்கட்டுகளில் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறதே என்று வருத்தப் பட்டார்..
"நீங்களே படியேறி இறங்கும் போது நான் ஏற மாட்டேனா..?"
இயல்பாகக் கேட்டபடி அவன் படியேறியதில் நெகிழ்ந்து போனார் மூர்த்தி.. கானாடுகிரியின் சின்ன ஜமின்தார்.. உலகம் முழுவதும் வியாபாரக் கிளைகளை நிறுவியிருக்கும் கோடிஸ்வரன்.. அவனிடம் பேச வேண்டுமென்றால் வருடக் கணக்கில் காத்துக் கிடந்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தான் சந்தித்தாக வேண்டும்.. அப்பேற்பட்டவன் மூர்த்தியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறான்.. இயல்பாக பேசிப் பழகுகிறான் என்றால் என்னவென்று சொல்வார்..?
விஷ்வா டிபார்ட்மெண்டல் ஸ்டோரை சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்குள் நெய் மணக்கும் கேசரியையும் உருளைக்கிழங்கு பஜ்ஜியையும் செய்து முடித்திருந்தாள் புனிதா.. மின்னல் வேகத்தில் இனிப்பையும் காரத்தையும் செய்து வைத்து விட்டுக் காபி கலந்து கொண்டிருந்த புனிதாவின் வேகத்தை வியந்தாள் மீனா..
"இது பெரிய பிரம்ம சூத்திரம் பாரு.. அந்தக் காலத்தில நான் உங்கப்பாவைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்தப்ப ஒற்றை ஸ்டவ் இருந்தது.. மண்ணெண்னை ஸ்டவ்.. பத்தலைன்னா விறகு அடுப்பை மூட்டனும்.. பின்னாடி கேஸ் ஸ்டவ் வந்துச்சு.. இப்ப ஐஞ்சு பர்னர் கேஸ்  அடுப்பில வந்து நிக்குது.. ஒரே நேரத்தில மூணு பர்னரை பத்த வைச்சு, ஒன்னில கேசரியைக் கிண்டிக்கிட்டே, இன்னொன்னில் பஜ்ஜியைப் போட்டா வேலை முடிஞ்சது.. மூனாவது பர்னரில பால் தணியாக் காய்ஞ்சுக்கிட்டு இருக்கும்.. அம்புட்டுத்தான்.."
"பர்னர் மூணும்மா.. உங்களுக்கு கைகள் ரெண்டுதான.."
"ஆஹா.. எம்மக எம்புட்டு புத்திசாலித்தனம்மா பேசறா.. எம்புட்டு பெரிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடிச்சுட்டா.."
புனிதா மீனாவின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டிவிட்டு பூப்போட்ட அழகிய பீங்கான் தட்டுக்களில் அழகுற கேசரியையும், பஜ்ஜியையும் எடுத்து வைத்தாள்.. டிரேயை மீனாவின் கையில் கொடுத்து.
"அப்பாவுக்கும் உன் முதலாளிக்கும் கொடு.. நான் காபி கலந்து எடுத்துக்கிட்டு வர்றேன்.." என்றாள்..
"நானா..?" தயங்கினாள் மீனா..
"வந்திருக்கிறது உன் முதலாளிதானே.. அப்ப நீதான் கொண்டு போகனும்.."
"இப்ப அவர் என் முதலாளியில்லம்மா.."
"இதுக்கு முன்னாலே உன் முதலாளியாத்தானே இருந்தார்..?"
புனிதா மறுபடியும் மகளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.. டிரேயைக் கையில் எடுத்துக் கொண்ட மீனாவுக்கு என்னவோ பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளைக்கு டிபன் கொண்டு போவதைப் போலவே இருந்தது.. அந்த நினைவு வந்ததும் கால்கள் பின்னின.. ஹாலில் மூர்த்தியுடன் பேசிக் கொண்டிருந்த விஷ்வா அவளைத்தான் பார்த்தான்.. அவள் இன்னும் கொஞ்சம் தடுமாறினாள்.. அவன் விழிகளில் பல்ப் எரிந்தது.. இன்னும் கொஞ்சம் ஊன்றிப் பார்த்தான்.. மீனாவுக்குள் ஏதோ நிகழ்ந்தது..
அவளுக்கு மதுரையில் அவள் வீட்டில் இருப்பதைப் போலவே இல்லை.. அவனது பார்வை அவளை கானாடுகிரி மலைக்கு இட்டுச் சென்றது.. பாறை விளிம்பு.. ஒரு பக்கம் மலைச்சரிவு.. மறுபக்கம் அடர் வனம்.. எதிரே மலை முகட்டை மறைத்து மிதக்கும் மேகங்கள்.. ஆளை மறைக்கும் புகை போன்ற பனி அருகே விஷ்வா..
"என்னம்மா தட்டைக் கையிலே வைச்சுக்கிட்டு.. அப்புடியே அசையாம நிக்கிற..? தம்பிக்கு பலகாரத்தைக் கொடு.."
மூர்த்தி நினைவுறுத்தியதும் பதறிப் போனாள்.. தந்தை அருகில் இருக்கும் போதே இப்படியா மயங்கி நிற்பாள்..?
"இதோ.. கொடுக்கிறேன்ப்பா.."
அவசரமாக அவள் கைநீட்டினாள்.. தவறு செய்து விட்ட குழந்தை போல, மலங்க மலங்க விழித்தவளை, கண்களால் கடிந்தபடி டிபன் தட்டை எடுத்துக் கொண்ட விஷ்வா..
"வாட் ஹேப்பன்..? ஈஸிடி.." என்று சன்னக் குரலில் முணுமுணுத்தான்.
'உனக்கு எல்லாமே ஈஸிதான்..' பதிலுக்கு முறைத்தாள் மீனா..
புனிதா காபியுடன் வந்து விட்டாள்.. மீனா எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
"வீடு அழகா இருக்கு.." விஷ்வா பாராட்டுதலாகச் சொன்னான்..
"எல்லாமே மீனாவின் ஐடியாதான்.. வீட்டை எடுத்துக் கட்டுதுன்னு தெரியும்.. இம்புட்டு அழகாவும் வசதியாவும் கட்டுதுன்னு எங்களுக்குத் தெரியவே தெரியாது.." மகளைப் பெருமையுடன் பார்த்து கொண்டார் மூர்த்தி..
"இந்தக் கிரிடிட் உங்களைத்தான் சேரும் சார்.. அதிக அளவில் நீங்க சம்பளம் கொடுத்ததினாலதான் இது சாத்தியமாச்சு.." உண்மையான நன்றியுடன் சொன்னாள் மீனா..
புருவங்கள் சுருங்க, அவளை முறைத்தான் விஷ்வா.. எதற்காக முறைக்கிறான் என்று தெரியாமல் திருதிருத்தாள் மீனா.. அவள் ஒன்றும் தவறாகச் சொல்லி விடவில்லையே..
"உன் வேலைக்கான சேலரியைத்தான் நான் கொடுத்தேன்.. பதிலுக்கு உண்மையா நீ உழைத்த.. உன் கன்ட்ரோலில இருந்ததில என் பிஸினெஸ்கள் அதிக அளவு லாபத்தைத் தந்தன.. உன் இடத்தில வேறு யாராவது இருந்திருந்தா இந்தச் சேலரி போதாதுன்னு சொல்லியிருப்பாங்க.."
"நான் சொல்லமாட்டேன்.."
"நீதான் சொல்ல மாட்டியே.."
ஒரு தினுசனா குரலில் அவன் சலித்துக் கொண்டதை அவள் மட்டுமே உணர்ந்தாள்.. புனிதாவும் மூர்த்தியும் மரியாதையுடன் சிரித்தார்கள்.. விஷ்வா காபிக் கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
"நீ ஏன் மாலுக்கு ரிட்டர்ன் ஆகக் கூடாது..?" மீனாவிடம் கேட்டான்..
அவள் பதில் சொல்லவில்லை.. அவளின் வேலை சம்பந்தப்பட்ட பேச்சு என்பதால் மூர்த்தியும் புனிதாவும் குறுக்கிடவில்லை.. அமைதியாக இருந்தார்கள்..
"நான் ஏன் மாலுக்கு ரிட்டர்ன் ஆகனும்..?" மீனா நிதானமாக எதிர்கேள்வி கேட்டாள்..
"ஏன்னா, நீ மாலில் இருந்துதான் கானாடுகிரிக்கு டிரான்ஸ்பரில் வந்த.. இப்ப ஒரிஜினல் பிளேஸீக்கு திரும்பியிருக்கிறப்ப வேலையில் ஜாயின் பண்ணாம விலகி நிற்கறியே.. திஸ் இஸ் நாட் குட் மீனா.."
"அட் தி ஸேம் டைம் திஸ் இஸ் நாட் பேடு சார்.. என் சொந்தக்காலில் நிற்கனும்னு நான் நினைக்கிறேன்.."
"மாலில் வேலை பார்த்தால் நீயென்ன மாற்றுக் காலிலா நிற்கப் போகிறாய்..? அங்கேயும் உன் சொந்தக் காலில்தான் நிற்கப் போகிறாய் மீனா.."
"இல்லை சார்.. நான் விலகியது விலகியதாகவே இருக்கட்டும்.. எனக்குன்னு ஒரு பிஸினெஸ்ஸை நான் உருவாக்கிக்கிட்டேன்.. இதில் கான்சென்ட்ரேட் பண்ணி இம்ப்ரூவ் பண்ணனும்னு ஆசைப்படறேன் சார்.."
"இனி இம்ப்ரூவ் பண்ண என்ன இருக்கு..? ஆல்ரெடி நீ சக்சஸ் பண்ணிட்டியே.. ரியலி ஐ அப்ரிசியேட் யு.. ஐ ஆம் வெரி பிரௌவுடு ஆஃப் யு.."
மீனாவின் கண்கள் பனித்தன.. மனதுக்கு சந்தோசமாக இருந்தது.. அவனிடம் வேலை பார்த்ததை ராஜினாமா செய்துவிட்டு அவளுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு விலகி வந்து விட்டாள்.. அந்தக் கோபம் சிறிதும் இல்லாமல் அவளை அவன் பாராட்டுகிறான்.
'இவனால் மட்டும்தான் இப்படி பிஹேவ் பண்ண முடியும்..'
"ஓகே.. இதுதான் உன் முடிவுன்னா நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை.. பட் எனக்கு உன் உதவி தேவைப்படுது.. ஆறுமுகத்தால் தனியே மேனேஜ் பண்ண முடியலை... கமிங் ஃபிரைடே மாலை ஒப்பன் பண்ணியாகனும்.. திறப்பு விழாவுக்கு மினிஸ்டர்ஸ் வருவாங்க.. டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் வருவார்.. இன்னும் நிறைய வி.ஐ.பிஸ் வருவாங்க.. அத்தனை பேரையும் ரிஸிவ் பண்ணி கவனிச்சு அனுப்ப சரியான ஆர்கனைசர் வேணும்.. ஐ நீட் யுவர் ஹெல்ப்.. நீ பொறுப்பெடுத்துக்கிட்டாத்தான் நான் நிம்மதியா இருக்க முடியும்.. விழா முடிந்ததும் நீ உன் கடைக்கு ரிட்டர்ன் ஆகிறலாம்.. இந்த ஒரு வாரம் நீ மாலுக்கு வந்து போகனும்.."
விஷ்வா கேட்ட உதவியைச் செய்ய முடியாது என்று எப்படி மீனா மறுப்பாள்..?
"சரி சார்.. பட்.. ஜஸ்ட் ஒன் வீக்தான் என்னால் அங்கே வொர்க் பண்ண முடியும்.. பங்சன் முடிந்த அடுத்த நாளில் இருந்து நான் என் கடையில்தான் இருப்பேன்.. மாலுக்கு வர மாட்டேன்.." கறாராக அறிவித்தாள்..
அவளையே ஆழ்ந்து பார்த்த விஷ்வாவின் விழிகளில் ஏதோ ஒரு இனம் புரியாத ரகசியம் தெரிந்தது.
'இவன் ஒருத்தன்..' சலித்துக் கொண்டாள் மீனா..
'முன்னேயும் நான் மாலில் வேலை பார்த்தப்ப இப்படித்தான் பார்த்து வைப்பான்..'
"தேங்க்ஸ் மீனா.. என் ரிகஸ்ட்டை நீ அக்செப்ட் பண்ணிக்கிட்ட.."
"நீங்க என்ன பேஸ்புக்கிலேயா ரிகஸ்ட் கொடுத்தீங்க..? மாலில் வேலை செய்தவள் நான்.. அந்த வேலையில் ஹெல்ப் வேணும்னு கேட்டிங்க.. ஓகேன்னு சொன்னேன்.. மத்தபடி நீங்க எனக்கு முதலாளி சார்.. ஆர்டர்தான் போடனும்.. ரிகஸ்ட் பண்ண வேண்டாம்.." மனதாரச் சொன்னாள் மீனா..
இதற்கும் அவன் விழிகளில் பல்ப் எரிந்தது.. மறுநாள் மாலுக்கு வருவதாக மீனா சொன்னாள்.. அவன் கிளம்பும் போது அதற்குள் கிளம்பி விட்டானே என்ற ஏக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.. தேங்கி நின்றவனின் கண்களில் புதிரான அந்த ஏதோ வந்து போனது..
"பை மீனா.." போய் விட்டான்..
அவள் விஸ்வரூபம் மாலின் திறப்பு விழா வேலைகளைக் கவனிக்கப் போகிறாள் என்பதில் மோகனா மகிழ்ந்து போனாள்..
"தேமேன்னு என் வேலையுண்டு, நானுண்டுன்னு ஒதுங்கி இருந்தவளைத் தேடி வந்து வேலை வாங்கறாரு.. இதில நீ சந்தோசம் கொண்டாட என்ன இருக்கு..?" போலியாக தங்கையை அதட்டினாள் மீனா..
நிறைய இருக்கிறது என்று கள்ளமில்லாபிள்ளை உள்ளம் கொண்ட மோகனாவிற்கும் தெரியும்.. கள்ளத்துடன் உள்ளம் மறைக்கும் மீனாவுக்கும் தெரியும்.. கன்னி மனம் கன்னி அறிவாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: பொதிகையிலே பூத்தவளே -69
பொதிகையிலே பூத்தவளே -69
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s320/PP_1.jpg
https://1.bp.blogspot.com/-iUa3RXI3MTc/XKIPVeD5tzI/AAAAAAAAAko/6e8vHdI846ooSNJEepyScbDOorX86kxcACPcBGAYYCw/s72-c/PP_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-69.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/pothikaiyilepooththavale-69.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy