முகில் மறைத்த நிலவு-12,13

12 "நவநீதா... உன் ஊரில் எனக்குத் தங்குவதற்கு வீடா கிடைக்காமல் போய் விடப் போகுது... ?" "ஆனால்... அது என் வீடாக இருக்க...


12

"நவநீதா... உன் ஊரில் எனக்குத் தங்குவதற்கு வீடா கிடைக்காமல் போய் விடப் போகுது...?"
"ஆனால்... அது என் வீடாக இருக்காதேடா..."
"உன் வீட்டில் தங்குவதில்தான் பிரச்னை இருக்கிறதே..."
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை..."
"அதை நீ சொன்னால் மட்டும் போதுமா...?"
"வேறு யார் சொல்ல வேண்டும்...? ராதிகாவா...?"
"ஆமாம்..."
'அவள் சொல்வாளா..? இது நடக்கிற காரியமா..?'
"அவங்க விருப்பமில்லாமல் எனக்கு அங்கே வேண்டாத மனிதனாய் தங்க விருப்பமில்லைடா..."
"எனக்காக இதைத் தாங்கிக் கொள்ள மாட்டாயா..?"
நவநீதன் குரலில் இறைஞ்சல் இருந்தது.. அரவிந்தன் ஆச்சரியமாக அவனைப் பார்த்தான்..
"எதுக்குடா இப்படிச் கெஞ்சுவது போல் கேட்கிற..? நான் வெளியே தங்கினால் நம் நட்பு முறிந்து விடுமா என்ன..?"
"அப்படி இல்லைடா..."
"பின் எதற்காக என்னை வற்புறுத்துகிற...?"
"நீ என் வீட்டு காம்பவுண்டிற்குள் தங்கினால் எனக்கு ஒரு திருப்தி... அதற்காகத்தான்..."
"என்னடா நீ..."
"மோனிகாவைப் பார்த்தேல்ல..."
"ம்ம்... துறுதுறுப்பான பெண்..."
"அவள் சிரிக்க மறந்து விடுவாளோன்னு எனக்கு பயமாய் இருக்கிறதுடா..."
"என்னடா சொல்கிற..?"
"ராதிகாவும் மோனிகாவைப் போல் சிரித்துக் கொண்டே இருந்தவள் தான்.. இப்போது எப்படி இருக்கிறாள் பார்த்தாயா...?"
"அப்படியா.. உன் பெரிய தங்கைக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா..?"
"கலகலன்னு இருப்பாள்.. என்றைக்கு அப்பாவும்.. அம்மாவும் போனார்களோ.. அன்றைக்கே சிரிப்பைத் தொலைத்து விட்டாள்..."
"போடா ராஸ்கல்.. பொறுப்பைத் தூக்கி அவள் தலையில் வைத்து விட்டு... இப்போது கிடந்து உருகுகிறான்... நீயெல்லாம் ஒரு அண்ணன்..."
"நான் பொறுப்பைக் கேட்டாலும் அவள் கொடுத்திருக்க மாட்டாள்.."
"அவ்வளவு நம்பிக்கை உன் மீது..."
"அதற்கு நான் என்னடா செய்ய..? என் பிறவிக் குணம் அப்படி..."
"இப்படியே சொல்லித் தப்பித்துக் கொள்.. இப்போது மட்டும் எப்படி அக்கறை வந்தது...?"
"நீ தானே சொன்னாய்..?"
"என்ன சொன்னேன்...?"
"எனக்குத் திருமண வயதாகி விட்டதுன்னு..."
"அதனால்..?"
"நாளைக்கு எனக்குத் திருமணம் ஆகி எனக்குன்னு ஒருத்தி என்னுடன் வாழ என் வீட்டுக்கு வந்து விட்டால்... அவள் என்னைப் போல் ராதிகாவின் பேச்சிற்கு கட்டுப்படுவாளா...?"
அரவிந்தன் நவநீதனைப் பார்த்த பார்வையில் மதிப்பு தெரிந்தது.. தன் நண்பன் அப்படி ஒன்றும் ஒரேயடியாய் விளையாட்டுத்தனமாய் இருப்பவன் கிடையாது என்பதை அவன் அன்று கண்டு கொண்டான்...
"அரவிந்தா.. நான் மோனிகாவை விட ராதிகாவின் மேல் அதிகம் பாசம் வைத்திருக்கிறேன்டா..."
"இரண்டு பேரும் உன் தங்கைகள் தானேடா..."
"ஆமாம்... ஆனால் மோனிகாவிற்காக பார்த்துப் பார்த்துச் செய்ய ராதிகா இருக்கிறாள்.. ராதிகாவிற்காக கவலைப்பட யார் இருக்கிறார்கள்..?"
"நீ இருக்கிறாயே.."
"ராதிகாவின் கல்யாணம் முடியாமல் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன்.. இது நிச்சயம்.."
"ம்ம்..."
"ராதிகாவிற்கு இதை உணர்த்த வேண்டாமா..?"
"அதற்கும்... நான் உன் வீட்டில் தங்குவதற்கும் என்னடா சம்பந்தம் இருக்கிறது..? இது உங்கள் குடும்பப் பிரச்னை.. நான் ராதிகா சொல்வதைப் போல் மூன்றாம் மனிதன்..."
நவநீதன் பேசாமல் தொலைவில் தெரிந்த பழனி மலை முருகன் கோவிலையே பார்த்துக் கொண்டிருந்தான்..
"என்னடா.. மௌனியாகி விட்டாய்..."
"அரவிந்தா.. உன்னில் இருந்து என் எதிர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன்.. ராதிகா.. உன்னைப் பார்க்கும் போதெல்லாம்... நான் அவளைத் தூக்கி எறிந்து பேசியது அவளுக்கு நினைவில் வரும்..."
"ஆமாம்.. அதனால் தான் நான் உன் வீட்டில் இருக்க மாட்டேன் என்கிறேன்.."
"உன்னைப் பார்க்கையில் அவளுக்கு தான் தனிமைப் பட்டது நினைவு வரும் இல்லையா.. அப்போது மெல்ல.. மெல்ல.. நான் அவளை... அவளுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விடுவேண்டா..."
"ம்ம்... நீ சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது.."
"எனக்காக நீ இதைச் செய்ய வேண்டும்..."
"உனக்காக உன் தங்கையின் வெறுப்பிற்கு நான் ஆளாக வேண்டும்.. ஓகே.. நான் உன் வீட்டிலேயே தங்குகிறேன்.. போதுமா...?"
"தேங்க்ஸ்டா... தேங்க்ஸ்..."
நவநீதன் உற்சாகத்துடன் காரை பழனியை நோக்கி செலுத்தினான்... முருகனைத் தரிசனம் செய்து விட்டு அவர்கள் மதிய உணவிற்கு வீடு வந்த போது... அவுட் ஹவுஸில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது..
"வாடா.. சாப்பிட்டு விட்டுப் போய் மதியத் தூக்கம் போடு..."
நவநீதன் முன்னே செல்ல... அரவிந்தன் மெல்லிய சிரிப்புடன் அவனைப் பின் தொடர்ந்தான்.. மதிய உணவிற்கு வந்திருந்த ராதிகா நவநீதனை முறைத்தாள்...
"என்னம்மா...?"
"எங்கே போய்விட்டு வருகிற..?"
"வருகிறீர்கள்ன்னு பன்மையில் கேளு... நானும் அரவிந்தனும் பழனி முருகனை தரிசனம் பண்ணி விட்டு வருகிறோம்..."
ராதிகா நவநீதனை விட்டு விட்டு அரவிந்தனை எரிச்சலுடன் பார்த்தாள்..
'விதியே...' என்று நொந்து கொண்ட அரவிந்தனும் அவளை பதிலுக்குப் பார்த்தான்..
அவள் பல்லைக் கடித்தாள்..

13
'எப்படிப் பார்க்கிறான் பார்... கொழுப்பு...'
ராதிகாவின் நினைப்பு அவளது பார்வையிலேயே தெரிய அரவிந்தன்..
"ம்ஹூம்..." என்று வாய்விட்டு சொன்னான்...
"என்னடா..." நவநீதன் அக்கறையாக விசாரித்தான்..
"இல்லை... தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டியதாம்..."
"இது ஏதோ பழமொழி போல் தெரிகிறதே.."
"பழமொழியில்லை.. முதுமொழி..."
"என்ன மொழியோ.. அதை இப்போது எதுக்கு சொல்லுகிற...?"
"உன் தங்கை உன்னை முறைப்பதை விட்டுவிட்டு என்னையே முறைக்கிறாங்களே... அதை என்னன்னு கேளு..."
ராதிகா இன்னும் உஷ்ணமானாள்...
"ஹலோ..."
ராதிகா இப்படிக் கூறியதும் நவநீதன் சுற்று முற்றும் பார்த்தான்...
"டேய் நவநீதா... நீவேற ஏண்டா இப்படி எபெக்ட் கொடுக்கிற.. உன் தங்கை.. ஹலோவும்... மிஸ்டரும் போட்டா... அவங்க என்னைத்தான் சொல்கிறாங்கன்னு அர்த்தம்டா..."
"அப்படியா..."
"அப்படித்தான்.. நீங்க சொல்லுங்க மிஸ் ராதிகா..."
அவன் வேண்டுமென்றே மிஸ்ஸை அழுத்தி உச்சரிக்க ராதிகா இன்னும் கொதி நிலையை அடைந்தாள்...
"என் அண்ணனுக்கு சொல்லிக் கொடுக்கறீங்களா.."
"எதை சொல்லிக் கொடுத்தேன்.. அ, ஆவையா... இல்லை ஏ,பி,சி,டி, யையா...?"
"இந்த எகத்தாளப் பேச்செல்லாம் என்னிடம் வேண்டாம்..."
"ஓகே.. வேண்டாம்.."
"இன்றைக்கு என் அண்ணன் ஏன் வேலைக்குப் போகவில்லை...?"
"இந்த குச்சியில்லாமல் மிரட்டுகிற வேலையை உங்க அண்ணனிடமே வைத்துக் கொள்ளலாமே..."
நவநீதன் சிரிப்பை அடக்க முடியாமல் பகபகவென்று சிரித்து வைத்தான்..
"ஹ..ஹா..ஹி...ஹீ...உ... ஊ....."
அவனது சிரிப்பைக் கண்ட செண்பகத்தின் இதழ் களிலும் சிரிப்பு எட்டிப் பார்த்தது...
அரவிந்தன் நண்பன் சிரிப்பதை வினோதமாகப் பார்த்தான்..
"ஏண்டா.. இப்படிச் சிரிக்கிற...?"
"அது எப்படிடா.. இவ்வளவு கரெக்டாய் சொல்கிற.. ஹா..ஹா..." அரவிந்தன் மௌனமாய் ராதிகாவை பார்க்க அவள் நவநீதனிடம் வெடித்தாள்...
"அண்ணா... இப்போது சிரிப்பதை நிறுத்தப் போகிறாயா.. இல்லையா..."
"ஹி..ஹி என்னம்மா..."
"ஏன் ஆபீஸிற்கு மட்டம் போட்ட...?"
"என் நண்பன் வந்திருக்கிறானேம்மா..."
"அதுக்கு...?"
"அவன் நாளைக்கு வேலையில் ஜாயின் பண்ணப் போகிறான் ராதிகா..."
"அதுக்கு...?"
"அவன் வேலையில் இன்னும் முன்னேற வேண்டும் ராதிகா..."
"அதுக்கு..?"
"அதுக்கு.. அதுக்குன்னு கேட்டுக் கொண்டே இருந்தால் எப்படி ராதிகா... அதுக்கு சாமி கும்பிடப் போனோம்..."
"அவர் முன்னேற்றத்தை அவர் பார்த்துக் கொள்வார் நீ உன் முன்னேற்றத்தை மட்டும் பார்..."
"ஒரு நாள் லீவு போடுவதால் என் முன்னேற்றம் ஒன்றும் பாதித்து விடாது ராதிகா.. நீ கவலைப்படாதே..."
"ம்ஹீம்.. கவலைப்படாமல் இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லையே..."
கண் சிமிட்டும் நேரத்திற்குள் நவநீதன் பார்வையும் அரவிந்தனின் பார்வையும்.. சந்தித்துக் கொண்டன...
'இந்த இளம் வயதில் இவள் ஏன் இப்படி பாரம் சுமக்கிறாள்.. பாரத்தை இறக்கி வைக்க தன் தமையன் தயாராக இருப்பதை அறியாதவளாய் இந்தப் பிடிவாதக்காரி இருக்கிறாளே...'
அரவிந்தனின் பார்வை தன் மேல் படிவதை உணர்ந்த ராதிகாவின் மனதில் மெலிதான வெட்கம் சூழ்ந்தது..
அவனுடைய கம்பீரமான தோற்றமும்.. தயக்க மில்லாத பேச்சும் தன்னை ஏதோ ஒரு விதத்தில் ஆகர்ஷிப்பதை உணர்ந்தவளாய் தன் விழிகளைத் தாழ்த்தி கொண்டாள்...
அவளது முகச்சிவப்பு அவளது நாணத்தை உணர்த்த அரவிந்தனின் மனதில் தென்றல் அடித்தது...
'ம்ம்... எவ்வளவு அழகான பெண்... பூங்கொடியைப் போல் இருக்கிறாள்.. இவள் பற்றிக் கொள்ளச் சரியான கொழுகொம்பு கிடைக்க வேண்டும்...' என்று நினைத்துக் கொண்டவனின் அடி மனம்...
'அது ஏன் நீயாக இருக்கக் கூடாது...' என்று கேட்கவும் திடுக்கிட்டுப் போனான்...
'இது என்ன நினைவு... சே.. இவள் என் நண்பனின் தங்கை.. வசதிபடைத்த பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள்.. வானத்தில் மிதக்கும் நிலவைப் பார்த்து ரசிக்கலாம்.. அதை எட்டிப் பிடிக்க ஆசைப் படலாமா..? அது நடக்கிற காரியமா...?'
தன்னைத்தானே கடிந்து கொண்டவன்... மடமட வென்று சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டான்...
"சாப்பிட்டு விட்டாயா...? கொஞ்ச நேரம் தூங்கு.. நான் சாயங்காலம் வந்து எழுப்புகிறேன்.." என்றான் நவநீதன்..
ராதிகா இருக்கும் திசைப் பக்கம் திரும்பாமல்.. தலையை மட்டும் ஆட்டிவிட்டு... வேகமாய் கை கழுவி விட்டு.. மாடிப் படிகளில் தாவியேறிப் போய்விட்டான் அரவிந்தன்...
ஏனோ.. அவன் போனதும் சாப்பாட்டு அறை வெறிச் சென்று ஆகி விட்டது போல் உணர்ந்தாள் ராதிகா..
"என்னம்மா... பேசாமல் இருக்கிறாய்...?"
"என்னத்தைப் பேச... எதைப் பேசினாலும் பதில் கொடுக்க நீ ஒரு கூட்டாளியைக் கொண்டு வந்திருக் கிறாயே..."
"உனக்கு அவனைக் கண்டாலே ஆவதில்லை.."
"ஆமாம்... காலம் காலமாய் உன் பிரண்டுகளுடன் எனக்குப் பழக்கம் இருக்கிறது பார்.. நான் எப்போது அவனைப் பார்த்தாலும் எரிந்து விழுகிறேன்.. நீ அதைக் கண்டு விட்டாய்.. இன்றைக்கு காலையில் வந்தவனிடம் எனக்கென்ன விரோதம்..?"
நவநீதன் ராதிகாவை முறைத்தான்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு-12,13
முகில் மறைத்த நிலவு-12,13
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu1213.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu1213.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy