முகில் மறைத்த நிலவு -8

8 ராமையாவின் கை பிசைதலை வேடிக்கையாய் பார்த்தான் அரவிந்தன்.. அவனுக்கு அந்த வீட்டில் நடப்பது எல்லாமே வேடிக்கையாய் இருந்தது.. "என...


8

ராமையாவின் கை பிசைதலை வேடிக்கையாய் பார்த்தான் அரவிந்தன்.. அவனுக்கு அந்த வீட்டில் நடப்பது எல்லாமே வேடிக்கையாய் இருந்தது..
"என்னப்பா.. இவர் இப்படி கையைப் பிசைகிறார்...?"
"அதுதானே.. ஏன் ராமையா கையைப் பிசைகிறீங்க.."
"சின்னய்யா... நம்ம சின்னம்மாவைப் பற்றி உங்களுக்கே தெரியும்..."
"அதற்கென்ன...?"
"அவர்களிடம்.. நீங்கள் சொன்னதாகச் சொல்லி நான் பணம் வாங்கி விட முடியுமா..?"
அரவிந்தனின்.. புருவங்கள் மேலேறின.. நண்பனை யோசனையாய் பார்த்தான் அவன்.. அவனது பார்வையைப் பற்றி நவநீதன் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை..
"அப்படியா.. நீங்கள் சொல்வதும் சரிதான்.. வாங்க.. நானே பணம் வாங்கிக் கொடுக்கிறேன்.. அரவிந்தா நீயும் வா.."
"எதற்குடா.. எனக்கும் கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுக்கப் போகிறாயா...?"
ராமையாவிற்கு அவனது வேடிக்கைப் பேச்சைக் கண்டு சிரிப்பு வந்து விட்டது.. லேசாகப் புன்னகைத்தார்..
"அட.. ராமையா.. நீங்கள் கூடச் சிரிக்கிறீங்க... உங்களுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா..?"
நவநீதன் ஆச்சரியமாய் கேட்க.. அரவிந்தன் இயல்பாய் பதில் கூறினான்..
"இவர் இன்றைக்குத்தான் சிரிக்கிறாரா...? அது சரி.. உன் வீட்டில் இருந்துக்கிட்டு இவரால் எப்படிச் சிரிக்க முடியும்..?"
"சரியாகச் சொன்ன..."
"அதையும் ஏற்றுக் கொள்கிறாயே.."
"வாடா சாப்பிடப் போகலாம்.."
"எங்கே.. உன் வீட்டிலா...?"
"ச்சு.. சும்மா கேலி பண்ணாமல் வாடா..."
நவநீதன் அரவிந்தனின் கையைப் பிடித்து ஏறக்குறைய இழுத்துக் கொண்ட சாப்பாட்டு அறைக்குச் சொன்றான்.
அழகான பெரிய நீண்ட சாப்பாட்டு அறையில் போடப் பட்டிருந்த சாப்பாட்டு மேஜையின் நீள.. அகலத்தை வியந்தபடி.. அங்கிருந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்தான் அரவிந்தன்...
அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த ராதிகாவின் முகத்தில் கோபம் கொந்தளித்தது...
அதைக் கவனிக்காமல் அரவிந்தனின் அருகே சாப்பிட அமர்ந்த நவநீதன்...
"மோனிகா எங்கேம்மா...?" என்று வினவினான்...
"எதற்காக கேட்கிற..? உன் பிரண்டிற்கு அறிமுகப் படுத்தவா..?"
"ஆமாம்.. கரெக்டாக் கண்டுபிடித்து விட்டாயே..."
"இதற்குப் போய் ஜோஸியமா பார்த்துவிட்டு வரனும்..?"
ராதிகா எரிச்சலுடன் கூறிக்கொண்டிருந்த போது... பள்ளிச் சீருடை அணிந்து... பள்ளிக்குச் செல்லத் தயாராக மோனிகா வந்தாள்...
"மோனிகா..."
"அண்ணா..."
மோனிகாவின் பார்வை அரவிந்தனின் மேல் படிந்தது..
"அண்ணா.. இவங்க யாரு...?"
"என் பிரண்ட்... அரவிந்தன்னு பெயர்.. அரவிந்தா.. இது என் சின்னத் தங்கை மோனிகா..."
"ஹலோ.. என்னப் படிக்கிறாயம்மா..."
"டென்த்..."
"நன்றாய் படிக்கனும்..."
"ம்ம்.. நீங்க என்ன படிக்கறீங்க...?"
"படித்து முடித்தாகிவிட்டது..."
"அப்புறம்..? வெட்டியாய் ஊர் சுற்றுகிறீங்களா...?"
"ஹா... ஹா...."
மோனிகாவின் பேச்சை ரசித்து சிரித்தான் அரவிந்தன்.. ராதிகா முகம் சுளித்து.. தங்கையை அதட்டினாள்..
"மோனிகா.. மூன்றாம் மனிதர்களிடம் இப்படிப் பேசக் கூடாதுன்னு உனக்கு சொல்லியிருக்கிறேனா இல்லையா..?"
"ஸாரிக்கா... ஆனால் இவர் மூன்றாம் மனிதரில்லையே..."
"என்ன உளருகிற..?"
"உளறலை.. உண்மையைத்தான் சொல்றேன்.."
"என்ன உண்மையைக் கண்டு விட்டாய்..?"
"மூன்றாம் மனிதர் நம் வீட்டில் தங்குவாரா..? நம் டைனிங் டேபிள் வரை வந்து.. நம்முடன் சேர்ந்து சாப்பிடுவாரா..?"
"குட் கொஸ்டின்..." என்றான் நவநீதன்..
"என்னத்தைக் கண்டுவிட்டாய்...?" என்று வெடித்தாள் ராதிகா..
"ராதும்மா.. அவள் உன்னைவிட ஆறு வயது இளையவள்.. ஆனாலும் எவ்வளவு அருமையாக கேட்டாள் பார் ஒரு கேள்வி.. அடடா.. சின்னப் பெண் ஆனாலும் எவ்வளவு புத்திசாலியாய் இருக்கிறாள் பார் நமது தங்கை.."
"இப்போது மட்டும் நமது தங்கைன்னு சொந்தம் கொண்டாடு..."
"ஏன்..? எப்போதும் உங்கள் இரண்டு பேரையும் நான் கொண்டாடிக் கொண்டுதானே இருக்கிறேன்...?"
"இதிலொன்றும் குறைச்சல் இல்லை.. மோனிகா.. இந்த வீட்டிற்குள் மூன்றாம் மனிதர்களை வரவைத்தது இந்த அருமை அண்ணன்தான்.. அதனால்தான் நீ இந்தக் கேள்வியைக் கேட்கிற.. அதனால் கேள்விகளை விட்டுவிட்டு சாப்பாட்டைக் கவனி.."
அண்ணன் தங்கைகளின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த அரவிந்தன்..
"அருமையான விருந்தோம்பல்..." என்று மெச்சுதலாய் கூறினான்...
"குட் ஜோக்..." என்று மோனிகா சிரித்தாள்...
"மோனிகா..." என்று ராதிகா மீண்டும் அதட்ட...
"மிஸ் ராதிகா.. அவள் சிறு பெண்... அவளை ஏன் மிரட்டுகிறீங்க..?" என்றான்..
"அதைச் சொல்ல நீங்கள் யார்..? அவள் என் தங்கை.."
"யார் இல்லைன்னு சொன்னது..? நவநீதனுக்கும் அவள் தங்கை தானே...?"
"அதனால்...?"
"அண்ணனின் பிரண்ட் என்கிற முறையில் என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினால் அதைப் போய் கொலைக் குற்றம் போல் பார்க்கிறீங்களே..."
"ஹலோ... இது என் வீடு..."
"உங்கள் அண்ணனுக்கும் இதுதானே வீடு...?"
அரவிந்தன் அலட்சியமாய் சொன்ன அந்த விநாடி யில் இருந்து ராதிகா அவனை வெறுக்க ஆரம்பித்தாள்... தன் உடன்பிறந்தவர்களுக்கும் தனக்கும் இடையே வந்து நிற்கும் விரோதியாகவே அவன் அவளது கண்ணிற்கு தெரிந்தான்..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -8
முகில் மறைத்த நிலவு -8
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy