முகில் மறைத்த நிலவு -4

4 அரவிந்தன் பொறியியல் படிப்பின் முதலாம் ஆண்டிலேயே வீட்டின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டான்.. தகப்பனும்.. தாயும் பாரம் சுமக்க.. தான் மட்ட...


4

அரவிந்தன் பொறியியல் படிப்பின் முதலாம் ஆண்டிலேயே வீட்டின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டான்.. தகப்பனும்.. தாயும் பாரம் சுமக்க.. தான் மட்டும் சுகமாய் இருப்பது அவனால் முடியாத விசயமாக இருந்தது.. பள்ளியில் படிக்கும்போதே கம்ப்யூட்டரைக் கற்றுக் கொண்டிருந்தவன்.. ஒரு கம்ப்யூட்டர் சென்டரில்.. மாலை நேரப் பணியில் சேர்ந்து விட்டான்..
விசயம் அறிந்த சதாசிவமும்.. பார்வதியும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்..
"படிக்கிற புள்ளைக்கு எதுக்குப்பா வேலையும்.. வெட்டியும்..."
"நான் பகலில் காலேஜ் போய் விடுகிறேனேப்பா.. நைட்டில் படிக்க உட்கார்ந்து விடுகிறேன். சாயங்கால வேளையில் ஒரு பொழுது போக்கிற்காகத்தானே இந்த வேலையைச் செய்கிறேன்..?"
தகப்பனின் வாய்.. மகனின் இந்தப் பதிலால் அடைத்துக் கொண்டது.
"நாள் முழுவதும் இப்படி அலைந்தால் உடம்பு என்னதுக்கு ஆகும்..?" என்று கடிந்து கொண்ட தாயை..
"அதை நாள் முழுவதும் உழைக்கிற நீங்க சொல்கிறீங்க..?" என்று பதிலுக்கு கடிந்து வழிக்குக் கொண்டு வந்தான் மகன்..
வருடாந்திரப் பணத்திற்கு மட்டும் சதாசிவத்தை எதிர் பார்த்த அரவிந்தன்.. தனது புத்தகங்கள்.. போக்குவரத்துச் செலவுகள்.. பொழுது போக்குச் செலவுகள் என்று மற்ற செலவுகளுக்குத் தகப்பனின் கையை எதிர்பார்த்தது இல்லை..
மற்ற மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் போவதைப் பார்த்த சதாசிவம்.. தொழிற்சாலையில் லோன் போட்டு.. அந்த வருட போனஸ் பணத்தையும் சேர்த்து..
"இந்தாப்பா.. உனக்குன்னு ஒரு வண்டி வாங்கிக்க.." என்று கொடுத்தபோது.. அரவிந்தன் மௌனமாக தகப்பனை ஓர் பார்வை பார்த்தான்..
அவனது பார்வையின் அர்த்தம் புரியாத சதாசிவம் "என்னப்பா.. வண்டி வாங்க இந்தப் பணம் போதாதா..?" என்று கேட்டபோது.. பார்வதி அவசரமாய் அவளிடமிருந்த சேமிப்புப் பணத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள்..
"வைச்சுக்கப்பா.. இந்த வருசம் தீபாவளிக்கு அதிகத் துணி தைக்க வந்தது.. காய்கறியும்.. கீரையும் வேற நல்ல விளைச்சல் தந்திருக்கு.. பணம் அதிகமாய் சேர்ந்திருக்கு.. இதையும் சேர்த்துப் போட்டு பெரிய வண்டியாய் வாங்கிக்கய்யா.."
அரவிந்தன் இருவர் கொடுத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு பதில் பேசாமல் போய் விட்டான். சற்று நேரத்தில் தன் நண்பனுடன் புதிய ஹீரோ ஹோண்டா வண்டியில் வந்து இறங்கினான்.. அவனது நண்பனோ புதிய டி.வி.எஸ். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.
வந்தவன் பார்வதி கொடுத்த காபியைப் பருகிவிட்டு..
"பைடா.. அரவிந்த்.." என்றபடி போய் விட்டான்.
"என்னடா இது.. அந்தப் பையன் வந்த டி.வி.எஸ். எக்ஸெல்லை இங்கேயே விட்டுட்டுப் போகிறானே.. எப்படிப் போவான்..?"
"ஆட்டோவில் போவான்ப்பா.."
"எதற்குடா அவன் ஆட்டோவில் போகணும்..?"
"அப்புறம் அவன் வீட்டிற்குப் போக வேண்டாமா..?"
"அவன் வண்டியை இங்கே விட்டுட்டுப் போகிறானே.."
"இது அவன் வண்டி இல்லப்பா.. உங்களுடைய வண்டி.."
"என்னுடைய வண்டியா..?"
"ஆமாம் உங்களுடைய வண்டிதான்.. ஒரு ஓட்டை சைக்கிளை வைத்துக்கிட்டு.. நீங்க எனக்கு வண்டி வாங்கிக் கொடுப்பீங்க.. அம்மா கழுத்தில் ஒற்றைச் செயினுடன் எனக்கு பணம் சேர்த்துக் கொடுப்பாங்க.. நான் அதில் புதிதாய் பெரிய வண்டியை வாங்கி ஏறி.. ஊர் சுற்றி வரணுமா..? என்னால் அது முடியாது.."
"அரவிந்தா..."
"இந்த இரண்டு வண்டியையும் தவணையில் எடுத் திருக்கேன்ப்பா.. தவணையை நான் கட்டி விடுவேன்.. அம்மா இந்தாங்க.."
"என்னடா..."
"நீங்க கொடுத்த பணத்தில் வாங்கிய தங்கச் சங்கிலி.. இரட்டை வடம் வேண்டும்ன்னு ரொம்ப நாட்களாய் ஆசைப்பட்டீங்களே அந்த இரட்டை வடம்.."
"என்னப்பா.. இது.. இரண்டு வண்டிக்கும் தவணை கட்ட பணத்திற்கு எங்கே போவாய்..? உன் வருமானம் உன் கைச்செலவிற்குக் கூடப் பத்தாதேப்பா.."
"எல்லாம் பத்தும்பா.. நீங்கள் கொடுத்த பணத்தில இந்த இரண்டு வண்டிகளுக்குமான தொகையில் பாதியைக் கட்டி விட்டேன்ப்பா.. மீதியைத்தான் கட்டனும்.. கம்ப்யூட்டர் சென்டர் போக.. டியூசன் சென்டர் ஒன்றிலும்.. கணக்குப் பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கிறேன்.. அந்த வருமானம்.. அதிகப்படி செலவை ஈடுகட்டி விடும்.."
"அரவிந்தா நீ படிக்கிற பிள்ளை..."
"உலகத்தையும் சேர்த்து படிக்கிறேனேப்பா..."
"அதிகம் உழைத்தால் உடம்பு தாங்குமாடா.."
"இது உடல் உழைப்பு இல்லை அம்மா.."
"நீ வாங்கிக் கொடுக்க.. நான் சொகுசாய் வண்டி ஓட்டுவதா..?"
"ஏன்ப்பா.. உங்க மகனுக்கு, உங்களுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கும் உரிமையில்லையா..."
இந்தக் கேள்விக்குப் பின் மறுத்துப் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார் சதாசிவம்.
மகனின் படிப்பில்.. உழைப்பில்.. அவனது 'நான்' என்ற நிமிர்வில்.. தன்னம்பிக்கையில் அவருக்கு மனம் கொள்ளாத பெருமை உண்டு.. அதைப் போல் அவனது சமூக சிந்தனையையும்.. அக்கறையையும் கண்டு பூரிப்பும் உண்டு.
"நம்ம பிள்ளை அப்பனுக்கே பாடம் சொல்கிற சுப்பையாடி.." மனைவியிடம் அடிக்கடி பெருமையடித்துக் கொள்வார் சதாசிவம். அரவிந்தன் இறுதியாண்டு படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட.. அவன் படிப்பை முடித்தபோது அவனுக்கு வேலை தயாராக இருந்தது..
அதற்காக நண்பர்களுக்குக் கொடுத்த விருந்திற்குக் கூட தகப்பனிடம் பணம் வாங்காத அவனுடைய சுய மரியாதையை வியந்துதான் சதாசிவமும்.. பார்வதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
"ஏம்ப்பா.. எந்த ஊரில் வேலை கிடைத்திருக்கிற துன்னு சொன்னே..?"
"ஒட்டன்சத்திரத்தில் அப்பா.."
"அவ்வளவு தூரத்தில் போய் வேலை பார்ப்பதற்கு சென்னையில் வேலை பார்க்கலாமே அரவிந்தா.."
"கிடைத்ததுப்பா.. ஆனால் ஒட்டன்சத்திர மில்லில் எனக்கு ஜெனரல் மேனேஜர் போஸ்டிங் கிடைத்திருக்கிறது.. சென்னையில் வெறும் ஜூனியர் என்ஜினியர் தானேப்பா.."
"என்னவோப்பா.. உனக்குப் பிடித்திருந்தால் சரி.."
சதாசிவம் மகனை வாத்சல்யத்துடன் பார்த்தவாறு கூறினார்.. பார்வதியின் கவலை வேறாக இருந்தது.
"அங்கே போய் எங்கே தங்குவ..?"
"ஏண்டி.. இது ஒரு கவலையா..? பேச்சிலர்ஸ் தங்குவற்கு ஒரு ரூம் கிடைக்காதா என்ன..?"
"இல்லைப்பா.. எனக்கு அவுட் ஹவுஸே காத்திருக்கிறது.."
"அவுட் ஹவுஸா..?"
"ஆமாம்பா..?"
"நீ முதலில் போய் வீடு பார்த்து விட்டு வந்துட்டயா..?"
"இல்லைப்பா.. இது என் நண்பன் ஒருவனின் வீட்டு அவுட் ஹவுஸ்ப்பா.."
"ஒட்டன்சத்திரத்தில் உனக்கு நண்பன் இருக்கிறானா..?"
"ஆமாம்பா.. நவநீதன்னு பெயர்.."
"உன் கூடப் படித்தவனா..?"
"என்கூடப் படித்தவனுடன்.. படித்தவன்.."
"புரியவில்லையே.."
"என்னுடன் என்ஜினியரிங் படித்த விவேக்குடன் பிளஸ் டூ வரை படித்தவன்.. இந்த நவநீதன்.."
"அவனை உனக்கு எப்படித் தெரியும்..?"
"விவேக் இங்கே காலேஜில் என்ஜினியரிங் படிக்கிறான்.. ஊர் விட்டு ஊர் வந்து படிக்கிறவன் காலேஜ் ஹாஸ்டலில் தங்காமல் ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறான்.."
"அதுதான் எனக்குத் தெரியுமே.. நீ தினமும் பாதிப் பொழுதை அவன் ரூமில்தானே கழிப்பே.."
"இந்த நவநீதன் வாராவாரம் விவேக்கைப் பார்க்க வந்து விடுவான்.."
"அந்தப் பையனும் படிக்கிற பையனாப்பா.."
"இல்லைப்பா.. படிப்பை முடித்து விட்டு வேலையில் இருக்கிறான்.."
"உங்கள் வயதில் இருக்கிறவன்.. அதற்குள் வேலைக்குப் போய் விட்டானா..?"
"இல்லைப்பா.. அவன் விவேக்கை விட இரண்டு வருடம் சீனியர்.."
"அப்புறம் எப்படி இரண்டு பேரும் கூடப் படித்தாங்கன்னு சொன்னே...?"
"ஒரே ஸ்கூலில படித்தாங்கன்னு சொன்னேன்.. நீங்க ஒரே வகுப்பில்ன்னு அர்த்தம் எடுத்துக்கிட்டிங்களா..?"
"ம்ம்.. அவுட் ஹவுஸ் என்கிறாயே.. அவுட் ஹவுஸ் கட்டியிருப்பதானால் அந்தப் பையனின் வீடு பெரியதோ..?"
"அப்படித்தான் விவேக் சொல்கிறான்.."
"ஓ.. பணக்கார வீட்டுப் பையன்னா.. கொஞ்சம் பார்த்துப் பழகுப்பா.."
சதாசிவம் கவலையாய் கூற.. அரவிந்தன் சிரித்தான்..
"ஏன்ப்பா.. பணக்காரன்னா என்ன..? அவனிடம் நட்பு இருக்காதா..? அவனிடம் பழக பயம் எதுக்கு..?"
"உனக்குத் தெரியாதது இல்லை.."
"அப்புறம் எதுக்குப் பயம்..?"
"உலகம் அப்படி இருக்குடா தம்பி.."
"கவலையே படாதீங்க.. நான் உங்க பிள்ளை.. பார்த்து இருந்துக்குவேன் போதுமா.."
கவலை நீங்கப் பெற்ற சதாசிவம் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல.. அரவிந்தன் யோசனையுடன் கை கழுவ எழுந்தான்..
நவநீதன் விவேக்கின் நண்பன் என்ற முறையில்தான் அரவிந்தனுக்குப் பழக்கம்.. நாளடைவில் அவனும் அரவிந்தனுக்கு ஓர் நண்பனாகி விட்டான்.. அவனது கலகலப்பான சுபாவமும்.. எளிதில் பிறரிடம் இயல்பாகப் பழகிவிடும் தன்மையும் அரவிந்தனை நவநீதனுக்கு நண்பனாக்கி விட்டது.
ஒட்டன்சத்திரத்தில் வேலை என்றவுடனே.. விவேக் கிற்கு நினைவு வந்தது நவநீதனைத்தான்..
அந்த வாரம் நவநீதன் விவேக்கைப் பார்க்க வந்த போது,
"டேய்.. மச்சான்.. இவனுக்கு உங்க ஊரில் வேலை கிடைத்திருக்குடா..." என்று சொன்னான்.
"அப்படியா.. என்ன வேலை..?"
"உங்க ஊரில் இருக்கும் சதர்ன் மில்லில் ஜி.எம். போஸ்ட்.."
"அப்படியா.. பரவாயில்லையே..."
"அந்த மில் எப்படி...?"
"ஓரளவு பெரிய மில்தான்.."
"உன் ஊர் எப்படி..?"
"ஓரளவு பெரிய ஊர்தான்.."
"எல்லாமே ஓரளவுதானா..?"
"அதை விடுடா.. விவேக்.. உனக்கு பாரினில் வேலை கிடைத்திருக்கிறது.. இவன் மட்டும் ஒட்டன்சத்திரத்தைத் தேடி வருகிறானே."
"நான் சாப்ட்வேர் என்ஜினியர்.. இவன் மெக் கானிக்கல் என்ஜினியர்.."
"அதைச் சொல்லு.."
"நவநீதா.. உன் ஊரில் இவனுக்கு ஒரு ரூம் பார்த்துக் கொடுடா.."
"ஏண்டா விவேக்.. வார்த்தைக்கு வார்த்தை உன் ஊர்.. உன் ஊர் என்கிறாயே.. நீங்க இரண்டு பேரும் ஒரே ஸ்கூலில் படித்தவங்கதானே.. உனக்கு இவன் ஊரைத் தெரியாதா..?"
"நாங்க படித்தது திண்டுக்கல் ஸ்கூலில்.."
"ஓஹோ.. அப்படியா விசயம்..? எனக்கு இத்தனை நாள் இது தெரியாதே.."
"உனக்குத் தெரியாதது எத்தனையோ இருக்கு.. அதில் இதுவும் ஒன்று.. நீதான் தெரிந்து கொள்ள.. எங்களுடன் கூட்டணி போட மாட்டேன் என்கிறாயே.."
விவேக் கண் சிமிட்டினான்.. அவனும் நவநீதனும் சேர்ந்து பீர் முதலிய பானங்களை அருந்துவது உண்டு.. அரவிந்தன் அதில் கலந்து கொள்ள மாட்டான்.. அதை நினைவு படுத்தினான் அவன்.. அரவிந்தன் அவனைச் செல்லமாய் அடித்தான்.. அப்போதுதான் நவநீதன் அதைக் கூறினான்.
"அரவிந்தா.. நீ எதற்கு தனியாய் ரூம் பார்க்கனும்.. என் வீட்டு அவுட் ஹவுஸ் காலியாகத்தான் இருக்கு.. அதில் நீ தங்கிக் கொள்ளலாம்.."
வாக்களித்து விட்டு ஊர் சென்ற நவநீதன்.. அரவிந்தனின் வருகையை மறந்து விட.. நண்பனின் வாக்குறுதியை நம்பி அரவிந்தன் பெட்டிகளுடனும்.. படுக்கையுடனும்.. அவன் வீட்டு வாசலில் இறங்கினான்..

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -4
முகில் மறைத்த நிலவு -4
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-4.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-4.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy