முகில் மறைத்த நிலவு. -3

3 அரவிந்தன் தன் சட்டையை மாட்டிப் பொத்தான் களைப் போட்டபடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான்.. ஆறடி உயரத்தில்.. அலையலையான கேசத்துட...

3

அரவிந்தன் தன் சட்டையை மாட்டிப் பொத்தான் களைப் போட்டபடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான்.. ஆறடி உயரத்தில்.. அலையலையான கேசத்துடன்.. மாநிறமாய்.. கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும்.. தன் அழகை ரசிக்காமல்.. உடை ஒழுங்காய் பொருந்திருயிருக்கிறதா என்று மட்டும் பார்த்துவிட்டு.. கண்ணாடியை விட்டு அகன்றான்..
"அரவிந்தா.." என்று பார்வதி அழைக்கும் குரல் கேட்டது..
"இதோ வருகிறேன்ம்மா.." என்றபடி.. தன் அறையை விட்டு வெளியே வந்தான் அரவிந்தன்..
"சாப்பிட வாப்பா.."
"அப்பா சாப்பிட்டுட்டாரா..?"
"உன்னோடு சாப்பிடாம ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் தனியாகச் சாப்பிட்டதை நீ பார்த்திருக்கிறாயா..?"
"ஓ.. ஸாரிப்பா.. லேட்டாகிருச்சு.."
"அதனால் என்ன.. இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகச் சாப்பிட்டால் வேண்டாம்ன்னு இருக்கா..?"
மகனைப் பெருமையுடன் பார்த்தபடி பதில் கூறிய சதாசிவம் ஒரு மில் தொழிலாளி..
அவர் ஒருவரின் சம்பாத்தியத்தில் கட்டுத் திட்டமாய் குடும்பம் நடத்தும் மனைவியைப் பெற்றவர்..
அதனால்தான் அவரால் திண்டிவனத்தின் புறநகர் பகுதியில் அரை கிரவுண்டு இடம் வாங்கிச் சிறியதாய் ஒரு வீடு கட்டிக் கொள்ள முடிந்தது.. ஒரே மகனான அரவிந்தனை என்ஜினியராக்கவும் முடிந்தது..
மற்ற நாட்களில் வேலை.. வேலை.. என்று ஓடி விடுபவர் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் மகனுடன் பேசிக் கொண்டே சேர்ந்துதான் சாப்பிடுவார்..
"உட்காருப்பா.."
பரிவுடன் சதாசிவம் கூற.. அந்த ஹாலின் மூலையில் போடப்பட்டு இருந்த சிறிய சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்ந்தான் அரவிந்தன்.. நான்கு சேர்கள் மட்டுமே கொண்டே அந்தச் சிறிய சாப்பாட்டு மேஜையின் மேல் தட்டுக்களை வைத்து விட்டு.. உணவுப் பாத்திரங்களை எடுத்து வரச் சமையலறைக்குச் சொன்றாள் பார்வதி.
"ஏம்ப்பா.. இவ்வளவு நேரமும் எனக்காகவா காத்திருந்தீங்க..?"
"உனக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனால் ஓய்வாக உக்காந்து காத்திருக்க வில்லை.."
"என்னப்பா செய்தீங்க..."
"நான் காலையில ஆறு மணிக்கே எழுந்துட் டேன்ப்பா.. உன் அம்மா.. மண் வெட்டியோடு அவளோட தோட்டத்தில இறங்கி வேலை செய்யச் சொல்லிட்டா.."
உணவுப் பாத்திரங்களுடன் வந்த மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு மகனிடம் கூறினார் சதாசிவம்.
'வெட்கமில்லாமல் பிள்ளையின் முன்னால் கண்ணடிப்பதைப் பார்.. இந்த மனிதனுக்கு வயது திரும்புகிறதாய் எண்ணம் போல...'
கணவனைச் செல்லமாய் முறைத்துக் கொண்டே பரிமாற ஆரம்பித்தாள் பார்வதி..
அவர்களின் அன்யோன்யத்தை ரசித்தபடி.. ஜன்னல் வழி வீட்டின் முன்புறத்தையும்.. பக்கவாட்டையும்.. பின் பக்கக் கதவின் வழியாக வீட்டின் பின்புறத்தையும் பார்த்தான் அரவிந்தன்..
அரை கிரவுண்டு நிலத்தில் சதாசிவத்தின் கையிருப்பில் மிகச் சிறிய வீடையே கட்ட முடிந்தது.. ஒரு ஹால்.. அதன் மூலையில் போடப்பட்டிருக்கும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிடும்போது.. அதுவே சாப்பாட்டு அறை.. அதன் ஓரமாகக் கிடக்கும் கூடைச் சேர்களில் அமர்ந்து பேசும்போது அதுவே வரவேற்பறை.. ஹாலின் இரு பக்கமும்.. இரண்டு சிறிய படுக்கை அறைகள்.. அதில் ஒரு படுக்கையறை மட்டும்.. குளியலறை வசதியுடன் இருந்தது.. வீட்டின் பின் பக்கம் சிறிய சமையலறை.. பின் பக்க முற்றத்தின் கடைசியில் ஒரு பெரிய குளியலறை..
எல்லாவற்றையும் பார்த்துக் கட்டிய சதாசிவத்திடம் "எதுக்குப்பா அநாவசியமா.. இரண்டு பெட்ரூம் கட்டி செலவை இழுத்து விட்டுக்கறே.." என்று உறவினர் ஒருவர் கூறியபோது சதாசிவம் பிடிவாதமாகக் கூறி விட்டார்..
"என் மகனுக்கு அவனுக்குன்னு ஒரு ரூம் கொடுக்க வேண்டாமா.. செலவுக்கு என்ன பெரியப்பா அது ஆனால்.. ஆகிவிட்டுப் போகிறது.. என்ன இப்ப..? வீட்டுச் செலவைக் கொஞ்சம் சுருக்கி.. ஓவர் டைம் பார்த்தேன்னா சரியாகிப் போய்விடும்.."
ஏற்கனவே பொறியியல் படிப்பிற்காகத் தன் தகப்பனார் படும் கஷ்டத்தை அறிந்த அரவிந்தனுக்கு அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மனம் வலித்தது.
"எவ்வளவு நாள்தான் நீங்கள் ஓவர் டைம் பார்ப்பீங்க அப்பா.. எவ்வளவு நாள்தான் அம்மா வெறும் ரசம்.. துவையலோடு சாப்பாட்டை வைப்பாங்க.."
கண் கலங்கக் கேட்கும் மகனின் முடி கோதி விடுவார் அந்த பாசக்காரத் தந்தை..
"இதுக்கு ஏம்ப்பா.. கண் கலங்குற.. எல்லா ஓட்டமும் ஏதாவது ஒரு குறிக்கோளை முன்னால் வைத்துத்தானே இருக்கும்..? என் ஓட்டமும் உன் படிப்பைக் குறி வைத்து இருக்கிறது.. நீ படித்து முடித்து நல்ல வேலையில் உட்கார்ந்துட்டா.. நான் அக்கடான்னு வீட்டில் நிம்மதியாய் ஓய்வெடுப்பேன் இல்லையா..."
தந்தையின் இந்த வார்த்தைகள் தன்னைச் சமாதானப் படுத்துவதற்காகத்தான் என்பதை அரவிந்தன் நன்கு அறிவான்..
அவர் ஓய்ந்து உட்காரும் மனிதரல்ல.. அவரது சொற்ப வருவாயில் மனைவிக்கும்.. மகனுக்கும் வயிராற உணவளித்து.. நல்ல துணிகளை அணிய வைத்து வாழ வைப்பதே பெரிய விசயமாக இருந்தபோது.. அதையும் தாண்டி சொந்தமாக சிறு வீட்டைக் கட்டி.. மகனையும் பொறியியல் படிக்க வைத்த உழைப்பாளி..
இந்தச் சாதனையில் அவரது மனைவி பார்வதிக்கும் சமபங்கு இருந்தது.. வீட்டில் இருந்து கொண்டே உழைத்துச் சம்பாதிக்க அவள் தெரிந்து வைத்திருந்தாள்.. அவளது கையில் இருந்த தையல் கலை அவளுக்கு வருவாயை ஈட்டித் தந்தது..
"பார்வதியக்கா.. நீங்கள் தைத்தால் தான் எனக்கு திருப்தியா இருக்கு.. நானும் எத்தனையோ டெய்லர் கடையில் ஏறி இறங்கிட்டேன்.. எனது அளவுக்கு சரியாய் ஒருத்தர் கூட தைக்கலே.." என்பாள் ஒரு பெண்மணி..
"ஆண்ட்டி.. நீங்க தைத்துக் கொடுத்த சுடிதார் சூப்பர்.. எங்க காலேஜில் இது ரெடிமேடான்னு கேட்கிறாங்க.. நான் துணி எடுத்துக் கொடுத்து தைத்தேன்னு சொன்னால் ஒருத்தர் கூட நம்பவில்லை.." ஒரு கல்லூரி மாணவி கண்களை விரிப்பாள்..
சமைத்து.. வீட்டைப் பராமரித்து.. துணி துவைத்து.. மற்ற நேரங்களில் தையல் மிஷினை விட்டு இறங்காமல் தைத்து.. கணவனுக்கு இணையாக உழைத்தாள் பார்வதி.
"உண்மையான சம்பாத்தியம் எது தெரியுமாடா அரவிந்தா.. நாம.. மாதாமாதம் மீதம் பிடிக்கும் தொகை தான்.. அதை உன் அம்மா சரியாகச் செய்து விடுவாள்.." என்று பெருமையாகக் கூறுவார் சதாசிவம்.
வாடகை வீட்டையே.. அழகுற வைத்திருப் பவளுக்கு.. சொந்தமாய் வீடு கிடைத்தால் சும்மா இருப்பாளா..?
அந்தக் அரை கிரவுண்டு இடத்தில் சிறியதாக வீடு கட்டியது போக மீதமிருந்த இடங்களில் காய்கறிகளைப் பயிரிட்டாள் பார்வதி.. வீட்டின் முன்னால் கார் நிற்குமளவிற்கு சிமெண்ட் போட்ட தரை.. அதன் இருபுறமும்.. கொய்யாச் செடி.. மாதுளம் பழச் செடி.. சப்போட்டா பழச்செடி.. என்று பழச்செடிகளை நட்டு வைத்திருந்தவள்.. பக்கவாட்டில் இரண்டு புறமும் மூன்று.. மூன்று தென்னை மரங்களை நட்டு.. வைத்திருந்தாள்.. முன்புற ஜன்னலோரமாகப் படர்ந்து.. வீட்டின் முன் பக்க மொட்டை மாடியின் கைப்பிடியில் பரவியிருந்த முல்லைக் கொடியில் மலர்ந்த முல்லைப் பூக்களின் மணம் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தது..
வீட்டின் பின்புறம்.. சிறியதாய் நீண்ட சிமெண்ட் போட்ட நடைபாதை.. வீட்டின் கடைசியில் காம்பவுண்டு சுவருடன் ஒட்டிய குளியலறை.. சிமெண்ட் பாதையின் முடிவில் ஒரு துணி துவைக்கும் மேடை.. அதன் அருகில் குழாய்.. சிறிய சிமெண்ட் பாதையின் இரு பக்கமும் பாத்திகட்டி பயிரிடப்பட்டிருந்த கீரை வகைகள்.. மல்லிச் செடி.. புதினாச் செடி.. கத்தரிக்காய்.. தக்காளி.. மிளகாய் செடிகள்.. இரண்டு முருங்கை மரம் அளிக்கும் கொத்துக் கொத்தான.. சதைப் பிடிப்பான முருங்கைக் காய்கள்.. நான்கு வாழை மரங்கள்..
வீடு என்பது எது..? அழகையும்.. அமைதியையும் உணர்த்தும் வசந்த மாளிகை அது..
பார்வதி அந்தச் சிறிய வீட்டை வசந்த மாளிகையாக்கி வைத்திருந்தாள்.. தையல் வேலையோடு.. இப்போது காய்களை மொத்த விலைக்குக் கொடுத்து.. குடும்ப வருவாயைப் பெருக்கியிருந்தாள்..
"ம்ஹூம்.. நீ கொடுத்து வைத்தவன் சதாசிவம்.. உன் பெண்டாட்டி வீட்டில் காய்கறி வாங்கற செலவையும் குறைத்து.. காய்களையும் விற்று பணத்தை வாங்கி விடுகிறாளே.. இப்படி ஒரு பெண்டாட்டி வாய்த்தால்.. நீ ஒரு வீடு என்ன.. இன்னொரு வீட்டையும் கட்டலாம்..."
காலமெல்லாம் வாடகை வீட்டில் காலம் தள்ளுகிற சக தொழிலாளி ஒருவர் பெருமூச்சு விட்டபடி சதாசிவத்திடம் இதைக் கூறினார்..
சதாசிவத்திற்கு அதில் மனம் கொள்ளாத பெருமை..
"முதலிலெல்லாம் மீதம் பிடிக்கணும்ன்னா.. காய் வாங்கும் செலவைக் குறைத்துக்கிட்டு துவையலோடு சாப்பாட்டை முடித்துக்குவோம்.. இப்போது அதற்கான தேவையே இல்லாமல் பண்ணி விட்டாள்.. உன் அம்மா.. தினமும் ஒரு கீரைன்னு.. பச்சைக் காய்கறிகளோடு சமையலை ஜமாய்த்து விடுகிறாள் பாருடா.." என்று மகனிடம் பெருமையாகக் கூறுவார்..
அரவிந்தனுக்குத் தாயின் அருமை நன்கு தெரியும்.. திட்டமிட்டுக் குடும்பம் நடத்துவதில்.. பணத்தை சேர்த்து வைத்து.. மொத்தமாக்கிக் காட்டுவதில் அவன் திறமைசாலி..
வீட்டின் தேவைக்கு போரிங் போட்டு குழாயில் தண்ணீர் வரும்படி வைத்தால்.. அதைத் தோட்டத்திற்குப் பயன்படுத்தி.. காய்களை செழுமையாகக் காய்க்க வைக்கும் திறமை அவளுக்கு இருந்தது..
பார்வதியிடம் காய்கள் வாங்க.. காய்கறிக் கூடைக் காரப் பெண்மணிகள் அடித்துக் கொள்வார்கள்..
"பார்வதியக்கா.. உன் வீட்டு முருங்கைக்காயை வாங்கிக் கொண்டு போனா ஒரு நொடியில் வித்துப் போகுது.."
"ஏம்மா.. என்னை விட்டு விட்டு அவளுக்கு கீரைக் கட்டை கொடுத்துட்டியே.. பச்சைப் பசேல்ன்னு.. ஒரு பூச்சி அரிக்காத உன் கீரைக்கு இருக்கும் மவுசே தனிம்மா.. அதை வித்து நாலு காசு பார்த்து என் பொழப்ப நடத்த வந்தா.. எனக்கு மீதம் வைக்காம அவளுக்கே கொடுக்கலாமா.."
சதாசிவத்திற்கு.. மனைவியின் காய்கறித் தோட்டத்தில் வேலை பார்க்க மிகவும் பிடிக்கும்.. நேரம் கிடைத்தால் மண் வெட்டியோடு.. மனைவியின் தோட்டத்தைச் சீர் செய்ய இறங்கி விடுவார்..
இன்றும் அதுபோல வேலை செய்து விட்டு வந்தவர்.. மனைவியின் கட்டாயத்திற்காக அதைச் செய்தது போல போலியாக அலுத்துக் கொண்டார்.
"அடேங்கப்பா.. உன் அப்பா மண் வெட்டியைப் பிடிக்கல்லைன்னா நான் சாப்பாடு போட மாட்டேன்னு பயமுறுத்தி வைத்திருக்கிறேன் பாரு.. நடிப்பதில் உன் அப்பா மன்னன்டா..."
நொடித்துக் கொண்டபடி பார்வதி பரிமாற ஆரம்பிக்க.. மனைவியை காதலுடன் பார்த்துக் கொண்டார் சதாசிவம்..
"என்னம்மா சமையல்..."
"ஞாயிற்றுக் கிழமை உன் அம்மா என்ன சமைத்திருப்பாள்..? மற்ற நாட்களில்.. கீரையும்.. தக்காளிக் கூட்டும் வைத்தாலும் ஞாயிற்றுக்கிழமை கறிச்சோறு சாப்பிட வைக்காமல் இருக்க மாட்டாளே.."
"ஹை.. சிக்கன் பிரியாணி.. வறுவல்.."
"இதுக்குப் போய் இவ்வளவு சந்தோசமா..? அப்படியே அப்பாவுக்கு ஏற்ற பிள்ளையாய் தளாம் போடுகிற.. சாப்பிடுடா.."
அரவிந்தன்.. ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.. மகனைப் பரிவுடன் பார்த்தபடி சதாசிவமும் சாப்பிடலானார்..
"ஏம்ப்பா.. நேற்று பூராவும் வெளியில் போயிருந்தயே.."
"எனக்கு வேலை கிடைத்திருப்பதால் பிரண்ட்ஸ் பார்ட்டி கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்கப்பா.. அது தான் போயிருந்தேன்.."
'என்ன பார்ட்டி..?' என்று சதாசிவம் கேட்கவில்லை.. தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் நம்பிக்கையை மட்டுமே காட்டுபவர் கண்டிப்பைக் காட்டியதில்லை..
"என்கிட்ட பணம் கேட்கலையேப்பா.."
"என் சம்பளப் பணம் இருந்ததுப்பா.."
அரவிந்தனை நிமிர்ந்து பார்த்தார் சதாசிவம்.. மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த பார்வதியும் அதே சமயம் மகனைப் பார்த்தாள்..
தாய்.. தந்தையரின் பார்வையை அறிந்தும் தலையைக் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் அவர்களை நிமிர்ந்து பார்க்கவில்லை..
ஒரு பெருமூச்சுடன் சதாசிவம் மனைவியைப் பார்த்தார்.. பின் 

தலையைக் குனிந்து கொண்டு.. சாப்பிட ஆரம்பித்தார்Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -3
முகில் மறைத்த நிலவு. -3
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy