முகில் மறைத்த நிலவு. -18

18 அரவிந்தன் வைத்த விழியை எடுக்காமல் ராதிகாவின் மேல் தன் பார்வையைப் பதித்தபடி மாடிப்படிகளில் காலை வைத்தான்... அவன் அடுத்தபடியில் காலை...


18

அரவிந்தன் வைத்த விழியை எடுக்காமல் ராதிகாவின் மேல் தன் பார்வையைப் பதித்தபடி மாடிப்படிகளில் காலை வைத்தான்... அவன் அடுத்தபடியில் காலை வைக்கும் முன்.. ராதிகா பதறினாள்...
"வேண்டாம்... போகாதீர்கள்..."
அரவிந்தனை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது... அந்தக் குரலில் தெரிந்த பயம்.. பதட்டம்... பரிதவிப்பு... இவை அனைத்தும் சேர்த்து அரவிந்தனின் இதயத்தை தாக்கியது...
"மோனிகா சிறு பெண்... விளையாட்டுத்தனமாய் பேசிவிட்டாள்... அவள் பேசியதை பெரிதாக எடுத்துக் கிட்டு நீங்கள் இந்த ராத்திரி நேரத்தில் வெளியே போக வேண்டாம்... ப்ளீஸ்..."
"ஏன்... வெளியே போனால் என்ன..?"
"விவாதம் வேண்டாமே..."
"ஓ.கே... வேண்டாம்.. நான் போகவில்லை போதுமா.."
அரவிந்தன் தன் காலை படியிலிருந்து எடுத்துக் கொண்டான்... ராதிகா நிம்மதியாக மூச்சு விட்டாள்... தன் அறையை நோக்கி நடந்தாள்...
"ஒரு நிமிடம்..."
அரவிந்தனின் குரல் அவளைத் தடுத்தது... நின்று திரும்பிப் பார்த்தாள்...
"என்மேல் ஏனிந்த அக்கறை...?"
"ஏன்..." 
ராதிகா தடுமாறினாள்... அவளுக்கே தெரியாத ஒன்றை வினவினால் அவள் எப்படிப் பதில் சொல்வாள்...
அவள் யாரோ... அரவிந்தன் யாரோ.. இன்னும் சொல்லப் போனால்... அவனை அவள் சந்தித்து இன்னும் ஒருநாள் கூட முழுமை பெறவில்லை... அன்று காலையில் தான் அவன் அறிமுகம் ஆனான்... அவனைப் பற்றி ஏன் அவள் கவலைப்பட வேண்டும்..? அவளுக்கும்... அவளுடைய அண்ணனுக்கும் இடையே பள்ளம் வெட்டி விடுகிறவன் எக்கேடு கெட்டால் அவளுக்கென்ன..? அவன் மேல் அவளுக்கேன் இவ்வளவு அக்கறை....?
விடையில்லாத... விடை சொல்ல முடியாத.. இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ராதிகா திகைத்து நின்றாள்...
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தனின் மனம் கனிந்தது...
'இவள்தான் எவ்வளவு மென்மையானவள்... கடுமையான முகமூடியின் பின் ஒளிந்திருக்கும் இவளின் மனதில் எவ்வளவு காருண்யம் நிறைந்திருக்கிறது... இவள் கருணையே வடிவானவள்... இந்தச் சின்னஞ்சிறு பறவையின்.. சிறகை விரிக்க முடியாமல் கடமை இவளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறதே...'
"குட்நைட் ராதிகா... நீங்கள் பதில் சொல்ல இவ்வளவு யோசிக்க வேண்டுமானால் எனக்குப் பதிலே தேவையில்லை... அமைதியாகத் தூங்குங்கள்... அழகான கனவுகள்... உங்கள் உறக்கத்தில் வரட்டும்..."
அவன் போய்விட்டான்.. அவனது வார்த்தைகள் அவளது காதினில் ஒலித்துக் கொண்டிருந்தன..
'அழகான கனவுகள்... உங்கள் உறக்கத்தில் வரட்டும்...'
வருமா..? அழகான கனவுகள் வருமா...? இமைகளே பாரமாக.. விழிகளை மூடித் துயிலில் ஆழ்பவளுக்கு அழகான கனவுகளும் வரக் கூடுமா...?
கேள்விகள் மனதில் எழ... உறங்கி விட்டவளுக்கு அழகான கனவுகள் வந்தன...
மேகங்களை புரவியாக்கி... சூரியனாக ஒருவன் வந்தான்... வில்லேந்திய அவனது கரம்... ராதிகாவை நோக்கி நீண்டது.. நீண்ட நாள் கனவு நிறைவேறுகிற ஆவலுடன் ராதிகா அவனது கரம் பற்றிக் கொண்டாள்.. அவன் அவளது கரம் பிடித்து அழுத்தி...
'உனக்காக நான் இருக்கிறேன்...' என்று சொல்லாமல் சொன்னான்..
ஆவலுடன் அவன் முகம்பார்த்த ராதிகா... ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்...
 அந்த முகம்... அரவிந்தனின் முகம்....!
மறுநாள் காலையில் அலுவலகம் செல்லத் தயாராகி.. சாப்பிட வந்த அரவிந்தனிடம்... பள்ளிச் சீருடையில் இருந்த மோனிகா வம்பு பேசினாள்...
"செண்பகா... பயந்தாங்குளி சார் வந்திருக்கிறார்... டிபனை எடுத்து வை... ஏன் சார்.. நேற்று ராத்திரி நன்றாக கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு குறட்டை விட்டுத் தூங்கினீங்க போல... இவ்வளவுதான் உங்க வீரமா..?"
நவநீதன் தங்கையின் அருகே அமர்ந்து அவளது இரட்டைச் சடையை பிடித்து இழுத்தான்... அவள் வலியால் முகம் சுளித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள்..
"ஏன் என் ஜடையை பிடித்து இழுக்கிற..?"
"மோனிச் செல்லம்.. அவன் பெரிய வீரன்தான்... அவன் நடுராத்தியில் உலா போய் விட்டுத்தான் வந்தான்.. உனக்கு சந்தேகமாக இருந்தால்.. இன்றைக்கு நீ வேண்டுமானால் அவன் பின்னாலேயே போய் செக் பண்ணி விட்டு வாயேன்..."
"என்னது... நான் போவதா..? நடுராத்திரியிலா..? போண்ணா... நீயும்.. உன் பிரண்டும் எக்கேடோ கெடுங்கள்.. நான் உங்கள் வழிக்கே வரவில்லை..."
"இப்படிச் சொன்னால் எப்படிக் கண்ணம்மா..."
"வேறு எப்படிச் சொல்ல...?"
"நான் உன்னை தைரியமானவள்ன்னு நினைத்தேனே.."
"என் தைரியத்தை பேயோடு பேச்சு வார்த்தை நடத்தித்தான் நிரூபிக்க வேண்டுமானால்... அந்த தைரியசாலி பட்டமே எனக்கு வேண்டாம்..."
கறாராய் சொல்லிவிட்டு மோனிகா நடையைக் கட்ட நவநீதன் அரவிந்தனைப் பார்த்துச் சிரித்தான்...
"ஏண்டா... சின்னப் பெண் உன்னை கேலி பண்ணு கிறாள்.. நீ ரோஷம் வந்து நகர் வலம் வர வேண்டாமோ..."
"இதோ... இப்போதே நகர் வலம் வருகிறேன்..."
"ஏண்டா.. என் மானத்தை வாங்குகிற.. நடு இரவில் நகர்வலம் வா..."
"அது என்னால் முடியாது..."
"ஏன் முடியாது...?"
நவநீதன் வினவ... அரவிந்தன் ராதிகாவின் முகத்தைப் பார்த்தான்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,130,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,249,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,29,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,15,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,9,ஜனனி... ஜெகம் நீ..,5,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு. -18
முகில் மறைத்த நிலவு. -18
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-18.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-18.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy