முகில் மறைத்த நிலவு -17

17 எப்போதும் கடுமை நிலவும் முகத்தில் தெரிந்த களிப்பைக் கண்ட அரவிந்தன்... ' இந்தப் பெண்தான் இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்......


17

எப்போதும் கடுமை நிலவும் முகத்தில் தெரிந்த களிப்பைக் கண்ட அரவிந்தன்...
'இந்தப் பெண்தான் இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்...' என்ற நினைவில் பிரமித்தான்...
சிரிப்பைத் தொலைத்து விட்ட தன் தங்கை... சிரிப்பதையே மறந்து போனாளோ என்று கலங்கிக் கொண்டிருந்த நவநீதன் அவள் சிரிப்பைக் கண்டு மெய் மறந்து நெகிழ்ந்து போனான்...
அரவிந்தனின் கண்கள் கூர்மை பெற்றன... ராதிகா தன்னுடன் வார்த்தையாட விரும்புவதைப் புரிந்து கொண்டவன்.. லேசாக உதட்டைக் கடித்துக் கொண்டே ஆழ்ந்த பார்வை ஒன்றைப் பார்த்தான்... அவளது முகம் வெட்கிப்போனது...
"மோனிகா என்ன சொன்னாள்...?"
"ஏன்.. உங்களுக்குக் கேட்கவில்லையா...?"
"கேட்கவில்லையே..."
"காது என்ன செவிடா...?"
"அப்படியிருந்தால் எப்படி எனக்கு ஜி.எம் போஸ்ட் கொடுத்திருப்பாங்க..?"
"அப்புறம் தெரியாதது போல் என்ன கேள்வி வேண்டிக் கிடக்கிறது...?"
"உங்கள் வாய்மொழியில் அதைக் கேட்க எனக்கு கொள்ளை ஆசைன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.."
"ம்ம்... என் தங்கை உங்களை பயந்தாங்குளின்னு சொல்கிறாள்... போதுமா..? அதுவும் என் அண்ணனை விட நீங்கள் பயந்தாங்குளியாம்..."
"அதை நீங்களும் சரியென்கிறீங்க..."
"ஆமாம்.. உண்மை எதுவோ.. அதை ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்..."
"அடடா... என்ன ஒரு நேர்மையான குணம்..."
"இருக்காதா பின்னே...?"
"அதுதானே... நீங்கள் யார்...? கருணாகரன் சாரின் மகளாயிற்றே..."
"தெரிந்தால் சரி..."
"நான் பயந்தாங்குளியில்லைன்னு நிருபிக்க என்ன செய்யனும்...?"
அவன் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டே வினவினான்... அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது...
அவனது விழிகள் வினவும் மொழி புரியாமல் அவள் தவித்துப் போனாள்...
'என்ன செய்யச் சொல்வது...?'
அவள் மோனிகாவைப் பார்த்தாள்... மோனிகா தலையை ஒரு விரலால் தட்டிக் கொண்டே யோசித்தாள்..
"ஐடியா..." என்று கூவினாள்...
"என்ன மோனி..?"
"இவரை நடுராத்திரியில் சுடுகாட்டிற்கு போய்வரச் சொல்லலாமா...?"
அரவிந்தன் கடகடவென்று சிரித்தான்...
"ஏன் சிரிக்கிறீங்க..?"
"நீ பீடிகை போடுவதைப் பார்த்து பெரிதாக எதையோ சவால் விடப் போகிறாய்ன்னு பார்த்தால் கடைசியில் இப்படி நீ ஜீஜீபி பேபி என்பதை நிருபிக்கிறாயே..."
"ஜீஜீபி பேபியா..? யார்..? நானா..?"
"நீயேதான்..."
"அக்கா... இவரைப் பாரேன்..."
அரவிந்தன் சட்டென்று ராதிகாவைப் பார்த்தான்... அவன் பார்வை.. எதையோ வினவியது... ராதிகாவின் பார்வை தாழ்ந்தது...
"கீப் கொயட் மோனி..."
"என்னக்கா... இவர் என்னை ஜீஜீபி பேபி என்கிறார்.. நீ அவரைத் திட்டாமல் என்னை அதட்டுகிறாயே..."
"அது ஒன்றுமில்லை மோனிகா.. உன் அக்காவிற்கு பயம்..."
அரவிந்தன் நிதானமாய் கூற...
"எனக்கென்ன பயம்...?" என்று அலட்சியம் போல் காட்டியபடி ராதிகா கேட்டாள்..
"நான் நிஜமாகவே சுடுகாட்டிற்குப் போய்... பேய்களுடன் உரையாடி விட்டு வந்து விடுவேனோ என்கிற பயம் தான்..."
"அதுக்காக நான் ஏன் பயப்படனும்...?"
அரவிந்தன் பதில் சொல்லாமல்... சிரித்தபடி எழுந்து கைகழுவச் சென்று விட்டான்...
அன்று நடு இரவு வரை ராதிகாவிற்கு தூக்கம் வரவில்லை... மெதுவாய் புரண்டு படுத்து செல் போனை எடுத்து அழுத்தினாள்.. இருளில் அதன் சின்னத்திரை ஒளிர்ந்தது... மணி பார்த்தாள்.. இரவு மணி பனிரெண்டரை.. மூச்சைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்... மெதுவாய் அடிமேல் அடி வைத்து நடந்து படுக்கையறைக் கதவைத் திறந்தாள்... மெதுவாக எட்டிப் பார்த்தாள்... அரவிந்தன் இருந்த அறையின் கதவு மூடியிருந்தது... மாடி ஹாலில் நடந்து அதன் கைப்பிடியில் சாய்ந்து வாசல் கதவைப் பார்த்தாள்... பூட்டியிருந்தது.. நிம்மதியாய் மூச்சு விட்டபடி திரும்பியவள்...
"ஹ...." என்றபடி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்று விட்டாள்...
எதிரே அவள் மேல் மோதி விடும் நெருக்கத்தில் அரவிந்தன் நின்றிருந்தான்.. அவனது புருவங்கள் ஏறின.. ராதிகா சுதாரித்துக் கொண்டு...
"வழியை விடுங்கள்..." என்றாள்..
"நான் உங்கள் வழியை மறைக்கவில்லையே... ஆனால்.. எனக்கு ஒரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்க.."
"என்ன பதில்..."
"இந்த நடுநிசியில் ஏன் நீங்கள் எழுந்து வந்திருக்கிறீங்க..?"
"சும்மாதான்... கதவை செக் பண்ண வந்தேன்.."
"எந்தக் கதவை...? என் அறைக் கதவையா...?"
"உங்கள் அறைக்கதவை நான் ஏன் பார்க்கனும்..?"
"நான் உள்ளே இருக்கிறேனா.. இல்லை மோனிகாவின் சவாலை ஏற்றுக்கிட்டு நடுராத்திரியில் உலா கிளம்பி விட்டேனான்னு பார்க்க வந்தீங்க.. உண்டா... இல்லையா...?"
"இல்லை..."
"பொய்..."
"மெய்..."
"அப்படின்னா நான் இப்போது மோனிகாவின் சவாலை ஏற்றுக்கிட்டு உலா கிளம்பட்டுமா...?"
ராதிகா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்... அவனது விழிகளில் பிடிவாதம் தெரிந்தது... அவன் மாடிப் படிகளில் இறங்க தன் காலை எடுத்து வைத்தான்... ராதிகாவின் இதயத் துடிப்பு அதிகமாகியது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -17
முகில் மறைத்த நிலவு -17
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy