முகில் மறைத்த நிலவு -15

15 நவநீதன் தன் வரிசைப் பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்தான். "ஏண்டா.. நீ மட்டும் சிரித்தால் போதுமா.. ? என்னன்னு விசயத்தை சொல்ல...

15

நவநீதன் தன் வரிசைப் பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்தான்.
"ஏண்டா.. நீ மட்டும் சிரித்தால் போதுமா..? என்னன்னு விசயத்தை சொல்லி விட்டுத்தான் சிரியேன்..."
"இல்லை... கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கில் உதிக்குதேன்னு நினைத்தேன்... சிரித்தேன்..."
"உனக்குக்கூட இப்படியெல்லாம் பேச வருமாடா..?"
"அது என்ன.. எனக்குக்கூடன்னு ஒரு இக்கன்னாவை வைக்கிற..? நீ மட்டும் தான் அறிவு ஜீவியா... நான் என்ன கூ முட்டையா...?"
"போதும்டா... வம்புக்கு வராதே... உன் தங்கை கோபப்பட்டாலும் குற்றம்... தன்மையாய் விருந்தாளியை உபசரித்தாலும் குற்றம்ன்னு சொன்னால் என்ன தான் செய்வது..?"
"என்னவோ போ... வந்த ஒரு நாளிலேயே என் தங்கையின் உபசரிப்புக்கு ஆளாகி விட்டாய்..."
"அதற்கு முதலில் அவங்க என்னை எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்காத குறையாய் அர்ச்சனை செய்தாங்களே.. அதெல்லாம் உனக்கு மறந்து விட்டதா..?"
"விடு... விடு... போன கதை இப்போது எதுக்கு...? வருகிறாயா கொஞ்சம் நேரம் டென்னிஸ் விளையாடலாம்.."
தோட்டத்தில் பக்க வாட்டில் இருந்த டென்னிஸ் விளையாடுமிடத்தைக் காட்டி நவநீதன் வினவ...
"ஓகே.. வா.. விளையாடலாம்..." என்று எழுந்து கொண்டான் அரவிந்தன்..
அவர்கள் இருவரும் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த போது... இரட்டைப் பின்னலுடன்.. சுடிதாருக்கு மாறியிருந்த மோனிகா அங்கு வந்தாள்...
நவநீதனை தோற்கடித்து விட்டு வெற்றியுடன் அரவிந்தன் சிரிக்க... மோனிகா டென்னிஸ் மட்டையை எடுத்துக் கொண்டாள்...
"அண்ணன் ஜெயித்து விட்டால்... நீங்க பெரிய பிளேயர்ன்னு அர்த்தம் ஆகிவிடாது.. எங்கே.. என்னோடு போட்டி போட்டு ஜெயித்துக் காட்டுங்கள் பார்ப்போம்..." என்றவாறு களத்தில் இறங்கினாள்...
"சபாஷ்.. சரியான போட்டி..." என்றான் நவநீதன்...
"நீ இதற்குத்தான் லாயக்கு..." என்றாள் மோனிகா..
"என்னுடன் விளையாடி ஜெயித்து விடுவாயா..?" என்ற சவாலுக்கு அழைத்தான் அரவிந்தன்...
"நிச்சயம் ஜெயிப்பேன்..."
"பார்க்கலாமா..."
"பார்க்கலாம்..."
"என்ன பெட்...?"
"பெட்டேல்லாம் எதற்கு...?"
"போட்டின்னு வந்து விட்டால் பந்தயம் தேவைம்மா.."
"எனக்குப் பந்தயமெல்லாம் பிடிக்காது..."
"எனக்குப் பிடிக்குமே..."
"உங்களுக்காக எனக்குப் பிடிக்காததை நான் செய்ய முடியாது..."
"ஊஹூம்...?"
மெச்சுதலாக புருவம் உயர்த்திச் சிரித்தவன்.. மாடி யறைகளில் ஒன்றின் ஜன்னலோரமாய் மறைந்து கொண்டு.. லேசாக முகத்தைக் காட்டியபடி.. இவர்கள் டென்னிஸ் விளையாடுவதை ராதிகா பார்த்துக் கொண்டடிருப்பதை பார்த்து விட்டான்..
"மறைந்திருந்தே பார்க்கும்....
             மர்மம் என்ன...?"
என்று அவன் நவநீதனைப் பார்த்து கண்சிமிட்டி பாட... அவனும் புரிந்து கொண்டு சிரித்தான்..
மோனிகாவுடன் விளையாடியபடியே.. நொடிக்கொரு தரம் ராதிகாவின் முகம் இருந்த ஜன்னலைப் பார்த்துக் கொண்ட அரவிந்தனுக்கு... அவளது முகத்தை முழுவதும் பார்க்க முடியாமல்.. ஜன்னல் திரை மறைத்திருந்தது... சலிப்பாக இருந்தது...
ஏனோ.. வானில்.. மேகங்களுக்கு இடையே பிரகாசிக்கும் நிலவின் வதனம் அவனுக்கு நினைவிற்கு வந்தது...
'முகில் மறைத்த நிலவு...' என்று மனதிற்குள் அவன் நினைத்துக் கொண்டான்...
அடிக்கடி மாடியைப் பார்த்தபடி ஆடிய அவன் ஆட்டத்தில் கோட்டை விட.. மோனிகா வென்று விட்டாள்..
"ஹேய்.. நான் தான் ஜெயித்தேன்..." என்று அவள் குதூகலிக்க...
"பரிசுக்கோப்பை எங்கேடா..." என்று அரவிந்தன் தேடுவது போல் பாவனை செய்தான்..
"பரிசுக் கோப்பை கிடைத்தாலும்.. கிடைக்கா விட்டாலும்.. எனக்கு வெற்றி கிடைத்து விட்டது.. அது எனக்கு போதும்..." என்று மகிழ்வுடன் கூறியபடி மோனிகா தமக்கையிடம் செய்தியைச் சொல்ல ஓடி விட்டாள்...
இரவு உணவு உண்ணும் போதும்.. மறக்காமல் தன் வெற்றியை அவள் நினைவுபடுத்த... நவநீதன் குறுக்கிட்டுப் பேசினான்...
"சரி.. சரி... விடும்மா... பயபுள்ள.. பார்வையை அலைய விட்டு விட்டான்.. இல்லைன்னா ஒழுங்காக ஆடுகிறவன் தான்..."
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ராதிகாவிற்கு புரையேறி விட்டது... அவசரமாய் தமையனை முறைத்தாள் அவள்..
"என்ன ராதும்மா..." என்று ஒன்றும் அறியாதவன் போல் வினவினான் அண்ணன்காரன்...
"பேசாமல் சாப்பிடு..."
"இது என்ன ராதும்மா அநியாயமாய் இருக்கிறது... இந்தியாவிற்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழில் சுதந்திரம் கிடைத்து விட்டது... எனக்குப் பேச்சுரிமை இன்னும் கிடைக்கவில்லையே..."
"அண்ணா... நீ அடங்கவே மாட்டாயா...?"
"நீ அடக்குவதிலேயே குறியாய் இரு... வரவர.. இது வீடா.. இல்லை ஹாஸ்டலான்னு எனக்கு சந்தேகமாய் இருக்கிறது..."
"அது தான் நீ வீட்டை ஹாஸ்டலாக்கி விட்டாயே.."
ராதிகா கூறுவது தன்னைத்தான் என்பதை புரிந்து கொண்ட அரவிந்தன்... நிதானமாய் அவளை நேருக்கு நேர் பார்த்தான்...
இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே அவனும் காத்தி ருந்தான்.. மறைந்திருந்து தன்னை அவள் பார்ப்பதை உணர்ந்து கொண்ட பின்னால்... நேருக்கு நேர் அவள் முகத்தைப் பார்க்காவிட்டால் அவனுக்குத்தான் எப்படி தூக்கம் வரும்?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -15
முகில் மறைத்த நிலவு -15
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-15.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-15.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy