முகில் மறைத்த நிலவு -11

11 "அப்படியே நம்ம ராதிகா அம்மாவின் குணம் போல.." "ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு..." "என்ன வித்தியாசம்...&qu...


11

"அப்படியே நம்ம ராதிகா அம்மாவின் குணம் போல.."
"ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு..."
"என்ன வித்தியாசம்..."
"நம்ம ராது கடுவன் பூனை.. இவன் புன்னகை மன்னன்.. மற்றபடி.. இரண்டு பேரும் பொறுப்பானவர்கள்.. நீங்கள் அவனோடு பழகிப் பார்த்தால் தான் அவனுடைய அருமை புரியம்..."
"நம்ம சின்னம்மாவிடம் கூடப் பழகிப் பார்த்தால் தான் அவங்க குணம் புரியும்... அது போலவா...?"
"நீங்க எங்கே சுற்றினாலும் ராதிகாவிடம் கொண்டு வந்து தான் நிறுத்துவீங்க... ராமையா... உங்க பாசம் என்னை நெகிழவைக்கிறது..."
"போங்கைய்யா.. நான் உங்க வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவன்.. உங்க குடும்பத்து நிழலில் வாழ்பவன்..."
"அதற்காக விசுவாசத்தைத்தான் காட்டுவார்கள்.. பாசத்தை யார் காட்டுவார்கள்..? ம்ம்..?"
நவநீதன் புன்னகையோடு காருக்குச் சென்று ஏறி அமர்ந்தான்.. அவனது கார் கிளம்பிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராமையாவின் நெஞ்சம் நிறைந்திருந்தது..
சிடு மூஞ்சியாய் இருப்பவர்களிடம் மட்டும் பொறுப்பும்.. பாசமும் இருக்காது.. சிரித்துக் கொண்டே வாழ்வை விளையாட்டுத்தனமாய் வாழ்பவர்களிடமும் பொறுப்பு இருக்கும் என்பதை அவர் மனம் முதன் முதலில் உணர்ந்து கொண்டது...
நவநீதன் தன் தங்கைகளின் வாழ்வில் அக்கறை யுள்ளவன் என்பதை உணர்ந்து கொண்டதால் அவர் அமைதியாக வேலையைப் பார்க்கப் போனார்...
காருக்குள் அமைதி நிலவ.. நவநீதன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.. அரவிந்தன் காரில் இருந்த சிடி பிளேயரை போட்டு விட்டான்.. பாடல் ஒலித்தது...
    "கண்ணிலே என்ன உண்டு...?
             கண்கள் தான் அறியும்....
    கல்லிலே ஈரம் உண்டு...
             கண்களா அறியும்..?
    என்மனம் என்னவென்று
             என்னையன்றி யாருக்குத் தெரியும்..."
அரவிந்தன் வியப்புடன் புருவத்தை உயர்த்திச் சிரித்தான்..
"என்னடா சிரிக்கிற...?"
"உன் காரில் இப்படிப் பாட்டுக்கள் கூட உண்டா...?"
"நேற்று ராதிகா அவளுடைய பிரண்ட் ஒருத்தியின் கல்யாணத்திற்கு போவதற்காக இந்தக் காரை எடுத்துக் கொண்டு போனா... அவளுக்குப் பழைய பாடல்கள் தான் பிடிக்கும்..."
"அதுதானே பார்த்தேன்.. ஆனால் உன் தங்கை கேட்பதற்கு இது பொருத்தமான பாட்டுத்தான்..."
"ஏன் அப்படிச் சொல்கிறாய்...?"
"நவநீதா... நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளாதே..."
"கோபித்துக் கொள்ளவில்லை... சொல்லு..."
"உன் வீட்டிற்கு இப்போது அவங்கதான் தூண்..."
நவநீதன் நண்பனை மெச்சுதலாய் பார்த்தான்..
"குட்..."
"எதற்காக...?"
"என் தங்கையைப் புரிந்து கொண்டதற்காக..."
"நான் புரிந்து என்ன பண்ண... நீ புரிந்து கொள்ள வேண்டுமே..."
"நான் புரியாமலா இருக்கிறேன்...?"
"காலையிலிருந்து உன் வீட்டில் நீ நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்று கிறது..."
நவநீதன் மௌனமாய் கார் ஓட்டுவதை தொடர்ந்தான்..
"நெருப்பென்று சொன்னால்
             நீரிலும் அணையும்...
    நீரென்று சொன்னால்
             நெருப்பிலும் வேகும்...
    நான் கொண்ட நெருப்பு
             அணைகின்ற நெருப்பு..
    யார் அணைப்பாரோ...
             இறைவனின் பொறுப்பு..."
பாடலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.. பாடலின் கருத்தாழத்தில் கவரப்பட்டான் அரவிந்தன்... அவனை அறியாமல் அவனுடைய விரல்கள்.. தாளம் போட்டதை ஓரக் கண்ணால் கவனித்தான் நவநீதன்...
"எதனால் நான் நடந்து கொண்ட முறை சரியில் லைன்னு நீ சொல்கிற...?"
"உன் தங்கையின் ஆட்சேபனையில் அர்த்தம் இருக்கிறதுடா.. இந்த ஊரில் உன் குடும்பம் கவனிக்கப் படுகிற பெரிய குடும்பமாய் இருக்கிறது.. உன் குடும்ப கௌரவத்திற்கு பங்கம் வரக்கூடாதுன்னு அவங்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது..?"
"அங்கே மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணினாயே.."
"அவங்க கோபத்தைக் காட்டின விதம் அப்படி... அதோடு நீ என் நண்பன்.. உனக்கும் உரிமை இருக்கிறது என்பதை அவங்க உணர வேண்டாமா..? உனக்கும் இருபத்தி ஐந்து வயதாகி விட்டது.. நாளைக்கு உனக்குக் கல்யாணம் ஆனாலும் இவங்க இது போலவே இவங்க கையை எதிர்பார்க்கும்படி உன்னை வைத்தால் உன் மனைவி உன்னை மதிக்க மாட்டாங்களே.. அதனால் சப்போர்ட் பண்ணினேன்.. மற்றபடி அவங்க பக்கம் நியாயம் இருக்கு நவநீதா..."
"இது... இதுதாண்டா.. உன்னிடம் எனக்குப் பிடித்த விசயம்.."
"எது..?"
"ஒரு பக்கமாகவே பேசாமல்.. இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தைப் பார்க்கிறாயே..."
"என்னடா.. இன்றைக்கு ஐஸ்கிரீம்போல இப்படி உருகிவழிகிறாய்...?"
"காரணமாகத்தான்...."
"என்ன காரணம்...?"
"அதை இப்போது சொல்ல மாட்டேன்.."
"ஏண்டா.. உனக்கு சஸ்பென்ஸ் வைக்கக் கூடத் தெரியுமா..?"
"தெரியும்.. அதுக்கு இப்போ என்னங்கிற...?"
"என்னமோ செய்.. பட்.. நான் உன் வீட்டு அவுட் ஹவுஸில் தங்குவதாக இல்லை.."
அரவிந்தன் இதைக் கூறியதும் கார் உடன் பிரேக் அடித்து சாலையோரமாய் நின்றது...
"என்னடா...?"
"ஏண்டா இப்படிச் சொல்லுகிற...?"
"இதைக் கேட்கவா காரை நிறுத்தின..?"
"நீ முதலில் நான் கேட்டதற்கு பதில் சொல்லு..." நவநீதன் கேட்க அரவிந்தன் நிதானமாய் அவன் முகத்தை ஏறிட்டான்...

Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -11
முகில் மறைத்த நிலவு -11
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy