முகில் மறைத்த நிலவு -10

10 ராதிகாவின் மனம் தனிமையில் தவித்தது... எப்போதும் தாய் தந்தையை நினைக்காதவள்.. அன்று தன் பெற்றோர்களின் படத்தின் முன்னால் கண் மூடி நின...


10

ராதிகாவின் மனம் தனிமையில் தவித்தது... எப்போதும் தாய் தந்தையை நினைக்காதவள்.. அன்று தன் பெற்றோர்களின் படத்தின் முன்னால் கண் மூடி நின்றதைக் கண்ட வீட்டு வேலையாள்களின் மனம் வருந்தியது..
"ராமையா..."
"அம்மா..."
"இந்தாங்க.. பணம்..."
ராதிகா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்த ராமையா.. நவநீதன் அரவிந்தனுடன் காரில் ஏறத் தயாராக.. கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டார்..
"சின்னய்யா..."
"என்ன ராமையா..."
"ஒருநிமிசம் வந்துட்டுப் போறீங்களா..."
"அரவிந்தா காரில் உட்கார்ந்திருடா.. ராமையாவிடம் பேசிவிட்டு வந்து விடுகிறேன்..."
அரவிந்தனை காரில் அமர வைத்து விட்டு நவநீதன் ராமையாவின் அருகே வந்தான்...
"சொல்லுங்க ராமையா..."
"சின்னம்மாவின் கண் கலங்கியிருச்சுங்கய்யா... உங்களைப் பெத்தவங்க படத்துக்கு முன்னால் ரொம்ப நேரம் நின்னுக்கிட்டு இருந்தாங்க.. ஆனாலும் நீங்க.. இன்றைக்கு அவங்களை அதிகப்படியாய்தான் பேசிட் டீங்க..."
சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்த பெரியவர்.. பெற்றவருக்கு நிகரானவர்.. அவர் சொல்வதைக் கொஞ்சம் கூட கோபப்படாமல் கேட்டுக் கொண்ட நவநீதன் சிரித்தான்..
"என்னய்யா சிரிக்கறீங்க..."
"ராமையா என் பெரிய தங்கை கோபக்காரி... பொறுப்பானவள்.. இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே..."
"நல்லாவே தெரியுமே..."
"அவள் இந்த வீட்டின் காவல் தெய்வமாகவே கடைசி வரை இருந்து விடலாமா...?"
ராமையாவிற்கு எதுவோ புரிவதுபோல் இருந்தது.. அவர் நவநீதனை ஆச்சரியமாகப் பார்த்தார்...
"சின்னய்யா..."
"அதுதான்.. அதுவேதான்.. அவளுக்கும் தான் சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்ன்னு தோன்ற வேண்டாமா..?"
"அதுக்காக... இப்படியா..?"
"வேறு வழியில்லை ராமையா.. அவளின் இளமைக் காலத்தை எனக்காகவும்.. மோனிகாவிற்காகவும் அவள் செலவளித்துவிட்டால் அவளுக்குன்னு ஒரு வாழ்வை அவள் வாழ்வது எப்படி...?"
"தம்பி... நான் உங்களை என்னவோன்னு நினைத்தேன்..."
"எனக்கும் மனம் இருக்கிறது ராமையா.. அவள் மேல் பாசம் இருக்கிறது.. தனக்கென்று ஒரு வாழ்க்கையை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்ன்னா.. இது அவளுடைய நிரந்தரமான இருப்பிடம் இல்லை என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும்.. அப்பா.. அவளுக்கும்.. மோனிகா விற்கும்.. வாழ்நாள் முழுவதும் இந்த வீட்டில் வாழும் உரிமையைக் கொடுத்திருக்கிறார்.. ராதிகா... மோனிகாவை அவளுடைய வாழ்நாள் பூராவும் இங்கே தங்க விடுவாளா..?"
"அது எப்படி விடுவாங்க.. தங்கையின் எதிர்காலம் பற்றி அவங்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கே..."
"ம்ம்.. அதுதான்.. மோனிகாவை நல்லபடியாய் படிக்க வைத்து நல்ல கணவனிடம் ஒப்படைப்பாளா.. மாட்டாளா..?"
"கட்டாயம் செய்வாங்க..."
"ஆனால்... இவள் மட்டும் இங்கேயே கல்யாணம்கிற  வார்த்தையை மறந்து தங்கிவிடுவாளோன்னு எனக்குப் பயமாகவும்.. கவலையாகவும் இருக்கு ராமையா.."
நவநீதனை நன்றியுடன் பார்த்தார் ராமையா..
"ஏன் அப்படிப் பார்க்கறீங்க ராமையா...?"
"நான் மனதில் நினைப்பதை அப்படியே சொல் கிறீங்க ஐயா..."
"அப்படி அவள் இங்கேயே இருந்து விடக்கூடாது ராமையா... அதனால்தான் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்திருக்கிறேன்.. நீங்க கவலைப்படாதீங்க... வலியில்லாமல் ஆபரேசன் பண்ண முடியாது..."
"அதுவும் சரிதானுங்க..."
"அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.. நீங்க போய் வேலையைக் கவனிங்க..."
"எல்லாம் சரிதான் ஐயா.. சின்னம்மா சொல்வது போல்.. இது வயதுப் பெண்கள் இருக்கிற வீடு..."
"ஆமாம்..."
"இங்கே அவுட்ஹவுஸில் ஒரு கல்யாணமாகாத இளந்தாரியைத் தங்க வைக்கலாமா...?"
நவநீதன் மென்மையாகப் புன்னகைத்தான்..
"அவனைப் பற்றி நீங்கள் போகப் போக புரிந்து கொள்வீங்க ராமையா.. நான் எது செய்தாலும் அது இந்தக் குடும்பத்தின் நன்மைக்காகத்தான்.. இதை மனதில் வைத்துக் கொண்டு வேலையை ஆரம்பியுங்கள்.."
"அவுட்ஹவுஸை சரிபண்ண இருபதாயிரம் போதுமே.."
"மீதி பர்னிச்சர் வாங்கிப் போட... அவன் வெறும் பெட்டியோடு கிளம்பி வந்திருக்கிறான்.. கேஸ் கனெக்சன் ஒன்றை வாங்கி விடுங்க.. கொஞ்சம் பாத்திரங்களையும் வாங்கி வையுங்கள்..."
"சரிங்க ஐயா.."
"நான் கிளம்பவா..."
"............"
"இன்னும் என்ன...?"
"இவ்வளவு தூரம் அவருக்காக செலவளிக்க வேண்டுமா...?"
"கட்டாயம் செலவளிக்க வேண்டும்..."
"அவர் அவ்வளவு முக்கியமானவரா...?"
"ஆமாம் ராமையா.. அவன் நல்லவன்.. எனக்கு நேர் எதிரான குணம் கொண்டவன்.. நான் பணத்தை தண்ணீராய் செலவளிப்பேன்.. இவன் நேரத்தைக் கூட வீணாக செலவளிக்க மாட்டான்.. நான் தண்ணியடிக்கும் போது.. இவன் கூல்டிரிங்கை குடித்துக்கிட்டு கம்பெனி கொடுப்பான்.. நான் அப்பாவின் பணத்தை என் பணமாய் நினைப்பேன்.. இவன் படிக்கும்போதே.. இவனது தேவை களுக்காக பார்ட்டைம் வேலை பார்த்தவன்..."
ராமையா... வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகில் மறைத்த நிலவு -10
முகில் மறைத்த நிலவு -10
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s320/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
https://1.bp.blogspot.com/-fmtIOfxeT5Q/XkLhUhSYJSI/AAAAAAAAAx8/dXcp_kmAtGIuOpIX6hW4oMllqxJCQaaUACPcBGAYYCw/s72-c/Mukil%2Bmaraitha%2Bnelavu.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-10.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/mukilmaraiththanilavu-10.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy