ஏதோ ஒரு நதியில்.-9

9 " நேற்று வரை நீ யாரோ நான் யாரோ   இன்று முதல் நீ வேறோ நான் வேறோ..." தோட்டக்கார முனியன் ரேடியோவில் எப். எம் கேட்டவாறு வ...


9

"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
 இன்று முதல் நீ வேறோ நான் வேறோ..."
தோட்டக்கார முனியன் ரேடியோவில் எப். எம் கேட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தான் போல... பாட்டு ஜன்னல் வழி கேட்டது. அந்தப் பெரிய படுக்கையறை முன்னால் வரவேற்பறையாகவும்.. அடுத்து படுக்கையறையாகவும் பிரிக்கப்பட்டிருந்தது... படுக்கையறையின் உள்ளேயே துணி மாற்றும் டிரெஸ்ஸிங் ரூமும். அதை ஒட்டி அட்டாச்சுடு பாத்ரூமும் இருந்தன.
"என்ன பார்க்கிறாய்? ரூம் அழகாக இருக்கிறதா? உன் மும்பை அபார்ட்மென்ட் வீட்டின் அளவு இந்த பெட்ரூம் இருக்கும். அப்புறமும் என்ன யோசனை?"
"கௌதம்.. உங்களுடன் தங்க என்னால் முடியாது?"
"ஏன்...?"
"நான் கம்பர்டபிளாய் பீல் பண்ண மாட்டேன்..."
"அதுதான் ஏன்...?"
"ஸில்லியாய் கொஸ்டின் பண்ணாதீர்கள்... உங்கள் ரூமை நான் எப்படி ப்ரீயா யூஸ் பண்ண முடியும்?"
"வாடகை கொடுக்கப் போகிறாயோ?"
"ஓ... மை காட்... கௌதம் நான் தனி ரூமில் இருந்து பழக்கப்பட்டவள்... இன்னொருவருடன் தங்குவது எனக்குப் பிடிக்காது..."
"இன்னொருவன் யார்...? தெருவில் கோகிறவனா?"
கௌதம் இடக்காய் கேட்டான். பூஜா இதழ் மடித்துக் கடித்தாள். 'இவன் இப்பத்தான் எக்குத் தப்பாய் கேட்டு வைப்பான். இதற்கு என்ன பதில் கூறுவது?'
"என்ன... பதிலைக் காணோம்?"
"இப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது?"
"உனக்கே இப்படி இருக்கிறதே.. ஊரார் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?"
"ஊரார் என்ன கேட்பார்கள்...?"
"புருசன்... பொண்டாட்டின்னு சொல்லிக் கொண்டு தனித்தனி ரூமில் ஏன் இருக்கிறீர்கள்ன்னு கேட்பார்கள்..."
"அவர்களுக்கு எப்படித் தெரியும்?"
"இங்கே வேலை செய்பவர்கள் சொல்லி விட மாட்டார்களா?"
"ஓ..." மீண்டும் இதழ் கடித்து யோசனையில் ஆழ்ந்தாள் பூஜா.
"ஸோ... நீ என்னுடன் இந்த ரூமில் தான் தங்கியாக வேண்டும்."
"கௌதம்.. ஐ பீல் ஸோ அன் ஈஸி."
"பழகிவிட்டால் எல்லாம் ஈஸியாகி விடும்."
அவன் இலகுவாய் கூறிவிட்டு அவளது பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு போய் டிரெஸ்ஸிங் ரூமில்  வைத்தான். அந்த அறையின் சுவர் பூராவும் மர அல மாரிகள் பதிக்கப்பட்டிருந்தன. ஓரமாய் ஆள் உயர டிரெஸ்ஸிங் டேபிளும் கண்ணாடியும் இருந்தன.
"உன் துணிகளை அடுக்கி வைத்துக் கொள்.. இந்தா... இது உன் பீரோவிற்கான சாவி.. பூட்டி தனியாய் வைத்துக் கொள்."
"இதிலெல்லாம் பிரைவஸி கொடுக்கிறீர்கள்... தனி ரூம் மட்டும் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.. நான் வேண்டுமானால்... இந்த டிரெஸ்ஸிங் ரூமிலோ... இல்லை ரிசப்ஷன் ரூமிலோ தங்கிக் கொள்ளட்டுமா?"
"இதோ பார்.. நான் சொன்னால் சொன்னதுதான் சும்மா என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே... எந்த நேரமும் வீட்டில் உள்ள மற்றவர்களோ... வேலையாட்களோ இங்கே வரலாம். நீ தனித்து இருப்பதை அவர்கள் பார்த்தால் வம்பு.. ஏற்கனவே ஒரு வருடமாய் வம்பு பேசுகிறவர்களுக்கு வம்பை வாரி வழங்கியிருக்கிறோம்.. அது போதாதா? இன்னும் கொஞ்சம் அவர்களைப் பேச வைக்க வேண்டுமா?"
"பட்... என்னுடைய பிரைவஸி...?"
"அதற்கொன்றும் குறைவு வராது... நான் காலையில் மில்லுக்குப் போனால் நைட்தான் வருவேன்... வந்தவுடனே தூங்கி விடுவேன்... என்னால் உன்னுடைய பிரைவஸிக்கு எந்த பாதிப்பும் நேராது..."
"கட்டில்களைப் பிரித்துப் போட்டால் பெட்டர்..."
"அது சரிவராது."
"கௌதம்... ஐ கான்ட் டாலரேட் இட்."
"ஹலோ... ஒரு வருடமாய் நான் கட்டிய தாலியை கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிறாயா இல்லையா? அதைப் போல் இதையும் சகித்துக் கொள்ளப் பழகிக்கொள்..."
"இதையென்றால்...?"
"ஒரே ரூமில் தங்குவதையும்.. ஒரே கட்டிலில் படுத்துக் தூங்குவதையும்..."
அவன் எரிச்சலுடன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான். பூஜா செய்வது அறியாமல் ஜன்னலின் பக்கம் சென்று வெளியே வெறித்தாள். நீண்ட அழகான தோட்டம்... நடுவில் நீச்சல் குளம்.. தோட்டத்துப் புல் வெளியிலும்... நீச்சல் குளத்தின் அருகிலும் அமைக்கப் பட்டிருந்த சாய்வான மர பெஞ்சுகள்...
"என்ன... உன் துணிகளைப் பிரித்து அடுக்க வில்லையா?"
அவளுக்குப் பின்புறமிருந்து கௌதமின் குரல் கேட்டது... திரும்பிப் பார்த்தாள். குளித்து விட்டு வெற்று மார்புடன் நின்று கொண்டிருந்தான். அந்தக் கவர்ச்சி கரமான தோற்றத்தில் தடுமாறியவள்.. அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கமாய் திரும்பிக் கொண்டு,
"நான் குளிக்கப் போக வேண்டும்..." என்று கூறினாள்.
"போ..."
"என்ன...?"
"குளிக்கப் போ.. என்றேன்... காது கேட்க வில்லையா? செவிடா?"
மற்றவர்களை அதட்டி வேலை வாங்கியவள் அவள்... அவளையே மிரட்டுகிறானே.. என்ன தைரியம்...
"சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்தால் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கு 'செவிடு'ன்னு பட்டம் கட்ட வேண்டாம்..."
"ஓஹோ... அப்படியா... எனக்குப் பேசத் தெரிய வில்லைன்னு நீ சொல்லித்தான் நான் கேட்கிறேன்."
"என்னையும் செவிடுன்னு நீங்கள் சொல்லித்தான் நானும் கேட்கிறேன்."
"பதிலுக்கு பதில்... ம்ம்ம்?"
"அப்படித்தான்..."
"நீ செய்ததிற்கு பதிலுக்குப் பதில் நான் கொடுக்க ஆரம்பித்தேன்னு வை... நீ தாங்க மாட்டாய். பேசாமல்  போய் குளித்து விட்டு வரும் வேலையைப் பார்... அதுதான் உனக்கு நல்லது..."
"என்னை டீஸ் பண்ணாமல் இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது..."
"என்ன செய்து விடுவாய்..."
"மும்பைக்குப் போய் விடுவேன்..."
"ஏய்ய்..."
அவன் கண்கள் ரத்தமாய் சிவக்க அவள் முன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.
"ஜாக்கிரதை... இனியொரு முறை இவ்வாறு சொன்னால் கொன்று விடுவேன்... ஆமாம்.. கொன்றே விடுவேன். என்னை என்னவென்று நினைத்தாய்? உன் மனம் போனபடி ஆட நீ இப்போது விநாயகத்தின் மகளில்லை... வசுந்தராவின் மருமகள்... இந்த வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வை... பார்ப்போம். உன் உயிர் உன் உடம்பில் இருக்காது..."
"மிரட்டுகிறீர்களா?"
"ஆமாண்டி... மிரட்டுகிறேன்... உன் காலை ஒடித்து உன்னைத் தூக்கி வர வக்கற்றுப் போய் உன்னை மும்பையில் விட்டு வைக்கவில்லை... நீ கமிட் ஆகியிருக்கும் விளம்பரங்களை முடித்துக் கொடுக்க உனக்கு டைம் கொடுத்தேன்... தெரிந்து கொள்..."
அவன் முகத்தைப் பார்க்கவே பூஜாவிற்கு பயமாய் இருந்தது. பெட்டிகளைத் தூக்கி டிரெஸ்ஸிங் ரூமில் வைத்தவள் கதவை அடைத்துக் கொண்டாள். சற்று நேரம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள்... மடமடவென துணிகளை அடுக்கினாள். அவள் கொண்டு வந்திருந்த நகைப் பெட்டிகளை லாக்கரில் வைத்தாள். பீரோவை மூடினாள். குளித்து உடை மாற்றி லேசான ஒப்பனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். படுக்கையறையில் கௌதம் இல்லை.
'அப்பாடா...'என்ற உணர்வுடன் நிம்மதிப் பொருமூச்சு விட்டாள் பூஜா.
'புலிக் கூண்டில் அடைபட்டிருப்பதும்... இவனுடைய பெட்ரூமில் அடைபட்டிருப்பதும் ஒன்று' என்ற நினைவுடன் லேசாய் ஒரு பாடலைப் பாட வேறு செய்தாள்.
"ஓட ஓட... ஓடோடப் போறேன்...."
"ம்ம்... அருமையான பாட்டு... உனக்குப் பொருத்தமான பாட்டு. எப்படி இப்படிப்பட்ட பாட்டைத் தேடிப் பாடினாய்..."
பாட்டு பாதியில் நின்று போனது. திரும்பிப் பார்க்காமல் வாயை மட்டும் மூடிக் கொண்டாள் பூஜா. அவன் நிதானமாய் அவள் முன்னால் வந்து நின்றான்.
"ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் பூஜா.. உன் பாட்டில் நனைய ஓடோடி வந்திருக்கிறேன்... என்னை ஏமாற்றி விடாதே... பாடு... பூஜா... பாடு."
'இம்சை.. இவன் வெளியே தொலைந்து விட்டான் என்று நினைத்தால் இங்கேயே இருந்து கொண்டு உயிரை எடுக்கிறானே...'
அவள் மனதில் நினைத்ததைப் படித்தவன் போல் அவன் பதில் கூறினான்.
"நீ டிரெஸ்ஸிங் ரூம் கதவை மூடி விட்டாய். நான் எப்படி டிரஸ் பண்ணுவது.. டிரெஸ் பண்ணாமல் ஆபீஸ் எப்படி போவது? அதனால் இங்கு இருந்துதானே ஆக வேண்டும்?"
'இவனுக்கு என்ன மைன்ட் ரீடிங் தெரியுமா?' அவள் எரிச்சலுற அவன் அதற்கும் பதில் சொன்னான்.
"நீ மனதில் என்ன நினைப்பாய் என்பதை அறிய மைன்ட் ரீடிங் படிக்கத் தேவையில்லை... உன் முகமே... உன் நினைவைச் சொல்லி விடும்."
அவன் டிரஸ்ஸிங் ரூமிற்குள் போய் விட்டான். அவள் முன்னறையில் அமர்ந்து வார இதழ் ஒன்றை எடுத்துப் புரட்டினாள்.
"போகலாமா?"
கௌதமின் அழைப்புக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்.. ஒரு கணம் அவனது தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டாள். மும்பையில் முன்னணியில் இருக்கும் மாடல் ஆணிடம் இல்லாத கவர்ச்சி அவனுடைய தோற்றத்தில் இருந்தது. ஆறடி உயரத்தில் கம்பீரமாய் நிற்கும் இந்த ஆணழகனா தனக்குத் தாலிகட்டிய கணவன் என்ற ஆச்சரியம் நெஞ்சில் பரவ அவள் எழுந்து கொண்டாள்.
அதே நேரம் அவனும் அவளைப் பற்றி இதே போன்ற சிந்தனையில்தான் இருந்தான்.
இளம் பச்சையில் எம்பிராய்டிரி வேலை செய்த சேலையை உடுத்தியிருந்தாள். தலைமுடியை லேசாய் பின்னலிட்டு கூந்தலை பாண்டில் இறுக்கியிருந்தாள். காதுகளில் பச்சைக் கல்லும்.. முத்தும் பதித்த பூத்தோடு... கழுத்தில் முத்து மாலை... கைகளில் முத்து வளையல்கள்.
'இவளை மிஞ்சியா... இவள் இயக்கும் விளம்பரப் படங்களில் நடிக்கும் மாடல் அழகிகள் அழகாக இருக்கப் போகிறார்கள்?'
அவனது பார்வையை உணர்ந்த அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. இதழ்களை கடித்தக் கொண்டாள். கௌதம் அவளது முகச் சிகப்பைக் கவனித்தான். அவனது மனம் கனிந்தது. 'இவளது தோற்றத்தில்தான் எத்தனை நளினம்?... இவளது செயல்களில் மிளிரும் பெண்மையின் பொழிவு என்னை ஈர்க்கிறதே... ஆனால்... ஆனால்... இவள் செய்த செயல்...' அவன் மனது மீண்டும் கடினமானது.
"வா.. போகலாம்..." உத்தரவிட்டவன் முன்னே நடந்தான்.
"அடேங்கப்பா... ஆர்டர் போடுகிறீங்களா?" அவள் அவனைத் தொடர்ந்தவாறு கூறினாள்.
"ஆமாம்." அவன் அமர்த்தலாய் பதில் கொடுத்தான்.
"நானென்ன... உங்கள் வீட்டு ஆட்டுக் குட்டியா...?"
"இல்லை... என் பொண்டாட்டி."
'ம்ஹும்... என்ன பேசினாலும் இவனை ஜெயிக்க முடியாது... வழக்கம் போல் வாயை மூடிக் கொள்வது தான் பெட்டர்...'
சேர்ந்தாற் போல் ஜோடியாக சாப்பிட வந்தவர்களைக் கண்ட சிந்தாமணியின் கண்கள் கலங்கின.
'இரண்டு பேரும் ஒருத்தருக்காக மற்றொருவர் பிறந்தது போல் இருக்கிறார்களே... என் கண்ணே பட்டு விடும் போல இருக்கிறதே... எத்தனை பேர் கண் பட்டதோ... இவர்களது குடும்ப வாழ்க்கையில் இப்படி சூறாவளி அடிக்கிறதே...'
"என்ன அத்தை... என்னைப் புதிதாய் பார்ப்பது போல் பார்க்கிறீர்களே..." கௌதம் சிரித்துக் கொண்டே அமர்ந்தான்.
"புதிதாய்தானே பார்க்கிறேன்.. உன் பெண்டாட்டியோடு சேர்த்து இன்னைக்குத்தானே புதிதாய் பார்க்கிறேன்." சிந்தாமணி அவன்  முன் தட்டை வைத்தவாறு கூறினாள்.
"நீங்கள் ஏன் அத்தை சிரமப்படுகிறீங்க? வேலையாட்கள் இல்லையா...?" என்று கேட்டபடி பூஜாவைப் பார்த்தவன்,
"நீயேன் இன்னும் நிற்கிறாய்? சாப்பிட உட்கார வில்லையா..?" என்று வினவினான்.
"நீங்கள் உட்காரச் சொல்லாமல் எப்படி உட்காருவது?" போலிப்  பணிவுடன் கேட்டாள் பூஜா.
சிந்தாமணியின் புருவம் முடிச்சிட்டது. அவள் கோபமாய் வாய் திறக்கையில் கௌதம் அவளை முந்திக் கொண்டு பூஜாவிற்கு மறுமொழி கூறினான்... சிந்தாமணியின்  இதழ்களில் முறுவல் மலர்ந்தது. பூஜாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்தது.



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,23,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,9,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,3,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஏதோ ஒரு நதியில்.-9
ஏதோ ஒரு நதியில்.-9
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s320/IMG-20200117-WA0015.jpg
https://1.bp.blogspot.com/-bJNGAyyVuHQ/XivJhQmPAnI/AAAAAAAAAw0/iTfDMviajHEogGxRD8C6vFy1-KLoNVvWQCPcBGAYYCw/s72-c/IMG-20200117-WA0015.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ethoorunathiyil-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy